ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by சிவா on Tue Jun 09, 2015 1:21 am

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திடீர் அதிரடி உத்தரவின் பின்னணி:

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் என்.குமார் (30), கடந்த 2011 மே 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கூடுதல் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி குமாரின் மனைவி மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விபத்து நடந்தபோது குமார் ஹெல்மெட் அணியாததால் பலத்த தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

சாலை விபத்தில் குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது. செய்த தர்மம் தலைதாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்று தமிழில் சொல்லப்படுகிறது. தர்மம் தலையைக் காக்கிறதோ, இல்லையோ, ஹெல்மெட் அணிந்தால் அது நிச்சயம் தலையைக் காக்கும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.

நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோரை தினமும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 6,419 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி பார்த்தால், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தமிழகத்தில் மட்டும் தினமும் 17 பேர் இறக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம், வெறுமனே அபராதம் மட்டும் விதிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமாகும்.

இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகவோ அல்லது ஊழல் செய்வதாகவோ புகார் வந்தால், அதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்று வரும் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக உள்துறை முதன்மை செயலாளரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ஐ மீறுவதாக இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்.

முக்கிய சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

துண்டுப்பிரசுரம், குறும்படம்

ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விற்பனையாகும் ஹெல்மெட் அணிவதே ஆபத்தானது என்று நினைக்கிறேன்! ஹெல்மெட்டை கையாலே வளைத்து ஒடித்து விடலாம் பொலிருக்கிறது. அதன் தரம் அவ்வளவு கேவலமாக உள்ளது. இவ்வாறான ஹெல்மெட் அணிந்த ஒருவர் கீழே விழுந்தால் அந்த உடைந்து மண்டையைக் கிழித்துவிடும்.

மேலும் காவல்துறையினர் பிரத்யேக வருமானத்திற்கும் இந்த உத்தரவு வழிவகை செய்துள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by shobana sahas on Tue Jun 09, 2015 1:27 am

இதே போல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் , பயணம் செய்வோர் அனைவரும் seat.பெல்ட் அணிய வேண்டும் என்று சாலை விதி கொண்டு வர வேண்டும் . அப்போது தான் விபத்து ஏற்பட்டாலும் உயிர் எழுப்பு இருக்காது .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian on Tue Jun 09, 2015 7:13 am

@shobana sahas wrote:இதே போல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் , பயணம் செய்வோர் அனைவரும் seat.பெல்ட் அணிய வேண்டும் என்று சாலை விதி கொண்டு வர வேண்டும் . அப்போது தான் விபத்து ஏற்பட்டாலும் உயிர் எழுப்பு இருக்காது .
மேற்கோள் செய்த பதிவு: 1142960

சீட் பெல்ட் அணிவது நல்லதுதான் .
ஆனால் , சென்னை நகரில் ,காரில் போகும் போது, குறுகிய /மேடு பள்ளங்கள் உள்ளத் தெருக்கள் ,வண்டிகளின் எண்ணிக்கை உங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி , அதி வேக அபாயத்தை தவிர்க்கிறது .
ஹைவேயில் போகும்போது சீட் பெல்ட் உதவிகரமாக இருக்கும் .

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by M.Jagadeesan on Tue Jun 09, 2015 7:40 am

தருமம் தலை காக்கும் ; தக்க சமயத்தில் உயிர் காக்கும் .

தருமம் மட்டுமல்ல

ஹெல்மெட்டும் தலைகாக்கும் ; விபத்து நடந்தால் உயிர்காக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by சரவணன் on Tue Jun 09, 2015 10:02 am

ஆண்டாண்டு காலமா இப்படியேத்தான் சொல்றாங்க..
காச வாங்கிட்டு கண்டுக்காம விட்டுபுடுறாங்க.....இதற்கு முன்பு கூட இந்த சட்டம் கட்டாயமாக்கப் பட்டது...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by சதாசிவம் on Tue Jun 09, 2015 10:09 am

தீவிரவாதம், தொழில்சாலை விபத்துகளைக் காட்டிலும் அதிக உயிர் பலி ஆவது சாலை விபத்துகளில் தான்.

ஒரு விபத்தை தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளில்  உள்ள பல நிலைகளில், தனிநபர் பாகாப்பு கருவிகள் (ஹெல்மட், சீட் பெல்ட்  போன்றவைகள்) கடைநிலையில் தான் உள்ளது. இதற்கு முன்னர் பல படிநிலைகள் உள்ளது. ஆனால் வழக்கம் போல் ஊடகமும், அரசும் மக்களை திசைதிருப்பி ஹெல்மெட் போட்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என்று பரப்புகிறது.

உண்மையில் விபத்து நடப்பதற்கு முக்கியமான காரணிகள் முறையற்ற பயிற்சியில் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்களும், முறையற்ற சாலைகளும், சாலைக் குறியீடுகளும் தான்.
மது போதை கூட குறைந்த சதவீதம் தான்..ஆனால் மேற்சொன்ன காரணங்கள் தான் பெரும்பாலான விபத்துக்கு காரணிகள். இவைகளைப் பற்றி நாம் பேசுவதே இல்லை.

அதுமட்டுமல்ல வாகனத்தின் அடிப்படை பாதுகாப்பு கருவிகளைப் பற்றி நாம் கவலைப் படுவதே இல்லை.  சமீபத்தில் ஏற்படுத்த இருந்த வாகன திருத்தச் சட்டம் ஏதோ ஒரு காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.. இங்கு தயாரிக்கும் பிரபல நிறுவன வாகனங்களும் உலக அரங்கில் லாயக்கற்றவை என்பதை நாம் எப்போது உணர்வது ?? இறப்புக்கு விதியை மட்டுமே குறை கூறி வாழ்ந்து மதியால் செய்ய வேண்டிய மாற்றத்தை செய்யாத வரை இது போன்ற விபத்துகள் தொடரும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by mbalasaravanan on Tue Jun 09, 2015 11:20 am

ஹெல்மெட் கண் துடைப்பு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by ராஜா on Tue Jun 09, 2015 11:59 am

விதிமுறைகளை கடைமையே என்று பயன்படுத்தாமல் , நமது பாதுகாப்பு மற்றும் அடுத்தவர்களின் பாதுகாப்புக்காக என்று நினைத்தோமானால் அனைவருக்கும் நல்லது.

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian on Tue Jun 09, 2015 12:40 pm

@ராஜா wrote:விதிமுறைகளை கடைமையே என்று பயன்படுத்தாமல் , நமது பாதுகாப்பு மற்றும் அடுத்தவர்களின் பாதுகாப்புக்காக என்று நினைத்தோமானால் அனைவருக்கும் நல்லது.

மேற்கோள் செய்த பதிவு: 1143023

இந்த நல்லெண்ணம் , ஒழுங்குடைமையின் முதல் படி .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by கண்ணன் on Tue Jun 09, 2015 12:41 pm

இந்த ஆண்டு ஹெல்மெட் விற்பனை இலக்கை அடைந்தவுடன் ஹெல்மெட்
சட்டம் கண்டிப்பாக அணியும்  தூங்கி விடும்.
avatar
கண்ணன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 81

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by சரவணன் on Tue Jun 09, 2015 1:40 pm

embedded.kannan wrote:இந்த ஆண்டு ஹெல்மெட் விற்பனை இலக்கை அடைந்தவுடன் ஹெல்மெட்
சட்டம் கண்டிப்பாக அணியும்  தூங்கி விடும்.
இது ஓரளவிற்கு உண்மை போல தெரியுது...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by mbalasaravanan on Tue Jun 09, 2015 3:34 pm

embedded.kannan wrote:இந்த ஆண்டு ஹெல்மெட் விற்பனை இலக்கை அடைந்தவுடன் ஹெல்மெட்
சட்டம் கண்டிப்பாக அணியும்  தூங்கி விடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1143030
இது தான் உண்மை ஆனால் நெல்லையில் ஹெல்மெட் கட்டாயம் ஆனால் எல்லோரும் 200 ரூபாய்க்கு தரம் குறைந்த ஹெல்மெட் வாங்கி அணிகிறார்கள், இதுவே ஒரு பாதுகாப்பற்ற தன்மை தான்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by krishnaamma on Tue Jun 09, 2015 5:20 pm

இதுல யார் ஹெல்மெட் போடணும்?......எதிரே வரவங்களா?............... அநியாயம் அநியாயம் அநியாயம் ...
.
.
.
இந்தியாவில் போடும் எந்த ரூலும், மக்களை நல்வழிப்படுத்த அல்ல.............யாரையோ திருப்த்தி படுத்த ..........கசப்பான உண்மை சோகம்
.
.
.
உட்கார்ந்திருக்கும் கும்பல் போறாது என்று bag க்குள் கூட ஒரு குழந்தை................. பயம் பயம் பயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by shobana sahas on Wed Jun 10, 2015 2:57 am

@krishnaamma wrote:இதுல யார் ஹெல்மெட் போடணும்?......எதிரே வரவங்களா?............... அநியாயம் அநியாயம் அநியாயம் ...
.
.
.
இந்தியாவில் போடும் எந்த ரூலும், மக்களை நல்வழிப்படுத்த அல்ல.............யாரையோ திருப்த்தி படுத்த ..........கசப்பான உண்மை சோகம்
.
.
.
உட்கார்ந்திருக்கும் கும்பல் போறாது என்று bag க்குள் கூட ஒரு குழந்தை................. பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143129
இவ்வளோ குழப்பதிலும் ஒருத்தர் அவர் பாட்டுக்கு வண்டி ஒற்றர் ..எப்படி தான் முடியுமோ தெரியல ....... அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by krishnaamma on Wed Jun 10, 2015 10:14 am

@shobana sahas wrote:
@krishnaamma wrote:இதுல யார் ஹெல்மெட் போடணும்?......எதிரே வரவங்களா?............... அநியாயம் அநியாயம் அநியாயம் ...
.
.
.
இந்தியாவில் போடும் எந்த ரூலும், மக்களை நல்வழிப்படுத்த அல்ல.............யாரையோ திருப்த்தி படுத்த ..........கசப்பான உண்மை சோகம்
.
.
.
உட்கார்ந்திருக்கும் கும்பல் போறாது என்று bag க்குள் கூட ஒரு குழந்தை................. பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143129
இவ்வளோ குழப்பதிலும் ஒருத்தர் அவர் பாட்டுக்கு வண்டி ஒற்றர் ..எப்படி தான் முடியுமோ தெரியல ....... அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143366

எதிரே வருபவர்கள் தான் பயப்படனும்.... சோகம்.....டிராபிக் கான்ஸ்டபிள்கள் என்ன தான் செய்ய றாங்களோ தெரியலை................முதலில் இந்த மாதிரி குடும்பத்துக்கிட்டே (?) இருந்து லைசென்ஸ் , வண்டி எல்லாத்தையும் பிடுங்கணும் கோபம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்..

Post by krishnaamma on Wed Jun 10, 2015 11:27 amஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மை மற்றும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அவசியம் குறித்து பதிவு செய்துள்ளனர். அதேசமயம் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பாதகம் குறித்தும் ஒருசிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.

வி.பவானி, இல்லத்தரசி, சிந்தாதிரிப்பேட்டை.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கணவர் வெளியே செல்லும் போதெல்லாம், ஒருவித பய உணர்வு ஏற்படும். போலீஸாரும் அபராதம் வசூலிக்க வேண்டுமே என்ற மனநிலையில் இல்லாமல் ஹெல்மெட் அணிவதையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். மேலும் குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் விபத்துகளே நடக்கின்றன. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், ரேஸ் விடுபவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.ராஜா, புகைப்படக் கலைஞர், அயனாவரம்.

ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. அதே சமயம் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகள் ஹெல்மெட் அணிந்து தப்பிச் செல்வதால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிறது. ஹெல்மெட் அணிவதால் கழுத்து வலி, முதுகுவலி ஏற்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ரூ.150-க்கு விற்ற ஹெல்மெட்டுகள் ரூ.2500 வரை விலை ஏற வாய்ப்பு உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மொத்தத்தில் ஹெல்மெட் அணிவது 60% பாதுகாப்பானது. 40% பிரச்சினைக்குரியது.

டி.இந்துமதி, வியாபாரம், மவுண்ட் ரோடு.

ஹெல்மெட் அணிவது நம்முடைய உயிருக்குப் பாதுகாப்பானது. இன்று மரணம் ஏற்படுவதற்கு தலையில் ஏற்படும் காயம்தான் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அரசாங்கம் சொல்லித்தான் இதை அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருவரும் தானாகவே முன்வந்து ஹெல்மெட் அணிய வேண்டும்.

எஸ். சுபாஷ், பொறியாளர், பாளையங்கோட்டை.

நீண்ட தூரத்துக்கு செல்லும்போது வேண்டுமானால் ஹெல்மெட் அணியலாம். ஆனால் பக்கத்து தெருவுக்கோ, அருகிலுள்ள கடைகளுக்கோ செல்வதற்கு ஹெல்மெட் அணிவது சிரமமாக உள்ளது. ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தக் கூடாது. வேண்டும்போது நாங்கள் அணிந்துகொள்வோம்.

என். வெள்ளத்துரை, தண்ணீர் கேன் விற்பனையாளர், நெல்லை.

ஹெல்மெட் அணிவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது. என்னை போன்ற தண்ணீர் கேன் விற்பனை செய்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது அருகில் வாகனங்கள் வரும்போது பக்கவாட்டில் மறைப்பதால் சிறுசிறு விபத்துகள் நேர்கின்றன. அலுவலகங்களுக்கு செல்வோர் ஹெல்மெட் அணிந்து சென்று அலுவலகத்தில் கழற்றி வைத்துவிடலாம். ஆனால், என்னைப் போன்றவர்கள் எப்போதும் அதை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு அலைய முடியாது. இதுவரை நான் 3 ஹெல்மெட்டுகளை தொலைத்துள்ளேன். ஹெல்மெட் திருடர்களும் அதிகமாகிவிட்டார்கள். அடிக்கடி ஹெல்மெட் வாங்க முடியுமா?

ராஜசேகர், ஓய்வுபெற்ற ஊழியர், புதுச்சேரி.

புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளன. இவற்றை சரிசெய்யாமல் ஹெல்மெட் கட்டாயம் என்றால் என்ன செய்வது. முதலில் சாலையில் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

ரமேஷ், மெக்கானிக், புதுச்சேரி.

ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டால் திருட்டு, கொலை, கொள்ளைதான் புதுச்சேரியில் அதிகமாகும். ஹெல்மெட் இல்லாமல் நடைபெறும் திருட்டு, வழிப்பறியை பிடிப்பதற்கே சிரமமாக உள்ளது. தற்போது ஹெல்மெட் அவசியம் என்றால் நிச்சயம் பாதிப்புதான். புதுச்சேரிக்கு கட்டாயம் தேவையில்லை.

லெனின், தேவதானம்பேட்டை, விழுப்புரம்

இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. நகரங்களில் இந்த உத்தரவின்மூலம் அனைவரையும் ஹெல்மெட் அணியவைக்கலாம், கிராமப்புறங்களில் ஓட்டுநர் உரிமமே இல்லாமல் உள்ளனர். முதலில் ஓட்டுநர் உரிமத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என் றார்.

ராஜா, ராணுவ வீரர், வேலூர்.

ஹெல்மெட் அணிவது நல்லதுதான். பயணத்தின்போது கண்ணில் தூசு, பூச்சிகள் விழாமல் இருக்கும். கண் துடைக்கும் நேரத்தில் விபத்து நேரும். ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது. இதை போக்குவரத்து போலீஸார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது.

சரவணகுமார், பொறியாளர், ராணிப்பேட்டை.

நீ்திமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. 2006-ம் ஆண்டு முதல் தவறாமல் ஹெல்மெட் பயன்படுத்துகிறேன். இரண்டு முறை விபத்தில் சிக்கினேன். அப்போதெல்லாம் ஹெல்மெட்தான் எனது உயிரை காப்பாற்றியது. எனவே ஆண், பெண் வித்தியாசமில்லாமல் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம்.

வேத தயாளநாதன், ஆசிரியர், வேலூர்.

ஹெல்மெட் அணியாமல் சென்றவர் விபத்தில் இறந்ததை நேரில் பார்த்ததுமுதல் நான் ஹெல்மெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். ஹெல்மெட் அணிவதால் அசௌகரியமாக இருப்பதாக நினைத்தாலும், ஏதேனும் விபத்தில் சிக்கும்போதோ, வாகனத்திலிருந்து கீழே விழும்போதோ தலையைக் காப்பது ஹெல்மெட்தானே. எனவே ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.

சுதர்சன், காளவாசல், மதுரை.

விபத்துகளின்போது நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸார் கட்டாயப்படுத்தித்தான் அதை அணிய வேண்டும் என்றில்லை. நாமாகவே முன்வந்து ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக, ஹெல்மெட் அணியாமல் நான் பைக் ஓட்டுவதில்லை. இப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மூலம், மற்றவர்களும் அணிய வேண்டிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். அதேசமயம் போலீஸார் இந்த உத்தரவை தவறாக அணுகக்கூடாது. ஹெல்மெட் அணியவில்லையென்றால் முதலில் எச்சரித்தும், இரண்டாவது முறை என்றால் அபராதம் விதிப்பதும் என்ற நடைமுறையை போலீஸார் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

பிரவீண், காமராஜர்புரம், மதுரை.

ஹெல்மெட் அணிந்தால், பின்புறம் பக்கவாட்டில் வரும் வாகனங்களை எளிதில் பார்க்க முடியாது. இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இது உதவும்.

சசிப்பிரியா, அண்ணாநகர், மதுரை.

இது நல்ல உத்தரவு. ஹெல்மெட் அணிவதால் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஹெல்மெட் அணியும்போது உருவாகும் வியர்வை காரணமாக தலைவலி ஏற்படும். பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சத்தமும் கேட்க முடியாது. ஆனாலும் அதைவிட உயிரின் மதிப்பு பெரிது என்பதால், இதை வரவேற்கிறேன். அதேசமயம் போலீஸார் இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது.

கார்த்திக், கல்லூரி மாணவர், திருச்சி.

மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியவேண்டும் என்பதை வரவேற்கிறேன். ஹெல்மெட் போடவில்லையென்றால் போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இது சரியான நடைமுறைதான். ஆனால், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது.

டி.ஆனந்த சுப்பிரமணியன், குருக்கள், தஞ்சாவூர்.

நான் கோயில் குருக்கள் என்பதால், அதற்கு ஏற்றபடிதான் தலைமுடி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஹெல்மெட் அணியும்போது, ஒவ்வொரு முறையும் முடியை அவிழ்த்துப்போட்டுச் செல்வது சிரமம். ஆனால், வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது உயிருக்குப் பாதுகாப்பு என்பதால், சிரமம் இருந்தாலும் இச்சட்டத்தை நான் வரவேற்கிறேன்.

விஜய் மித்ரா, ஆங்கில மொழிப் பயிற்றுநர், தஞ்சாவூர்.

ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை வரவேற்கிறேன். சில நேரங்களில் ஹெல்மெட்டுகளே விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன. ஹெல்மெட்டுகளில் ஹாரன் ஒலியைத் தடுக்கும் காது பகுதியும், கண் பார்வையைத் தடுக்கும் பக்கவாட்டுப் பகுதியும் மறு வடிவமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம்.

கா.சுரேஷ்குமார், திருப்பூர்.

ஜூலை 1 முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவை, வரவேற்கிறோம். இதை நாடு முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள சூழ்நிலையை, எந்தளவுக்கு வரவேற்கிறோமோ, அதேயளவு அரசின் மதுபானக் கடைகளை மூடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தி ஹிந்து


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by krishnaamma on Wed Jun 10, 2015 11:29 am

அதில் ரசித்த பினூட்டங்கல் :

1. Tknithi
தன்னை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களாகவே உணர்ந்திருக்க வேண்டும்.அதுதான் 6 வது அறிவின் தன்மை.தீப் பொறி ஆறுமுகம் அவர்கள்," கைத்தடி வைத்திருக்கும் காந்தியடிகளின் சிலையில் காக்கை அவரின் கைகளில் உள்ள கைத்தடிக்கு அஞ்சி, அதில் எச்சம் போடாது.ஆனால் இந்த ஆறறிவு படைத்த மனிதனுக்கு, அதுவும் குறிப்பாகத் தமிழனுக்கு தனக்கு எது நல்லது எது கேட்டது என்பதைக் கூட அறியும் அறிவில்லை." என்று பொது மேடைகளில் பேசுவார். ஆனால் தன் பாதுகாப்புக்குக் கூட சட்டம் இயற்றவேண்டும் என்ற 6 வது அறிவற்ற நிலையுள்ளது. அது மட்டுமல்ல,இதில் படித்த கூட்டத்தின் பாராட்டுகள் வேறு.

இப்படிப்பட்ட 6 வது அறிவற்ற கூட்டம்தான் இந்த அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறது. அப்படியானால் இந்த அரசு எப்படிப் பட்டதாக இருக்கும்? காக்கையைக் காட்டிலும் அறிவற்றவர்களா மக்கள்? மது விலக்கும் இத்தகையதே.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by krishnaamma on Wed Jun 10, 2015 11:29 am

2. Jey
நல்ல தீர்ப்பு . மக்கள் நலன் கருதும் தீர்ப்பு. ஹெல்மெட் போடாம போயி விபத்து ஏற்பட்டா தலையில் அடிபடும் , அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதனால் வரவேற்கவேண்டிய தீர்ப்பு . அதே நேரம் , சாலைகளை சரியாக பராமரிக்கவும் இதே நீதிமன்றம் உத்தரவிடலாமே , அது வருமுன் காப்பதாக இருக்குமே ..


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by krishnaamma on Wed Jun 10, 2015 11:31 am

3.ஆர். வரதராஜன்  
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.

எ-கா:

1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்

2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.

3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.

4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்

5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது

6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை

7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது

8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.

இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by krishnaamma on Wed Jun 10, 2015 11:32 am

@krishnaamma wrote:3.ஆர். வரதராஜன்  
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.

எ-கா:

1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்

2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.

3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.

4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்

5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது

6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை

7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது

8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.

இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1143458

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by ayyasamy ram on Wed Jun 10, 2015 11:52 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by shobana sahas on Wed Jun 10, 2015 11:49 pm

@krishnaamma wrote:3.ஆர். வரதராஜன்  
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.

எ-கா:

1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்

2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.

3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.

4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்

5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது

6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை

7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது

8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.

இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1143458

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அய்யா உங்கள மாதிரி ...இல்ல நீங்க ஒருவரே போதும் ....நாட்டை கெடுக்க ..... சீர் குலைக்க ...
நாட்டில் நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒரே நாளில் சட்டம் கொண்டு வர முடியாது . ஒவோவ்ன்ன தான் செயல் படுத்தனும் ...
ஒவ் ஒவொன்றாக கொண்டு வருவார்கள் .. ஒன்னு சொன்ன அதை எற்றுக்கணும் இல்ல மறுக்கனும் . அத விட்டு வேற கருத சொல்லி மக்களை discourage./ திசை திருப்பதிர்கள் .
"அவன திருந்த சொல்லு நான் திருந்தறேன் "....சரிவராது .. "நான் திருந்திட்டேன் ....நீயும் திருந்து ....." அது தான் சரி .
அடுத்தவன பத்தி பேசியே காலத்தை ஊட்டதீர்கள் . எதிர்ப்பு எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian on Sat Jun 13, 2015 8:35 pmயார் போடவேண்டும் ஹெல்மெட் ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian on Sat Jun 13, 2015 8:47 pm

பிரவீண், காமராஜர்புரம், மதுரை.

ஹெல்மெட் அணிந்தால், பின்புறம் பக்கவாட்டில் வரும் வாகனங்களை எளிதில் பார்க்க முடியாது. இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இது உதவும்.

டூ வீலர்களில் , இடது /வலது பக்கங்களில் ரியர் வ்யு மிர்ரர் , பொருத்தவேண்டியது , அவசியமானது .சட்டமும் அதுதான் . பின்புறம் /பக்கவாட்டில் வாகனங்களை இதன் மூலம் பார்க்க முடியும்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by தமிழ்நேசன்1981 on Sat Jun 13, 2015 8:51 pm

நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி?

மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போன டெல்லிக்காரர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!
அது - கந்தர் சஷ்டி கவசம்!

நன்றி- இணையம்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3630
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum