ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

View previous topic View next topic Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by ayyasamy ram on Sun Jun 07, 2015 9:41 pm


படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

==========================

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..

———————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by விமந்தனி on Sun Jun 07, 2015 11:04 pm

தூக்கம் தூக்கம் தூக்கம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 08, 2015 11:10 am

இது தானே அது.

https://www.youtube.com/watch?v=Qewj3q3UEeo

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by ayyasamy ram on Mon Jun 08, 2015 12:03 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by mkrsantharam on Tue Jun 09, 2015 5:12 pm

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "

" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த

இந்த பாடலைக் கேட்டால் ..............

எனக்கு


மூன்று சுவையான நிகழ்ச்சிகள்

ஞாபகத்திற்கு வரும் !

அவை !
1 .


கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு

தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்

அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்

தொடர்பு உள்ளது !


நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்

உண்டு !


எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !

அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்

பிரபல வக்கீல் :


வி . பி . ராமன் !

( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !

வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
அது மட்டுமா !

வி .பி ராமன் அவர்களின் துணைவியா :

திருமதி . கற்பகத்தம்மாள்

அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !

கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய

புலமை உள்ளனர் !


ஒரு முறை ......

கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !


கதவைத் தட்டினார் !


" who is that ? "


கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !

இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே

இருந்தது !

சொன்னார் :" An Outstanding Poet is standing Outside ! "


கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை

ரசித்தார் !


மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :
" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய

போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி

நினைத்து

உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !

அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்

வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி

இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :


அது :" Sleep your Eyes !

.......Rest Your Heart ! "
கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !

நேரம் வரும் வரை காத்திருந்தார் !

" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த

விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !

உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்

அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !

சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்

போட்டார் !
பாட்டு படு வெற்றி !
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "


நிகழ்ச்சி இரண்டு ......

உடனே !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by shobana sahas on Tue Jun 09, 2015 10:01 pm

நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by krishnaamma on Tue Jun 09, 2015 10:41 pm

நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by mkrsantharam on Thu Jun 11, 2015 3:19 pm

  கடிதங்களை எழுதிய :


ஷோபனா சஹாஸ்

அவர்களுக்கும்

கிருஷ்ணம்மா

அவர்களுக்கும்

நன்றி ! நன்றி ! நன்றி !    


 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

     " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "நிகழ்ச்சி : 2  .  

" அம்பிகாபதி " ...


இந்த பெயரில் :

எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து

பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற

தமிழ்ப் படங்களை இயக்கிய :எல்லிஸ் . ஆர் . டங்கன்
இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி

வெற்றி முரசு கொடிய படம் !( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி

இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :
" அம்பிகாபதி " தான் ! )


பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான

" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக

இருக்கும் !

இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்

அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....

" மண் வாசனை " இருந்தது !


இந்த படத்தில் ஒரு காட்சி :

" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று

கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )

அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !


அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "

என்கிறாள் !


அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !

என்ன வசனம் தெரியுமா !


இதோ !

" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !

சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !

ஆஹா !.......

அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "

தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி

பேசும் வசனம் !இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்

" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "

என்று பாடலாக எழுதிவிட்டார் !எப்படி இப்படி ஆச்சு ?


சொல்றேன் !1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை

எழுதியவர் :

இளங்கோவன் !ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை

இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !


அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு

ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )
[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ

வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்

கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் ! மகிழ்ச்சி

அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்

சொல்லியிருக்கின்றார்
***********************************************
நிகழ்ச்சி - 3 - அது இன்னும்

செம தமாஷ் !எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by krishnaamma on Thu Jun 11, 2015 4:56 pm

அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம் புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by shobana sahas on Fri Jun 12, 2015 4:01 am

அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by krishnaamma on Sat Jun 13, 2015 1:52 am

@shobana sahas wrote:அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1144256

ஆமாம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by mkrsantharam on Sun Sep 27, 2015 7:19 am

 கடிதங்களை எழுதிய :

தங்கை சுமதி

மற்றும்

ஷோபனா

இவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
  " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே !  "  
  இந்த பாடல் வரிகள் யாருக்கு , கண்ணதாசன்  எழுதினார் ?


எஸ் . எஸ் . ராஜேந்திரனுக்கா?

இல்லே !


' அம்பிகாபதி ' (  அதர பழைய படம் )   பட நாயகிகாகவா ?


லேது !  (  ' லேது '  - ' இல்லே ' (  'மன வாடு ' மொழி ! )பின்னே யாருக்காய்யா ?

என்கிறீர்களா !


" எனக்குத்தான்யா ! "  


பின்னே என்னே யா ஜூன் ( 2015 )  மாதம் கொடுத்த பழைய போஸ்ட் க்கு

இப்போ போட்டா .........?

" துக்கம்......ஹி.....ஹி .......தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே !  "" சரி , சரி , டாக்டரூ !   கண்ணைக் கசக்கிட்டு இப்போ எழுது! "

என்கிறீர்களா

இதோ .....எழுதிட்டேன்

மகா ஜனங்களே !  

1960 களில் ஒரு சமயம் ........


பாடலாசிரியர் வாலி ' வளர்ந்து ' வரும் சமயம் !


ஒரு படத்திற்கு பாடலை எழுதுகிறார் , வாலி !
படத்தின் இயக்குனர் : தாதா மிராசி !


இசை : எஸ் . எம். சுப்பையா நாய்டு !வாலி , பாடலை இப்படி எழுதுகிறார் :

 " தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

தூக்கமும் அமைதியும் நானாளால் ........ "
இப்படி ' போகுது ' பாடல் !

மேற்கண்ட பாடலுக்கு எஸ் . எம் .எஸ் மிகப் பிரமாதமாக மெட்டு

அமைத்து ஒளிப்பதிவுக்கு தயார்ப் படுத்தினார் !இன்னும் ஓரிரு நாளில் பாடல் ' ரிகார்டிங்க்க் '  ஆகிவிடும் !


அப்போது ................................


இயக்குனர் தாதா மிராசி யின் உதவியாளர்களில் ஒருவர் வாலியை

அணுகி பின் வருமாறு கூறினார் !
 " ஐயா ! நீங்கள் இப்படி பாடலை எழுதியது

மாதிரி கவியரசு கண்ணதாசன் , " ஆலையமணி " படத்திற்காக" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

அந்த தூக்கமும் அமைதியும் நானானால் ..... ! "


என்று நீங்கள் எழுதியது மாதிரி எழுதி இசையமைத்து

படப் பிடிப்பும் ஆகிவிட்டது , ஐயா ! "

இதைக் கேட்டதும் வாலியின் முகத்தில் ஈயாடவில்லை !

( கொசு வேண்டுமானாலும் ஆடியிருக்கலாம் , மாம்பலம் பக்கத்தில்

தானே கோடம்பாக்கம் ! )


அதை விட முக்கியம் ,  வாலி வியப்பை அடையவில்லை !


ஆனால் இயக்குனர் தாதா மிராசி வியப்பை அடைந்தார் !
" என்ன மிஸ்டர் வாலி !

" Great  Men Think  Alike  ! "

நீங்களும் கண்ணதாசனும் ஒரே கருத்தை ஒரே சமயத்தில்

ஒன்றாக நினைத்திருக்கிறீர்கள் !

அவர் சொல்ல நினைத்ததை நீங்களும் சொல்ல நினைத்திருக்கிறீர்கள் ! "
அத்துடன் தாத்தா....இல்லே...இல்லே .. தாதா மிராசி நின்றுவிடவில்லை !

தொடர்ந்து பேசினார் :
 " இப்படி ஒருவர் நினைப்பதை மற்றொருவரும்

நினைப்பதைத்தான் ஆங்கிலத்தில் :


" TELEPATHY "


என்கிறார்களோ ! ? "
என்றார் !இதற்கு வாலியார் சொன்ன பதில் :
" ஒத்துக்கொள்கிறேன் !

ஆனால் இந்த இடத்தில்  இது :

" டெலிபதி " (  TELEPATHY  )  இல்லே ,

" அம்பிகாபதி ! "
என்றார் ![color:0958= #009900]உங்களுக்கு புரியவில்லை ?பாகவதர் நடித்த " அம்பிகாபதி " யை ..........

கண்ணதாசனும் பார்த்திருக்கின்றார் ,

..............................வாலியும் பார்த்திருக்கின்றார் !இதற்குப் பின்னர் வாலி  "விழித்துக் "

கொண்டார் , அந்த பாடலை " ஜகா " வாங்கிக் கொண்டார் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 27, 2015 9:00 am

மிக்க நன்றி
டாக்டர் சார், அருமையாக எடுத்துச் செல்லுகிறீர்கள் இல்ல இல்ல சொல்லுகிறீர்கள். தெரியாத, அறியாத பல தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஜானகி அம்மாவின் அருமையான பாடல், 60களில் நான் பள்ளியில்
படித்துக்கொண்டிருக்கும் போதே என்னைக் கவர்ந்த இனிமையான பாடல் இது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by T.N.Balasubramanian on Sun Sep 27, 2015 9:41 am

அருமையான செய்திகளை
பகிர்ந்தளிக்கும் முறையும்
மிகவும் போற்றத்தக்கது .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
Lively , Doctor .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by சிவனாசான் on Sun Sep 27, 2015 2:18 pm

நல்ல ரசனையான பதிவு..நன்று நன்று... தூக்கமை கண்ணை தழுவும் .மூளை ஓய்வு எடுக்கும் . உடம்பு சுறுசுறுப்பாகும். உற்சாகம் கொள்ளும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by Namasivayam Mu on Sun Sep 27, 2015 3:26 pm

நன்று
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by krishnaamma on Thu Oct 01, 2015 12:45 am

நல்ல பதிவு சாந்தாராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum