ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இணைய தளத்தில் நாட்டிய தேவதை

View previous topic View next topic Go down

இணைய தளத்தில் நாட்டிய தேவதை

Post by ayyasamy ram on Mon May 18, 2015 9:28 am


-


இந்தி திரை உலகில் என்றும் மாறாத புகழோடு இருந்துகொண்டிருப்பவர், மாதுரி தீட்சித். நடிப்பையும் தாண்டி தனது நடனத் திறமைக்காக வெகுவாக பாராட்டப்படுபவர்.

நடனம் பற்றி அவரோடு பேசுவோம்:

இந்தி திரை உலகின் நாட்டியத் தேவதையாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாட்டியத் தேவதை என்ற அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் ஒரு போதும் விரும்பியதில்லை. நான் எனது குழந்தைப் பருவம் முதலே ஆடிக் கொண்டிருக்கிறேன். யாரையும் கவருவதற்காக நான் ஆடவில்லை. எனக்கு டான்ஸ் பிடிக்கும். நான் ரொம்பவும் ரசித்து செய்யும் கலை இது. எல்லோராலும் நடனம் ஆட முடியும். ஆனால் அதன் மேல் உண்மையான பற்றுக் கொண்டு தீவிரமாக ஆடுபவர்களால்தான் தொழில்முறை நடனக்காரர்கள் ஆக முடியும். எனது நடனத்தை நேசித்ததற்காக திரையுலகுக்கும் எனது ரசிகர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்– நாம் ஒன்றை உண்மையாக விரும்பினால் மட்டும்தான் அதில் நமது முழுத் திறமையையும் காட்ட முடியும்.

முப்பதாண்டுகளாக திரையுலகில் இருக்கும் உங்களால், இங்கே மாறிவரும் சூழலுக்கு ஏற்ப உங்களை எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது?

எல்லா துறைகளிலும் மாற்றம் என்பது இயல்பாக நடந்துகொண்டேதான் இருக்கும். நடனமாகட்டும், திரைப்பட ஆக்கமாகட்டும் அல்லது வேறு எந்த கலை ஆகட்டும், சமூகத்தில் ஏற்படும் மாற்றம் அதில் பிரதிபலிக்கும். எனவே மாற்றத்துக்கு சினிமா மட்டும் விதிவிலக்கல்ல. இந்திய நடன பாணிகளும், மேற்கத்திய நடனமுறைகளும் கலந்த கலவைதான் சினிமா நடனம். புதிய நடன அமைப்பாளர்கள் புதிய முறைகளைக் கொண்டுவருகிறார்கள். பாடல்கள் புதுமையாகப் படம் பிடிக்கப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, நடனம் என்பது ஒரு கலை, நான் ரசிக்கும் விஷயம். எனவே, எல்லாவித நடனமுறைகளும் எனக்குப் பிடிக்கும்.

டி.வி.களில் நடன நிகழ்ச்சிகள் அதிகரித்து வருவது, இந்திய நடனங்கள் உலகப் புகழ் பெற உதவுகிறதா?

வெளிப்படையாகச் சொல்வதென்றால், நானே சில புதிய நடன முறைகளை டி.வி. நிகழ்ச்சிகள் மூலம்தான் அறிந்திருக்கிறேன். மக்கள் நிறைய நடனங்களை அறிந்துகொள்வது டி.வி. நடன நிகழ்ச்சிகள் வழியாகத்தான். இந்திய நடனங்களின் எல்லையை டி.வி. நடன நிகழ்ச்சிகள் விஸ்தரித்திருப்பது உண்மை. இந்த நிகழ்ச்சிகள் மூலம் புதிய திறமையாளர்களும் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.

நீங்கள் சினிமாவில் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு இருக்கிறதா?

நடனம் அமைப்பதை விரும்புகிறேனா என்று எனக்கு உறுதியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால், கற்பிப்பது எனக்குப் பிடிக்கும். நான் எனது இணையதளம் மூலம் பல விஷயங்களைக் கற்பித்துள்ளேன். நடனத்தைப் பொறுத்தவரை, நான் அளிக்கும் நடனப் பயிற்சியால் மக்கள் பயன் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே ஆன்லைனில் அதற்கான ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

முழுக்க முழுக்க நடனம் சார்ந்த சினிமா எதிலாவது நடிக்கும் எண்ணமிருக்கிறதா?

இப்போதைக்கு அப்படி எந்த யோசனையும் இல்லை. அதுவும் தவிர, அதற்கு திரைக்கதை பொருத்தமாக அமைய வேண்டும். நடனம் சார்ந்த படம் என்பதாலேயே உடனே சம்மதம் சொல்லிவிட மாட்டேன். எனக்கு ஆர்வமூட்டுவதாக ஒரு கதை அமைந்தால், நிச்சயம் நடிப்பேன். இதுவரை அப்படிப்பட்ட சினிமா எதற்கும் நான் ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
=
நன்றி- தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum