ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்ணியம் மலர வேண்டுமா?

View previous topic View next topic Go down

பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by சிவா on Thu Aug 06, 2015 1:30 am

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும். இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.

இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா? பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?

திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள்.

பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை. இன்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும்.

ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும்.

வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by krishnaamma on Fri Aug 07, 2015 1:10 am

நல்ல கட்டுரை புன்னகை .........பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by shobana sahas on Fri Aug 07, 2015 8:01 am

நல்ல கருத்துள்ள பதிவு . நன்றி.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by T.N.Balasubramanian on Fri Aug 07, 2015 9:22 am

இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.

ஆயிரம் எடுத்துக்காட்டுகள் காண்பிக்க முடியும் .
நல்லதோர் கட்டுரை .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by விமந்தனி on Fri Aug 07, 2015 10:06 am

பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by krishnaamma on Fri Aug 07, 2015 4:10 pm

@விமந்தனி wrote:பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1156116

நிஜம்  விமந்தினி, ,மேலே கட்டுரை இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிகள்பாருங்கள்...........

//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். //

இப்படி நேரம் காலம் தெரியாமல் அலைவதா பெண்ணீயம்?....எனக்குப்புரியவில்லைசோகம் .............

நம் தளத்தில் இருக்கும் இந்த கதையை பாருங்கள்...............முள் - சிறுகதை

இது தானே யதார்த்தம்.......இப்படி நடக்கும்போது எப்படி ஒரு கணவன் தன் மனைவியை வெளியே அனுப்புவான்?..............அப்படி ஏதும் நடந்துவிட்டாலும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தணும், அது தான்  பெண்ணீயம் என்கிறாரா கட்டுரை ஆசிரியர்?....எனக்கு புரியவில்லை சோகம்..............

என்னுடைய இந்த கதையிலும் இதைத்தான் சொல்ல முயற்சித்தேன் புன்னகை

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma புன்னகை

இந்த மனப்பான்மை மாறணும் என்று கட்டுரை ஆசிரியர் சொன்னால்.................... பயம் பயம் பயம்
நம் சமுதாயம் ????????????????????என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by விமந்தனி on Sat Aug 08, 2015 12:00 am

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
நிஜம்  விமந்தினி, ,மேலே கட்டுரை இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிகள்பாருங்கள்...........

//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். //

இப்படி நேரம் காலம் தெரியாமல் அலைவதா பெண்ணீயம்?....எனக்குப்புரியவில்லைசோகம் .............

நம் தளத்தில் இருக்கும் இந்த கதையை பாருங்கள்...............முள் - சிறுகதை

இது தானே யதார்த்தம்.......இப்படி நடக்கும்போது எப்படி ஒரு கணவன் தன் மனைவியை வெளியே அனுப்புவான்?..............அப்படி ஏதும் நடந்துவிட்டாலும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தணும், அது தான்  பெண்ணீயம் என்கிறாரா கட்டுரை ஆசிரியர்?....எனக்கு புரியவில்லை சோகம்..............

என்னுடைய இந்த கதையிலும் இதைத்தான் சொல்ல முயற்சித்தேன் புன்னகை

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma புன்னகை

இந்த மனப்பான்மை மாறணும் என்று கட்டுரை ஆசிரியர் சொன்னால்.................... பயம்  பயம்  பயம்
நம் சமுதாயம் ????????????????????

ஆமாம் கிருஷ்ணாம்மா. முதலில் படித்துவிட்டு பேசாமல் தான் போய்விட்டேன். ஆனால், அப்படி வந்தது பொறுப்பில்லாத்தனமாக எனக்கே தோன்றியது. அதனால் தான் திரும்ப வந்து, பெண்ணீயத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இது தான் பெண்ணீயம் என்று கட்டுரை எழுதியவருக்காக என் கருத்தை பதிவு செய்தேன்.

முதலில் கட்டுரை ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் என்றே எனக்கு புரியவில்லை.

//ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.// - இப்படியும் சொல்கிறார்.

//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை ...// - என்று இப்படியும் சொல்கிறார்.

பெண்ணீயம் என்றால் என்ன என்று அவராலேயே ஒரு கணிப்பிற்கு வரமுடியாத குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சுதந்திரம் என்பது எது என்று முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். என் இஷ்டப்படி எப்படிவேண்டுமாலும் இருப்பேன் என்றால் அதன் பெயர் சுதந்திரமில்லை. காட்டுமிராண்டித்தனம்.... கற்கால வாழ்க்கை...

எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்ற மிருகங்கள் கூட தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றன.

ஆணானாலும், பெண்ணானாலும் தத்தம் வாழ்க்கையில் யாரையாவது சார்ந்து தான் வாழ்கிறார்கள். பெண் மட்டுமா தான் குடும்பத்துக்காக உழைத்து தேய்ந்து போகிறாள்? ஏன் தன் குடும்பத்திற்காக எந்த ஆணும் உழைப்பதில்லையா...? சம்பாதிப்பதை எல்லாம் மனைவி பேருக்கே சொத்தாக வாங்கி குவிப்போர் இல்லையா...?

அப்படியிருக்கும் போது //திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? // - என்று இந்த அபத்தமான கேள்வி எங்கிருந்து வந்தது...?

இன்னும் விரிவாக பேசிக்கொண்டே போகலாம். ஆனால், //இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.// - என்று நமக்கும் முத்திரை குத்திவிடுவார்கள். இன்னும் ஒரு படி அதிகமாக போய் நம்மை பழைய பஞ்சாங்கம் என்பார்கள்....

முள் சிறுகதை மிக அற்புதமான படைப்பு கிருஷ்ணாம்மா. இப்போதைய பல இளம்பெண்களின் மன நிலையை மிக அழகாக சித்தரித்திருக்கிறது. இது தான் யதார்த்தம். பேசவேண்டிய இடத்தில்  பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் பெண்கள் தான் எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பவர்கள்.... புன்னகை  புன்னகை

நம் நாட்டில் பெண்களின் மதிப்பு என்றும் குறையவில்லை. அன்றும், இன்றும், என்றும். பெண் தன் எல்லை உணர்ந்து தாண்டாதவரையிலும்...

ஒரு பெண் எந்த சூழ்நிலையிலுமே அனாதையாவதில்லை தெரியுமா...? ஆனால், கட்டியவள் சரியில்லாமல் போனால், அந்த ஆணின் நிலை மிக, மிக பரிதாபத்திற்குரியது ஆகிவிடுகிறது. எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், அவன் தன்னை அனாதையாகவே தான் நினைக்கின்றான்.

ஒரு ஆணை சார்ந்து இருப்பதில் பெண் எப்போதுமே அவமானமாய் கருத மாட்டாள்.

எந்த ஒரு இடத்தில் பிறரது உணர்வுகளை மதித்து ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிறோமோ அங்கே பெண்ணீயம் மட்டுமல்ல, மனிதமும் மலரும் என்பது என் கருத்து.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by shobana sahas on Sat Aug 08, 2015 1:16 am

விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...

நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் . சோகம் சோகம் சோகம்
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by விமந்தனி on Sat Aug 08, 2015 1:23 am

@shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...

நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் . சோகம் சோகம் சோகம்
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா

புன்னகை புன்னகை புன்னகை கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by விமந்தனி on Sat Aug 08, 2015 1:32 am

@shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால்      சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...

நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ...  பொறுப்பில்லாமல் . சோகம்  சோகம்  சோகம்
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
இது தவறு ஷோபனா. நம்மிடம் உள்ள பலவீனமே இதுதான். நமக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறார் என்றாலே.. ஏன், எதற்கு என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஏமாந்து தான் விடுகிறோம்.

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீண் ஆராய்ச்சி செய்யும் பெண்கள் தேவையான விஷயங்களில் கொட்டைவிட்டுவிடுவதன் பலனை தான் பல பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் தவறு யாருடையது? ஏமாற்றியவரா? ஏமாந்தவரா?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by shobana sahas on Sat Aug 08, 2015 1:47 am

@விமந்தனி wrote:
@shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...

நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் . சோகம் சோகம் சோகம்
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா

புன்னகை புன்னகை புன்னகை கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
மேற்கோள் செய்த பதிவு: 1156338

கதை இரண்டையும் படித்தேன் அக்கா. இன்றைய பெண்களின் அசட்டுத்தனமான துணிச்சல் , ஒரு வகையான த்ரில் வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் , அது எதில் கொண்டுபோய் விடுகிறது என்பது தெரியாமல் இருக்கிறார்கள் ...
அதிலும் க்ரிஷ்ணாம்மாவின் கதை ரொம்ப அருமை. .
நான் "முள் " கதை படிக்கும் போது நான் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் ... நான் bangaloreil வேலை பார்க்கும் போது இப்படி தான் இரவு 8 -9 மணிக்கு திருச்சி செல்ல கிளம்புவேன் .. அது ஒரு 2.30 மணிக்கு சேலம் போகும்.. அப்புறம் திருச்சி பஸ் ஏறுவேன் .. ஒரு 4-4.30 க்கு போகும் ... ஆனால் அப்போதெல்லாம் எனக்கு பயமே கிடையாது .. இந்த கதையில் வருவது போல் பயப்படவே மாட்டேன் ... 2004-2008 வரை அப்படி தான் அரசு பேருந்தில் போய் வருவேன் . புக் செய்து போகும் அளவுக்கு பண வசதி இல்லை .. அரசு பஸ் என்றால் 110 ரூபாயில் முடியும் .. ஆனால் நம் நாடு மிகவும் மாறிவிட்டது . சென்ற வருடம்
பெங்களூர் பட்ட பகலில் சென்றேன் என் பையனும் 23 வயதுள்ள என் தம்பியுடன் ... அவ்வளோ பயம் ...
கால் டாக்ஸி ஏற பயம் ... நல்ல வேளை தம்பி இருந்ததால் தப்பித்தேன் .
காலம் மாறிவிட்டதால் நாமும் கொஞ்சம் பதுங்கி தான் இருக்கணும் ...
பெமிநிசம் பேசுவதால் ..நம்மை நாமே சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று நினைக்கிறன் ...
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by விமந்தனி on Sat Aug 08, 2015 1:52 am

@shobana sahas wrote:

ம்ம்.... சூப்பருங்க சூப்பருங்க

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by krishnaamma on Sun Aug 09, 2015 1:49 am

ஆமாம் விமந்தனி,............சூப்பர் ஆக சொல்லி இருகீங்க புன்னகை

//முள் சிறுகதை மிக அற்புதமான படைப்பு கிருஷ்ணாம்மா. இப்போதைய பல இளம்பெண்களின் மன நிலையை மிக அழகாக சித்தரித்திருக்கிறது. இது தான் யதார்த்தம். பேசவேண்டிய இடத்தில்  பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் பெண்கள் தான் எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பவர்கள்.... புன்னகைபுன்னகை

ரொம்ப சரி, எங்க பேசணுமோ  அங்கு வாயடைத்துப்  போவார்கள்  புன்னகை

நம் நாட்டில் பெண்களின் மதிப்பு என்றும் குறையவில்லை. அன்றும், இன்றும், என்றும். பெண் தன் எல்லை உணர்ந்து தாண்டாதவரையிலும்...

அதே தான் நானும் சொல்கிறேன் , தைரியம் என்பது வேறு அசட்டுத்தைரியம் என்பது வேறு............இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது......தேவை இல்லாமல் தாமே சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது  கூடாது  கூடாது  கூடாது  .............உதாரணத்துக்கு, மேலே உள்ள கதை இல் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு பேசும் அந்த பெண், தன் போன் ஐக்கூட சார்ஜ் இல் போட்டுக்காமல் வந்திருப்பாள்.............மேலும், இரவு  அணியும்  உடையும்  'ஒருமாதிரி ' அணிந்திருப்பாள், இவை எல்லாம் ஒழுக்கக் கேடுகள்  ...............மற்றவர் பார்க்கும்போது கை எடுத்துக்கும்பிடும் படிக்கு  இருக்கணும் நம் தோற்ற்றம்.......கை நீட்டி கூப்பிடும் படிக்கு  இருக்கக் கூடாது..... அது நம் கை இல் இருக்கே, இதை  முதலில் நாம் உணரணும். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்று விதண்டா வாதம் செய்யக் கூடாது ...............

ஒரு பெண் எந்த சூழ்நிலையிலுமே அனாதையாவதில்லை தெரியுமா...? ஆனால், கட்டியவள் சரியில்லாமல் போனால், அந்த ஆணின் நிலை மிக, மிக பரிதாபத்திற்குரியது ஆகிவிடுகிறது. எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், அவன் தன்னை அனாதையாகவே தான் நினைக்கின்றான்.ஒரு ஆணை சார்ந்து இருப்பதில் பெண் எப்போதுமே அவமானமாய் கருத மாட்டாள்.

வாஸ்தவம், அதனால் தான் அந்த காலத்தில் மனைவி 'போன' தும்  ஆணுக்கு உடனே இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்களோ ? புன்னகை

எந்த ஒரு இடத்தில் பிறரது உணர்வுகளை மதித்து ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிறோமோ அங்கே பெண்ணீயம் மட்டுமல்ல, மனிதமும் மலரும் என்பது என் கருத்து.//

இவைகள்  சத்தியமான  வார்த்தைகள்  விமந்தனி புன்னகை.................... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by krishnaamma on Sun Aug 09, 2015 1:58 am

@விமந்தனி wrote:
இது தவறு ஷோபனா. நம்மிடம் உள்ள பலவீனமே இதுதான். 1. நமக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறார் என்றாலே.. ஏன், எதற்கு என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஏமாந்து தான் விடுகிறோம்.

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீண் ஆராய்ச்சி செய்யும் பெண்கள் தேவையான விஷயங்களில் கொட்டைவிட்டுவிடுவதன் பலனை தான் பல பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

2. இதில் தவறு யாருடையது? ஏமாற்றியவரா? ஏமாந்தவரா?

மீண்டும் அந்த கதையை யே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறேன் புன்னகை............

1. இந்த பெண் ஜன்னல் கதவைத்திறக்க கஷ்டப்படும்போது, ஒரு ஆண் திடீரென்று மிக அருகில் வந்து பேசி உதவினால் ............சட்டென்று 'கோபமாய் அவனைப்பார்த்து " MIND  YOUR  OWN  BISUNESS " என்று 4 பேர் காதில் படும்படி  சொல்லணும்.

அடுத்தது, அவன் கால் மேலே பட்டால், உடனே எழுந்து பின்னாடி இருக்கும் அவனைப்பார்த்து, " ஏன் மிஸ்டர், காலை அடக்கமாய் வைக்கத்  தெரியாதா? " என்று சத்தமாய் கேட்கணும்................

எல்லாத்துக்கும் , அவன் சிரித்ததுக்கும் சேர்த்து பேசாமல் இருந்தால் அவன் advantage  எடுத்துக்கொள்கிறான்..............

இப்படி பேச வேண்டிய இடத்தில் எல்லாம் வாயை மூடி இருந்தால், எவன் வந்து உதவினாலும் அதை பெற்றுக்கொண்டால்........நம் கதை கந்தல் தான் புன்னகை .என்ன நான் சொல்லறது?

2.  கண்டிப்பாக தவறு நம் பேரில் தான், அதாவது பெண்கள் பேரில் தான் விமந்தனி..............ஒரு படத்தில் மனோரமா சொல்வார்கள் " என் பாவாடை அவிழ்ந்தது தப்பில்லை, எதிர் வீட்டுப்பையன் சிரித்தது தான் தப்பு " என்று சொலகூடாது....நீ பாவாடையை சரியா கட்டி இருக்கணும் இல்லையா? " என்று தன் மகளைப்பார்த்து கேட்பார்.

அது தான் எப்பவும் நாம் நினைவில் வைக்கணும்.....இதத்தான் " ஊசி இடம் கொடுக்காமல் நூல்  நுழையாது " என்று அந்தக்காலத்தில் சொன்னார்கள்.................

நாம் தானே வாய்ப்பை உருவாக்குகிறோம். என் அப்படி செய்யணும், அப்புறம் அது போச்சே இது போச்சே என்று அலறணும்?..............ஜாக்கிரதையாக  இருக்கலாம் அல்லவா, நாமாகவே பிரச்சனைகளை எதிர் நோக்கிப்போவதை தவிர்க்கலாமே என்று சொல்கிறேன்.

வேறு வழியே இல்லை என்று ஒரு காரியத்தை செய்வதற்கும், கொழுப்பெடுத்து செய்வதற்கும் வித்தியாசம் இருக்கே? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by krishnaamma on Sun Aug 09, 2015 2:11 am

@shobana sahas wrote:
@விமந்தனி wrote:

புன்னகை புன்னகை புன்னகை  கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
மேற்கோள் செய்த பதிவு: 1156338

கதை இரண்டையும் படித்தேன் அக்கா.  இன்றைய பெண்களின் அசட்டுத்தனமான துணிச்சல் , ஒரு வகையான த்ரில் வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் , அது எதில் கொண்டுபோய் விடுகிறது என்பது தெரியாமல் இருக்கிறார்கள் ...

அதிலும் க்ரிஷ்ணாம்மாவின் கதை ரொம்ப அருமை.  .

நான் "முள் " கதை படிக்கும் போது நான் என்னை ஒப்பிட்டு  பார்த்தேன்  ... நான் bangaloreil வேலை பார்க்கும் போது  இப்படி தான் இரவு 8 -9 மணிக்கு திருச்சி செல்ல கிளம்புவேன் .. அது ஒரு 2.30 மணிக்கு சேலம் போகும்.. அப்புறம் திருச்சி பஸ் ஏறுவேன் .. ஒரு 4-4.30 க்கு போகும் ... ஆனால் அப்போதெல்லாம் எனக்கு பயமே கிடையாது .. இந்த கதையில் வருவது போல் பயப்படவே மாட்டேன் ... 2004-2008 வரை அப்படி தான் அரசு பேருந்தில் போய் வருவேன் . புக் செய்து போகும் அளவுக்கு பண வசதி இல்லை .. அரசு பஸ் என்றால் 110 ரூபாயில் முடியும் .. ஆனால் நம் நாடு மிகவும் மாறிவிட்டது . சென்ற வருடம்
பெங்களூர் பட்ட பகலில் சென்றேன் என் பையனும் 23 வயதுள்ள என் தம்பியுடன் ... அவ்வளோ பயம் ...
கால் டாக்ஸி ஏற பயம் ... நல்ல வேளை  தம்பி இருந்ததால் தப்பித்தேன் .
காலம் மாறிவிட்டதால் நாமும் கொஞ்சம் பதுங்கி தான் இருக்கணும் ...
பெமிநிசம் பேசுவதால் ..நம்மை நாமே சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று நினைக்கிறன் ...

ஆமாம் ஷோபனா, பெங்களூர் மட்டும் இல்லை எல்லா இடமுமே அப்படித்தான் இருக்கு சோகம்..............நாம் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்...............இப்போ புதுவிதமாய், ஒரு கடத்தல் நடக்கிறது பெங்களூரில்.............

" ரோட்டு ஓரம் ஏதாவது ஒரு குழந்தை அழும், பாவம் என்று நினைத்து என்னவென்று கேட்டால், நான் தொலைந்து போய்விட்டேன், என்னை வீட்டில் விட்டுடுங்கோ என்று சொல்லும், சரி என்று வீட்டில் கொண்டு போய் விடாதீர்கள்...போலிஸ் ஸ்டேஷன் போங்கள்.............வீட்டில் அவளை கொண்டுபோய் விட்டால், தொலைந்தது அவள் இல்லை நீங்கள்தான்..........ஆமாம், நீங்கள் தாமாகவே கடத்தப்பட்டிருபீர்கள்....ஜாக்கிரதை" என்று ஒரு பிட் நோட்டீஸ் வந்தது தெரியுமா? .................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

குழந்தை பாவம் என்று நாம் பாவம் பார்த்தால், அதை வைத்து நம்மை கடத்தி விடுகிறார்கள் சோகம் ...............
.
.
அது சரி என் கதைக்கு பின்னுட்டம்?................. பின்னூட்டம் எழுதுங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by shobana sahas on Sun Aug 09, 2015 3:29 am

மேற்கோள் செய்த பதிவு: 1156515
அயயூ .........என்னம்மா இப்படி சொல்றீங்க...?
ஷெர்லோக் ஹோல்மேஸ் கதையில் வருவது மாதிரி இருக்கு இந்த "தன்னை தானே கடத்துதல் " ....  அதில், அந்த பாப்பா ஒரு வீடிற்கு கூடி செல்லும் . உள்ளே போனால் அவர்களின் பணத்தை பிடுங்கிக்கொண்டு கொன்று விடுவார்கள் .. அப்புறம் ஷெர்லோக் போய் பார்த்தல் ...
அந்த வீட்டை திறந்து பார்த்தல் அவர்கள் செய்தது போய் கிடப்பார்கள் ...
"இது கதை இல்லை நிஜமா ?" ...... காலம்(மனிதர்கள் ) ரொம்ப கேட்டு கிடக்கு ....
உங்கள் கதைக்கு பின்னூட்டம் போட்டு விட்டேன் அம்மா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by krishnaamma on Sun Aug 09, 2015 10:00 am

@shobana sahas wrote:

அயயூ .........என்னம்மா இப்படி சொல்றீங்க...?
ஷெர்லோக் ஹோல்மேஸ் கதையில் வருவது மாதிரி இருக்கு இந்த "தன்னை தானே கடத்துதல் " ....  அதில், அந்த பாப்பா ஒரு வீடிற்கு கூடி செல்லும் . உள்ளே போனால் அவர்களின் பணத்தை பிடுங்கிக்கொண்டு கொன்று விடுவார்கள் .. அப்புறம் ஷெர்லோக் போய் பார்த்தல் ...
அந்த வீட்டை திறந்து பார்த்தல் அவர்கள் செய்தது போய் கிடப்பார்கள் ...
"இது கதை இல்லை நிஜமா ?" ...... காலம்(மனிதர்கள் ) ரொம்ப கேட்டு கிடக்கு ....
உங்கள் கதைக்கு பின்னூட்டம் போட்டு விட்டேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1156530

இதில் , குழந்தையை அழைத்து சென்ற பெண்ணை கடத்தி விற்கிறார்களாம்   சோகம்
.
.
.
நன்றி ஷோபனா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்ணியம் மலர வேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum