ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 12:12 pm

First topic message reminder :புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by ayyasamy ram on Sat Apr 25, 2015 5:06 pm

தற்போதைய செய்தி
-

-
நேபாளத்தில் மிக பயங்கர நிலநடுக்கம்-
பலி எண்ணிக்கை 449 ஆக அதிகரிப்பு!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by T.N.Balasubramanian on Sat Apr 25, 2015 7:47 pm

சமீபத்திய தகவல் , 865 பேர் பலி .

சென்னையில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 35 பேர் பற்றிய தகவல் தெரியவில்லை .
உறவினர்கள் கலக்கம் .

சோதனை தான் -பாவம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22161
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 9:16 pm

நிலநடுக்க பாதிப்பு: இந்தியா மற்றும் நேபாளத்திற்கு உதவ முன்வந்துள்ள பாகிஸ்தான்

நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம் என இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அலுவலக அறிக்கையில், இந்தியா மற்றும் நேபாளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு பாகிஸ்தானின் அரசு மற்றும் மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்நேரத்தில் தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷெரீப், இரங்கல் தெரிவித்து உதவிட முன் வந்துள்ளதுடன், பாதிப்படைந்த இரு நாடுகளின் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு சேதம் குறித்து உறுதி செய்து மற்றும் நிவாரண உதவி குறித்த தேவையை அறிந்திடும்படி தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுமுள்ளார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இது போன்று பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்திடம் உதவியை உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் 700 பேரை பலி கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டாலும் அந்நாட்டில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 9:17 pm

அனைத்து உதவிகளையும் அளிக்க தயார்: நேபாள பிரதமருக்கு மோடி உறுதி

நேபாளத்தில் கடும் நிலநடுக்க பாதிப்பை அடுத்து அந்நாட்டிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா மற்றும் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவ் ஆகியோருக்கு உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள டுவிட்டர் செய்தியில், பாங்காக் நகரில் இருந்து காத்மண்டு நகருக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் சுஷில் கொய்ராலாவுடன் பேசியுள்ளேன். இந்த கடுமையான சூழலில் அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளை செய்வதற்கு உறுதி அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள நிலைமை மற்றும் நேபாளத்தை குறித்து தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வரும் மோடி, முதலில் யாதவ் உடன் பேசியுள்ளார். கொய்ராலா வெளிநாட்டில் இருந்ததை அடுத்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதன்பின் கொய்ராலா உடன் பேசிய மோடி, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பது குறித்து உறுதி அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

அதன் பாதிப்பால் நேபாள எல்லையை ஒட்டிய உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் நிலைமை குறித்த அறிக்கையையும் மோடி கேட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 9:41 pm

நேபாள நிலநடுக்கம்:பாதிக்கப்பட்டவர்களை கூகுள் உதவியுடன் தேடலாம்!


 நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடவும், தனிநபர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும் கூகுள் ‘பர்சன் ஃபைண்டர்’ (Person Finder) என்ற இணைய பயன்பாட்டை நிறுவி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்  personal finder என்ற இந்த தளத்திற்குச் சென்று ‘I have information about someone’ என்ற கட்டத்திற்குள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல், பயனர்கள் தங்கள் உறவினர்களை, இந்த தளத்தில் உள்ள ‘I am looking for someone’ என்ற கட்டத்திற்குள் தேட முடியும். திறன்பேசிகளின் பயன்பாடு அதிகம் உள்ள இந்த நவீன காலத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை இந்த தளத்தில் பதிவு செய்தால், மீட்புக் குழுவினர் அவர்களை மீட்பதற்கு பேருதவியாக இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by M.M.SENTHIL on Sat Apr 25, 2015 10:02 pm

இயற்கையின் அதி பயங்கர ஆட்டம்..

உயிர் துறந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

மக்கள் வெகு சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, நலமாய் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6151
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 10:30 pm

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது

நேபாளத்தை இன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.

ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதி நாதர் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sat Apr 25, 2015 10:56 pm

நேபாளத்தின் இமாலய பூகம்பம்: விஞ்ஞானத் தகவல்கள் கூறுவது என்ன?

இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பூகம்பம்தானா இது என்று ஆராயப்பட்டு வருகிறது.

இந்திய-யூரேசிய கண்டத் தட்டுகள் (டெக்டானிக் பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்குக் காரணமாகும் ஒரு முக்கிய ஃபால்ட் நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வரலாற்று சாட்சியங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பெரிய பூகம்பங்களுக்கு இந்த ஃபால்ட் பகுதி முக்கிய காரணமாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2013 மே மாதம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு நிலநடுக்க ஆய்வாளர் வினோத் குமார் கவுர் அளித்த பேட்டியில் "இந்த ஃபால்ட்டில் ஏகப்பட்ட ஆற்றல் சேர்ந்திருப்பதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. அதாவது ரிக்டர் அளவுகோலில் 8 என்று பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்திற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது. ஆனால் எப்போது என்றால் என்னால் கூற முடியாது. நாளையே இது ஏற்படும் என்று கூற முடியாது, ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்படும் அல்லது மேலும் காத்திருந்து இன்னும் ஆற்றல்களைச் சேமித்துக் கொண்டு சிறிது காலம் கழித்து பயங்கர பூகம்பமாக உருவெடுக்கலாம்” என்று அப்போதே கூறியிருந்தார்.

மேலும், டிசம்பர் 2012-இல் நேச்சர் ஜியோ சயன்ஸ் இதழில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமாலயத்தில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இமாலயத்தில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல பூகம்பங்கள் நிகழ்வதுண்டு.

உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில் 1255 மற்றும் 1934ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய பூகம்பங்கள் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1934-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக பூமி சுமார் 150கிமீ தூரம் வரை பிளவு கண்டது.

மேற்புறத்தை பிளவுறுத்தும் இத்தகைய நிலநடுக்கங்கள் தவிர "பிளைண்ட் த்ரஸ்ட்" என்று அழைக்கப்படும் கண்களுக்குப் புலப்படா பூகம்பங்களும் இமாலயத்தில் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இமாலயத்தில் சாத்தியமாகக்கூடிய மிகப்பெரிய பூகம்பங்களில் இது ஆரம்பமா, அல்லது முடிவா அல்லது இது தொடர்கதையா என்ற கேள்வி தற்போது ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Sun Apr 26, 2015 12:14 am

நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேபாள மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் நான் அவர்களுடன் இங்கிருப்பதையே விரும்புகிறேன் என பாபா ரம்தேவ் தெரிவித்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.

நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை சென்றுள்ள சில இந்தியர்களின் உறவினர்களும் சுஷ்மாவுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு நேபாளம் சென்றுள்ள தங்களது உறவினர்களின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை தெரியப்படுத்தி, அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

அவர்களுக்கு ஆறுதலாக பதில் அளித்து வரும் சுஷ்மா சுவராஜ், இதுபற்றிய தகவல்களை உடனுக்குடன் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இன்று மட்டும் சுமார் 250 இந்தியர்களை நேபாளத்தில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

நேபாளத்தில் 5 நாள் தொடர் யோகாசன பயிற்சி முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று நடத்திய முகாமில் சுமார் 25 ஆயிரம் பேர் யோகாசன பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:20 am

15 டன் மருந்து பொருட்களை நேபாளத்திற்கு அனுப்புகிறது இந்தியா

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மீட்பு பணியில் முழு உதவியை செய்து வரும் இந்திய அரசு 34 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவை நேபாளத்திற்கு அனுப்புகிறது. அத்துடன், 15 டன் மருந்து பொருட்களும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த மருத்துவ குழுவில் 10 ஆர்தோபேடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 4 அனஸ்தேசியஸ்ட் வல்லுனர்கள், 12 நர்சுகள் (ஆண்கள்), 8 ஓ.டி. டெக்னீசியன்களும் அடங்குவர். மேலும், மருத்துவ உபகரணங்களும் விமானத்தில் அனுப்பப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:22 am

நேபாள நிலநடுக்க மீட்பு பணியில் இணைகிறது ஆர்.எஸ்.எஸ்.

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு மீட்பு பணியில் இணைந்து களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளதாக அறிவித்துள்ளது.

நேபாள அரசுடன் முறைப்படி கலந்தாலோசித்த பிறகு மீட்பு பணியில் இறங்குகிறது. சற்று நேரத்திற்கு முன்பாக, நேபாளத்திற்கு சென்றடைந்த ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹாஸ்போலே அங்குள்ள இந்து சுவயம்சேவக் சங்கத்துடன் இணைந்து மீட்பு பணி திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர்.

அங்கு சேதம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டு அதற்கேற்றவாறு எண்ணிக்கையில் இங்கிருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேபாளத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:22 am

நேபாலுக்கு தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்பும் சீக்கிய அமைப்புகள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாலின் காத்மண்டுவிற்கு நாளை முதல் தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்ப சீக்கிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

சண்டிகரில் சிரோன்மனி அகலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் அறிவுறுத்தலின்படி, சீக்கிய அமைப்புகளான சிரோன்மனி குருத்வாரா பர்பன்தாக் கமிட்டி (SGPC) மற்றும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழு இணைந்து தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை நேபாலுக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. விமானத்தில், 20 சமையல்காரர்களும், தன்னார்வ தொண்டர்களும் உடன் அனுப்பப்படுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:23 am

மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் நிறுத்தம்; கனமழைக்கு வாய்ப்பு

நேபால் நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இதற்கு இந்திய பேரிடர் மீட்புக்குழு மற்றும் இந்திய ராணுவம் பெரிய அளவில் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில், இன்று அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மீட்பு பணியில் தாமதம் உண்டானது.

இந்நிலையில், இன்று மாலை மீண்டும் வானிலை மோசமாக துவங்கியதால் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த 4 மணிநேரத்திற்கு நேபாலில் பரவலாக இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:24 am

நேபாலில் மீட்பு பணிக்காக 13 போர் விமானங்களை அனுப்புகிறது இந்தியா

நேபாலில் சிக்கி தவித்த 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு சில மணி நேரத்திற்கு முன்பு டெல்லி கொண்டு வரப்பட்டனர். ஏற்கனவே, நேபாளுக்கு மீட்பு பணியில் முழு ஆதரவையும் உதவியையும் வழங்கி வரும் இந்தியா மேலும் 13 இந்திய போர் விமானங்களை காத்மண்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் மட்டுமில்லாமல் மற்ற வெளிநாட்டவர்களையும் மீட்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்கனவே, 5 விமானங்கள் களத்தில் உள்ளதாகவும் இந்திய பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நேபாலில் மீட்பு பணியை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் பொருட்டு இந்திய பாதுகாப்பு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து அவசரக் கூட்டம் ஒன்றை சற்று நேரத்திற்கு முன்பு நடத்தியது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:25 am

நேபாளம், வடஇந்தியாவில் மீண்டும் 6.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம், மக்கள் அச்சம்

நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் இன்று மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இமயமலையில் அமைந்த நாடான நேபாளத்தை நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது. நேபாள நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இரவு முழுவதும் மக்கள் அச்சத்தில் தூங்கவில்லை. இன்று மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் இன்று மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேபாளம் நாட்டின் கோதாரிக்கு தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுஉள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் இன்றும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கட்டிடங்கள் குலுக்கியதை அடுத்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தை அடுத்து கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. புதிய நிலநடுக்கம் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால், பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே பின்அதிர்வுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியிலும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலும் நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் நேற்றை போன்று அதிர்வு உணரப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர். மக்கள் பெரிதும் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிரதமர் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். மாலை 3:30 மணியளவில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:30 am

நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்கு ஒரு மாத சம்பளத்தை கொடுக்கும் சிவசேனா எம்.பி.க்கள்

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 2200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா அதிக அளவில் உதவி வருகிறது. இன்று 13 விமானப்படை விமானத்தை மீட்பு பணியில் ஈடுபட நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் செய்ய தயாராகி வருகிறது.

இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பா.ஜனதா கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்படும் சிவசேனா கட்சி, தனது எம்.பி.க்களின் ஒருமாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘அனைத்து சிவசேனா எம்.பி.க்களும் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள். இது நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்காக அளிக்கப்படுகிறது. இந்த நிதி நேபாளம் அல்லது இந்தியாவிற்காக பயன்படுத்தப்படும். நாம் அனைவரும் ஒன்று. நேபாள நிலநடுக்க கொடூரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:31 am

நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும். வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன சிரேஸ்தா என்பவர் கூறும்போது, இந்த சிற்பங்கள் முழுவதுமாக அழிந்துபோக கூடும். இவற்றை மீண்டும் உருவாக்குவது என்பது தொழில் நுட்ப ரீதியில் கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது.

காத்மண்டு, பக்தாபூர் மற்றும் லலித்பூர் பகுதிகளில் உலக பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சிற்பங்களை நாம் இழந்து விட்டோம். அவற்றின் பழைமையான நிலைக்கு அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது என்று அவர் கூறியுள்ளார். நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடந்த நிலஅதிர்வுகள் ஆகியவற்றால் காத்மண்டு நகரில் உள்ள பசந்தபூர் தர்பார் சதுக்கத்தில் உள்ள 80 சதவீத கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டுவில் உள்ள புகழ் பெற்ற தரஹாரா உள்ளிட்ட நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று சிற்பங்கள் ஆகியவை சிதைந்து போய் விட்டன. கடந்த 83 வருடங்களுக்கு முன்பு 1934ம் ஆண்டு இதுபோன்று நடந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதுடன், தரஹாரா துண்டுகளாக உடைந்தும் போனது. அதேபோன்று பதான் மற்றும் பக்தபூரில் உள்ள 12க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் சிதைந்தும் அல்லது பகுதி சிதைந்தும் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:45 am

550 பேரையடுத்து மேலும் 225 இந்தியர்கள் நேபாளத்தில் இருந்து தாயகம் திரும்பினர்

நிலநடுக்கத்தால் சின்னாபின்னமாகிப் போன நேபாளத்தில் 311 தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்துவரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதற்கட்டமாக இன்று காலை 550 இந்தியர்கள் மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், ஹெர்குலஸ் c-17 விமானம் மூலம் இன்று மாலை மேலும் 225 இந்தியர்கள் டில்லி வந்து சேர்ந்தனர். மாலை சுமார் 5 மணியளவில் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான c-17 விமானம் தரையிறங்கியது.

அடுத்தடுத்து, இன்று மேலும் சில விமானங்கள் மூலம் நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:45 am

நேபாளத்தில் பேசிய மேடை சரிந்தது: தப்பினார், யோகா குரு பாபா ராம்தேவ்

யோகா குரு பாபா ராம்தேவ் நேபாளத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தலைநகர் காட்மாண்டுவில் நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசி முடித்த நிலையில்தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மேடை சரிந்தது. பேசி விட்டு இறங்கி விட்டதால் அவர் காயமின்றி தப்பினார்.

நிலநடுக்கம் குறித்து அவர் கூறும்போது, ‘‘என் கண் முன்னால் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று சரிந்ததை பார்த்தேன். அதன் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியதை பார்க்க வேதனையாக இருந்தது’’ என்றார்.

மேலும் அவரது பதஞ்சலி யோகா பீடத்தின் சார்பில் அங்கு தன்னார்வ தொண்டர்கள், மருத்துவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நேபாள நாட்டில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் உள்ளிட்ட பல இந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு நாள்தோறும் சென்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அப்படி அங்கு சென்ற பல பக்தர்கள், நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். அங்கு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர், உறவினர்கள் தவிக்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Mon Apr 27, 2015 1:47 am

விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைப்பு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா நடவடிக்கை

நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைத்துள்ளது.

தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி காத்மாண்டுவில் இருந்து டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களுக்கான வருவதற்கான விமான கட்டணம் ரூ 14 ஆயிரத்தில் இருந்து 4,700-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மிக முக்கியமான நிவாரணப் பொருட்களை கட்டணம் இல்லாமல் டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களில் இருந்து காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தை நேற்றுமுன்தினம் தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 1:10 am

அடிப்படை உதவிகள் இன்றி மக்கள் தவிப்பு

நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3,700-ஐ தாண்டி உள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

நேபாள உள்துறையின் தேசிய பேரிடர் மேலாண்மைப் பிரிவின் உயர் அதிகாரி ராமேஸ்வர் டங்கல் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,723 ஆக அதிகரித்துள்ளது. 6,500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்திய தூதரக அதிகாரியின் மகள் உட்பட 5 இந்தியர்கள் நிலநடுக்கத்தில் பலியாகியுள்ளனர். காத்மாண்டுவில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது.

மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், மக்கள் தெருக்களில்கூட தஞ்சம் புக முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளும் சுணக்கம் கண்டுள்ளன. மழையால் ஒரே ஆறுதல், தற்காலிக முகாம்கள் தண்ணீர் பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது என்பதே.

நேபாளத்துக்கு உடனடியாக தற்காலிக கூடாரங்களும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் பெருமளவில் தேவைப்படுகின்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வுகளால் மக்கள் பெருமளவில் பீதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல தவித்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், இப்போதைக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 1:13 am

பூகம்பத்தில் சிக்கித்தவித்த 56 தமிழர்கள் உள்ளிட்ட 2305 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் மைத்திரி என பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புப்பணியில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவ மற்றும் உணவு பொருட்கள் தேவையான அளவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தி தர படுக்கை விரிப்புகள், கம்பளிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் அளிக்கப்படுவதுடன், சிக்கியுள்ள வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்று அது கூறுகிறது.

நேபாளம் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய பேரிடர் உதவித்தொகையான 1.5 லட்சம் என்பது மாற்றியமைக்கப்பட்டபடி 4 லட்சமாக வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தோடு பிரதமர் உதவித்தொகையான 2 லட்சமும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் உள்ள பிகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 296 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன.

இதற்கிடையே இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக டில்லி வந்தடைந்த 38 தமிழர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்கட்டமாக தமிழக அரசின் உதவியுடன் 12 பேர் இன்று திங்கள்கிழமை காலை விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதமுள்ளவர்கள் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சாலை மார்க்கமாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் வந்தடைந்த 18 தமிழர்களை, இரயில் மூலமாக சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேபாளத்தின் பல்வேறு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் நூற்றுக்கணக்கானோரும் விரைவில் சொந்த ஊருக்கு திரும்ப, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மொத்தமாக 311 பேர் அளவுக்கு நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி செய்தார்.

புதுடில்லி வந்தடையும் தமிழர்களுக்கு உதவிட விமான நிலையத்திலும் தனி சிறப்பு குழுவை உள்ளடக்கிய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 1:26 am


நிலநடுக்கத்தில் சேதமடைந்த கோயிலில் பிரார்த்தனை செய்யும் நேபாள பெண்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 1:47 am

ராஜஸ்தான் மருத்துவக் குழு நேபாளம் விரைந்தது

பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு மருத்துவ உதவிகளை செய்யும் வகையில் ராஜஸ்தானில் இருந்து 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் காத்மாண்டு விரைந்துள்ளனர்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் கொண்ட இந்த மருத்துவக் குழுவில் சில ஓய்வு பெற்ற மருத்துவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by சிவா on Tue Apr 28, 2015 1:49 am

நேபாள நிவாரணம்: ரூ. 10 லட்சம் வழங்க மார்க்சிஸ்ட் முடிவு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சம் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கட்சி திங்கள்கிழமை அறிவித்தது.இதுகுறித்து அந்தக் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நிலநடுக்கத்தால் வீடுகள், சொந்த பந்தங்களை இழந்து வாடும் நேபாள மக்களுக்கு நிவாரணம், அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணிகளுக்காகவும் தாராளமாக நிதி வழங்குமாறு கட்சியின் பல்வேறு கிளை நிர்வாகிகளை தலைமைக் குழு கேட்டுக் கொண்டது.அதன்படி, மேற்கண்ட பணிகளுக்காக ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நேபாளத்துக்கு திங்கள்கிழமை சென்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum