உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்

புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம் Empty புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்

Post by சிவா on Sat May 16, 2015 3:54 am

ஹாலிவுட், பாலிவுட் ஸ்டைலில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் தான், புறம்போக்கு என்கிற பொதுவுடமை.

நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வெளிவந்திருக்கிறது.

கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாம். டில்லியிலிருந்து தூக்கு தண்டனை கைதி பாலுவை ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரும் ஷாம், அவரை சிறையில் தள்ளுகிறார். தூக்கு போட வேண்டிய கேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி வருகிறார்.

பரம்பரை பரம்பரையாக தூக்கு போடுவதை தொழிலாக கொண்ட குடும்பம் விஜய் சேதுபதி உடையது என்பதாலும், தனது 18 வயதிலேயே அப்பாவுக்கு முடியாமையால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டதால் இனி யாரையும் தூக்கில் போடுவதில்லை எனும் உறுதியில் ரயில்வே கலாசியாக வேலை பார்த்து வரும் விஜய் சேதுபதியை, பாலு எனும் ஆர்யாவை தூக்கு போட அழைக்கிறார் ஷாம். ஆனால் தனது உறுதிமொழியை சொல்லி, தான் யாரையும் தூக்கிலிடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வர சகலமும் செய்கிறார் ஷாம்.  ஆனாலும் முழுநேர குடிகாரரான எமலிங்கம் - விஜய் சேதுபதி வழிக்கு வர மறுக்கிறார்.

இந்நிலையில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பாலு உடனடியாக தூக்கில் இடப்படாமல் இருப்பதற்கு தூக்குபோடும் தொழிலாளி எமலிங்கத்தை தீர்த்து கட்டினால், தூக்கு தண்டனை தள்ளிப்போகும் எனும் எண்ணத்துடன் விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறது கதாநாயகி குயிலி - கார்த்திகா தலைமையிலான புரட்சிகர அமைப்பு. ஆனால் ஒருக்கட்டத்தில் எமலிங்கத்திற்கே யாரையும் தூக்கில் போட விருப்பம் இல்லையென கார்த்திகா அண்ட் கோவினருக்கு தெரிய வர, சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாமின் பிடியில் இருக்கும் புரட்சியாளர் பாலு - ஆர்யாவை தப்பிக்க வைக்க, விஜய் சேதுபதியை தங்கள் கூட்டணியில் சேர்க்கிறார் கார்த்திகா.

கார்த்திகாவின் திட்டம் நிறைவேறியதா.?,
பாலு - ஆர்யா தப்பித்தாரா..?,
அதற்கு எமலிங்கம்-விஜய்சேதுபதி உதவினாரா...?
சிறை அதிகாரி மெக்கலே - ஷாமின் நிலை என்ன...?
என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராதவிதமாக விடை சொல்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை.

எமலிங்கமாக விஜய் சேதுபதி கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே புரட்சியாளர் பாலு - ஆர்யா, சிறை அதிகாரி மெக்கலே - ஷாம், கதாநாயகி, புரட்சிப்பெண் குயிலி - கார்த்திகா உள்ளிட்டோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் மிரட்டி.

வர்சனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு... பாடல் தாளம் போட வைத்தாலும், இமயமலையில், ஆர்யா-கார்த்திகா இடையேயான டூயட் பாடல் வலிய திணிக்கப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறது.

ஏகாம்பரத்தின் ரம்மியமான ஔிப்பதிவு, குலுமாணியை கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்க வைத்திருக்கிறது. அதேசமயம் சிறைசாலை காட்சிகளில் அவரின் ஔிப்பதிவு மிரட்டியிருக்கிறது.

இயற்கை, ஈ, பேராண்மை படங்களை போன்று, எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வௌிவந்துள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படமும், நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள தரமான கருத்துக்களை சொல்லியிருக்கும் சிறந்த புரட்சிகரமான படம்!

தினமலர் விமர்சனம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம் Empty Re: புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 16, 2015 7:00 am

நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம் Empty Re: புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்

Post by சிவா on Tue May 19, 2015 12:43 am


விமர்சனம் - புறம்போக்கு என்கிற பொதுவுடமை

பொதுவுடமையில் நம்பிக்கையுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தனது முதல் படம் தவிர்த்து மற்ற இரு படங்களிலும் - ஈ, பேராண்மை - பொதுவுடமை கருத்துகளை இலைமறை காயாக சொன்னவர். அவரது நான்காவது படத்தின் பெயரே, புறம்போக்கு என்கிற பொதுவுடமை. நாம் எதிர்பார்த்தது போலவே படத்தின் கதையும், காட்சிகளும் ஜனநாதனின் பொதுவுடமை நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.

பாலுச்சாமி இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த முயலும் நக்ஸலைட்களில் ஒருவர். அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதி. மனித வெடிகுண்டாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். கடுமையான குற்றங்களை ஒழிக்க தூக்குத் தண்டனையே ஒரேவழி என்று நம்பும் சிறை அதிகாரி மெக்காலே பாலுவின் மரணத் தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறார். அதற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் எமலிங்கத்தின் உதவி வேண்டும். எமலிங்கமோ மெக்காலேக்கு பிடிதராமால் போதையில் மிதக்கிறார். நக்ஸலைட்களில் ஒருவரான குயிலி, எமலிங்கத்தின் மூலம் பாலுவை சிறையிலிருந்து விடுவிக்க முயல்கிறார். இந்த கதையோட்டத்தில் பொதுவுடமை, தமிழ்த்தேசியம் என்று தனது கொள்கைகளை தூவிச் செல்கிறார் இயக்குனர்.

அரச வன்முறையை எதிர்த்து மக்களுக்காக போராடும் நக்ஸலைட்களை, அரசு தீவிரவாதிகள் என்று பெயர்சூட்டி சமூகத்திலிருந்தும், இந்த உலகத்திலிருந்தும் பிடிங்கியெறிய துடிக்கிறது. நக்ஸல்கள் தீவிரவாதிகள் அல்ல மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று, இன்றைக்குத் தேவைப்படும் மிக முக்கியமான அரசியலை துணிச்சலுடன் தொட்டதற்காக ஜனநாதன் பாராட்டுக்குரியவர்.

பாலுச்சாமியாக நடித்திருக்கும் ஆர்யா, மெக்காலேவாக வரும் ஷாம், எமலிங்கம் விஜய் சேதுபதி, குயிலியாக வரும் கார்த்திகா என்று அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

முந்தையப் படங்களில் ஜனநாதனுக்கு ஏற்பட்ட சறுக்கல் இந்தப் படத்திலும் பளிச்சென்று தெரிகிறது. கதாபாத்திரங்களின் பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படாததால் அவர்கள் பேசும் தத்துவங்கள், அரசியல் பின்னணிகள் வெறும் உரையாடலாக மட்டுமே எஞ்சுகின்றன. குறிப்பாக குயிலியின் லெனின் குறித்த பேச்சு. மரண தண்டனைக்கு எதிரான இந்தப் படத்தால் அதனை அழுத்தமாக பதிவு செய்ய முடியவில்லை என்பது இன்னொரு ஏமாற்றம். இதற்கும் அழுத்தமில்லாத திரைக்கதையே காரணம்.

தமிழ்ப் படங்களில் வரும் பாடல்களை களைந்தாலே அவை நல்ல படமாகிவிடும் என்ற கமெண்ட், இந்தப் படத்தைப் பொறுத்தவரை உண்மை. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே கதைக்கும் காட்சிக்கும் நியாயம் செய்கிறது. கதையோடு இயைந்து வருகிறது ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு.

கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியின் கேள்விகளின் மூலம் சட்டத்தின், நீதிமன்றத்தின் போதாமையை விளக்கும் காட்சி அற்புதமானது.

கதை மற்றும் கதாபாத்திரங்களின் பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படாத போது அந்த கதாபாத்திரங்களின் ஆவேசமும், உரையாடல்களும், கேள்விகளும் வெறும் விவரணைகளாகவே எஞ்சும். ஜனநாதன் இந்த விபத்தை தவிர்த்திருந்தால் புறம்போக்கு என்கிற பொதுவுடமை அரச பயங்கரவாதத்தின் முகத்தில் பொளோரென்று அறைந்திருக்கும்.

ஜே.பி.ஆர்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம் Empty Re: புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை