ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

View previous topic View next topic Go down

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by சிவா on Thu May 07, 2015 8:56 am

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சிமலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.

அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.

சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by சிவா on Thu May 07, 2015 8:57 am

மலேசியா – தாய்லாந்து எல்லையில் பிணக்குவியல்: மலேசியர்கள் காரணமா?மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”

“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”

“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by ayyasamy ram on Thu May 07, 2015 9:37 am

அநியாயம் அநியாயம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37095
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by krishnaamma on Thu May 07, 2015 9:46 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu May 07, 2015 2:54 pm

பிழைக்க வந்து இடத்தில் இப்படி விபரீதமா. என்ன கொடுமையோ.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by mbalasaravanan on Thu May 07, 2015 3:22 pm

என்ன கொடுமை சார் இது கொடுமை இப்படி கொன்று குவித்து எதை சாதிக்கப் போகிறார்கள்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by T.N.Balasubramanian on Thu May 07, 2015 7:13 pm

வறுமை கொடுமை பாவம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22140
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 07, 2015 9:04 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by சிவா on Mon May 25, 2015 9:09 pm

மலேஷியாவின் தாய்லாந்து எல்லையில் 140 புதைகுழிகள்

140 புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை

மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.

மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.

மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.

தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by Preethika Chandrakumar on Mon May 25, 2015 9:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by சிவா on Wed May 27, 2015 6:22 pm

27 தடுப்பு முகாம்கள், 139 சவக்குழிகள் – பெர்லிஸில் தொடரும் மர்மம்!

பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அண்மையில் மலேசிய அதிகாரிகள் பெர்லிசில் கண்டுபிடித்த 27 முகாம்களைக் காட்டிலும் இப்புதிய முகாம் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.

தற்போது இந்த முகாம் இருந்ததற்குச் சாட்சியாகச் சிதறிக் கிடக்கும் சில மூங்கில் மற்றும் விறகுக் கட்டைகளும் சில நெகிழித் தாள்களுமே (plastic sheets) இப்பகுதியில் எஞ்சியுள்ளன.

இதை முகாம் என்று குறிப்பிடுவது கூட தவறு. ஏனெனில் இங்கு காணப்படும் சில தூண்கள் முறுக்குக் கம்பிகளாலும், சுவர்கள் கம்பி வலைகளாலும் பின்னப்பட்டுள்ளன.

மேலும் கூண்டு போன்ற இந்த அமைப்பைச் சுற்றி மூன்று கண்காணிப்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. விறகுகளால் ஆன ஒரு கூண்டின் மேல் குளியல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. மனிதக் கடத்தல்காரர்கள் இந்தத் தடுப்பு முகாமை வேண்டும் என்றே அழித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முகாமிற்கும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற முகாம்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by சிவா on Wed May 27, 2015 6:22 pm

பெர்லிஸ் சவக் குழிகள் தொடர்பில் காவல் துறையினர் 12 பேர் கைது!

உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by சிவா on Wed May 27, 2015 6:24 pm

பெர்லிஸ் புதை குழிகள் விசாரணையில் பாகுபாடே கிடையாது!

பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் புதைகுழி குற்றப் பின்னணியில் எவர் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். அரசு அலுவலர்கள் இதில் ஈடுபட்டிருந்தால் கூட அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

“சம்பந்தப்பட்ட பகுதி ஒரு மாநில பூங்காப் பகுதி. வனத் துறையினரும் வனப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வளைய வரும் பகுதியாகும்.அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் இப்படிப்பட்ட புதைகுழிகளை அடையாளம் காண முடியாமல் போனது எனபதுதான் வியப்பாக உள்ளது.ஆனாலும்,எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.தீர விசாரிக்காமல் யார் மீதும் பழி போடுவது பாவம்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய மாபாபத்தைச் செய்தவர்கள் யார்? அவர்களுக்குத் துணை போனவர்கள் யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by shobana sahas on Thu May 28, 2015 3:49 am

அநியாயம் அழுகை என்ன கொடுமை சார் இது கூடாது ஊத்திக்கிச்சு பாவம்.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by krishnaamma on Thu May 28, 2015 9:52 am

ரொம்ப அநியாயமாய் இருக்கே எத்தனை நாள் ஆகிவிட்டது..................சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum