உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:33 pm

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by SK Today at 8:58 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by சிவனாசான் Today at 8:49 pm

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by சிவனாசான் Today at 8:43 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Today at 8:39 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 8:31 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Today at 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Today at 7:37 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Today at 7:26 pm

» இந்திய வானம் எஸ்.ரா
by Monumonu Today at 6:44 pm

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by ayyasamy ram Today at 6:20 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Today at 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Today at 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Today at 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 6:13 am

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by i6appar Today at 4:55 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:17 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Today at 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Today at 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Today at 3:47 am

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by சக்தி18 Yesterday at 11:27 pm

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Yesterday at 10:28 pm

» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:45 pm

» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Yesterday at 2:38 pm

» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» புத்தகங்கள் தேவை !
by Guest Yesterday at 12:34 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 am

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 am

» ரூ.28 ஆயிரத்து 500 கோடியில்தாராவியை ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் சீரமைக்கிறதுவிரைவில் பூமி பூஜை
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 7:07 am

» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:05 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by சக்தி18 Mon Feb 18, 2019 10:32 pm

» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
by ayyasamy ram Mon Feb 18, 2019 9:59 pm

» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Mon Feb 18, 2019 6:34 pm

» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Mon Feb 18, 2019 6:18 pm

Admins Online

யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

Post by ayyasamy ram on Wed Jul 08, 2015 4:05 am--
இந்தியாவில் தோன்றிய யோகக் கலை இப்போது உலக சொத்து. ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரித்ததே இதற்குச் சான்று. யோகக் கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் சித்தர்கள், முனிவர்களுக்கு மக்கியப் பங்கு உண்டு. ஆனால் சாமானிய மனிதர்களுக்கும் இவற்றைக் கற்றுத் தந்தர் ஆச்சார்யார்கள் வெகு சிலரே... அவர்களில் முதன்மையானவர் யோகாச்சார்யா ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சாரியார்.
-
1888-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முசுகுந்தே என்ற கிராமத்தில் பிறந்த கிருஷ்ணமாச்சாரியா தன் தந்தையாரிடம் வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். வைணவ ஆச்சாரியாரும், யோகியுமான நாத முனியின் பரம்பரையைச் சேர்ந்த இவர், யோகக் கலையைப் பயில வேண்டுமென்ற தீராத ஆர்வத்தால், இமயமலைக்குச் சென்று கைலாஷ் மானசரோவர் அடியில் வாழ்ந்த யோகி ராம மோஹன பிரம்மச்சாரியிடம் ஏழரை ஆண்டுகள் யோகாசனத்தை குருகுல முறைப்படி கற்றுத் தேர்ந்தார்.
-
பின்னர் குருவின் கட்டளைப்படி சொந்த மாநிலத்துக்குத் திரும்பி, மைசூர் அரசவையில் ஒரு யோகசாலையை நிறுவி, அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுத்து வந்தார். தன் குருவின் கட்டளைப்படி திருமணம் செய்துகொண்டு குடம்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டார். தன்னை நாடி வந்தவர்களுக்கு யோகாசனங்களைக் கற்றுக் கொடுத்தார். 101 வயதுவரை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களும், அந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிஷ்யர்களுமாக வாழையடி வாழையாக பலர் நாடு முழுவதிலும் யோகக் கலையை கற்பித்து வருகிறார்கள்.
-
அவர்களில் முக்கியமானவர்,

-
கிருஷ்ணமாச்சாரியாரின் மகன் தேசிகாச்சாரியார். பொறியியல் பட்டதாரியான தேசிகாச்சாரியார் பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். ஆயினும் தந்தையின் யோக அறிவையும், யோக சிகிச்சை மூலம் நோய்களுக்குத் தீர்வு காணும் அவரது ஆற்றலையும் பிரமிப்புடன் கண்டு தன்னையும் யோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தந்தையிடமே பல ஆண்டுகள் முறைப்படி யோகாசனங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
-
தந்தையும், குருவுமான கிருஷ்ணமாச்சாரியார் தனக்கு கற்றுக் கொடுத்த யோகக் கலைக்கு குருதட்சிணையாக 1976ல் "கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம்' என்ற அமைப்பை சென்னையில் நிறுவி, பலருக்கும் யோகாசனங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். உலகப் புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது யோகா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்ந்த ஆசிரியர்களால் பலதரப்பட்ட மக்களுக்கும் யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது.
-
கிருஷ்ணமாச்சாரியாவுக்கு பல சீடர்கள் இருந்தபோதிலும், முக்கியமாக நான்கு பேர் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள்... பி.கே.எஸ். ஐயங்கார் (சமீபத்தில் காலமானார்), பட்டாபி ஜோஸ், இந்திரா தேவி (வெளிநாட்டுப் பெண்மணி), மகன் டி.கே.வி. தேசிகாச்சாரியார்.
-
யோகக் கலையில் கிருஷ்ணமாச்சாரியார் வகுத்துக்கொண்டு, கையாண்ட வழி முறைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவற்றில் முக்கியமான சில:
-
* யோகாவை வயதுக்கேற்ப பிரித்து அளித்தல், அதாவது சிறுவர்களுக்கு,
நடுவயதினருக்கு, முதியோருக்கு என்று.
-
* யோகாவை ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தனித்து மாற்றி அமைத்து
வழங்கும் முறை.
-
* பெண்களுக்கு சிறப்பான யோகப் பயிற்சி.
-
* யோகா சிகிச்சையில் புதிய உத்திகள்.

-
யோகி கிருஷ்ணமாச்சாரியார் வகுத்துத் தந்த நெறிமுறைகளின்படி அமைந்த பல்வேறு யோகாசனங்களை நாம் இந்த தொடரில் பார்க்க போகிறோம். கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தில் யோகாசனம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், அறிஞர்களும் நம் வாசகிகளுக்கு வழி காட்டப் போகிறார்கள்.
-
சாதாரண உடற்பயிற்சிக்கும், யோகாவுக்கும் என்ன வித்தியாசம்?

-
சென்னையிலுள்ள கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தின் யோகா டீச்சர் ஆண்டாள்: யோகத்தில் உடம்பும், மனசும், மூச்சும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. மனக் கட்டுப்பாடு யோகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. மூச்சை உள்ளுக்கு இழுத்து, வெளியே விட்டு மனம் ஒன்றி யோகாசனங்களைச் செய்யும்போது, ஒரு ஃபோகஸ் கிடைக்கிறது. மனது அலைபாயாது. நாம் என் செய்கிறோம் என்கிற விழிப்புணர்வுடன் ஆசனங்களைச் செய்யும்போது, மனதுக்குள் ஒரு அமைதியும், நிறைவும் ஏற்படுகிறது.
-
மற்ற உடற்பயிற்சிகளை நாம் இயந்திரத்தனமாக செய்து கொண்டே போகலாம். அதில், மனசுக்கோ, மூச்சுப் பயிற்சிக்கோ இடமில்லை. உடம்பு மட்டும் ஒரு இடத்தில் இருக்கும்; பயிற்சி செய்து கொண்டே இருப்போம். மனசு எங்கேயோ அலை பாயும். யோகாவில் அதற்கெல்லாம் இடமேயில்லை. செய்யும்போது, மனதுக்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடும்.
-
எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது?

-
அதிகாலை நேரத்தில் யோகா செய்வது சிறந்தது. இரவில் நன்றாக உறங்கிவிட்டு காலையில் எழுந்தவுடன் யோகா செய்யும்போது, மனம் மிகவும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். விடியற்காலை காற்று மாசில்லாமல் தூய்மையாக இருக்கும். வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது, அலுவலகத்துக்குச் செல்லும் அவசரம் என்று பரபரப்பாக இயங்கும் பெண்களால், காலை நேரத்தில் யோகா செய்வது சாத்தியமாகாது. அதனால் மாலையில் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்யலாம்.
-
காலையில் லைட்டாக டிபன் சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் கழிந்தபிறகு யோகா செய்யலாம். வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு யோகாசனங்களைச் செய்யக்கூடாது. குறிப்பாக அரிசி சாப்பாடு சாப்பிட்டபிறகு யோகா செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரிசி சாப்பாடு ஜீரணமாக நீண்ட நேரம் ஆகும் என்பதே இதற்குக் காரணம்.
-
அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் சரியான உணவுமுறை. யோகா செய்பவர்கள் பால், பழங்கள் போன்ற சாத்வீக உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
-
யோகாசனப் பயிற்சிகளை செய்தவுடனே சாப்பிடக் கூடாது அல்லது ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழிந்தபிறகுதான் சாப்பிடவேண்டும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், யோகப் பயிற்சிகளை முடித்தவுடனேயே சாப்பிடலாம். தவறில்லை.
-
-----------------
- ஜி. மீனாட்சி
மங்கையர் மலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43046
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

Post by shobana sahas on Thu Jul 09, 2015 9:45 pm

நல்ல பயனுள்ள பதிவு . நன்றி அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை