ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக அரசியல் செய்திகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:16 pm

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:17 pm

சுப்பிரமணிய சாமி - டாக்டர் ராமதாசுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் அடுத்த மாதம் 8-ந்தேதி திருமணம் நடைபெறு கிறது.

பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த திருமண விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் அழைக்கப் பட்டு வருகின்றனர்.திருமண அழைப்பிதழை மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க.தமிழரசும் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

இன்று காலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை, சாந்தோமில் உள்ள வீட்டுக்கு சென்று திருமண அழைப்பிதழை வழங்கினார். அவருடன் மு.க.தமிழரசும் சென்றிருந்தார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் இன்று திண்டிவனம் சென்றனர். தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசின் வீட்டுக்கு சென்று திருமண அழைப்பிதழை வழங்கி னார்கள். அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ்செல்வன், கலிவரதன் ஆகியோர் இருந்தனர். அழைப்பிதழை கொடுத்த பிறகு 20 நிமிடம் மு.க.ஸ்டாலினும், டாக்டர் ராமதாசும் பேசிக்கொண்டு இருந்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:19 pm

பா.ஜ. தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி அட்வைஸ்!

மதுரை: தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், போட்டியிட ஆள் இல்லாவிட்டால் என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன் என்றும் அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நேதாஜி பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டுமென்று தன்னுடைய வி.ஹெ.எஸ். அமைப்பு மூலம், இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய சுப்ரமணியன் சுவாமி. பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நேதாஜி பற்றிய உணமைகளை காங்கிரஸ் அரசு வெளியிடாமல் மறைத்தது. மோடி அரசு யோசிக்கிறது, காரணம், அதை வெளியிட்டால் காங்கிரஸ்காரர்கள் ரோட்டில் நடமாடமுடியாது என்பதால். அப்படி மத்திய அரசு வெளியிடவில்லை என்றால், நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

கணக்கில் மட்டுமல்ல, நீதிபதி குமாராசாமி அளித்த தீர்ப்பில் சொல்லப்பட்ட ஆதாரங்களிலும் தவறு உள்ளது. அது ஒரு தவறான தீர்ப்பு. அதைப்பற்றி குமாரசாமி ஓய்வு பெற்றதும் கேட்பேன். கர்நாடக அரசு அப்பீல் செய்யவில்லை என்றால் நான் அப்பீல் செய்வேன். தற்பொழுது ஜெயலலிதா முதல்வராக ஆவதற்கு தடை ஏதுமில்லை. வருகிற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடவேண்டும், நிற்க கட்சியில் ஆள் இல்லையென்றால் என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன்.

ஜெயலலிதாவை மோடி வாழ்த்துவது, அவர் நல்லாட்சி தருபவர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் புகழ்வதெல்லாம் அவர்களின் சொந்த கருத்து. அப்பீல் செய்வேன் என்று நான் சொல்வதும் என்னுடைய சொந்த கருத்துதான். பாஜகவின் கருத்தல்ல. ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் அவரை எதிர்த்து சந்திரலேகாவை பொது வேட்பாளராக நிறுத்த அனைத்து கட்சிகளும் முன்வரவேண்டும்" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:19 pm

ஜெ. வழக்கு: வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும் லஞ்சம் லஞ்சம்தானே...? - கருணாநிதி கேள்வி

சென்னை: 'வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும்; லஞ்சம் லஞ்சம்தான் - ஊழல் ஊழல்தானே!' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் 8 சதவிகிதம்தான் என்றும், எனவே தான் அவர் விடுவிக்கப்படுகிறார் என்றும் தனது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறாரே?

நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் வங்கியிலே வாங்கிய கடன்கள் பத்து கோடி ரூபாயை, 24 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு, 8 சதவிகிதம்தான் அவர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களின் மதிப்பு என்று கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். கடன்களின் கூட்டுத் தொகை 10 கோடி ரூபாய்தான் என்று சரியாகக் கூறியிருந்தால், ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து 76 சதவிகிதம் என்பதைப் புரிந்து கொண்டு தண்டனை கொடுத்திருப்பார்!

மேலும் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில், ஆந்திர மாநில அரசு, 13-2-1989 அன்று வெளியிட்ட ஒரு உத்தரவில் 20 சதவிகிதம் வரை வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை அரசு அலுவலர் ஒருவர் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது என்பதை தனது வாதத்திற்கு உதவியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாம் அவரைக் கேட்க விரும்புவதெல்லாம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, ஆந்திர மாநில அரசைப்போல தமிழக அரசு அப்படி ஏதாவது ஒரு உத்தரவை எப்போதாவது பிறப்பித்திருக்கிறதா என்பது முக்கியமல்லவா? அப்படியென்றால் எந்தத் தேதியில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? ஆந்திர மாநில அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு, அந்த மாநில அரசு அலுவலர்களுக்குத்தானே பொருந்தும்? அது எவ்வாறு தமிழ்நாட்டு அலுவலர்களுக்குப் பொருந்தும்?

அது மாத்திரமல்ல; சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குவித்த சொத்துக்களின் மதிப்பு பத்து சதவிகிதத்திற்கும் குறைவு என்பதால் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி வழங்கியிருக்கும் தீர்ப்பு, 1977ஆம் ஆண்டில் இருந்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், 1977ஆம் ஆண்டின் சட்டம், 1988ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது திருத்தம் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்து விட்டது என்றும், ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தில் இந்த 10 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் சொத்துக் குவிப்பு இருந்தால், அதனை அலட்சியப் படுத்தி விடலாம் என்று எந்தக் குறிப்பும் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு என்பது 8 சதவிகிதம் அல்ல, 76 சதவிகிதம் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் சொல்லியிருக்கும் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் என்ன என்பது உச்ச நீதிமன்றத்திலேதான் தெரிய வரும். எந்த ஆண்டில் லஞ்சம் பெற்றிருந்தாலும், எந்தச் சட்டத்தின்படி அது குற்றம் என்றாலும், வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும்; லஞ்சம் லஞ்சம்தான் - ஊழல் ஊழல்தான்" எனக் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:20 pm

ஜெயலலிதாவை சந்திப்பீர்களா? ராமதாசை சந்தித்த பின் ஸ்டாலின் பதில்!

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்ததுபோல், ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், "முதலில் ஜெயலிதா தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும் பிறகு அவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்" என தெரிவித்தார்.

தனது சகோதரர் மகன் அருள்நிதியின் திருமணத்திற்காக அ.தி.மு.க.வை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பிரதான கட்சித் தலைவர்களையும் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இந்நிலையில் இன்று காலை காலை 10.45 மணிக்கு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசின் இல்லத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் முதன் முறையாக வந்தார். ஸ்டாலினை வாசலுக்கே வந்து ராமதாஸ் வரவேற்றார். பின்னர் தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாசிடம் அளித்துவிட்டு, திருமணத்திற்கு கட்டாயம் வருமாறு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம்" என்றார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு "முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும்" என கூறினார்.

முன்னாள் முதல்வருக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு "முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். பிறகு யோசிக்கலாம்" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:20 pm

முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு!

புதுடெல்லி: அரசு விளம்பரங்களில் முதல்வர் படங்களை பிரசுரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மாநில முதல்வர்கள் படங்களை பிரசுரிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், அரசு விளம்பரம் குறித்து பிறப்பித்த உத்தரவை மனுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "மத்தியில் பிரதமர் செயல்படுவது போல் மாநிலத்தில் முதல்வர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசின் திட்டங்கள் அனைத்தையும் முதல்வரே செயல்படுத்துகிறார். பிரதமர் படம் இடம்பெறுவது போல் முதல்வர் படமும் இடம் பெற வேண்டும் "என்று கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:21 pm

ஜெ. பதவியேற்பு: புதிய தகவல்!

ஒரு வழியாக தனது போயஸ்கார்டன் வீட்டைவிட்டு, வருகிற 22-ம் தேதி தாரை தப்பட்டை முழங்க பவனி வர உள்ளார் ஜெயலலிதா. பெங்களுரு கோர்ட் தீர்ப்புக்கு பின்னர், ஜெயலலிதா தனது ஒவ்வொரு நடவடிக்கையையும், பிரபல ஜோதிடரின் ஆலோசைனைக்குப் பின்னரே முடிவு எடுக்கிறார் என்கிறார்கள்.

கருணாநிதி வசிக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்று காட்ட வேண்டும் என்பதுதான் முதலில் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்ததாம். 'பெருமாள் பெயர் கொண்ட சட்டமன்ற தொகுதியில் நின்றால் நன்று' என்று ஜோதிடர் ஆரூடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் உரிமையாக பேசக்கூடிய ஒருசிலர் ஶ்ரீரங்கம் தொகுதியை கோடிட்டுக் காட்டினர். அப்போது ஜெயலலிதா, ஜோதிடர் முகத்தை பார்க்க, அவர் காட்டிய திசைதான் ராதாகிருஷ்ணன் நகர் என கூறப்படுகிறது.

நிறைந்த அமாவாசை தினத்தில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தால் அமோகம், சுபிட்சம் என்று ஜோதிடர் சொன்னதறகு ஏற்ப, அன்றைக்கே ராதா கிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலை போயஸ்கார்டன் வரச்சொல்லி ராஜினாமா செய்யச் சொல்லினர். அதே அமாவாசை தினத்தில் ஆர்.கே நகர் தொகுதி ராஜினாமா அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், வரும் 22-ம்தேதி காலையில் முதலில் சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெ மாலை அணிவிக்கிறார். அடுத்து எம்.ஜி.ஆர் நிறுவிய அண்ணாசாலை அண்ணா சிலைக்கு மாலை மரியாதை. அதன்பின் பெரியார் சிலைக்கு மலர் தூவுகிறார்.

பின்னர் லாயிட்ஸ் சாலை அலுவலகத்திற்கு வரும் அவர், அங்கு சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பின் ராஜ்பவன் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை சந்திக்கிறார். அப்போது பதவியேற்பு சம்பந்தமான ஆவணங்களை வழங்குவார் என்றும், அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், அதற்கு ஏதுவாக தற்போதைய முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் முன்னதாகவே ராஜினாமா செய்வார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா பதவியேற்பு தினத்தில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 22 க்கு பதிலாக 23 ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டடத்தில் ஜெயலலிதா பதவி ஏற்பார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:21 pm

சந்திப்புக்குப் பின் ஸ்டாலினை பாராட்டிய சுப்பிரமணியன் சுவாமி!

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து பேசினார். அப்போது, "ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது" என்று சுப்பிரமணிய சுவாமி பாராட்டினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மகன் திருமணத்திற்காக, முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள பா.ஜ. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து, தமது சகோதரர் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,''ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு பற்றி சுப்பிரமணியன் சுவாமியிடம் எதுவும் பேசவில்லை. அது பற்றி நீங்களே அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறி இருக்கிறார். ஜெயலலிதாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு போனால்தான் உண்மையான நிலை, நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என்று தலைவர் கலைஞர் ஏற்கனவே சொல்லி உள்ளார். அதுதான் எங்கள் நிலைப்பாடு அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்" எனறார்ர

அதன்பின் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தது ஆரோக்கியமான விஷயம். ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது. ஜனநாயகத்தில் எதிரும் புதிருமாக உள்ள தலைவர்கள் சந்திப்பது புதிதல்ல.

வடநாட்டில் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் வீட்டு திருமணங்களில் பல கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், தென் மாநிலத்தில் அரசியல் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முயற்சி வரவேற்கதக்கது. இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து கர்நாடக அரசு கண்டிப்பாக அப்பீல் செய்ய வேண்டும். அப்படி கர்நாடக அரசு அப்பீலுக்கு போகாத பட்சத்தில் நான் அப்பீல் செய்வேன்.

நாங்கள் பொதுவாக இந்துத்துவா கொள்கை உடைய பார்ட்டி. இந்துத்துவா மறுமலர்ச்சிக்காக பாடுபடும் இயக்கம். தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கொள்கையில் ஒரே நிலைப்பாட்டில் கிடையாது. அதனால், கூட்டணி பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதி குறைசொல்லி வந்தார். என்னையும் குறை கூறி எழுதி இருந்தார். மோடி ஒன்றும் பள்ளி பிரின்சிபல் கிடையாது. நானும் மாணவன் இல்லை. ஜெயலலிதாவின் கடிதம் கோபத்தைதான் ஏற்படுத்தியது" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:22 pm

அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் பேராசிரியருமான ஜெகதீப் எஸ். சோசோகர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், ஆகியோர் பிரபல வழக்கறிஞர் பிரசாஷ் பூஷன் மூலம்,அரசியல் கட்சிகள் வெளிப்படத்தை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய மற்றும் பிரந்திய கட்சிகளின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வரவேண்டும். கார்பரேட் நிறுவனங்கள், நன்கொடைகள், அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் பெருமளவில் பணம் பெறுகின்றன. ஆனால், பெறும் நன்கொடைகள் குறித்து முழு தகவலையும் வெளியிட அரசியல் கட்சிகள் மறுக்கின்றன. எனவே தேர்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நன்கொடைகள் மற்றும் செலவீனங்களில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:24 pm

7 மாதங்களுக்குப் பிறகு வெளியே வரும் ஜெ... மே 22-ல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்தது முதல் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வராமல் இருந்த அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் மே 22-ந் தேதியன்று முதல் முறையாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதியன்று ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.

21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த பின்னர் கடந்த 7 மாதங்களாக போயஸ் தோட்டத்து வீட்டை விட்டு அவர் வெளியேறியதே இல்லை. அண்மையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட பின்னர்தான் போயஸ் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் ஜெயலலித நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இதன் முதல் கட்டமாக மே 22-ந் தேதியன்று காலை 7 மணிக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜெயலலிதா உரிமை கோருகிறார்.

மே 22-ந் தேதியன்றே ஜெயலலிதா பதவியேற்பாரா? அல்லது மே 23-ந் தேதி பதவியேற்பாரா என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அண்ணா தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மே 22-ந் தேதியன்று பகல் 2 மணியளவில் சென்னையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 22-ந் தேதி காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த கையோடு முதல்வராக பதவியேற்ற பின்னர் தலைவர் சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்துகிறாரா? அல்லது மே 23-ந் தேதி பதவியேற்பதை ஒட்டி முன்னதாக தலைவர்கள் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:29 pm

வாட்ஸ் அப்-ல் உலா வரும் ‘ஜெ. அமைச்சரவை’...

விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற உள்ள புதிய அமைச்சர்கள் எனக் கூறி வாட்ஸ் அப்பில் ஒரு பட்டியல் உலா வந்து கொண்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால், மீண்டும் முதல்வராவதில் இருந்த சட்டசிக்கல் ஜெயலலிதாவிற்கு விலகியது. எனவே, விரைவில் அவர் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

அவ்வாறு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போது, அவரது அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதைப் போல் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதில் பின்வருமாறு அமைச்சர்கள் பெயர் பட்டியல் உள்ளது.
1. ஜெயபால்
2. வேலுமணி
3. தோப்பு வெங்கடாசலம்
4. வளர்மதி
5. கோகுலஇந்ரா
6. சம்பத்
7. தங்கமணி
8. நத்தம் விஸ்வநாதன்
9. ராஜேந்திர பாலாஜி
10. எடபாடி பழனிசாமி
11. உதயகுமார்
12. செந்தில் பாலாஜி
13. விஜயபாஸ்கர்
14. மோகன்
15. செல்லூர்ராஜு
16. வீரமணி
17. உதயகுமார்
18. வைத்தியலிங்கம்
19. பழனியப்பன
20. காமராஜ்
21. டி.ஜெயகுமார்
22, வி .பி .கலைராஜன்
23, கே . மனோகரன்
24. பி . சரோஜா
25. கே .வி . ராமலிங்கம்
26, கே.ஏ .செங்கோட்டையன்
27. சி.சண்முகவேல்
28, வளர்மதி
29, எம் .பி .எஸ் .சிவசுப்பிரமணியன்
30, நைனார்

இதில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விசயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மிஸ்ஸிங் என்பது தான்.

ஒரு வேளை, மக்களின் முதல்வர் மாநில முதல்வர் ஆனதும், தற்போதைய மாநில முதல்வருக்கு மக்கள் முதல்வர் பதவி அளிக்கப்படுமோ...?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun May 24, 2015 10:35 pm

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

40 லட்சம் உறுப்பினர் சேர்க்கை

கேள்வி:- பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது?. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்?.

பதில்:- தமிழகத்தில் இதுவரை 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

கேள்வி:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று, வரும் 26-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை தமிழக பா.ஜ.க. எந்த வகையில் கொண்டாட உள்ளது?.

பதில்:- தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளோம். 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் சென்னையிலோ, அதன் சுற்றுவட்டார பகுதியிலோ வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய மந்திரி ஒருவர் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் தென் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

முன்னதாக, வரும் 26-ந் தேதி சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மறுநாள் (27-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்த பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி 60 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்க உள்ளோம்.

அரசியல் சூழ்நிலை

கேள்வி:- காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?.

பதில்:- இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு கர்நாடக அரசுக்குக்கு (காங்கிரஸ் அரசு) உள்ளது. எனவே, அவரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களை மத்திய மந்திரிகள் சந்திக்கும் நிகழ்ச்சி 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே?. மீண்டும் எப்போது நடக்கும்?.

பதில்:- தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ஜ.க. ஆட்சியின் ஒரு ஆண்டு கொண்டாட்டம், பாராளுமன்றம் கூடுதலாக 3 நாட்கள் நடந்தது போன்ற சூழ்நிலைகளால் தான், தமிழகத்திற்கு மத்திய மந்திரிகள் வரவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்கள் பிரச்சினை கவனிக்கப்படும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

கேள்வி:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. எந்த வகையில் எதிர்கொள்ளும்?.

பதில்:- இப்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun May 24, 2015 10:37 pm

முதல்வராக பொறுப்பேற்றார் ஜெ.: அம்மா உணவகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடக்கம்!

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா, அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 5வது முறையாக தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு தலைமைச் செயலகம் வந்தார். அங்கு சுமார் 3.45 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம், 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து, சென்னை, சேலம், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 201 அம்மா உணவகங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மேலும், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரை கிலோ துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், அரை கிலோ உளுந்தம் பருப்பு 'ஏ' ரகம் 56 ரூபாய்க்கும், 'பி' ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதேபோல், காவல்துறைக்கு புதிய வாகனங்களையும், கடலோர பாதுகாப்பு படையினருக்கான ரோந்து வாகனங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun May 24, 2015 10:51 pm

விதிகளையும், மரபுகளையும் அவமதிக்கும் ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவின் வசதி கருதி பல குழப்பங்களும், அவமதிப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. விதிகளையும், மரபுகளையும் கேலிக்கூத்தாக்கும் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய அமைச்சரவை பதவியேற்கும்போது முதலில் முதலமைச்சரும், அதன்பின் மரபுசீர் வரிசைப்படி அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொள்வது தான் வழக்கம். ஆனால், நேற்றைய பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, மீதமுள்ள 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் வீதம் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் காட்சியைப் பார்க்கும்போது பள்ளிக் குழந்தைகள் மொத்தமாக நின்று வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போன்று இருந்தது. அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழியை படிப்பதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.

இதற்கென தனி மரபு தமிழகத்தில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு 10 நிமிடங்களில் அமைச்சர்களின் பதவியேற்பை நிறைவு செய்திருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் என்ன உறுதிமொழி ஏற்றார்கள்? என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாத வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பைக் கூட முறைப்படி செய்ய முடியாத அளவுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை.

பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய விழாவில் தேசிய கீதத்தின் முதல் இரு வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அவசரத்திற்காக தேசியகீதத்தைக் கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள்.

இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இது சட்டப்படி சரியா... தவறா? என்பது ஒருபுறமிருக்க ஜெயலலிதா ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பள்ளிக்கூடங்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இனி தேசிய கீதம் இரு வரிகளுடன் நிறுத்தப்பட்டால் அதை கண்டிக்கும் தார்மீக உரிமை தமிழக அரசுக்கு நிச்சயமாக இல்லை. தேசிய கீதத்தை முழுமையாக இசைத்து, அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக பதவியேற்றிருந்தால் விழா முடிய கூடுதலாக 30 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்.

ஆனால், அந்த அளவுக்குக் கூட பொறுமைகாக்க முடியாத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அவசர பணி என்ன இருந்தது? என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் பதவியேற்பு முடிவடைந்த பிறகு தலைமைச்செயலகத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை. ‘‘ மக்களுக்காக உழைப்பதே எனது லட்சியம். ஒருநாளைக்கு மொத்தமுள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைக்கிறேன்’’ என்று ஜெயலலிதா கூறிக்கொள்வார்.

ஆனால், பதவியேற்பு விழாவில் கூட அரை மணி நேரம் கூடுதலாக அமர்ந்திருக்க முடியாமல் அவசரம் அவசரமாக வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்ததை பார்க்கும்போது தான் தெரிகிறது அவர் மக்களுக்காக எப்படி உழைக்கிறார் என்பது? புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்லும் அவர் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கடந்த 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 500&க்கும் அதிகமான புதிய பேரூந்துகள், மெட்ரோ ரயில் திட்டம், சென்னை மாநகராட்சிக் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் தொடக்க விழாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக் கூட்டமும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எப்போதோ திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டாலும், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது இப்போது அம்பலமாகி விட்டது.

மக்களுக்கு ஜெயலலிதா தரும் மரியாதை இவ்வளவு தான்.தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது.

விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் விரைவில் தமிழ்நாட்டு மக்களால் தண்டிக்கப்படுவார். இன்னும் ஓராண்டுக்குள் இது நடப்பது உறுதி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Mon May 25, 2015 9:31 pm

வெற்று அறிவிப்பின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா : விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற போது ஒரு கிலோ பருப்பு என்ன விலைக்கு விற்றதோ, அதே விலையில் தற்போது அரைகிலோ பருப்பு விற்க முன்வந்திருப்பது, விலைவாசி கட்டுப்படுத்தும் விஷயத்தில் அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். தமிழக மக்களை வெற்று அறிவிப்பின் மூலம் ஏமாற்றி, மீண்டும் வெற்றி பெறலாம் என்று ஜெயலலிதா பகல் கனவு காண்பதாகவும் தனது அறிக்கையில் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 25, 2015 10:15 pm

நன்று
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Jun 13, 2015 12:40 pm

நீதிபதி குமாரசாமி கணக்கு பற்றி ஸ்டாலின் சொன்ன திருடன் கணக்கு!

திருச்சி: திருடன் கதையை கூறி, நீதிபதி குமாரசாமியின் கணக்கு பற்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொழிலதிபர் வி.கே.என். திருமணவிழாவில் கலந்துகொள்ள தி.மு.க. ஸ்டாலின் நேற்றிரவு திருச்சி வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்க கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இப்போதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லையே, அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து?

"இந்த கேள்வியை பெங்களூரு நீதிமன்றத்தால் விடுதலையாகியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய கேள்வி; அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்".

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிறைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதே, இப்படி நிராகரிப்பிற்கு உள் நோக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா?.

'இதுபோன்று நடக்கும் என தெரிந்துதான் தலைவர் கலைஞர் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்" என்றார்.

இதைத் தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் விகேஎன் மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், திருச்சி உறையூர் அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னின்னு மரக்கன்றுகள் நட்டுவைத்தார்.

திருமணவிழாவில் பேசிய ஸ்டாலின், "வாழ்க்கையில் கணக்கு போட்டு பார்க்கணும், கணக்கு தவறானால் எல்லாம் தவறாகிவிடும். இப்போதெல்லாம் நீதிபதியே கணக்கு தவறாக போடுவது நடக்கிறது. நீதிபதி போட்ட தவறான கணக்கில் சிறைக்குள்ளே இருக்கவேண்டியவரெல்லாம் இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள கொடுமையை எல்லாம் நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் காந்திகணக்கு, நேருக்கணக்கு என சொல்வார்கள். ஆனால் குமாரசாமி கணக்கு ஒன்று வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஒரு கதை உலா வருகிறது.

ஒருவீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்காமல் இருக்கிறார். அவரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என நண்பர்கள் கேட்கும்போது, அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், "திருடன் ஒருகடிதம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் நீ போலீஸில் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை. 10 சதவீதம் பொருட்களைதான் திருடியுள்ளேன். எனவே இது குற்றமில்லை!" என எழுதியுள்ளான். அதனால்தான் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இது நான் புதிதாக சொல்லவில்லை. வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல். குமாரசாமி தீர்ப்பு இப்படிதான் உலா வருகிறது.

தமிழகத்தில் பதவியை பதவியாய் நினைக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள். நான் எந்த விசயங்களை செய்தாலும் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன். அந்த வகையில் நான் பதவியில் இருந்தாலும், பொறுப்பாய் பணியாற்றுவதையே தலைவர் விரும்புவார். தமிழைப்போல், வாழ்க!" என வாழ்த்திவிட்டு அமர்ந்தார்.

மேடையில் இருந்து கீழே இறங்கிய ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளை கேட்டனர்.

ஆர்கேநகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டிபோடும் இடதுசாரி கம்யூனிஸ்ட் வேட்பாளரான மகேந்திரனை, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆதரிப்பீர்களா? என்று கேட்டபோது, இதுபற்றி தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்றார்.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்ககூடாது என நீதிபதியே கேட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு, ராமஜெயம் கொலை செய்யப்பட்டதில் இருந்து நாங்கள் சிபிஐ விசாரணை மட்டுமே கேட்டு வருகிறோம். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றார்.

இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக, தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளதா? என்ற கேள்விக்கு, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயாராகவே உள்ளது என்றார் ஸ்டாலின்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 1:06 am

முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு குறைவு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016– ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கருத்துக்கணிப்பில் பா.ம.க. முதல்–அமைச்சர் பதவிக்கான வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3 ஆயிரத்து 500 பேரிடம் மட்டுமே, அதாவது, ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை, அதில் 10 ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.

எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 1:08 am

அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது புதிய கருத்து கணிப்பில் தகவல்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவு பெற்று உள்ளது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 சதவிகிதம் பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் மறுக்க முடியாது என்றும், 9 சதவிகிதம் பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 சதவிகிதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு

ஜெயலலிதாவுக்கு 31.56% பேரும் ஸ்டாலினுக்கு 27.98% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். கருணாநிதிக்கு ஆதரவு 21.33% பேரும், விஜயகாந்துக்கு 6.24% பேரும், அன்பு மணி ராமதாசுக்கு 2.27 % பேரும்,வைகோவுக்கு 1.85% பேரும், சீமானுக்கு 1.84% பேரும்,திருமாவளவனுக்கு 1.13% பேரும், ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by M.Jagadeesan on Sun Aug 30, 2015 9:25 am

மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒரு சோகமயமான எதிர்காலம் உள்ளது என்று இந்தக் கருத்துக் கணிப்பு சொல்கிறது .

ம் ம் .............என்ன செய்வது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Thu Sep 03, 2015 9:56 pm

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.

இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Namasivayam Mu on Fri Sep 04, 2015 6:30 am

எல்லாமே வயித்துக்குத்தான் :வணக்கம்:
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by ayyasamy ram on Fri Sep 04, 2015 6:39 am

ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.
-
புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Fri Sep 04, 2015 11:20 am

@சிவா wrote:திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.

இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1160663

பலிகடா ஒன்று தெரிகிறதே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Sep 05, 2015 12:22 am

பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்: இல.கணேசன்

பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.

இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பு சார்பில் அனுபவமிக்க சம்பந்தம் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். அவர் தமது கடமையை சிறப்பாக ஆற்றி தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.

பாமக வேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.

தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே தற்போது தொண்டர் கருத்தை கேட்டறிந்துவருகிறோம். திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியை பாஜக அமைக்கும்.

எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணமிக்கவர். பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என தாய் கவலைப்படுவதில் தவறில்லை. திமுகவில் குடும்பப் பிரச்னை எதிரொலிப்பது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum