ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !

View previous topic View next topic Go down

ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !

Post by சிவா on Wed May 13, 2015 10:10 pm

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் அவருக்கு விடுதலை வழங்கியதன் மூலம் ஊழலை ஊக்குவிக்கிறதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதை நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். ஜெயலலிதா தரப்பினர் பெற்ற வங்கிக் கடன்களை அவர்களின் வருவாயாக காட்டும் விஷயத்தில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருந்தேன். இதேகருத்தை இவ்வழக்கின் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பில் இன்னும் பல ஓட்டைகள் உள்ளன. அவற்றில் பல குறைபாடுகள் ஜெயலலிதா தரப்புக்கு சாதகம் என்ற அளவுடன் முடிந்து விட்டன. ஆனால், பல குறைகள் இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பது தான் கவலையளிக்கிறது. உதாரணமாக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவரது தீர்ப்பு ஆணையின் 853 மற்றும் 854 ஆவது பக்கங்களில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்களையும் அவரது வருமானமாக கருதி, அவரது வருவாய் கணக்கில் ரூ.1.50 கோடியை சேர்த்திருக்கிறார். இது ஜெயலலிதா செய்த ஊழல்களுக்கு அப்பட்டமாக அங்கீகாரம் அளிக்கும் மோசமான நடவடிக்கையாகும்.

‘‘இவ்வழக்கின் முதல் எதிரி ஜெயலலிதா தனக்கு ரூ.2.15 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்ததாகவும், ரூ.77 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வந்ததாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா அவரது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அவரது வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் பரிசுப் பொருட்கள் தருவது வழக்கமாக உள்ளது. அதனடிப்படையில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்கள் மூலம் அவருக்கு ரூ.1.50 கோடி வருமானம் கிடைத்ததாக மதிப்பீடு செய்கிறேன்’’ என்று நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். இதில் ஒரு விஷயம் மிகவும் கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதையோ அல்லது பிறந்த நாளின்போது தொண்டர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்குவதையோ யாரும் குறைகூற முடியாது. ஆனால், ஜெயலலிதா அரசியல் கட்சித் தலைவராக இந்த பரிசுப் பொருட்களை வாங்கவில்லை; முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த பரிசுகளை வாங்கியுள்ளார் என்பது தீர்ப்பு ஆணையில் மறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களாக இருப்பவர்கள் எந்தவித பரிசுப் பொருட்களையும் வாங்கக் கூடாது என்று நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதைமீறி ஜெயலலிதா பரிசுகளை வாங்கியதே குற்றமாகும். இத்தகைய சூழலில் அந்த பரிசுகளை எப்படி வருவாயாக எடுத்துக் கொள்ள முடியும்? என்பது தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, ஜெயலலிதா விதிகளை மீறி பரிசுப் பொருட்களை பெற்றது தொடர்பாக அவர் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது ஜெயலலிதா சட்டவிரோதமாக வாங்கிய பரிசுப் பொருட்களை வருமானமாக அறிவித்து அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்; வழக்கு என்று வந்தால் அவை பரிசுப் பொருட்களாக கிடைத்தவை என்று கூறி தப்பித்து விடலாம் என்ற நிலையை இந்த தீர்ப்பு ஏற்படுத்திவிடும். ஊழல் மிகப்பெரிய சமூகத் தீமை என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ஊழலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் தங்களின் சொத்துக்களுக்கு வருமானவரித் துறையிடம் கணக்கு காட்டியுள்ளனர்; அதை வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை காரணம் காட்டியே ஜெயலலிதா தரப்பை அனைத்துக் குற்றச்சாற்றுகளில் இருந்தும் நீதிபதி விடுவித்துள்ளார். ஆனால், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்ட பிறகே அவர் தமது சொத்துக்கள் குறித்த வருமானவரிக் கணக்கை காட்டினார் என்பதையும், இவ்விஷயத்தில் வருமானவரித் துறையின் முடிவு நீதிமன்றங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் நீதியரசர் ஏனோ கருத்தில் கொள்ளவில்லை.

மொத்தத்தில் நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தீர்ப்பு திருத்தப்பட்டால் தான் இந்தியாவைப் பீடித்துள்ள ஊழல் என்ற சாத்தானை ஒழிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !

Post by சிவா on Wed May 13, 2015 10:10 pm

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: களத்தில் இறங்கும் விஜயகாந்த்!

சென்னை: ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அப்பணியை தேமுதிக செய்யும் என்று அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெள்ளத் தெளிவாக "உள்ளங்கை நெல்லிக்கனி போல்" தெரியவருகிறது.

புடம்போட்ட தங்கம் என்று நம்பி நாம் வாங்குகிற பொன்நகைகள், சில நேரங்களில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பாடத்தை நமக்கு தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பிலும் அது தான் நடந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

உச்ச நீதிமன்ற நீதி அரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி குமாரசாமி, கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்த நிகழ்வாக தெரியவில்லை. மாறாக ஏதோ ஓர் அழுத்தத்தில்தான் இது நடந்திருப்பதாக யூகிக்கமுடிகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பது நீதி நெறிமுறையில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கோட்பாடு. ஒருவேளை அந்த ஆயிரத்தில் ஒருவரோ இந்த ஜெயலலிதா, அதனால்தான் தப்பித்துவிட்டாரோ என்று சட்ட வல்லுனர்களும், சமூக அக்கறையாளர்களும் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கு முன்பு அரசு ஊழியர்களான ஐபிஎஸ் அதிகாரி ஜெகன்சேஷாத்திரி வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக 3 ஆயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்தமைக்காக ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல் சுங்கத்துறை அதிகாரி புகழேந்தி என்பவர் சுமார் 90 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் கணக்கில் இருந்தமைக்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து சேர்த்ததில் விலக்களிக்கப்பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதிபதிக்கு, தண்டனை அளிக்கப்பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரியாமல்போனது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

பாமரரில் இருந்து பணக்காரர் வரை வாக்களித்து ஜெயலலிதாவை முதலைமைச்சராக்கினால் அதிகார பலமும், பணபலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இதுபோன்ற தருணங்களில்தான் நிரூபிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில் 18 ஆண்டுகள் முடிவில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆதார ஆவணங்களை, அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க 1030 பக்கம் கொண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதனால்தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார்? இவரை நீதியரசர் என சொல்லமுடியுமா? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள்.

எனவே கர்நாடக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தேசிய முற்போக்கு திராவிட கழகம் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !

Post by சரவணன் on Wed May 13, 2015 10:26 pm

==================================================================================================
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: களத்தில் இறங்கும் விஜயகாந்த்!

சென்னை: ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அப்பணியை தேமுதிக செய்யும் என்று அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
==================================================================================================ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum