புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
68 Posts - 53%
heezulia
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
15 Posts - 3%
prajai
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
9 Posts - 2%
jairam
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மரணம் துரத்துகிறது! Poll_c10மரணம் துரத்துகிறது! Poll_m10மரணம் துரத்துகிறது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் துரத்துகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:25 am


நெத்திலிமேடு என்ற ஊருக்கு ஒரு சாது வந்திருந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் சொன்ன நல்லுரைகளால் அங்குள்ள மக்கள் நல்வழிப்படுத்தப் பட்டனர். எனவே, அவருக்கு அவ்வூரில் செல்வாக்கு உயர்ந்தது.

ஒருநாள் அவர் தம்முடைய உபதேசத்துக்கு இடையில் சொன்னார்.

""பணத்தை நீங்கள் எல்லாரும் தர்ம வழியில் தான் தேட வேண்டும். தர்மம் தவறி குறுக்கு வழியில் சம்பாதிக்கப் படும் பணம் அந்த வழியிலேயே போய் விடும். அது மட்டுமல்ல... பணம் எப்படிப்பட்ட இணை பிரியாத நண்பர்களையும், விரோதிகளாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது,'' என்றார்.

இதைக் கேட்டு கொண்டிருந்த இளைஞன் ஒருவன் உடனே எழுந்தான்.

""சுவாமி, நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியாது. நானும், என்னுடைய மூன்று நண்பர்களும், இணை பிரியாத நண்பர்கள். எங்களை எக்காரணம் கொண்டும் எதுவும், பிரித்து விடவில்லை. பணம் எத்தனையோ முறை வந்தது; போனது; அப்போதெல்லாம் அந்தப் பணம் எங்களை விரோதியாக்கி விடவில்லையே!'' என்று கூறினான்.

அப்போது அவன் கூடவே வந்திருந்த மற்ற மூன்று நண்பர்களும், ""அவன் சொல்லியது உண்மைதான்!'' என்று ஏற்றுக் கொண்டனர்.

""இன்றைய உங்களது பேச்சு பிழையான பேச்சு,'' என்று அபிப்ராயம் தெரிவித்தனர்.

சாது எதையும் சொல்லவில்லை. அவர், அவர்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். அவர் முகத்தில் இலேசான புன்னகை தவழ்ந்தது. இது நடந்து நான்கைந்து நாட்கள் இருக்கும். நான்கு நண்பர்களும் ஒவ்வொரு நாளும் மாலையில் உலாவி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் அவர்கள் அவ்வாறு உலாவி வரும்போது அவர்கள் எதிரே சன்னியாசி ஒருவர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தார். அவர்கள் சன்னியாசியை வழிமறித்தனர்.

""சுவாமி, என்னவாயிற்று, என்ன ஆபத்து?'' என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் ""என்னை மரணம் துரத்துகிறது. ஆகையால், மரணத்தின் கண்ணில் படாமல் ஓடி வந்து கொண்டிருக்கிறேன்!'' என்றார்.

""மரணமா!'', என்று நண்பர்கள் திடுக்கிட்டனர்.

அதற்குள் அவர் அங்கிருந்து ஓடி மறைந்தார். அவர் ஓடி வந்த இடத்தில் ஓர் மலைக்குகை இருந்தது. எனவே, அவர்கள் அந்த மலைக் குகைக்குச் சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தனர். மிகவும் எச்சரிக்கையாக அந்த மலைக் குகைக்குள் சென்று எட்டிப் பார்த்தனர்.

அவர்கள் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. உள்ளே விலை மதிக்க முடியாத நவரத்தினங்களும், பொற்காசுகளும் மலையைப் போலக் குவிந்திருந்தன. "ஆஹா, எத்தனை பெரிய பொக்கிஷம் இது! இதைக் கண்டா சாது ஓடி வந்தார்' என்று அவர்கள் எண்ணினர்.

இந்தப் பெரும் பொக்கிஷம் ஒரு பேரரசனிடம் கூட இருக்க முடியாதே. இதை அனுபவித்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்காமல், இதை மரணத்துக்குச் சரிசமமாக எண்ணி ஓடி வந்திருக்கிறாரே! என்ன பைத்தியக்காரத்தனம் இது? என்று எண்ணினர் நால்வரும்.

உள்ளே சென்று அங்குள்ள வைரங்களையும், வைடூரியங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் தங்க ஆபரணங்களையும் கை நிறைய அள்ளிப்பார்த்தனர். அவர்களுக்குள் ஒரு தீர்மானம் பிறந்தது.

"இந்தப் புதையலை ஆளுக்கு ஒரு பங்காக, நான்கு பங்கு பிரித்துக் கொள்வோம்' என்று அவர்கள் பேசி முடிவு எடுத்தனர். அப்போது நண்பர்களில் ஒருவன் கூறினான்.

""இந்தக் குகையில் கொடிய விலங்கு ஏதாவது இருக்கக் கூடும் என்று நீங்கள் மூவரும் தயங்கி நின்ற வேளையில் நான் தான் தைரியமாக உள்ளே நுழைந்து இந்தப் பொக்கிஷத்தை முதன் முதலாகப் பார்த்தேன். ஆகவே, நான்கு பங்கில் என் பங்கு சற்றுக் கூடுதலாகவே வர வேண்டும்!'' என்றான்.

"பார்த்தது நீயாக இருக்கலாம். உனக்குத் தைரியம் கொடுத்து உள்ளே அனுப்பியது நான். நீ போக மறுத்து இருந்தால் நான் அல்லவா போயிருப்பேன். ஆகவே, நியாயமாக எனக்குத் தான் பங்கில் கூடுதலாக தர வேண்டும்,'' என்றான் இரண்டாம் நண்பர்.

"உங்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு நாங்கள் வெளியில் காவலுக்கு இருந்தோமே. ஆகையால் எங்களுக்குத் தான் பங்கில் அதிகம் வேண்டும்' என்றனர் மற்ற இருவரும்.

அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லை. காரசாரமான விவாதம் நடந்தது. விவாதம் கோபமாக உருவெடுத்தது. உடனே அங்கிருந்த இரும்புக் கம்பிகளை அவர்கள் பாய்ந்து சென்று எடுத்தனர். ஒருவரை ஒருவர் மூர்க்கமாகத் தாக்கினர்.

அந்தச் சண்டையில் ஒரு வாலிபன் அந்தப் பொருட்களின் மேலே விழுந்து இறந்து விட்டான். இதைக் கண்ட மற்ற மூவரும் திடுக்கிட்டனர்.

""நாம் எவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள். கேவலம் இந்தச் செல்வம் நம்மைக் கெடுத்து விட்டதே' என்று வருந்தினர்.

"சரி' நாம் மூவரும் சமாதானத்துக்கு வருவோம்' என்று அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

""இனி அடுத்து என்ன செய்வது?'' அவர்களில் ஒருவன் கேட்டான்.

""நடந்தது நடந்து விட்டது. இவன் இறந்து விட்டான். முதலில் இவனை ஓர் இடத்தில் பத்திரமாகப் புதைத்து விட்டு, மேற்கொண்டு யோசிப்போம்!'' என்றான் இன்னொருவன்.

அவர்கள் ஒற்றுமையாக நண்பனின் பிணத்தை மலையடி வாரத்தில் ஆழமாகப் புதைத்தனர்.

வந்ததில் இருந்து ஏகப்பட்ட வேலைகளைச் செய்து விட்டதால் களைப்பும், பசியும் அவர்களை வாட்டியது.

""நம்மில் யாராவது ஒருவன் நம் மூவருக்கும் சாப்பாடு வாங்கி வரவேண்டும். நாம் அதைச் சாப்பிட்டு விட்டு அடுத்த விஷயத்துக்கு முடிவு செய்வோம்!'' என்றான் அவர்களில் ஒருவன்.

ஆனால், யார் போவது? ஒவ்வொருவனும் போகத் தயங்கினர்.



மரணம் துரத்துகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:26 am

"போய்த் திரும்பி வருவதற்குள் இருப்பதை எடுத்துக் கொண்டு இவர்கள் தன்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டால் என்ன செய்வது?'' என்பதுதான் அவர் களின் தயக்கத்துக்கு காரணம்.

இதை அவர்கள் ஒருவருக் கொருவர் பேசித் தெளிவுபடுத்திக் கொண்டனர். ""அவ்வாறு எல்லாம் நாங்கள் செய்ய எங்களிடம் ஏது சக்தி? வயிற்றுப் பாடு முதலில் அப்போது தானே இவ்வளவு பாரத்தையும் தூக்க முடியும். எனவே, தைரியமாகப் போய் வா,'' என்று ஒருவனிடம் கூறினர்.

அவன் அரைகுறை மனதுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக நடந்தான்.

சிறிது நேரமாயிற்று. இருவர் மனதிலும் ஓர் எண்ணம். பங்கு நான்கில் இருந்து மூன்றாகக் குறைந்து விட்டது. அதுவும், இரண்டாகக் குறைந்து விட்டால் தேவலை என்று எண்ணி னர். ஆகவே, ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டு வது எப்படி என்று சிந்தனையில் இருந்தனர்.

அப்போது அருகே இருந்த மூட்டை ஒன்று அவர்களில் ஒருவனைக் கவர்ந்தது.

""இது என்ன?'' என்று தன் நண்பனிடம் கேட்டவாறு அந்த மூட்டையை நெருங்கினான்.

""ஏதாவது நகை மூட்டையாக இருக்கும்,'' என்று நண்பன் அலட்சிய மாகக் கூறினான்.

மூட்டை அருகே எழுந்து சென்ற நண்பன் கண் இமைக்கும் நேரத்தில் அந்த மூட்டையைத் தூக்கித் தன் நண்பன் தலைமேல் வீசி எறிந்தான்.

அம்மூட்டை அவனுடைய தலையைப் பலமாகத்தாக்கியது. மூச்சுத் திணறி இறந்து விட்டான் அவன். அவன் இறந்ததை நிச்சயித்துக் கொண்ட நண்பன் மலைக்குகைக்கு வெளியே வந்து நின்று கொண்டான்.

உணவு வாங்கச் சென்றவன் விரைந்து வந்தான். நண்பனை மலைக்குகை வாயிலில் கண்டவுடன்தான் அவனுக்கு மூச்சே வந்தது. இருவரும் உள்ளே வந்தனர். அங்கே தங்கள் நண்பன் இறந்து கிடப்பதைப் பார்த்த உணவு வாங்கச் சென்றவன், ""இவன் எப்படி இறந்தான்?'' என்று கேட்டான்.

""இவன் பேராசைக்காரன். நான் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல உயரத்தில் அடுக்கி வைத்திருந்த மூட்டையை ஆசையோடு இழுத்தான். அது அவன் தலையில் விழுந்து அழுத்திக் கொன்று விட்டது. நான் உதவி செய்ய எண்ணினேன். ஆனால், இரண்டு பேர் இல்லாமல் மூட்டையை அசைக்க முடியாது என்று புரிந்து கொண்டேன். ஆகவே, உன் வரவுக்காகக் காத்திருந்தேன்!'' என்றான்.

""அடடா!'' என்று வருந்தினான் உணவு வாங்கி வந்த நண்பன்.

""சரி மூட்டையை அப்புறப்படுத்தலாமா?'' என்று, குகையிலிருந்தவன் கேட்டான்.

"சரி' என்றான் நண்பன்.

அவன் மூட்டையை ஒரு கைப்பிடிக்கும் போது குகையிலிருந்த நண்பனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. மிஞ்சி இருப்பது இவன் தான்! இவனையும் கொன்று விட்டால் இருப்பது எல்லாம் எனக்கே!

உடனே விரைந்து செயல்பட்டான். அவன் மூட்டையைக் குனிந்து பற்றிப் பிடித்துத் தூக்க முயற்சிக்கும் நேரத்தில், சட்டென அருகில் உள்ள இரும்புக் கம்பியை எடுத்து ஓங்கி அவன் மண்டையில் போட்டான்.

ஒரே போடு. மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிர் துறந்தான் உணவுக்காகச் சென்ற நண்பன். இப்போது எஞ்சிய நண்பன், "அப்பாடா' என்று சந்தோஷம் அடைந்தான்.

"இனி எவனுக்கும் எந்தப் பங்கும் தர வேண்டியதில்லை' அவன் மனம் சந்தோஷத் தில் மிதந்தது.

அதே சமயம் பசி அவன் வயிற்றைக் கிள்ள, தன் நண்பன் வாங்கி வந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து அவசர அவசரமாக உண்ண ஆரம்பித்தான். வயிறு நிரம்ப அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் அவனுக்குள் ஓர் ஆனந்தம் தோன்றியது.

"நாளையிலிருந்து நான் கோடீஸ்வரன்!'

இவ்வாறு அவன் எண்ணியபோதே அவன் தலை கிறுகிறுவென சுழன்றது. கண்கள் இருண்டன. வாயிலிருந்து நுரை தள்ளியது. சிறிது நேரத்தில் அவன் துடிதுடித்தான்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறினான். வாந்தி எடுத்தான். பிறகு இறந்துவிட்டான்.

உணவு வாங்கச் சென்றவன் குகைச் செல்வத்தைத் தானே அடைய வேண்டும் என்ற பேராசையால் உணவில் கொடிய விஷத்தைக் கலந்து எடுத்து வந்திருந்தான். அவன் எண்ணம் ஈடேறுவதற்குள் அவனே இறந்து விட்டான்.

அதன்பிறகு இருந்த ஒருவனும் விஷம் கலந்த உணவினைச் சாப்பிட்டு இறந்து விட்டான். அந்தக் குகையில் உள்ள ஒரு சிறு குன்றுமணிச் செல்வம் கூட வெளியேறாமல் நான்கு உயிர்களைப் பலி வாங்கிவிட்டு அடுத்தவர்களுக்காகக் காத்திருந்தது.

அந்த சாது சொன்னதுபோல், பணத்தை மரணம் என்று சொன்னது எவ்வளவு உண்மை!

சிறுவர் மலர்



மரணம் துரத்துகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 1:12 am

ரொம்ப  அருமையான கதை சிவா.....பகிர்வுக்கு நன்றி.....பேராசை பெருநஷ்டம் என்பது போல ஆகிவிட்டது ............  கடைசி இல் அவர்கள் தங்கள் உயிரையே  கொடுத்துவிட்டனர் பொருளுக்காக சோகம்
.
.
.
அனால் நான் முடிவு இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை, அவர்கள் அடித்துக்கொள்ள ஆரம்பித்ததுமே அந்த சந்நியாசி வந்து தான் சொன்னது நிஜம் தானே என்று இவர்களை கேட்பார் என்று நினைத்துவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 30, 2015 3:09 am

நல்ல கதை .... சிறிது மாற்றி எழுதி இருக்கிறார்கள் சிறுவர்களுக்காக ...
இந்த கதை "சித்தர்கள்" பற்றியது . இந்திரா சௌந்தராஜன் எழுதிய புத்தகத்தில் "சித்தர்கள் ஏன் மண்ணை பொன்னாக்க தெரிந்தும் தங்கம் மீது ஆசை கொள்ளவதில்லை " என்பதற்கு இந்த கதை வரும் ...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 30, 2015 6:27 am

அருமையான கதை ! செல்வத்தின்மீது அளவுகடந்த ஆசை வைப்பது ஆபத்து என்ற நீதியை உணர்த்தும் கதை ! பகிர்வுக்கு நன்றி சிவா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக