ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

View previous topic View next topic Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Wed Apr 29, 2015 4:23 amடோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை.

இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடோடோ, பாலி நைன் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஜனவரி மாதம் அவர் பாலி நைன் குறித்து கூறுகையில், “போதைப் பொருட்களால் இந்தோனேசியாவில் நாள் ஒன்று 50 பேர் இறக்கின்றனர். ஆகவே, போதைப் பொருள் கும்பலுக்காக என்னிடம் கருணை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

அவர் கூறியது போலவே கடைசி வரை அவரிடம் கருணை பிறக்கவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டு காலமாக நீடித்து வந்த அவர்களின் உயிர் போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னாள் முடிந்து போயின.
மரண தண்டனைக்குரிய குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் மரண தண்டனையின் மூலம் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கான அளவு கோல்கள், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்க முடியாது.

மனிதர்களால் மீட்டுக் கொடுக்க முடியாத உயிரை, சட்ட விரோதமாக பறித்தாலும் சரி, சட்ட ரீதியாக பறித்தாலும் சரி, அது கொலைக்குச் சமமானதே என பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Wed Apr 29, 2015 4:24 am

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் விபரம்!

ஆஸ்திரேலியா வாழ் தமிழர் மயூரன் சுகுமாறன்,
ஆஸ்திரேலியா வாழ் சீனர் ஆன்ட்ரூ சான்,
நைஜீரியாவின் ஜாமையூ ஔலாபி,
நைஜீரியாவின் மார்ட்டின் ஆண்டர்சன்,
பிரேசில் நாட்டைச் சார்ந்த ரோட்ரிகோ குலார்ட்,
நைஜீரியாவின் சில்வெஸ்டர் ஓபியெக்வெய்,
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த செர்க்ஜி அட்லோயி,
இந்தோனேஷியாவின் சைனல் ஆப்தீன்,
நைஜீரியாவின் ஆக்குவாடிலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by M.M.SENTHIL on Wed Apr 29, 2015 11:57 am

கருணை காட்டி இருக்கலாம், தண்டனையை ஆயுள் தண்டனையாக கூட செய்திருக்கலாம்... ஆனால் துப்பாக்கியால் சுட்டு..... பாவம்.

அதேபோல், நாள் ஒன்றுக்கு ஐம்பது பேர் இறக்கிறார்கள் என்ற வாதத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கு மற்றவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்கி வருவதும் தவறானதே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by mbalasaravanan on Wed Apr 29, 2015 12:00 pm

அந்த பொண்ண ஏன் என்ன? விட்டுடாங்க
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by M.M.SENTHIL on Wed Apr 29, 2015 12:01 pm

@mbalasaravanan wrote:அந்த பொண்ண என் விட்டுடாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1133739

பெண் என்றால் பேயும் இறக்கம் காட்டுமாம், அதுபோல ஜோக்கோ விடோடோ இருந்திருப்பாரோ


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by mbalasaravanan on Wed Apr 29, 2015 12:48 pm

@M.M.SENTHIL wrote:
@mbalasaravanan wrote:அந்த பொண்ண என் விட்டுடாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1133739

பெண் என்றால் பேயும் இறக்கம் காட்டுமாம், அதுபோல ஜோக்கோ விடோடோ இருந்திருப்பாரோ
மேற்கோள் செய்த பதிவு: 1133740
அப்ப ஆண்கள் செய்தல் தண்டனை பெண்கள் செய்தால் மன்னிப்பா என்ன கொடுமை இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by ayyasamy ram on Wed Apr 29, 2015 1:03 pm

பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன்,
அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,
ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான
தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது
-
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை
அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள்
கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா
கட்டாயம் சந்திக்கும்.
இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன்
நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Wed Apr 29, 2015 4:23 pm

மயூரன் சுகுமாறனின் இறுதி வார்த்தைகள்...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாறனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்தோனேசிய 'நீதி'!(?). தண்டனை நிறைவேற்றப்படுவதற்குமுன் மயூரனை சந்தித்துப் பேசிய தர்மிணி மணி (மயூரனின் உறவினர்), அவருடைய கடைசி வார்த்தைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"நான் மயூரனிடம் பேசியபோது, அவர் பார்க்க விரும்பும் புதிய அவென்ஜர்ஸ், பேட்மேன் Vs சூப்பர்மேன், ஸ்டார் வார்ஸ் 7, சனிக்கிழமை அன்று நடக்க இருக்கும் மேவெதர் Vs பேக்கியோ குத்துச்சண்டை ஆகியவற்றை பார்க்க முடியாதே என்று வருந்தினார். அவர் அப்படிச் சொல்லும்போது என் அம்மாவுக்கும், அத்தைக்கும் கண்ணீர் வழிந்தது. ஆனால், மயூரன் ஜோக் அடித்துக் கொண்டு அவர்களைத் தேற்றிக் கொண்டே இருந்தார். மயூரன் அப்படித்தான். சுற்றியிருப்பவர்களுக்காக தன்னைப் பற்றி சிந்திக்காமல் இருப்பார்.

என் கையையும், என் சகோதரி கையையும் பிடித்துக்கொண்டு, 'வாழ்க்கையில் யாரும் காலையில் எழும்போதே வெற்றியுடன் எழுவதில்லை. சின்ன சின்ன வெற்றிகள் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும். இதற்காக வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய உழைப்பை இந்த உலகம் கவனிக்காது. தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள்.


தனது சகோதரியுடன் சிறு வயதில் மயூரன்


வாழ்க்கையில், என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது. யாரையும் 'முடியாது' என்று சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை, பாசிட்டிவ் எண்ணங்களாக மாற்றுங்கள்' என்று மயூரன் கூறினார்.

இனி தனக்கு தேவைப்படாது என்று கூறிவிட்டு , மயூரன் தன்னிடம் இருந்த சாக்லெட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொன்னார். அங்கே 2 நாட்களுக்கு முன்பு திருமணமான ஆண்ட்ரூ சான்(தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது), கல்யாணக் களையில் சிரித்துக்கொண்டிருந்தார்.

மயூரனுடன் பிரார்த்தனை செய்தபோது மயூரன், ஆண்ட்ரூ உடன் கடவுள் எப்போதும் இருக்கிறார் என சொல்லிக்கொண்டே இருந்தேன். இத்தனைக்கும்பிறகு, இதுதான் எனக்குத் தோன்றுகிறது!" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Wed Apr 29, 2015 4:26 pm

இந்தோனேசியாவிற்கான தூதரை மீட்டுக்கொண்டது ஆஸ்திரேலியா!பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது தொடர்பான அறிவிப்பினை ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்தோனேசியாவின் சட்ட முறைகளை ஆஸ்திரேலியா மதிக்கின்றது. நாங்கள் அவர்களின் இறையாண்மையை மரியாதை செய்கின்றோம். ஆனால் நடைபெற்ற சம்பவம் எங்களை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனை எங்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த சில மணிநேரங்களில் நடந்து முடிந்த சம்பவம், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமான நல்லுறவை கடுமையாக பாதித்துள்ளது. இது இரு நாட்டு உறவில் கருப்பு நாள்”

“மரண தண்டனை பற்றியும், போதைப்பொருள் குற்றங்கள் பற்றியும் மக்கள் பலவாறாக நினைக்கலாம். ஆனா, இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினரின் வலி யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆஸ்திரேலியர்களின் பிரார்த்தனையும் அவர்களுக்காக என்றும் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா கட்டாயம் சந்திக்கும். இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன் இன்று நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Wed Apr 29, 2015 4:28 pm

பாலி 9 மரண தண்டனை: “இது போதைக்கு எதிரான போர்” – இந்தோனேசியா கூறுகின்றது!சிலகாப், ஏப்ரல் 29 – போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், ஒரு இந்தோனேசியர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசிய சட்டத்துறை தலைவர், தங்கள் நாடு தற்போது போதைக்கு எதிராக போர் புரிந்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

நூசா கம்பாங்கன் தீவின் சிலாகாப் துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்தோனேசிய சட்டத்துறை தலைவர் முகமட் ப்ராசெட்யோ,”மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த போதைக் குற்றங்களிலிருந்து எங்கள் நாடு மீண்டு வர நாங்கள் போதைக்கு எதிராக போர் தொடுத்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த மரண தண்டனை ஒரு இனிமையான விசயம் கிடையாது. அதே நேரத்தில் இது ஒரு விளையாட்டு வேலையும் கிடையாது. அதனால் நாங்கள் எங்கள் நாட்டை போதையில் இருந்து மீட்க அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். வெளிநாட்டுக் குற்றவாளிகளை கொல்வதன் மூலம் அவர்களின் நாடுகளைப் பகைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் போதை தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றோம் ” என்றும் முகமட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரண தண்டனையின் எதிரொலியாக ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்துள்ள அவர், “அது தற்காலிகமான ஒரு எதிர்வினை” என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Wed Apr 29, 2015 4:29 pm

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு துடிதுடித்த குடும்பத்தினர்!

நேற்று நள்ளிரவில் ‘பாலி 9′ வழக்கில் ஆஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரு சான் உட்பட 8 பேருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றிய போது துப்பாக்கிச் சத்தத்தை அவர்களின் குடும்பத்தினரும் கேட்கும் துரதிருஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

நூஸா கம்பாங்கன் தீவில் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு எதிர் திசையில் வெகு தொலைவில் குடும்பத்தினர்கள் காத்திருக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அவர்களால் அந்த துப்பாக்கிச் சத்தத்தை கேட்க முடிந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் குடும்பத்தினர்கள் தங்கள் அன்பு உறவுகள் சுடப்படுவதைக் கேட்டு துடிதுடித்துப் போனதாகவும் அங்கிருந்த ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களில் மயூரன் சுகுமாறனின் குடும்பம், இந்தோனேசியரான சைனல் அபிடின் குடும்பம் மற்றும் நைஜீரியர்களின் குடும்பம் ஆகியோர் கூடாரங்களில் காத்திருக்காமல் சிலகாப் பகுதியில் இருந்த தங்கும்விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

தங்களுக்கு ஏற்பட்ட இந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கு ஏற்படக் கூடாது என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் கதறி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் கருணை காட்டாத இந்த செயலுக்கு ஆஸ்திரேலியா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Fri May 01, 2015 10:28 pm

இந்தோனேசியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரேசில் கைதிக்கு கடைசி நிமிடம் வரை எதுவும் தெரியாது பாதிரியார் உருக்கமான தகவல்கள்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற (இலங்கை தமிழர்) மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான், பிரேசில் நாட்டின் ரோட்ரிகோ குலார்ட்டே ஆகிய 3 பேரது மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கு ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அவர்கள் மேலும் 5 பேருடன் சேர்ந்து கடந்த 28–ந் தேதி நள்ளிரவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களில் ரோட்ரிகோ குலார்ட்டேவுக்கு கடைசி நிமிடம்வரை என்ன நடப்பது என்றே தெரியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவர் ‘சிஜோப்ரேனியா’ என்ற மூளைக்கோளாறு நோயாலும், ‘பைபோலார் டிஸார்டர்’ என்னும் மனநல கோளாறு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

அவருடன் கடைசி நிமிடங்களில் இருந்த பாதிரியார் சார்லி பர்ரோஸ் இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘குலார்ட்டே கைகளில் சிறை வார்டன்கள் விலங்கு போடுகிறவரை அவர் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் சிறைக்கு வெளியே போலீசாரிடம் ஒப்படைத்து அவரது காலில் சங்கிலி போடப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சுட்டுக்கொல்லப்போவதை அவருக்கு நோட்டீசு மூலம் தெரியப்படுத்தி இருப்பார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் என்னிடம், ‘ பாதர், என்னை சுட்டுக்கொல்லப்போகிறார்களா?’ என கேட்டார். எனவே அவருக்கு கடைசி நிமிடம் வரை அவரை சுட்டுக்கொல்லப்போவது தெரிய வில்லை’’ என்று உருக்கமுடன் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Fri May 01, 2015 10:32 pm

மயூரன் சுகுமாறன் கடைசி தருணங்கள்!மயூரன் சுகுமாறன் கொண்டாடிய கடைசி பிறந்த நாள் அது. சுட்டுக் கொல்லும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நுஸ்கம்பகங்கன் சிறையில் தனது கடைசி 34 வயது பிறந்த நாளை கடந்த 17-ம் தேதி கொண்டாடியிருக்கிறார் மயூரன். இப்போது அந்த படங்கள் இந்தோனேஷிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

அன்றைய தினத்தில் ஆன்ட்ரூ சானின் தம்பியும், மயூரனின் நண்பர்கள் சிலரும் நுஸ்கம்பகங்கனின் பெஸ்ஸி சிறைக்கு, பிளாக் பாரஸ்ட் கேக்கோடு சென்று மயூரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி பரிசுகளையும் அளித்திருக்கிறார்கள். தனது இறுதி பிறந்த நாள் விழா, தன் அம்மாவுக்கு மிகப்பெரிய கவலை நாளாக மாறி விடும் என்பதால் அவர்களை வர அனுமதிக்கவில்லை மயூரன்.

அம்மாவும், தம்பியும், தங்கையும் வர விரும்பியபோதும் மயூரன் அதற்கு மறுத்திருக்கிறார். 'அம்மாவை ரொம்ப சிரமப்படுத்தி விட்டேன்!' என்று தனக்கு நேரப்போகும் மரணத்தை விட அம்மாவையும் தம்பி, தங்கைகளையும் பற்றிய கவலைகளே மயூரனுக்கு அதிகம் இருந்திருகிறது.

தனது எஞ்சிய நாட்களை ஓவியம் வரைவதில் செலவிட்ட மயூரன், தனது மரணத்திற்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘’வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன். சிறை மிகப்பெரிய அளவில் என்னை மாற்றி விட்டது. நான் புதிதாக ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என அவர் தனது வெளிப்படுத்தியபோதிலும், இந்தோனேஷிய சட்டங்களும், மூர்க்கத்தனமான இதயமற்ற அரசு இயந்திரமும் அதற்கு அனுமதிக்காது என்பதையுமே தெரிந்து வைத்திருந்தார் மயூரன்.

ஏப்.29 - புதன்கிழமை அதிகாலை, மரணதண்டனை நிறைவேற்ற இருந்த 8 பேரையும் அவர்களின் கொட்டடியில் இருந்து அழைத்து வந்தபோது முதன் முதலாக அழைத்து வரப்பட்டவர் மயூரன்தான். காரணம், மன ரீதியாக அதை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார் மயூரன். அழைத்து வரப்பட்டவர்கள் சுமார் 90 நிமிடங்கள் இறையிலாளர்களுடன் உரையாடினார்கள். பின்னர் அனைவரும் இணைந்து ஒரு தேவாலயப்பாடலைப் பாடினார்கள். பின்னர் மயூரன் சுகுமாறனும், ஆன்ட்ரூ சானும் ஒரு வண்டியிலும், மற்றவர்கள் வேறு வாகனங்களிலுமாக 6 வாகனங்களில் சுட்டுக்கொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

மயூரன் சுகுமாறனுக்கும், ஆன்ட்ரூ சானுக்கும் வெள்ளை ஆடை அணிந்த போது தலையை மறைக்க கருப்புத் துணி அணிய வேண்டாம் என நிராகரித்து விட்டார்களாம். வரிசையாக சிலுவை வடிவிலான மரக்கம்பத்தில் பின்னங்கைகள் கட்டப்பட்டு, சுடப்பட்டு மூன்று நிமிடம் கழித்து மருத்துவர்கள் உறுதி செய்ய, அவர்கள் மரணித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

9 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் மேரி ஜேன் பியஸ்டா வெலோசோ (Mary Jane Fiesta Veloso) என்ற 30 வயது பிலிப்பைன் பெண்ணுக்கு மட்டும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. வறுமை நிலையில் தந்திரமாக போதை மருந்து கடத்தலில் சிக்க வைக்கப்பட்ட கதையை பல முறை அவர் கூறிய போதும் அதை செவிமடுக்க எவரும் இல்லை. தன்னை இந்தோனேஷியாவுக்கு அனுப்பி வைத்ததாக ஜேன் சொன்ன மரிய கிறிஸ்டினா செர்ஜியோ (Maria Kristina Sergio) புதன்கிழமை இந்தோனேஷிய போலீசாரிடம் சரணடைந்தார்.

''ஜேன் குற்றமற்றவர்தான். அவரை ஏமாற்றி போதை பொருளை கடத்தும்படி ஏற்பாடு செய்தேன்” என்று வாக்குமூலம் கொடுக்க, அவரை கைது செய்த போலீசார், மூன்றாவது முறையாக ஜேன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மறு விசாரணைக்காக மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட மயூரன், ஆன்ட்ரூவின் உடல்கள் வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா வந்து சேரும். அப்போது பெருந்திரளான மக்களும் பாடகர்களும், ஓவியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அவர்களுக்காக அஞ்சலி நிகழ்வு ஒன்றை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

தனது கோரிக்கைகளையும் மீறி இந்தோனேஷியா தண்டையை நிறைவேற்றியதால், தங்கள் நாட்டு தூதரை திரும்ப பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. ஆனால், மொத்தமாக 'பாலி 9' வழக்கில் அத்தனை பேரும் கைது செய்யப்படவும், இருவர் மரணதண்டனை பெறவும் காரணமே ஆஸ்திரேலியாதான். மயூரன் சுகுமாறன் குழுவினர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் போதை பொருள் கடத்துகிறார்கள் என்ற தகவல் கிடைக்க, அந்த தகவலை எது பற்றியும் யோசிக்காமல் இந்தோனேஷியாவுக்குச் சொன்னது ஆஸ்திரேலிய அரசுதான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Fri May 01, 2015 10:47 pm

ஆஸ்திரேலிய அருங்காட்சியத்தில் இருந்து இந்தோனேஷிய அதிபரின் புகைப்படம் நீக்கம்

இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் உள்பட 8 பேரின் மரண தண்டனையை ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் தேசிய புகைப்பட அருங்காட்சியகம் உள்ளது. இதில் உள்நாடு மற்றும் சர்வதேச தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவின் புகைப்படமும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், நாடு முழுவதும் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் இந்த புகைப்படத்தை அருங்காட்சியக நிர்வாகம் அகற்றி விட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற கலைப்பொருட்கள் மற்றும் அங்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இந்த புகைப்படத்தை எடுத்து விட்டதாக அருங்காட்சியக இயக்குனர் அங்குஸ் ட்ரம்பிள் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா on Mon May 04, 2015 3:28 pm

பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!பாலி நைன் குற்றவாளிகளைத் தொடர்ந்து பிரிட்டனைச் சேர்ந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (58) என்ற பெண்மணிக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பாக லிண்ட்சே தனது குடும்பத்தாருக்கு எழுதி உள்ள இறுதிக் கடிதங்கள் குறித்தும், அவரது தண்டனைக் காலம் குறித்தும் பிரிட்டிஷ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், லிண்ட்சே பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு எழுதி உள்ள கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“பாலி நைன் வரிசையில் எனக்கும் எந்நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம். நான் எனது குடும்பத்தாருக்கு இறுதிக் கடிதங்களை எழுதத் தொடங்கி விட்டேன். பாலி நைன் வழக்கில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான ஆண்ட்ரு சானும், மயூரனும் சிறையில் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள். ஆண்ட்ரு சான் நான் பெரியதாக மதிக்கும் மனிதர்களில் ஒருவர். அவர்களின் மறைவு மிகுந்த வேதனை தருகிறது.”

“அதேபோல், எனது இரண்டு வயது பேத்தியை பார்க்க முடியாமல் இருப்பது வலி மிகுந்ததாக உள்ளது”என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு தாய்லாந்திலிருந்து, பாலி திரும்பிய லிண்ட்சே, 1.6 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம், கடந்த 2013-ம் ஆண்டு மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது. இவருடைய கருணை மனுவையும் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 04, 2015 7:51 pm

சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5302
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum