ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

View previous topic View next topic Go down

பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by T.N.Balasubramanian on Tue Jul 21, 2015 6:58 pm

பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு... ஓர் ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!ரஞ்சனி சங்கர், காஸம்ஃபர் அலி மற்றும் அவரின் மனைவியுடன்
மாற்றம்... சாமானியராலும் நிகழலாம்!

சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னால், பெங்களூருவைச் சேர்ந்த காஸம்ஃபர் அலி என்னும் ஆட்டோவில், இரவு எட்டரை மணியளவில் ஒரு பெண் பெங்களூருவில் இருந்து கானக்புரா வரை பயணித்தார். அடுத்த நாள் காலை வரையிலும், காஸம்ஃபர் அலிக்கு வழக்கமான தினசரி பயணமாகத்தான் இருந்தது.

என்ன நடந்ததெனத் தெரியவில்லை. அடுத்த சில மணிநேரங்களில் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார் காஸம்ஃபர் அலி. அதே வாரத்தில், தெருவில் உள்ளவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கினர். வார இறுதியில், முதல் நாளன்று தன் ஆட்டோவில் பயணித்த பெண், எதிர்பாராத விதமாக நேரில் வந்து காஸம்ஃபர் அலிக்கு நன்றி சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

என்ன நடந்தது?

மார்க்கெட்டிங் ஆலோசகர் மற்றும் இசைக்கலைஞரான ரஞ்சனி சங்கர்தான் அந்த ஆட்டோ பயணி. அலுவல் காரணமாக ரஞ்சனி, பெங்களூருவுக்கு செல்ல நேர்ந்திருக்கிறது. நகரத்தில் வேலை காரணமாக, இருப்பிடத்துக்கு இரவில் தனியாகச் செல்ல வேண்டிய சூழல். அந்த இடத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானக்புரா சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இரவு மற்றும் அதிக தூரம் காரணமாக அவருக்கு டாக்ஸி கிடைக்கவில்லை. கடைசியாக ஓலா ஆட்டோ செயலி மூலம் ஓர் ஆட்டோவை பதிவு செய்தார் ரஞ்சனி. ஓலா அனுப்பி வைத்தது, ஓட்டுநர் காஸம்ஃபர் அலியை.

செல்ல வேண்டிய இடத்தைக் கவனமுடன் கேட்டுக்கொண்ட காஸம்ஃபர் அலி, செல்லப்போகும் பாதை மிகவும் கடினமானது என்று தெரிவித்திருக்கிறார். விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படும்; வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறியவர், ரஞ்சனியை பயப்பட வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது ரஞ்சனிக்கு. ஆனாலும் அந்த நேரத்தில் வேறு வழியில்லை. துணிந்து ஆட்டோவில் ஏறினார்.

தன் செல்பேசி வழியாக 'கூகிள் மேப்ஸ்' மூலம் வழிசொல்லி, அது காட்டும் வழியில் ஆட்டோவைச் செலுத்தச் சொன்னார், ரஞ்சனி. 15 நிமிடங்கள் கழிந்திருந்தன. நிமிர்ந்து பார்த்தால் சாலை முழுவதும் கும்மிருட்டாகக் காட்சியளித்தது. பயந்திருந்த ரஞ்சனியிடம், பயப்பட வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார் காஸம்ஃபர் அலி. கானக்புராவை அடைந்தது ஆட்டோ. அங்கே தனக்காக நண்பர் காத்திருப்பார் என்ற எண்ணத்தில் கொஞ்சம் நிம்மதியானார் ரஞ்சனி.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, உரிய நேரத்துக்கு ரஞ்சனியின் நண்பரால் வரமுடியவில்லை. இன்னும் வந்து சேராத நண்பருக்காக, சில தேநீர்க்கடைகள் மட்டுமே இருந்த இடத்தில், ரஞ்சனி காத்திருக்க நேர்ந்தது. சற்றும் யோசிக்காமல் காஸம்ஃபர் அலி, நண்பர் வரும்வரை ரஞ்சனியுடன் காத்திருப்பதாக நம்பிக்கையளித்தார். நண்பர் வர சுமார் 20 நிமிடங்கள் ஆனது. அந்த நேரத்தில்தான் அந்த ஃபேஸ்புக் பதிவை எழுதினார் ரஞ்சனி.

அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டு, ஹோட்டல் அறைக்குத் திரும்பினார் ரஞ்சனி. ஒரு மணி நேரத்தில் 400 லைக்குகள், அடுத்த நாள் காலையில் 2,000 லைக்குகள். 4000, 5000 என அதிகரித்த அந்தப்பதிவுக்கு இப்போது (நீங்கள் இதைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்) கிடைத்திருக்கும் லைக்குகளின் எண்ணிக்கை 17,700. ஷேர்கள் மொத்தம் 2828. அது மட்டுமல்ல. பல்வேறு ஆன்லைன் ஊடகங்களிலும் இது வைரலாகி இருக்கிறது.

அப்படி அந்தப்பதிவில் என்னதான் இருந்தது? ஒரு சாதாரணப் பயணம், தனக்கு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான மக்களிடையே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?

ரஞ்சனியே சொல்கிறார்:

"நாம் பெரும்பாலும் எதிர்மறையான செய்திகளையே கேட்க பார்க்க நேரிடுகிறது. முக்கியமாக டாக்ஸி பயணங்களைப் பற்றியும், டாக்ஸி ஓட்டுநர்களைப் பற்றியும்.

நேர்மறையான விஷயங்கள் யாருடைய கவனத்துக்கும் எட்டப்படுவதே இல்லை. முரட்டுத்தனமான, ஆபத்தான ஓட்டுநர்களைப் பற்றி மட்டுமே பேசி வரும் நாம் ஏன் ஒரு நல்லவரை, உழைப்பாளியைப் பற்றிப் பேசக்கூடாது என்று தோன்றியது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு. இருட்டு, தனிமை, பயமுறுத்தும் சாலையில் ஒரு பெண் தனியாகப் பயணிக்க நேர்ந்த நிலைமையை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது உதிர்க்கப்பட்ட ஓட்டுநரின் தைரியமூட்டும் வார்த்தைகள், அப்பெண்ணுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்பதையும் உணர முடிந்தது. அதனால்தான் அப்பதிவு வைரலானது!".

மற்றொரு பக்கம், அர்ப்பணிப்புடன் வேலை பார்த்த காஸம்ஃபர் அலிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தான் வசிக்கும் பகுதியின் ஹீரோவாகவே ஆகிவிட்டார் காஸம்ஃபர். வானொலி, ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இதை செய்தியாக்கி இருக்கின்றன. உள்ளூர் காவல்துறை ஆணையாளர் இவரை அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதை அறிந்த ஓலா நிறுவனம், அவரின் ஆட்டோரிக்‌ஷாக் கடனைத் தாங்களே செலுத்தி விடுவதாகக் கூறிவிட்டது. அத்தோடு ரஞ்சனியை அழைத்த ஓலா, காஸம்ஃபரைச் சந்திக்க முடியுமா எனவும் கேட்டது.

தேவைப்பட்ட நேரத்தில், தைரியம் அளித்து, தன்னைப் பத்திரமாய் இருப்பிடம் அழைத்துச் சென்ற காஸம்ஃபரை மீண்டும் பார்க்க உடனே ஒப்புதல் அளித்தார். ஓலாவும் ரஞ்சனியை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்குப் பறந்தது. ரஞ்சனி, தன் வீட்டுக்குள் நுழைந்ததும், வியப்பின் உச்சத்துக்கே போனார் காஸம்ஃபர் அலி. தன் மனைவியையும், ஐந்து வயது மகனையும் ரஞ்சனிக்கு அறிமுகம் செய்து வைத்தார். மரியாதையளிக்கும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ரஞ்சனி, அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தார். ஒன்றாக அமர்ந்து எல்லோரும் தேநீர் அருந்தினர்.

சில நிமிட அமைதிக்குப் பின்னர், காஸம்ஃபர் அலி ரஞ்சனியிடம் கேட்டிருக்கிறார்.

"மேடம், நான் ஏன் இத்தனை பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் ஃபேஸ்புக்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள். ஃபேஸ்புக் என்றால் என்னவென்று தெரியும். ஆனால் அது என்ன 'லைக்'கு?"

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

நன்றி :ஹிந்து

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ayyasamy ram on Tue Jul 21, 2015 7:11 pm
காஸம்ஃபர் அலிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,
-
அவரைப் போல சில நல்லவர்கள் இருப்பதால் தான்
ஆண்டவன் மனிதர்களை இன்னும் காப்பாற்றி கொண்டு
வருகிறான்....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by T.N.Balasubramanian on Tue Jul 21, 2015 7:55 pm

நாட்டில் மழை பெய்வதற்கு இதுவும் ஒரு காரணமோ ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by shobana sahas on Tue Jul 21, 2015 9:06 pm

ரொம்ப சந்தோஷமாக உள்ளது . அலிக்கு என் வாழ்த்துக்கள் . பொதுவாக தவறான செய்திகளை பதிவிடும் , பகிர்ந்தும் , படிப்பதில் ஆர்வம் காட்டும் மக்களுக்கு இடையே ரஞ்சனி நல்ல செய்தியை பதிவிட்டுள்ளார் .. பகிர்ந்து பாராட்டி உள்ளார் . பலே ரஞ்சனி . சூப்பருங்க சூப்பருங்க
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by T.N.Balasubramanian on Tue Jul 21, 2015 9:31 pm

@shobana sahas wrote:ரொம்ப சந்தோஷமாக உள்ளது . அலிக்கு என் வாழ்த்துக்கள் . பொதுவாக தவறான செய்திகளை பதிவிடும் , பகிர்ந்தும் , படிப்பதில் ஆர்வம் காட்டும் மக்களுக்கு இடையே ரஞ்சனி நல்ல செய்தியை பதிவிட்டுள்ளார் .. பகிர்ந்து பாராட்டி உள்ளார் . பலே ரஞ்சனி . சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1152215

பாராட்டி ,வெளிச்சம் காட்டவேண்டியவர்களை , வெளிச்சத்திற்கு கொண்டுவந்து ,
பாராட்டுவது , ஒரு சிலரிடமே காண்கின்ற நல்ல குணம் .
ரஞ்சனி ,இங்கேதான் ,எடுத்துக் காட்டாக திகழ்கிறார் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by விமந்தனி on Wed Jul 22, 2015 12:24 am

சூப்பருங்க ரஞ்சனிக்கும், காஸம்ஃபர் அலி-க்கும் வாழ்த்துக்கள். முதன் முறையாக ஒரு நல்ல விஷயம் காதில் விழுந்திருக்கிறது.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by சிவா on Wed Jul 22, 2015 11:05 am

மகத்தான மனித நேயமிக்க மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது!

சரியான மனிதரை அடையாளம் காட்டிய ரஞ்சனிக்கு வாழ்த்துகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ராஜா on Wed Jul 22, 2015 11:38 am

ரஞ்சனியே சொல்கிறார்:

"நாம் பெரும்பாலும் எதிர்மறையான செய்திகளையே கேட்க பார்க்க நேரிடுகிறது. முக்கியமாக டாக்ஸி பயணங்களைப் பற்றியும், டாக்ஸி ஓட்டுநர்களைப் பற்றியும்.

நேர்மறையான விஷயங்கள் யாருடைய கவனத்துக்கும் எட்டப்படுவதே இல்லை. முரட்டுத்தனமான, ஆபத்தான ஓட்டுநர்களைப் பற்றி மட்டுமே பேசி வரும் நாம் ஏன் ஒரு நல்லவரை, உழைப்பாளியைப் பற்றிப் பேசக்கூடாது என்று தோன்றியது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு.

அவசியமான பதிவு ,

வாழ்த்துக்கள் ஆட்டோ ஓட்டுனர் அலிக்கு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by சரவணன் on Wed Jul 22, 2015 12:29 pm

இந்த தானி ஓட்டுனர் அலி மாதிரி, என்னை மாதிரி ஆட்கள் இருக்குறதால தான் நாட்ல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது.
தலை வணங்குகிறேன் ஆட்டோ அலி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ராஜா on Wed Jul 22, 2015 12:58 pm

@சரவணன் wrote:இந்த தானி ஓட்டுனர் அலி மாதிரி, என்னை மாதிரி ஆட்கள் இருக்குறதால தான் நாட்ல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது.தலை வணங்குகிறேன் ஆட்டோ அலி

தம்பி மழை பெய்யுறதுக்கு அலி போன்றோர் காரணம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ளலாம்.உன்னைப்போல ஆளுங்க corporation pipeline ஐ உடைத்து தண்ணீர் திருடும்போது கொட்டும் தண்ணியை எல்லாம் மழை என்று சொல்லகூடாது...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by balakarthik on Wed Jul 22, 2015 1:00 pm

@ராஜா wrote:உன்னைப்போல ஆளுங்க corporation pipeline ஐ உடைத்து தண்ணீர் திருடும்போது கொட்டும் தண்ணியை எல்லாம் மழை என்று சொல்லகூடாது...

தல அவரே ஒரு மக் தண்ணில குளிச்சுட்டு மடியா வந்து சொல்லுறாரு அதா தப்பா சொல்லுறிங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by சரவணன் on Wed Jul 22, 2015 1:02 pm

நமக்கு மட்டும் ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க.......என்ன பண்ணலாம்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by balakarthik on Wed Jul 22, 2015 1:04 pm

@சரவணன் wrote:நமக்கு மட்டும் ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க.......என்ன பண்ணலாம்..

ஏற்கனவே ஏகப்பட்டத பண்ணிதானே எதிரிகளே வந்தாங்க இன்னுமா ...........

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ராஜா on Wed Jul 22, 2015 1:05 pm

@balakarthik wrote:
@ராஜா wrote:உன்னைப்போல ஆளுங்க corporation pipeline ஐ உடைத்து தண்ணீர் திருடும்போது கொட்டும் தண்ணியை எல்லாம் மழை என்று சொல்லகூடாது...

தல அவரே ஒரு மக் தண்ணில குளிச்சுட்டு மடியா வந்து சொல்லுறாரு அதா தப்பா சொல்லுறிங்களே
"மக்" என்பதை கொஞ்சம் மெதுவா சொல்லுங்க , உடனே வேற ஞாபகத்தில் பாலாஜி வந்துடுவார் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by balakarthik on Wed Jul 22, 2015 1:05 pm

பரவா இல்லையே இப்பலாம் முகநூலுல நல்லவிஷயங்களை கூட போடுறாங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by balakarthik on Wed Jul 22, 2015 1:06 pm

@ராஜா wrote: "மக்" என்பதை கொஞ்சம் மெதுவா சொல்லுங்க , உடனே வேற ஞாபகத்தில் பாலாஜி வந்துடுவார் புன்னகை

அவருக்கு ஜாம்பஜார் ஜக் கொடுத்துடலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by T.N.Balasubramanian on Wed Jul 22, 2015 1:06 pm

@சரவணன் wrote:இந்த தானி ஓட்டுனர் அலி மாதிரி, என்னை மாதிரி ஆட்கள் இருக்குறதால தான் நாட்ல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது.
தலை வணங்குகிறேன் ஆட்டோ அலி
மேற்கோள் செய்த பதிவு: 1152359

எனது நண்பர் ஒருவர் கூறுவது ஒன்றுண்டு ,
இந்த உலகத்தில் , காந்தி ,நேரு ,ராமுகுட்டி,பரம ஹம்சர் , விவேகானந்தர் ,
போன்றவர்களை பார்ப்பது அரிது என்பார் .
அதெல்லாம் சரிடா , காந்தி ,நேரு ok ,
பரம ஹம்சர் , விவேகானந்தர்  ok
நடுலே யாருடா இந்த ராமுக்குட்டி னா, நண்பனை கேட்டால் ,
அந்த காலத்தில் ,அவருடைய தாத்தா, நண்பரை செல்லமா ராமுகுட்டி னு கூப்பிடுவாராம்  .

அதுதான் நினைவுக்கு வருது சரா !
இருந்தாலும் மழை வர நீங்களும் ஒரு காரணமே !புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ராஜா on Wed Jul 22, 2015 1:07 pm

@balakarthik wrote:
@சரவணன் wrote:நமக்கு மட்டும் ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க.......என்ன பண்ணலாம்..

ஏற்கனவே ஏகப்பட்டத பண்ணிதானே எதிரிகளே வந்தாங்க இன்னுமா ...........
மேற்கோள் செய்த பதிவு: 1152390அதானே .....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ராஜா on Wed Jul 22, 2015 1:08 pm

@T.N.Balasubramanian wrote:
@சரவணன் wrote:இந்த தானி ஓட்டுனர் அலி மாதிரி, என்னை மாதிரி ஆட்கள் இருக்குறதால தான் நாட்ல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது.
தலை வணங்குகிறேன் ஆட்டோ அலி
மேற்கோள் செய்த பதிவு: 1152359

எனது நண்பர் ஒருவர் கூறுவது ஒன்றுண்டு ,
இந்த உலகத்தில் , காந்தி ,நேரு ,ராமுகுட்டி,பரம ஹம்சர் , விவேகானந்தர் ,
போன்றவர்களை பார்ப்பது அரிது என்பார் .
அதெல்லாம் சரிடா , காந்தி ,நேரு ok ,
பரம ஹம்சர் , விவேகானந்தர்  ok
நடுலே யாருடா இந்த ராமுக்குட்டி னா, நண்பனை கேட்டால் ,
அந்த காலத்தில் ,அவருடைய தாத்தா, நண்பரை செல்லமா ராமுகுட்டி னு கூப்பிடுவாராம்  .

அதுதான் நினைவுக்கு வருது சரா !
இருந்தாலும் மழை வர நீங்களும் ஒரு காரணமே !புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152401 சிரி சிரி சூப்பருங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by balakarthik on Wed Jul 22, 2015 1:08 pm

@T.N.Balasubramanian wrote:இருந்தாலும் மழை வர நீங்களும் ஒரு காரணமே !புன்னகை புன்னகை

ரமணியன்

அதுக்கு காரணம் நல்லவேள மேலவந்து நம்மள தொல்லபண்ணாம பூமில இருக்கானேன்னு வருணபகவான் ஆனந்தகண்ணீர் விட்டுள்ளார் அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by சரவணன் on Wed Jul 22, 2015 1:13 pm

@balakarthik wrote:
@T.N.Balasubramanian wrote:இருந்தாலும் மழை வர நீங்களும் ஒரு காரணமே !புன்னகை புன்னகை

ரமணியன்

அதுக்கு காரணம் நல்லவேள மேலவந்து நம்மள தொல்லபண்ணாம பூமில இருக்கானேன்னு வருணபகவான் ஆனந்தகண்ணீர் விட்டுள்ளார் அதான்
அப்படியாண்ணே! வருண பகவானா மழையா வரார். நான் ஓணான் ஒன்னுக்கு போவுதுன்னு நெனச்சிட்டு இருந்தேன் இவ்ளோ நாளா....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by balakarthik on Wed Jul 22, 2015 1:17 pm

உங்க அறிவ கண்டு நான் வியக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by T.N.Balasubramanian on Wed Jul 22, 2015 2:01 pm

@சரவணன் wrote:நமக்கு மட்டும் ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க.......என்ன பண்ணலாம்..
மேற்கோள் செய்த பதிவு: 1152383

ஆன்மீகத் திரி இருக்கு ,
நகைச்சுவை திரி இருக்கு ,
கவிதை திரி இருக்கு
இந்த எதிரி எங்கே இருக்கு , ஈகரையிலே !ஏகப்பட்டது இருக்குங்கறார் இவரு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by பாலாஜி on Wed Jul 22, 2015 2:10 pm

@ராஜா wrote:
@balakarthik wrote:
@ராஜா wrote:உன்னைப்போல ஆளுங்க corporation pipeline ஐ உடைத்து தண்ணீர் திருடும்போது கொட்டும் தண்ணியை எல்லாம் மழை என்று சொல்லகூடாது...

தல அவரே ஒரு மக் தண்ணில குளிச்சுட்டு மடியா வந்து சொல்லுறாரு அதா தப்பா சொல்லுறிங்களே
"மக்" என்பதை கொஞ்சம் மெதுவா சொல்லுங்க , உடனே வேற ஞாபகத்தில் பாலாஜி வந்துடுவார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152395

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by ஜாஹீதாபானு on Wed Jul 22, 2015 3:08 pm

வாழ்த்துகள் காஷம்பர்  அலி , ரஞ்சனி அன்பு மலர்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பெண், பரிதவிப்பு, பாதுகாப்பு. ஆட்டோ ஓட்டுநர் 'லைக்'கப்பட்ட கதை!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum