ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down


Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sun Oct 18, 2015 7:58 pm

ஜெகதீசன் ஐயா நன்றி. உரையாடலில் பாடலுக்கான விளக்கம் அருமை
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Thu Oct 22, 2015 7:16 am

நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?

செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !

நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?

செவிலித்தாய் :
அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .

167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************

முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .


-கூடலூர் கிழார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Hari Prasath on Thu Oct 22, 2015 12:11 pm

முதலில் விளக்கமளித்து பின் பாடல் வருவதால் மிக எளிதாக புரிகிறது ஐயா,நன்றி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Thu Oct 22, 2015 1:03 pm

நாம் தற்போது உண்ணும் புளியோதரை மிகவும் பழங்காலத்திய உணவு என்பது தெரிகிறதா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 22, 2015 7:31 pm

முதலில் கற்றுக்கொள்ளும் உணவே எளிய புளியோதரை தான் அன்பரே.அருமை நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8575
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by shobana sahas on Fri Oct 23, 2015 7:51 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?

செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !

நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?

செவிலித்தாய் :
அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .

167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************

முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .


-கூடலூர் கிழார் .
[You must be registered and logged in to see this link.]

நல்ல விளக்கம் அய்யா . அருமை . நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Wed Nov 25, 2015 3:49 pm

102. நெய்தல் _தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி 
காமம் தோய்வற்றே, காமம் 
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே. 

ஔவையார் 
என் தலைவனை நினைத்தால் 
உள்ளம் உவகை கொள்ளும்!! 

அவர் பிரிவை 
நினைத்தால் 
என்
உள்ளம் 
வெந்து நிற்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருந்தாலோ 
அது அதைவிட 
கொடியதாய் 
இருக்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருப்பது 
என் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதாக 
இருக்கும்!! 

காமத்தின் 
வருத்தமானது 
வானமதை 
தொட்டுவிடும் 
அளவாக 
இருக்கும்!! 

என்னால் 
நேசிக்கபட்டவரோ 
தான் 
சொன்ன நேரத்தில் 
வராமல் 
போனால் 
சால்பு உடையவர் 
அல்லர்!!
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 28, 2015 3:25 pm

நல்லது சசி அவர்களே !
இவ்விதமாகக் குறுந்தொகையை நெடுந்தொகையாக மாற்றியுள்ளீர்கள் ! இதுதான் வளர்ச்சி என்பது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by ayyasamy ram on Sat Nov 28, 2015 6:27 pm


-

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
காமம் தோய்வற்றே, காமம்
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே.

-
[You must be registered and logged in to see this image.]
-
சிறப்புக் குறிப்பு:
”என் துயரத்தை அறியாததால் அவர் அன்புடையவர் அல்லர்.
அவருடைய பிரிவு நீட்டித்தலால் என் உடலில் உண்டாகிய
வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் பழித்துரைப்பதைப்
பற்றிக் கவலைப்படாமல் இன்னும் பிரிந்தே இருப்பதால் அவர்
நாணமில்லாதவர்.

இல்லறத்தில் இருப்பவர்கள் தம் தலைவியருடன் இருந்து இன்புறும்
உலக வழக்கை மறந்ததால் அவர் ஒப்புரவு (உலகத்தார் போற்றும்
நல்லொழுக்கம்) இல்லாதவர்.

என் துயரத்தை நீக்க வாராததால் அவர் கண்ணோட்டம் இல்லாதவர்.

தாம் கூறிய காலத்தில் திரும்பி வராததால் அவர் வாய்மை உடையவர்
அல்லர்.

ஆகவே, அவர் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை
என்ற சான்றாண்மைக்கு இன்றியமையாத ஐந்து பண்புகளும்
இல்லாதவர் ஆகையால் அவர் சான்றோர் அல்லர்.” என்று தலைவி
எண்ணுவதாகவும்,

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு,
ஐந்துசால்பு ஊன்றிய தூண்”

-
(குறள், 983) என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகவும்
உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Nov 28, 2015 9:04 pm

நன்றி திரு. சௌந்தர்ராஜன் ஐயா, நன்றி ராம் ஐயா, அருமையான விளக்கம் இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Jan 04, 2016 6:35 pm

32 குறிஞ்சி _தலைவன் கூற்று 

காலையும், பகலும், கையறு மாலையும், 
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் 
பொழுது இடை தெரியின், பொய்யே காமம் 
மா என மடலொடு மறுகில் தோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே. 

அள்ளூர் நன்முல்லையார் 

விளக்கம் ;

சூரியனின் ஒளிக்கற்றைகள் 
ஒவ்வொரு உயிரிலும் 
ஒளி வீசும் 
அழகிய காலை பொழுதும்! 

ஓய்வில்லாமல் உழைக்கும் 
உச்சிப்பொழுதும்! 

காதல் கொண்டவர்கள் 
கைப்பற்றி சேர இயலாத 
மாலைப் பொழுதும்! 

காதலில் வென்றவர்கள் 
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் 
உறங்கும் பொழுதும்! 

நிலவின் ஒளி விலகி 
சூரியனை வரவேற்கும் 
விடியற்காலை பொழுதும்! 

செவ்வி ஒருவரால் 
அறியப்படுமானால் 
அவர் கொண்ட காமம் 
உண்மையானதன்று! 

காதலியால் பிரிவு 
நேரிடுமாயின் 
பனைக்குதிரை உருவத்தின் மீது 
ஊர்ந்து வெளிப்பட்டு இவளால் 
இவன் இச்செயல் செய்தாள் 

என பலரும் அறிந்து 
என் காதலியை தூற்றுவதற்கு 
நான் இடம் தரேன்!! 

என் காதலியை பிரிந்து 
உயிரோடு வாழ்ந்தாலும் 
அது எனக்குப் பழியே!! 

தலைவியை ஊரார் முன் காட்டிக் கொடுக்க விரும்பாத தலைவன், அவளைப் பிரிந்து வாழமுடியாத தன் நிலையையும் இப்பாடல் மூலம் உணர்த்துகின்றான்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Jan 04, 2016 9:20 pm

மா _குதிரை, இப்பாடலில் வரும் 
மடல் ஏறுதல் பற்றி இன்னும் விளக்கம் வேண்டும் ஐயா.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Wed Jan 13, 2016 9:13 pm

108 முல்லை _தலைவி கூற்று 

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் 
கறவை கன்றுவயின் படரப் புறவில் 
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் 
செவ் வான் செவ்வி கொண்டன்று 
உய்யேன் போல்வல் தோழி! யானே. 


வாயிலான் தேவனார் 

கார் மேகங்கள் 
மலை முகட்டில் 
கொஞ்சி விளையாடி 
உருவாகும் மழையினால் 
மண் அது மணம் 
கமழும் சிற்றூராம் அது!! 

அவ்வூரில் பசுக்கள் 
மேய்ச்சல் முடிந்து 
தம் அழகிய கன்றை 
நினைத்து மீளுகின்ற 
முல்லை நிலத்தில் 

பச்சை இலைகளையுடைய 
வெள்ளிய முல்லை மலர்கள் 
செவ்வானத்தின் அழகை 
உள்வாங்கி பிரதிபலிக்கும் 
காட்சி கண்கொள்ளா காட்சியாய் 
காணக் கிடைக்கும் 
கார் காலமும் வந்தது!! 

இவற்றை எல்லாம் 
காணும் யான் 
அழகிய கார்ப்பருவத்தில் 
மாலையில் மணாளன் 
இல்லாமல் இனி உயிர் வாழேன்!! 

தலைவி தோழியிடம் கூறியது.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Namasivayam Mu on Sat Jan 16, 2016 12:47 pm

[You must be registered and logged in to see this link.] wrote:102. நெய்தல் _தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி 
காமம் தோய்வற்றே, காமம் 
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே. 

ஔவையார் 
என் தலைவனை நினைத்தால் 
உள்ளம் உவகை கொள்ளும்!! 

அவர் பிரிவை 
நினைத்தால் 
என்
உள்ளம் 
வெந்து நிற்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருந்தாலோ 
அது அதைவிட 
கொடியதாய் 
இருக்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருப்பது 
என் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதாக 
இருக்கும்!! 

காமத்தின் 
வருத்தமானது 
வானமதை 
தொட்டுவிடும் 
அளவாக 
இருக்கும்!! 

என்னால் 
நேசிக்கபட்டவரோ 
தான் 
சொன்ன நேரத்தில் 
வராமல் 
போனால் 
சால்பு உடையவர் 
அல்லர்!!
[You must be registered and logged in to see this link.]

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.---திருமந்திரம்


avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Sat Jan 16, 2016 1:01 pm

குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Jan 16, 2016 5:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by விமந்தனி on Sat Jan 16, 2016 9:40 pm

அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 16, 2016 9:47 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sun Jan 17, 2016 7:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Fri Jan 22, 2016 10:24 pm

144 பாலை _செவிலித்தாய் கூற்று 

கழிய காவி குற்றும், கடல 
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே 
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர 
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப் 
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ 
செல் மழை தவழும் சென்னி 
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே 

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார் 


மனதை மயக்கும் கழனியில் 
காவி மலர்களை பறித்தும் 
காவிய கதைகள் பேசியும்! 

கடலில் மேலெழும் அலைகளின் 
ஆர்வத்தினால் பொங்கும் 
வெண் நுரையில் 
பாதம் வைத்து பாசாங்கு 
இல்லாது பாவைகளுடன் 
ஓடியும் ஆடியும் 
விளையாட்டில் ஈடுபாடும் 
கொண்டவளும்! 

தன்னில் பாதியாக கருதும் 
ஆயத்தாரும் உடனிருக்க 
அவள் அதிலெல்லாம் 
ஆனந்தம் கொள்ளாது 
மனம் செல்லாது!

விரைந்து கடந்து 
செல்லும் கரிய மேகங்களை 
தவழும் உச்சியை உடைய 
உயர்ந்த மலைகளைக் கொண்டதும் 

அந்த வெம்மை மிகுந்த பாலையின் 
பாட்டையின் வழியே செல்கையில் 

வழியில் பருக்கைக் கற்கள் 
அவள் அழகு பாதம் தனில் 
கல்லாய் முள்ளாய் குத்துகையில் 
அவள் பாதம் நோக 
அவனோடு சென்றாள்!
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by விமந்தனி on Sat Jan 23, 2016 11:21 pm

வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பர் சசி!


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Feb 22, 2016 8:37 am

குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60 

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் 
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன், 
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து, 
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர் 
நல்கார் நயவார் ஆயினும் 
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே. 

பரணர் 

உயர்ந்த மலையின் கண் 
குறுகிய அடியை உடைய 
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற 
உயர்ந்த மலையில் உள்ள 
தேனடையை கண்டு 

இருகாலும் இழந்தவன் 
தேனடையை 
உண்பதற்கு ஆசைக் கொண்டு 
தன் உள்ளங்கையை 
உயர்ந்த மலையின் கீழ் 
அமர்ந்து கொண்டு 
நாக்கால் நக்கி தேன்சுவையை 
அனுபவித்தது போல!! 

தன் காதலர் 
கருணை கொண்டு 
என்னைக் காணாமல் 
சென்றாலும் நான் 
அவரை காணும் போதெல்லாம் 
நான் மகிழ்ச்சியில் உறைந்து 
போவேன்!! 

அவரை காணும் போதெல்லாம் 
தேன் தருகின்ற 
இன்பம் போல 
காதலும் தருகின்றதே!! 


ஆசிரியர் முடவனுக்கும் 
ஆசைகள் உள்ளது 
அவனுடைய இயலாமையை 
எப்படி நிறைவேற்றுகிறான் 
என்பதையும் கூறி 

காதலி தன் காதலர் 
தன் பிரிவிடை 
ஆற்றாமையை தன் தோழிக்கு 
கூறியதாகவும் உள்ள பாடல்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Feb 22, 2016 4:11 pm

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Dr.S.Soundarapandian on Mon Feb 22, 2016 6:34 pm

நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Feb 22, 2016 9:19 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால்  சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில்  கண்டுபிடிக்கமுடியவில்லை !
[You must be registered and logged in to see this link.]


நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum