ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

View previous topic View next topic Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா on Tue Apr 28, 2015 1:04 am

இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளை புரட்டிப்போட்டது.

வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாயின. மேலும் சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டு வெறுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவை நேபாளம் சந்தித்து உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டினர், சுற்றுலாப்பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரை விட்டனர்.

மாலை வரை 3 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தூதரக அதிகாரியின் மகள் உள்பட 5 இந்தியர்களும் இந்த பூகம்பத்துக்கு பலியாயினர். இன்னும் பல்வேறு பகுதிகளில் கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டியுள்ளதால், இந்த பூகம்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கு திரும்பினாலும் பிணங்களும், மக்களின் அழுகுரலாகவுமே உள்ளது. அத்துடன் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் ஒருவித குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது. அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்து வருவதால் இடிந்து விழாமல் இருக்கும் வீடுகளிலும் மக்கள் குடியிருக்க அஞ்சுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெட்டவெளி கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தேசிய பேரிடரை சந்தித்துள்ள நேபாளத்துக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக பூகம்ப மீட்புப்பணிகளுக்காக உடனடியாக களத்தில் குதித்த இந்தியா, ராணுவம் மற்றும் விமானப்படையை அனுப்பி நேசக்கரம் நீட்டியுள்ளது.

இதற்காக இந்திய விமானப்படையின் 13 போர் விமானங்கள், 3 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள், 2 இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட சுமார் 25 விமானங்கள் அங்கு மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த சுமார் 1000 பேரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 டன் போர்வைகள், 50 டன் தண்ணீர் பாட்டில்கள், 22 டன் உணவு பொருட்கள் மற்றும் 2 டன் மருந்துகளை மத்திய அரசு காட்மாண்டுக்கு அனுப்பி வைத்தது. மேலும் ராணுவ மருத்துவர்கள் உள்பட பல்வேறு மருத்துவக்குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. இந்திய மீட்புக்குழுவினர் பூகம்பம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாலை வரை சுமார் 2500 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பூகம்ப மீட்புப்பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்வதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சக குழு ஒன்று காட்மாண்டு போய் சேர்ந்தது. பி.கே.பிரசாத் தலைமையிலான இந்த குழுவினர், நேபாள அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து நடத்துவர். நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உதவ ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதாக எம்.பி.க்கள் அறிவித்தனர்.

நேபாளத்தில் இந்தியா மிகப்பெரிய மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், பக்கத்து நாடான நேபாளத்தில் இந்தியா மிகப்பெரிய மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுவரை தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 6 குழுவினர் காட்மாண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். பொறியாளர் நிபுணர் குழு மற்றும் 18 மருத்துவ குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆகாயமார்க்கத்தில் கண்காணித்து தகவல் அனுப்ப ஆளில்லாமல் இயங்கும் வாகனம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தலைமையில் சக்திவாய்ந்த 250 உயர்தர வயர்லஸ் சாதனங்களுடன் அனைத்து அமைச்சக குழுவினர் நேபாளம் சென்று உள்ளனர். இதேபோல் அந்த நாட்டில் தகவல் தொலைத் தொடர்பு முறை சீரமைக்கவும் நிபுணர்கள் குழுவினர் விரைந்துள்ளனர்.

நேபாள நிலநடுக்கம் மிகப்பெரிய துயரமாகும். நெருக்கடியான தருணத்தில் இருக்கும் நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். நேபாள எல்லையோர பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் நிவாரண முகாம்களை அமைத்து இருப்பதும் நில நடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்காக பஸ்களை இயக்குவதும் பாராட்டுக்குரியது.

நேபாளத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் நாம் உதவி வருகிறோம். அவர்கள் இந்தியாவர விரும்பினால் இலவச விசா வழங்கப்படும். இதுவரை 22 டன் உணவு மற்றும் 2 டன் மருந்து பொருட்கள், 50 டன் குடிநீர், அதிக அளவில் போர்வைகள், இதர நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. என்றார்.

இந்திய மோப்ப நாய்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் குவியல், குவியலாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கும் மேலாகி உள்ளதால், இந்த இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை விரைவில் மீட்க வேண்டியுள்ளது. எனவே இந்த பணிகளுக்காக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ஏற்கனவே அனுப்பிவைத்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் மோப்ப நாய்களும் இடம் பெற்றுள்ளது.

இதைப்போல பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 6 மோப்ப நாய்களுடன், 15 அதிகாரிகள் நேபாளம் போய் சேர்ந்தனர். கோல்டன் ரெட்ரீவர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த இந்த மோப்ப நாய்கள், இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருந்தால் மிக துல்லியமாக கண்டறிந்து அடையாளம் காட்டும் திறன் வாய்ந்தவை ஆகும். இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை கண்டறிதல் மற்றும் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகளில் இந்த மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக வலைதளம் மூலம் விரைவாக தகவல்

நேபாளத்தில் மீட்புப் பணிகளின் நிலவரத்தை உடனடியாக தெரிவிக்க இந்திய அரசு டுவிட்டர் இணைய தளத்தை பயன்படுத்தி வருகிறது.

நேபாளத்தின் மீட்பு பணியின் நிலவரம் என்ன?, அங்கிருந்து இந்தியர்கள் மீட்கப்படுவது குறித்தும் மத்திய அரசு டுவிட்டர் பக்கங்களில் செய்தியை வெளியிட்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை, தூதரகம் உள்பட அனைத்து முக்கிய நிர்வாகமும் டுவிட்டரில் அவ்வபோது செய்திகளை வெளியிட்டு வருகிறது.

டுவிட்டர் பகுதி மூலம் மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது. https://twitter.com/SpokespersonMoD, https://twitter.com/SushmaSwaraj, https://twitter.com/PIB_India - இந்த மூன்று ட்விட்டர் பக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் டுவிட் செய்தியால் சிக்கிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கையை ஊட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள நேபாள மீட்புக் குழுவினருக்கும் தங்களுக்கு வரும் உதவிகளை தெரிந்து மீட்ப்புப் பணிகளை திட்டமிட முடியும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்திலும், கன்ட்ரோல் அறைகளின் தொடர்பு எண்களை பட்டியிலிடுவதில் தொடங்கி, அனைத்து தகவல்களை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பேரழிவு நிலநடுக்கத்தில் சிக்கிஉள்ள நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் இந்தியா உலகிற்கே முன்உதராணம் ஆகி உள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச மாநாடுகளில் உதிர்க்கும் நல்லெண்ண அறிவிப்புக்கு, செயல்மூலம் இந்தியா, நல்லெண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்து உள்ளது.

ஏர்-இந்தியா

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனமும் நேபாளத்தில் இருந்து மக்களை அழைத்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. காட்மாண்டு மார்க்கத்திற்கான கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது.

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரை மீட்பதற்காக காட்மாண்டிலிருந்து பிற நகரங்களுக்கும், பிற நகரங்களிலிருந்து காத்மாண்டுக்கும் கூடுதல் விமானம் இயக்கவும் ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப்படை

உதவிகரம் காட்டுவதில் உலகநாடுகளை இந்திய விமானப்படை ஈர்த்து உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஈராக்கில் இருந்து இந்தியர்களை மீட்பதில் இருந்து அனைத்து நடவடிக்கையிலும் வெற்றி பதித்த இந்திய விமானப்படை உலக நாடுகளை வியக்க செய்தது.

உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்த ஏமனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் இந்திய விமானப்படையும், கடற்படையும் கவனமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்தவர்களையும் மீட்டு முத்திரை பதித்தது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் நடவடிக்கையை பார்த்து ஏமனில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் அதற்கு ஏற்றால்போல் உதவிகளை செய்தது.

அண்டைய நாடான நேபாளத்தில் பேரழிவு நிலநடுக்கம் என்றதுமே உடனடியாக ஓடி சென்றது இந்தியா. நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் என்றதுமே பாரத பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்ற அறிவிப்பை ட்விட்டரில் தெரிவித்தார். உலக நாடுகளில் முதலில் உதவிக்கரத்தை நீட்டியது இந்தியாதான். நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்புப் பணியில் இந்திய விமானப்படை முழு வீச்சில் இறங்கியது.

'ஆபரேஷன் மைத்ரி' என்று பெயரிடப்பட்ட மீட்பு நடவடிக்கை கடுமையான சவால்களுக்கு இடையே நடந்து வருகிறது. இமாலயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் புவியியல் ரீதியில் மீட்புப் பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது. மழையும் பெய்து வருகிறது. இயற்கைக்கு சவால்விடும் வகையில் இந்திய விமானப்படை தனது பணியினை இதுவரையில் செய்து வருகிறது. இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேபாளத்தின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பேரழிவில் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தின் கண்ணீரை இந்தியா உதவிகரம் நீட்டி துடைத்து வருகிறது. தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. அதற்கான பணிகளில் எல்லையோர மாநிலங்களும் இறங்கி உள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது.

பேரிடர் நாடுகளை சூழும் போது எல்லாம் வளர்ந்த நாடுகளே முதலில் வந்து நிவாரணப் பொருட்களையும், மீட்புக் குழுவினரையும் அனுப்பும். இதேபோல் மருத்துவ உதவிகளை செய்வதில் செஞ்சிலுவை சங்கமே நம் நினைவுக்கு வரும். ஆனால் அண்மைக்காலமாக போர் பாதித்த பகுதிகளிலும், பேரிடர் ஏற்பட்ட இடங்களிலும் இந்தியா குறிப்பாக இந்திய விமானப் படையின் பேராற்றல் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ஸ்பெயின் கோரிக்கை

பேரழிவு நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தில் இருந்து தங்களது நாட்டு மக்களை காப்பாற்று மாறு ஸ்பெயின் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

பிரதமர் மோடியிடம் பேசிய ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி, நேபாளத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டவர்களை மீட்க இந்தியா உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது உலக நாடுகளின் மக்களையும் அங்கியிருந்து மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது, ஸ்பெயின் நாட்டவர்களையும் மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடிஉறுதி அளித்தார்.

இதற்கிடையே நேபாளத்தில் இருந்து வெளிநாட்டவர்களும் புதுடெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் கண்ணீர் மலங்க இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

இதற்கு முன்னர், எங்காவது பேரழிவு, இந்திய மக்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியத் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்துவிட்டு தனது தூக்கத்தைத் தொடர்வார்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட இந்தியா. உலகமே வியந்து பார்க்கும் இந்தியா. மோடி அரசின் இந்தச் செயல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்நாடுகளாகத் திகழும் சீனா, பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியாக இறங்கியிருக்கும் என்பதில் வியப்பில்லை.

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியா எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கலாம் என்ற நிலையில் கைகோர்த்து கைநடுக்கத்துடன் நிற்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளை மோடி அரசாங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. எனவே இன்னும் மூன்றாண்டுகளுக்கு இந்தியா எந்த நாட்டுடனும் போரில் இறங்காது, ஆனால் தனது பலத்தை இதுபோன்ற மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்வதன் மூலம் நிரூபித்து வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா on Tue Apr 28, 2015 1:05 am


நேபாளத்தின் திரிசுலி பஜாரில் நிலநடுக்கத்தில் காயம் அடைந்த பெண்ணை இந்திய ராணுவ வீரர்கள் காட்மாண்டு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் காட்சி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா on Tue Apr 28, 2015 1:06 am


காட்மாண்டுவில் காயம் அடைந்தவர்களை இந்திய விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் காட்சி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா on Tue Apr 28, 2015 1:06 am


பேரழிவு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தில் இருந்து இந்தியர்களை மீட்பு இந்தியாவிற்கு விமானப்படை விமானம் அழைத்து வரும் காட்சி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by ராஜா on Tue Apr 28, 2015 11:13 am

@சிவா wrote:
இதற்கு முன்னர், எங்காவது பேரழிவு, இந்திய மக்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியத் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்துவிட்டு தனது தூக்கத்தைத் தொடர்வார்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட இந்தியா. உலகமே வியந்து பார்க்கும் இந்தியா. மோடி அரசின் இந்தச் செயல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்நாடுகளாகத் திகழும் சீனா, பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியாக இறங்கியிருக்கும் என்பதில் வியப்பில்லை.

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியா எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கலாம் என்ற நிலையில் கைகோர்த்து கைநடுக்கத்துடன் நிற்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளை மோடி அரசாங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. எனவே இன்னும் மூன்றாண்டுகளுக்கு இந்தியா எந்த நாட்டுடனும் போரில் இறங்காது, ஆனால் தனது பலத்தை இதுபோன்ற மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்வதன் மூலம் நிரூபித்து வருகிறது.


100% உண்மை தல ...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சரவணன் on Tue Apr 28, 2015 4:46 pm

இந்தியா இந்தியா தான்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா on Tue Apr 28, 2015 6:34 pm

@ராஜா wrote:
@சிவா wrote:
இதற்கு முன்னர், எங்காவது பேரழிவு, இந்திய மக்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியத் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்துவிட்டு தனது தூக்கத்தைத் தொடர்வார்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட இந்தியா. உலகமே வியந்து பார்க்கும் இந்தியா. மோடி அரசின் இந்தச் செயல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்நாடுகளாகத் திகழும் சீனா, பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியாக இறங்கியிருக்கும் என்பதில் வியப்பில்லை.

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியா எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கலாம் என்ற நிலையில் கைகோர்த்து கைநடுக்கத்துடன் நிற்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளை மோடி அரசாங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. எனவே இன்னும் மூன்றாண்டுகளுக்கு இந்தியா எந்த நாட்டுடனும் போரில் இறங்காது, ஆனால் தனது பலத்தை இதுபோன்ற மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்வதன் மூலம் நிரூபித்து வருகிறது.


100% உண்மை தல ...


இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி இந்தியாவில் இருந்தால் இந்தியாதான் உலகின் வல்லரசாகத் திகழும்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by M.M.SENTHIL on Tue Apr 28, 2015 6:45 pm

@சிவா wrote:

இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி இந்தியாவில் இருந்தால் இந்தியாதான் உலகின் வல்லரசாகத் திகழும்!

மேற்கோள் செய்த பதிவு: 1133634

இதில் சந்தேகமே இல்லை அண்ணா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum