ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

View previous topic View next topic Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Wed May 06, 2015 12:07 am


ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 100 கோடி அபராமுதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதனால், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பவானி சிங்கின் நியமனத்தை தமிழக அரசே நியமனம் செய்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களையும், கர்நாடாக அரசின் எழுத்துப் பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பவானிசிங் வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 81 பக்கம் மனுவும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 18 பக்க எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தனர்.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருக்குமா அல்லது அவரது எதிர்காலத்தை மீண்டும் புரட்டிப் போடும் வகையில் இருக்குமா என மில்லியன் டாலர் கேள்வி அதிமுக , திமுக தரப்பில் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறித்து மே 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதிக்குள் நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என கர்நாடாகவில் தகவல் பரவிவருகின்றது.

இந்த தகவல் உறுதியாகாத நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் கடும் டென்சனில் உலா வருகின்றனர்.

முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த‌ மனு விசாரணைக்கு வந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by உமா on Wed May 06, 2015 10:45 am

என்ன முடிவோ??????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by ayyasamy ram on Wed May 06, 2015 11:32 am

டென்சன் தேவையில்லை....
-
உச்ச நீதி மன்றம் இருக்கையிலே கவலை எதற்கு...??
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 2:16 am

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ., ஆஜராக தேவையில்லை: மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இவ்வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என, அரசியல் வட்டாரங்களில், பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.வழக்கை விசாரித்த, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட நால்வருக்கும், தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அபராதமாக ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் விதித்தார்.இதையடுத்து, நால்வரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, பின், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமினில் வெளியே வந்தனர்.சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட, நால்வரும், மேல்முறையீட்டு மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இம்மனுக்களை, நீதிபதி குமாரசாமி விசாரித்தார். மூன்று மாதங்கள் விசாரணை நடந்தது. மார்ச் மாதம், தீர்ப்பு தேதியை தள்ளி வைத்தார். மே, 12ம் தேதிக்குள், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது.

அதன்படி, நாளை, 11ம் தேதி, நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு, ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாக இருக்கும் என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.ஊழல் வழக்கில், குறைந்தபட்சம் ஓராண்டு முதல், ஏழாண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 2:16 am

பொதுவாக, மேல்முறையீட்டு வழக்கில், என்னென்ன வாய்ப்புகள் இருக்கும் என்பது, யாராலும் யூகிக்கக் கூடியது தான்.

* குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், விடுதலையாவர்.
* நிரூபணமானால், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்யும்.
* அபராதம், சிறை தண்டனை அதிகபட்சம் என, உயர் நீதிமன்றம் கருதினால், தண்டனையையும், அபராதத்தையும் குறைக்கலாம்.
* தீர்ப்பு வழங்கும் நாளில், உயர் நீதிமன்றத்தில், குற்றவாளிகள் ஆஜராக தேவையில்லை.
* கீழமை நீதிமன்றங்களில் தான், தீர்ப்பு வழங்கும் தேதியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும். உயர் நீதிமன்றத்தில், அப்படி ஒரு நடைமுறை இல்லை.
* தண்டனை உறுதி செய்யப்பட்டாலோ, குறைக்கப்பட்டாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள், தனி நீதிமன்றத்தில் சரணடையும்படி, குற்றவாளிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிடும்.
* உயர் நீதிமன்றம் குறிப்பிடும் நாட்களுக்குள், குற்றவாளிகள் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும். பின், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்து, ஜாமினில் வெளி வர வேண்டும்.
* ஊழல் வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டால் கூட, அவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இழக்கிறார்.

வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டால், அபராதத் தொகையை செலுத்திய நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது.சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனையை அனுபவித்த பின், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

உதாரணத்துக்கு, ஊழல் வழக்கில் ஒருவருக்கு, ஓராண்டு சிறை விதிக்கப்பட்டால், அந்த ஓராண்டு சிறை வாசம், ஆறு ஆண்டுகள் என, மொத்தம், ஏழு ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட முடியாது.ஊழல் வழக்கில், பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் மட்டும் விடுதலைஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை எனவும், சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், உடந்தையாக, தூண்டுதலாக இருப்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மட்டும், தண்டனை விதிக்க முடியும் என்கின்றனர், வழக்கறிஞர்கள். இந்திய அரசியலில், முதன் முதலாக, முதல்வராக பதவி வகிக்கும் போது, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டவர் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பை, அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து உள்ளது.

உச்சகட்ட டென்ஷனில் அ.தி.மு.க.,வினர்:

இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரும், தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கியபடி உள்ளனர்.ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையானால் மட்டுமே, நமக்கு எதிர்காலம் உண்டு என நினைக்கும், அ.தி.மு.க.,நிர்வாகிகள், அவர் விடுதலையாக வேண்டும் என,கோவில்களை வலம் வந்த வண்ணம் உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 2:38 am


சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு: வெளியே கசியாமல் இருக்க குமாரசாமி வைத்த கெடுபிடி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ள நிலையில், நீதிபதி குமாரசாமி தீர்ப்பை தயாரித்த விதம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனைவரும் தீர்ப்பு வெளியாகும் வரை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை விதிக்கப்பட்டது.

மேலும், நீதிபதியின் சேம்பருக்கு வரும் போது துண்டு சீட்டுகளோ, வேறு எந்த மின் சாதனங்களையோ கொண்டு வரக் கூடாது, கொண்டு செல்லவும் கூடாது.

இதன் மூலம் தீர்ப்பு வெளியே கசிந்து விடக் கூடாது என்பதில் நீதிபதி குமாரசாமி எச்சரிக்கையாக இருந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 2:39 am

தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன?

வழக்கு என்று வந்துவிட்டால் ஆண்டவனானாலும் நீதியின் விசாரணைக்கு ஆட்பட்டே ஆக வேண்டும் என்பதே சத்தியம் நமக்கு சொல்லுகின்ற உண்மை. சத்தியமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என்பது நமது தேசப்பிதாவின் வாக்கு. ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் ஒரு வழக்கின் விசாரணையில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதையே புராணங்களும் வரலாறுகளும் நமக்கு எடுத்துரைக்கின்றது. நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதித்த மன்னர்களின் வரலாற்றையும் நாம் படித்திருக்கிறோம். இப்போது மக்களாட்சியில் நீதியின் நிலை சர்ச்சைக்குரியதாக இருக்கிறது என்றாலும், சட்டம் தன் கடமையை சரியாக செய்து கொண்டுதான் இருக்கிறது என பல வழக்குகள் நிரூபித்துள்ளன. அந்த வகையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சுமார் 19 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பலகட்டங்களை கடந்து வந்திருந்தபோதும், தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்ப்பு வரும் திங்கள் (11.5.2015) அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு கடந்துவந்த பாதைகளை நாம் திரும்பிப் பார்ப்போமே.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாலருமான ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபியாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானர். இந்நிலையில், இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனக் கூறி ஜெயலலிதா மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் அடுத்தடுத்து இந்த வழக்கை விசாரித்தனர். நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கின் குற்றவாளிகளான (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) நான்கு பேரும் ஆஜராக வேண்டும். மீண்டும் 30-ம் தேதிக்கு வாய்தா போடுகிறேன். அன்று நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று கண்டிப்பு காட்டினார். இதையடுத்து நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் 30 -ம் தேதி ஒரு நாள் விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அபோதைய விசாரணையின் முடிவில், நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஆனால் ‘உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் நான்கு பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த வழக்கை நான்கு வார காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். குறைந்தது மூன்று வார காலத்துக்காவது தள்ளிப்போட வேண்டும் என்று ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் கூறியதையடுத்து, நீதிபதி முடிகவுடர் வழக்கை நவம்பர் 21 -ம் தேதிக்கு தள்ளிப்போடுவதாக கூறினார். இந்நிலையில், 31.10.2013 அன்று தேதி மாலையே வழக்கின் 8-வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

நவம்பர் 21 -ம் தேதி, புதிய நீதிபதியான ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் முழு விவரங்களை கேட்ட நீதிபதிக்கு, ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘‘1991 முதல் 1996 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1997 -ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அவர்களால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4 (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) உடையது என்றும், ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் கம்பெனியுடைய சொத்துக்களும் ஏ1 உடையது என்றும், கட்டட மதிப்பீட்டிலும் குளறுபடிகள் இருக்கிறது’’ என்றதும் குறுக்கிட்ட நீதிபதி, ‘‘எல்லா வழக்குகளிலும் குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அதைக் களைவது நம்முடைய பொறுப்பு’’ என்றார் .

‘‘இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் போடப்பட்டுள்ளது’’ என்று சொன்ன ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுடைய தரப்பினர் ஆஜர் ஆகாமல் இருப்பதற்கான மனுவையும் கொடுத்தார்கள்.

தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளான தங்க, வைர ஆபரணங்களை இங்கு கொண்டுவர வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட குன்ஹா, ‘‘யாரும் எமோஷனல் ஆக வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’’ என்று கூறினார்.

மீண்டும் இந்த வழக்கு டிசம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பாராமுகமாக இருந்துவிட்டார். இந்தச் சொத்துகள் அனைத்தும் இந்த வழக்கின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றன. அதைப் பார்த்து தீர்ப்பு வழக்குவதுதான் முறையாக இருக்கும் என்று நீதிபதி குன்ஹா கூறினார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 -ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எங்களுக்கு சில சொந்த வேலைகள் இருப்பதால், வழக்கை ஒரு வார காலம் தள்ளிப்போட வேண்டும் என்றதால், நீதிபதி குன்ஹா வழக்கை ஒத்திவைத்தார். பின்னர் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால் , நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அந்த மனுவை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் ‘‘1996 -ம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 80,000 மதிப்புள்ள 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை, ஜெயலலிதாவின் ஆலோசகரான சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கரன், சென்னை நீதிமன்றத்தில் இருந்து பெற்றுச் சென்றார். நீதிமன்றம் கேட்கும்போது அந்தப் பொருட்களை ஒப்படைப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும். அந்த நகைகளை, அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட வாசுதேவன் என்ற நகை மதிப்பீட்டாளரைக் கொண்டு நீதிமன்றத்தில் குறியீடு செய்ய வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனு மீது பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும். என்றார். இதனால் ஆவேசம் அடைந்த நீதிபதி குன்ஹா, இந்த வழக்கை விசாரிக்க நான் சம்பளம் வாங்குகிறேன். இது மக்களின் பணம். வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ய என் மனசாட்சி இடம் அளிக்கவில்லை. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் இயக்குநர் சண்முகம் சார்பில், அவரின் வழக்கறிஞர் தியாகராஜன், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் அவரது மனு நிராகரிக்கப்படும் என நீதிமன்றம் கூறியதையடுத்து, இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அந்த மனுவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து பிப்ரவரி 5 -ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேராசிரியர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான தாமரைசெல்வன், ஒரு புதிய மனு தாக்கல் செய்தார்.

அதில் அந்த மனுவில், ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3 -ம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் என்பவரிடம் உள்ளதாகவும், அதை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவில் குறிப்பிட்டுள்ள பாஸ்கரன் என்பவர் கடந்த 2013 டிசம்பர் 3 -ம் தேதி இறந்துவிட்டார். அந்தச் செய்தி தினசரி நாளேடுகளில் வந்திருக்கிறது (அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்). இந்த விவரம் தெரிந்தும், வேண்டும் என்றே உண்மையை மறைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இதற்கு முன் விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆகஸ்ட் 23 முதல் 26 -ம் தேதி வரை அரசு வழக்கறிஞர் பவானி சிங் வாதம் செய்தார். அப்போது பாஸ்கரன் உயிருடன் இருந்தார். அப்போது வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று கேட்டு அரசு வழக்கறிஞர் ஏன் மனுத் தாக்கல் செய்யவில்லை. பாஸ்கரன் இறந்துபோன தகவல் அரசு வழக்கறிஞருக்கு எப்படி தெரியாமல் போனது?

நீதிபதி பாலகிருஷ்ணா முன் நான்கு நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்காமலும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலும் வாதம் செய்தாரா அல்லது வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் செயல்படுகிறாரா என்று சந்தேகம் வருகிறது. ஆகவே, வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு உகந்ததாகக் கருதப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர் பவானி சிங் எனக்கு முழு விவரம் தெரியாது என்றார். இதையடுத்து இந்த மனு மீதான ஆட்சேபணையை பிப். 6 -ம் தேதிக்கு தாக்கல் செய்யலாம் என்று அரசு மற்றும் ஜெ தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பு எழுதப்பட்டுவிட்ட இந்த வழக்கில், அடுத்தடுத்து என்னென்ன நடந்தது?

நாளை பார்க்கலாம்…
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 2:39 am

கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்குறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11ம் தேதி வழங்கப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தை சுற்றி உள்ள ஒரு கி.மீ., தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இவ்வுத்தரவு அமலில் இருக்கும் என்று பெங்களூரு காவல்துறை ஆணையாளர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார். வதடையுத்தரவு உள்ள பகுதிகளில் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக சேர முடியாது.

எனவே, தீர்ப்பு பாதகமாக வந்தால் தர்ணா நடத்தவோ, சாதகமாக வந்தால், கொண்டாட்டம் நடத்தவோ முடியாது. தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 2:48 am

ஜெ. வழக்கில் தீர்ப்பு.. உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் ஆலோசனை

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெங்களூருவிலுள்ள கர்நாடக போலீஸ் இயக்குநர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் தொடங்கியது. S

இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், போலீஸ் டிஜிபி, மாவட்ட எஸ்.பிக்கள் உள்பட அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இது வழக்கமான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் என்றபோதிலும், வரும் திங்கள்கிழமை, கர்நாடக ஹைகோர்ட், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்போவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக பெங்களூருவை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம், பாதுகாப்பு விஷயத்தில் உஷாராக இருக்கும்படி சித்தராமையா உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பெங்களூரு போலீசார் சிறப்பாக மேற்கொண்டதாக அப்போது சித்தராமையா பாராட்டு தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sun May 10, 2015 4:28 am

ஜெ.,வுக்கு விடுதலையா, தண்டனையா? தமிழகத்தில் சூடுபிடித்த சூதாட்டம்

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், இது தொடர்பான சூதாட்டம், தமிழகம் முழுவதும் நடப்பதாக கூறப்படுகிறது.

வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவார் என்றும், கீழ் கோர்ட் தீர்ப்பு உறுதியாக தண்டனையடைவார் என்றும், ஆளாளுக்கு சூதாட்டத்தில் பந்தயம் கட்டுவதால், இதை வைத்து ஒரு சிலர், பெரிய அளவில் கல்லா கட்ட திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் சூதாட்டம்:

போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட்டை மையமாக வைத்து சூதாட்டம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை, கல்லா கட்டி வருகின்றனர். போலீசார், இந்த மாதிரி சூதாட்டம் நடத்தப்படுவதை சில ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தொடர்ச்சியாக அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது நடக்கும் ஐ.பி.எல்., மேட்சுகளையும் வைத்து, பலே சூதாட்டம் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. போலீசாருக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

ரூ.1க்கு ரூ.1.90:

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பை மையமாக வைத்து, தமிழகம் முழுவதும் சூதாட்டம் நடந்து வருகிறது. வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுபடுவார் என, ஒருவர் ஒரு ரூபாய் பணம் கட்டினால், அவர் எதிர்பார்ப்புப்படி தீர்ப்பு அமைந்துவிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு, சூதாட்டம் நடத்துகிறவர், 1.90 ரூபாய் திருப்பிக் கொடுத்து விடுவார். அதே நேரம், ஜெயலலிதா தண்டனை அடைவார் என, ஒரு ரூபாய் பணம் கட்டி, தீர்ப்பில் ஜெயலலிதா தண்டனையடைந்து விட்டால், சம்பந்தப்பட்டவருக்கு, சூதாட்டப் போட்டி நடத்துபவர், 1.10 ரூபாயாக திருப்பிக் கொடுப்பது தான் விளையாட்டு.

அதாவது, ஜெயலலிதா தண்டனை பெற அதிக வாய்ப்புள்ளது என்பதோடு, அந்த அடிப்படையிலேயே நிறைய பேர் பணம் கட்டுவதால், சூதாட்டம் நடத்துபவருக்கு நஷ்டம் வந்து விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

ஜெயலலிதா குற்றமற்றவர் என்றுதான் தீர்ப்பு வரும்! பெட் கட்ட யாராவது வறீங்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by ayyasamy ram on Sun May 10, 2015 7:24 am

மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு:
-
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ., ஆஜராக தேவையில்லை:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by anikuttan on Sun May 10, 2015 11:35 am

ஏராளமான கருப்பு ஆடுகள் நம்ம நாட்டில் சுதந்திரமாக சுத்தி திரியும்போது இந்த அம்மாவை மட்டும் தண்டிப்பது வருத்தமாக இருக்கிறது.
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 100
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun May 10, 2015 11:49 am

அடுத்த வாரம் மகிழ்வுந்தில் கோவை செல்லலாம் என்று இருக்கின்றோம். கல்லடியையும் சொல்லடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை. ஒன்னும் புரியல
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by ponsamon on Sun May 10, 2015 12:41 pm

டோன்ட் வொர்ரி அம்மா வில் return
avatar
ponsamon
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by ராஜா on Sun May 10, 2015 2:05 pm

@anikuttan wrote:ஏராளமான கருப்பு ஆடுகள் நம்ம நாட்டில் சுதந்திரமாக சுத்தி திரியும்போது இந்த அம்மாவை மட்டும் தண்டிப்பது வருத்தமாக இருக்கிறது.

நல்லா இருக்கு உங்க நியாயம் புன்னகை , உங்களை போன்றவர்களை தான் அதிமுகவுக்கு தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Mon May 11, 2015 12:33 am

தொண்டர்கள் நிதானம் காக்க வேண்டும்; ஜெயலலிதா மீண்டும் கட்டளை

ரெயில் முன் பாய்ந்து அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தொண்டர்கள் உணர்ச்சி வயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று ஜெயலலிதா மீண்டும் கட்டளையிட்டுள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ரெயில்முன் பாய்ந்துதற்கொலை

அ.தி.மு.க. தலைமையின் மீது மிகுந்த பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் கழக தொண்டர்கள், ஒரு சில இடங்களில் எனக்குப் பெரிதும் மனவேதனையைத் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டுவிடுகின்றனர்.

அண்மையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு செயற்குழு உறுப்பினர் எம்.முத்தையா ரெயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் துடிதுடித்தேன்.

நிதானம் காக்க வேண்டும்

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.

முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by krishnaamma on Mon May 11, 2015 12:35 am

//என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.//

இதைப்படிக்கும் போதே நாளை என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ என்று பயமாய் இருக்கே சிவா ! சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sat Jun 06, 2015 1:01 am

ஜெயலலிதா வழக்கில் ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும். வக்கீல் ஆச்சார்யா

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது.

மேல் முறையீடு எபோது செய்யபடும் எனபது குறித்து நேற்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வக்கீல் ஆச்சார்யா அளித்த பேட்டி விவரம் அவருமாறு

எஸ்எல்பி தயார் செய்ய ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம்.தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. எனவே அவசர வழக்குகளை மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுப்பர். இவ்வழக்கு அவசர வழக்காக கருதப்பட முடியாது என்பதால், விடுமுறை கால பெஞ்சில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்று கருதுகிறேன். எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும்.

வழக்கமாக, அப்பீல் மனுக்கள் மீது சட்டத்துறை செயலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த வழக்கு, ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால், கர்நாடக முதல்வர், ஒட்டுமொத்த அமைச்சரவை சம்மதத்துடன் இம்முடிவை எடுத்துள்ளார். இந்த கூட்டு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடந்துள்ளது.

காங்கிரசில் ஒரு கோஷ்டி, மேல்முறையீடு வேண்டாம் என்று கூறிவந்தாலும், மற்றொரு கோஷ்டி மேல்முறையீட்டுக்கு ஆர்வம் காண்பித்தது. எனக்கே காங்கிரசிலிருந்து சிலர் கடிதம் எழுதி, உங்கள் முயற்சி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இறுதியில் சட்டப்படியே மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள ஏகப்பட்ட தவறுகளை அடிப்படையாக வைத்து, மேல்முறையீட்டின்போது வாதம் செய்யப்படும். அக்னிகோத்ரி வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்துக்கு குறைவாக சொத்து இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், அது ஒன்றும் கணக்கீடு அல்லது அறிவியல் பார்முலா கிடையாது. எல்லாவற்றிலும் அதை அப்ளை செய்யவும் முடியாது.

உதாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வைத்துள்ள ஒருவர், 900 கோடிகளை வருவாய்க்கு அதிகமாக சேர்த்தாலும், அது 10 சதவீதத்துக்கு குறைவாகத்தான் வருகிறது. இதற்காக 900 கோடி ரூபாயை சுருட்டியவரை விடுதலை செய்துவிட முடியுமா? 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான வித்தியாசமாக இருந்தால், பரவாயில்லை என்று சொல்லலாம். இதையெல்லாம், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வாதிடுவோம்.

மேல்முறையீடு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. 18 வருடங்களாக நடந்த வழக்கு, ஹைகோர்ட்டில் நான்கே மாதங்களில் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படி நடைபெறும் என்று தெரியாது. ஆனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sat Jun 06, 2015 1:01 am

ஜெயலலிதா வழக்கு அப்பீல் அரசு வழக்கறிஞராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஐகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.அதற்கான அரசாணை, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக தரப்பு திட்டமிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Sat Jun 06, 2015 1:02 am

ஜெயலலிதா வழக்கை நடத்த செலவிட்ட ரூ.5.11 கோடியை தமிழக அரசிடம் வசூலிப்போம் --கர்நாடக அரசு

பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பெங்களூரு தனிக்கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த மேல் முறையீட்டு விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

மேலும் கர்நாடக அரசு தரப்பு வாதமும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இந்த வழக்கை நடத்துவதற்கு கர்நாடக சட்டத்துறை சார்பில் ரூ.5.11 கோடி வரை செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. அதுபோல, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவு விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு உள்ளேன். அதுபற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செலவு தொகையையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம்.

மேலும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு ஆகும் முழு செலவையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம். இந்த வழக்கிற்கு ஆகும் செலவை தமிழக அரசிடம் இருந்து பெற்று கொள்ளும்படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.”

இவ்வாறு மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்--அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.18.9.1996-ந் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

19.11.1999-ந் தேதி தொடங்கிய விசாரணை 18.7.2001-ந் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர்(ஜெயலலிதா) முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ந் தேதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Wed Jun 24, 2015 1:36 am

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: கர்நாடக அரசின் 'விடுமுறை கால' வியூகம்!

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா சிறப்பு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுமார் 2700 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

மனுவில் இருப்பது என்ன?

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் அப்பட்டமான கணிதப் பிழைகள் உள்ளன. இந்த வழக்கில் கர்நாடக அரசை சிறப்பு நீதிமன்றம் ஒரு வாதியாகக் கூட கருதவில்லை.

பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்:

'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.

கடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக் கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.

மேலும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.

அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்ட முடியாது

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.

ஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை கால அமர்வு முன்பு ஏன்?

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மிக மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'தி இந்து'வுக்கு நேற்று பேட்டியளித்த கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா இன்றைக்கு மேல்முறையீடு செய்வதாக தெரிவிக்கவில்லை.

இது குறித்து கர்நாடக நீதிமன்ற வட்டாரம் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் அடுத்த வாரத்துடன் முடிந்து நீதிமன்ற‌ அலுவல்கள் தொடங்க இருக்கின்றன. இந்த விடுமுறை கால அமர்வுக்கு மதன் பி லோகூர் நீதிபதியாக இருக்கிறார். அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்பு வழங்கியவர்.

எனவேதான், கோடை விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாக‌ கர்நாடக அரசு சார்பாக ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தது.

மேலும், ஜூலை முதல் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா on Wed Jun 24, 2015 1:38 am

ஜெ. வழக்கில் மேல்முறையீடு: விரைவாக விசாரிக்க ராமதாஸ் வேண்டுகோள்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், '’வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. சுமார் 2700 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் காணப்படும் குறைபாடுகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விரிவாக விளக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது தான் காந்தியடிகளின் கொள்கை. அதாவது எந்த ஒரு வழக்கிலும் நீதி வழுவாமல் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை ஆட்டம் காண வைத்த தீர்ப்பு ஆகும். எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்; அந்த ஊழலுக்காக தண்டிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில் விடுதலை ஆகி, விட்ட பணியை மீண்டும் தொடரலாம் என்ற தோற்றம் ஏற்படுவதற்கு இந்தத் தீர்ப்பு காரணமாகிவிட்டது.

இத்தீர்ப்பு திருத்தப்படாவிட்டால் இந்தியாவில் ஊழல் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும். இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள குளறுபடிகளை விளக்கி, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்படி கர்நாடக முதலமைச்சருக்கும், சட்டத்துறை உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினேன். அதையேற்று இத்தீர்ப்பை திருத்துவதற்காக மேல்முறையீடு என்ற முதல் அடியை கர்நாடகா எடுத்துவைத்திருப்பது பாராட்டத்தக்கது.

தவறாக அளிக்கப்பட்டத் தீர்ப்பின் பயனாக ஒருவர் மீண்டும் முதலமைச்சராகி, ஊழல்களையும், முறைகேடுகளையும் அரங்கேற்றுவதை அனுமதிப்பது பெரும் அநீதி ஆகும். அந்த அநீதி தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு விட்டது. இந்த அநீதியை எவ்வளவு விரைவாக களைய முடியுமோ அவ்வளவு விரைவாக களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சாதகமானத் தீர்ப்பை பெற்று விட்ட நிலையில், இவ்வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் இழுத்தடித்ததைப் போலவே, உச்சநீதிமன்றத்திலும் இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பில் நிச்சயமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிகள் முறியடிக்கப்படுவதை பொறுத்து தான் இவ்வழக்கில் நீதி நிலை நாட்டப்படும்.

எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை ஒரு குறிப்பிட்ட காலவரையரைக்குள் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கர்நாடக அரசு முறையிட வேண்டும். ஒருவேளை விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jun 24, 2015 1:46 pm

நீதி நிலைக்கட்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum