உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by ayyasamy ram Today at 4:58 am

» மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
by ayyasamy ram Today at 4:08 am

» வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…!
by ayyasamy ram Today at 4:07 am

» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

Admins Online

பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by அருண் on Sun Aug 09, 2015 2:51 pmகாரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை.

குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம்.

நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் ஈ.சி.ஆரை பார்த்தால் குழந்தையை போல துள்ளி குதித்துக்கொண்டு கார் ஓட்ட ஓடிவருவார்கள்.

திருவான்மியூரில் ஆரம்பித்து முட்டுக்காடு படகு குழாம், மாமல்லபுரம், புலிக்குகை, கடப்பாக்கம் கோட்டை, மரக்காணம் உப்பளம் என வழியில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கலாச்சார நகரமான புதுவையில் இரவில் தங்கிவிட்டு, மறுநாள் மீண்டும் சென்னை நோக்கி செல்வது. இதுதான் ஈ.சி.ஆரில் டிரிப் அடிக்கும் பொரும்பாலான இளைஞர்களின் உற்சாக திட்டமாக உள்ளது. ரோட்டுக்கடை முதல் அரேபியன் ரெஸ்டாரண்ட் வரை ஈ.சி.ஆரில் இடம்பெறாத உணவகங்களே இல்லை. இவ்வளவு ரம்மியமான கிழக்கு கடற்கரை சாலைக்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அது, ‘‘கிழக்கு கலவர சாலை’’.

இருவழி சாலையான ஈ.சி.ஆரில் வாரவிடுமுறை நாட்களில் மட்டும் சுமார் 15,000 வாகனங்கள் கடப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். அதே சமயம் வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்காமல் இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள், அங்கு சாலை விபத்துகளில் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

சாலை விபத்து என்பது தாங்கிக்கொள்ள முடியாத சோகம், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு. ஆனால் இன்னொரு சாரருக்கு ஈ.சி.ஆர் சாலையில் நடக்கும் விபத்து, 'வியாபாரம்’....வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் விபத்து நடக்காதா என்று ஏங்கி காத்திருக்கிறது அந்த கழுகு கூட்டம். விபத்தில் சிக்குபவர்கள் இந்த கழுகுக்கூட்டங்களிடமும் சிக்கி சின்னாபின்னமாவதுதான் கொடுமையின் உச்சம்.

ஈ.சி.ஆர் சாலையில் சில சமூக விரோத கும்பல் இரண்டு அணிகளாக பிரிந்து, விபத்து நடக்கும் பகுதிகளில் கண்கொத்தி பாம்பு போல காத்திருப்பார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் காவல்துறைக்கு தகவல் செல்வதற்கு முன் இந்த கும்பலின் காதுகளுக்கு இன்ஃபார்மர்கள் மூலம் விஷயம் போய்விடும்.

சம்பவ இடத்திற்கு தனிதனியாக செல்லும் இந்த கும்பலில் ஒரு பிரிவினர், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாகவும், மற்றொரு பிரிவினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் பஞ்சாயத்து பேசுவார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்கள் 'நாங்கள் காவல்துறை மூலம் பேசிக்கொள்கிறோம்' என்றாலோ அல்லது அவர்கள் பெரிய இடம் என்று தெரியவந்தாலோ இந்த கும்பல் பின்வாங்கிவிடும்.அதேசமயம் விபத்துக்கு காரணமானவர்கள் தவறான உறவுமுறையினர் அல்லது பெண்தோழிகளுடன் வரும் கல்லுாரி மற்றும் ஐ.டி ஊழியர்கள் போன்றவர்களாக இருந்தால், அவர்கள் இந்த விவகாரம் காவல்துறைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள்.

விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் மானம் போய்விடும் என்பதால், அவர்கள் பெரும்பாலும் பேசும் தொகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே விரும்புவார்கள். இத்தகையவர்கள்தான் இந்த கும்பலுக்கு லட்டு போன்றவர்கள். ‘‘போலீசுக்கு போனா உங்க பணமும் நேரமும்தான் வீணாகும். இங்கயே பேசி முடிச்சிட்டு போங்க. நாங்கதான் உங்க பக்கம் இருக்கோம்ல’’ என்று இரண்டு தரப்பையும் மூளைச் சலவை செய்வார்கள்.

எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்த விபத்தை பூதாகரப்படுத்துவது போன்று பேசி, அவர்களின் பயத்திற்கு தக்கபடி வசூலித்து, வசூலித்த தொகையில் சொற்ப தொகையை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு பறந்துவிடுவர். பாதிக்கப்பட்டவர் காவல்நிலையங்களுக்கு சென்றாலும், அவர்களின் புகார் அங்கு எடுபடாது. காரணம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு 'உரிய மரியாதை' செய்யப்பட்டுவிடுவதே.

இதற்கு ஒத்துவராதவர்களை மிரட்டுவதும், அடிப்பதும் கூட சகஜமாக நடக்கும். விவரம் அறியாத பல இளைஞர்கள் காவல்துறைக்கு போனா வம்பு என்று எண்ணிக்கொண்டு இந்த கும்பலிடம் பணத்தை இழக்கிறார்கள். ஈ.சி.ஆரில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளை இந்த கும்பல்தான் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கிறார்கள். உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் இந்த கும்பல் தலையிடுவதில்லை.

பொன், பொருளை பறிக்க ஒரு கும்பல் என்றால், பெண்ணை பறிக்கவும் ஒரு கும்பல் மரக்காணம் பகுதியில் உள்ளது. பெண்களை அபகரிக்க காத்திருக்கும் இந்த கும்பலின் முதல் குறி வெளியூர் வாகனங்கள்தான். வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களில் காதலர்களோ, கணவன் மனைவியோ தனியாக சென்றால் பின் தொடர்வது இந்த கும்பலின் வாடிக்கை. மரக்காணம் பகுதியை தாண்டி கடலும், உப்பளமும் சூழ்ந்த தனிமை பகுதியில் ஓய்வு எடுக்க வெளியூர் ஜோடிகள் காரை விட்டு இறங்கினால், அந்த கும்பலிடம் சிக்குவது உறுதி.அப்படி இறங்கும் ஜோடிகளிடம் இருந்து பணம், பொருளை பறிப்பது ஒரு பக்கம் என்றால், சமயங்களில் குடும்ப பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த மாதம் அப்படி சிக்கிய ஜோடி ஒன்றை, இந்த கும்பல் மிரட்டி, கணவனை மட்டும் விரட்டிவிட்டிருக்கிறார்கள். பயந்து ஓடிய கணவன் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

ஆனால் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு பின் ஒதுக்குப்புறமான உப்பளம் ஒன்றின் அருகே, அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் அந்த பெண்.இப்படியும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. பணம், பொருட்களை இழக்கும் வெளியூர்வாசிகள் தப்பித்தால் போதும் என்று எந்த புகாரும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்கள் மரக்காணம் பகுதியில் அடிக்கடி நடந்தாலும் வெளிய தெரிவதே இல்லை. இந்த சம்பவங்கள் வெளிவராமல் இருப்பதற்கு காவல்துறையும் ஒரு காரணம்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சென்றால், போலீஸார் கேட்கும் வசவு வார்த்தைகள் காது கூச வைக்கும் அளவு இருக்கும். போலீஸாரின் இந்த அலட்சியமே போக்குதான் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருவதற்கு காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பான சாலையாக மாற வேண்டும்....!

- ஆ.நந்தகுமார்
விகடன்....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by T.N.Balasubramanian on Sun Aug 09, 2015 3:28 pm

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஜோடிகள் ,
அதற்குரிய தண்டங்களை அழத்தான் வேண்டும் .
அனுபவித்தால்தான் திருந்துவார்கள் .
தற்காலத்திய வாலிப வாலிபிகள் ,
இதைத்தான் adventurous life என்கிறார்கள் .
அபரிமிதமான பண ஓட்டம் , அகம்பாவம் ,திமிர்
அவர்களுடன் கூடவே ஒட்டிக்கொண்டு உள்ளது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23256
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8592

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by rmugil on Sun Aug 09, 2015 4:46 pm

தண்டனைகள் கடுமையாகும் போது குற்றங்கள் குறையும். முதலில் காவல் துறைக்கும் பின்பு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கும் அதன் பின் அரபு நாட்டு முறையில் குற்றம் செய்தவர்களை தண்டித்தால் குற்றங்கள் குறைந்துவிடும்.
avatar
rmugil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 09/08/2015
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by ayyasamy ram on Sun Aug 09, 2015 4:52 pm

அநியாயம் அநியாயம்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40846
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by விஸ்வாஜீ on Sun Aug 09, 2015 5:44 pm

யாரும் வாழ்க்கையை அமைதியாக பொறுமையாக வாழ விரும்பவில்லை
என தெரிகிறது, தவறு செய்பவர்கள் அனுபவிக்கட்டும் என்பதா, குற்றம் செய்பவர்கள்
பெருகிவிட்டனர் என நினைப்பதா அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by krishnaamma on Sun Aug 09, 2015 8:24 pm

vishwajee wrote:யாரும் வாழ்க்கையை அமைதியாக பொறுமையாக வாழ விரும்பவில்லை
என தெரிகிறது, தவறு செய்பவர்கள் அனுபவிக்கட்டும் என்பதா, குற்றம் செய்பவர்கள்
பெருகிவிட்டனர் என நினைப்பதா அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1156727

ஹாய், விஸ்வா நலமா?......ரொம்ப நாள் கழித்து வந்திருகீங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56853
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11796

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by krishnaamma on Sun Aug 09, 2015 8:25 pm

@rmugil wrote:தண்டனைகள் கடுமையாகும் போது குற்றங்கள் குறையும். முதலில் காவல் துறைக்கும் பின்பு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கும் அதன் பின் அரபு நாட்டு முறையில் குற்றம் செய்தவர்களை தண்டித்தால் குற்றங்கள் குறைந்துவிடும்.

நிஜம்புன்னகை.............நீங்கள் அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56853
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11796

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by krishnaamma on Sun Aug 09, 2015 8:29 pm

//பணம், பொருட்களை இழக்கும் வெளியூர்வாசிகள் தப்பித்தால் போதும் என்று எந்த புகாரும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்கள் மரக்காணம் பகுதியில் அடிக்கடி நடந்தாலும் வெளிய தெரிவதே இல்லை. இந்த சம்பவங்கள் வெளிவராமல் இருப்பதற்கு காவல்துறையும் ஒரு காரணம்.//

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56853
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11796

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by வேல்முருகன் on Mon Aug 10, 2015 12:09 pm

சோகம் சோகம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Aug 10, 2015 4:28 pm

இங்கு பெங்களூரிலும் இதேபோன்று சில கும்பல்கள் பெங்களூர் - மைசூரு நெடுஞ்சாலையில் சுற்றித்திரிகிறார்கள் சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by ஜாஹீதாபானு on Mon Aug 10, 2015 4:43 pm

அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30575
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7163

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by shobana sahas on Wed Aug 12, 2015 1:48 am

அய்யய்யோ இது என்ன பயங்கரம் ....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை