ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

View previous topic View next topic Go down

அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by சிவா on Fri Apr 24, 2015 1:11 am


ஒரு பிரிண்டர் அச்செடுத்துக் கொடுக்கும்போது கூடவே அந்த அச்சில் வரும் பிம்பத்தையும் அப்படியே ஒரு பொருளாக்கித் தந்துவிடுகிறது என்று சொன்னால் சிலருக்கு வியப்பாக இருக்கும். ஏதோ ஓர் அறிவியல் கற்பனை படத்தில் வரும் சுவாரசியமான காட்சி போலத் தோன்றும். ஆனால் இது கற்பனை அல்ல, நிஜம். துரிதமாக நிதர்சனமாகி வரும் தொழில்நுட்பம் இது.

'புளூ பிரிண்ட்' என்று சொல்வார்கள். எதை உருவாக்க வேண்டுமோ அதன் அச்சு அசலான படமே புளூ பிரிண்ட். இத்தகைய புளூ பிரிண்ட் கணினியில் உருவானதும், அதை அப்படியே ஒரு பொருளாக்கித் தந்துவிடும் வியப்பான தொழில்நுட்பம்தான் அச்சு வார்க்கும் பிரிண்டர்.

இது ஒரு புதிய புரட்சி. வாடிக்கையாளர்கள், தொழிலதிபர்கள் என்று இரு வகையினருக்குமான இமாலய முன்னேற்றம். மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்பெறவிருக்கும் வளர்ச்சி.

இதன் மூலம், இயற்பியல் மாணவர்களால் ஒரு பொருளாகவே செய்துவிட முடியும். தற்போது அமெரிக்கப் பள்ளிகளில் பரபரவென்று பரவிவரும் தொழில்நுட்பம் இது.

மனித உடல் உறுப்புகளுக்குத் தேவைப்படும் திசுக்களை முப்பரிமாண பிரிண்டரின் உதவியுடன் அப்படியே ஒரு மாடலாக ஆக்கிவிட்ட மருத்துவர்களும் உள்ளனர்.

தங்களுடைய ஜெட் எந்திரங்களின் செயல்திறனை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக அதிகரித்துள்ளது ஒரு விமான நிறுவனம்.

'நாம் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளையும் வடிவமைத்து பொருளாக்கித் தரக்கூடிய உன்னதத் தொழில்நுட்பம் இது' என்று புகழ்மாலை சூட்டுகிறார்கள் அறிவியலாளர்கள்.

முப்பரிமாண பிரிண்டர்கள் எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், இணையதளம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா? அப்படியென்றால், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இது எப்போது வரும்? இந்தத் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருமா?

தொழில்துறைப் புரட்சி

இந்தக் கேள்விகளுக்கான ஒரே விடை, 'இது தொழிற்சாலைப் புரட்சியின் ஒரு துவக்கம்' என்பதே ஆகும். இன்னும் பொருத்தமாகச் சொல்வதென்றால், கடந்தகாலத் தொழில்துறையின் முடிவு என்று சொல்லலாம்.

பலவகையான பொருட்களையும் விவரமாக செய்துகொடுக்கும் ஒரு நிலைக்கு இந்தத் தொழில்நுட்பம் தலைதூக்கும்போது, எதையும் வீட்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்துவிடும் ஒரு முக்கிய, தவிர்க்க முடியாத அந்தஸ்தை இது பெற்றுவிடும். இது ஒரு கணிசமான வளர்ச்சி.

வளர்ச்சி நகரங்களில்தான் உள்ளது என்று எல்லோரும் நகரங்களை நோக்கி வந்துவிட்டார்கள். இதுதான் முந்தைய தொழிற்புரட்சி. ஆனால் முப்பரிமாண பிரிண்டர் தொழில்நுட்பத்தால், எந்தப் பொருளும், எங்கும் கிடைக்கும் நிலை ஏற்படும். ஆகவே எல்லோரும் மறுபடியும், இயற்கையோடு வாழும் கிராமங்களை நோக்கித் திரும்பிவிடுவார்கள். இப்படி ஒரு தொழிற்புரட்சியாக இது அமையும்.

இதில், ஒரு முப்பரிமாண பிரிண்டர் இருக்கும். கணினி சார்ந்தது இது. இதில், உங்களுக்குத் தேவையான பொருளை நீங்கள் வடிவமைத்துக்கொள்ளலாம். அதன் நீள அகலங்களையும், வண்ணங்களையும், மற்ற விஷயங்களையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைத்து அதன் செயல்திறனையும் அதிகப்படுத்தி, ஒரு கம்ப்யூட்டர் மாடலை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.

இதை அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். அப்போது, படம் தாளில் பிரிண்ட் ஆவதோடு விஷயம் முடிந்துவிடும்.

ஆனால் தாளில் வந்த பொருளை அப்படியே உங்களால் ஒரு முப்பரிமாணப் பொருளாகவும் பெற முடிந்துவிட்டால்? அப்படிச் செய்து தருவதுதான் இந்த 'முப்பரிமாண பிரிண்டர்' தொழில்நுட்பம்.

இது மற்றொரு எந்திரத்துடன் இணைப்பில் இருக்கும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் கச்சாப்பொருளை நிரப்பிவிட வேண்டும். வழக்கமாய் இது தூள் வடிவத்தில் நிரப்பப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் இருக்கலாம் அல்லது சில பிளாஸ்டிக் கலவைகள் கலந்து தயாரிக்கப்படும் பாலிமர் மூலப்பொருளாய் இருக்கலாம்.

முப்பரிமாண பிரிண்டர் கணினியில் நீங்கள் வடிவமைக்க விரும்பும் பொருளின் மாதிரிப் படம் தயாரானதும், அந்தத் தகவல் இணைப்பில் இருக்கும் எந்திரத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுவிடும்.

இப்போது இந்த எந்திரம், வரையப்பட்டுள்ள அப்பொருளை அப்படியே ஓர் இயற்பொருளாக உருவாக்க ஆரம்பிக்கும்.

கோல மாவை எடுத்து விரல்களின் வழியே திரித்துவிட்டால் ஈரத் தரையில் மயிலும் குயிலும் அழகிய கோலங்களாய் உருவாகிவிடும் வித்தையைப் போல, சேகரித்து வைக்கப்பட்டுள்ள கச்சாப்பொருளை எந்திரம் உதிர்க்க ஆரம்பிக்கும். உதிர்த்தபடி அப்பொருளை அப்படியே ஒரு நிஜப்பொருளாய் வடிவமைக்க ஆரம்பிக்கும்.

இந்த செய்முறையை 'லேயரிங்' (Layering) என்கிறார்கள். கச்சாப்பொருளை அடுக்கடுக்காய் அமைத்து, கணினித் திரையில் ஒரு பொருள் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதோ, அச்சு அசலாக அதை அப்படியே எந்திரம் ஒரு நிஜப்பொருளாய் ஆக்கிவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by சிவா on Fri Apr 24, 2015 1:12 am

சி.என்.சி.யும் முப்பரிமாண பிரிண்டரும் ஒன்றா?

சி.என்.சி. எனப்படும் computer numeric control எந்திரங்கள் தொழிற்சாலைகளில் மிகவும் பிரபலமாய் உள்ளன. கணினியும், உலோகத்தை அறுத்துப் பொருட்கள் செய்யும் எந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படுவதே சி.என்.சி.

இதில், தேவைப்படும் எந்திரப் பாகங்கள் கணினி மென்பொருளில் வரையப்பட்டு அங்கீகரிக்கப்படும். இப்பாகம் பிறகு, கணினி மென்பொருளுடன் இணைந்து இயங்கும் எந்திரத்தால், ஒரு பொருளாய் வடிவம் பெறும். இந்த எந்திரத்தில் வைக்கப்படும் உலோக மூலப்பொருள், வடிவத்துக்கு ஏற்றாற்போல் அறுக்கப்பட்டு, நிறைவாய் பொருள் உருவாகும்.

மேலோட்டமாய் பார்க்கும்போது இந்த இரண்டும் ஒன்றே என்று தோன்றும். செய்யும் வேலை ஒன்றுதான், ஆனால் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள் வேறு வேறானவை.

'லேயரிங்' வழியில் செயல்படுகிறது சி.என்.சி. ஆனால் 3 டி பிரிண்டர்கள் லேசர் கொண்டும் செயல்படும். வெப்பப்படுத்துதல் முறையில் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.

3 டி பிரிண்டர்களில் உருவாகும் பிம்பம், 'நேரடியாக உலோகத்தை லேசரால் வெப்பப்படுத்துதல்' எனும் அணுகுமுறையால் பொருளாக்கப் படுகிறது. பிரிண்டரோடு இணைக்கப்பட்டிருக்கும் எந்திரம் லேசர் கதிர்களால் மெல்லிய உலோகத்தைச் சூடேற்றி, கணினியில் வரையப்பட்ட பிம்பத்தை அப்படியே அதில் வடிவமைத்து விடுகிறது.

லேசர் கதிர்களால் கடின உலோகத்தை உருக்கி உருவங்களாக்குவதில் சிரமங்கள் இருப்பதால், இலகுவான புதுப்பொருட்களும் சந்தையில் வரத் தொடங்கியுள்ளன. மெல்லிய மரங்களை மிக எளிதாய் உருவங்களாய் அறுத்துவிட முடிகிறது. சோளம், கரும்பு ஆகியவற்றில் இருந்து உருவாகும் PLA பிளாஸ்டிக்கும், லேசரால் வெட்டி வடிவமாக்க எளிதாக உதவுகிறது. ஆகவே முப்பரிமாண பிரிண்டர் தொழில்நுட்பம் கொண்டு உருவாகும் உருவங்களுக்கு இப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பள்ளிக்கூடத்தில் கேட்கப்படும் மாடல்களை குழந்தைகளும் வீட்டிலேயே வடிவமைக்க உதவும் தொழில்நுட்பம் இது. கூடிய சீக்கிரமே, கணினியைப் போல இந்தத் தொழில்நுட்பத்தையும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் படிக்கப் போகிறார்கள்!

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by யினியவன் on Fri Apr 24, 2015 1:20 am

பாஸ் நமக்கு நல்லதா ஒரு மூளை ரெடி பண்ண சொல்லுங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by T.N.Balasubramanian on Fri Apr 24, 2015 10:45 am

பாஸ் புரோக்ராம் பண்ணி , நல்ல முளை என்று ஒன்றை தயார் பண்ணுகிறார் .
வருகிறது எல்லாம் தண்டமாக வருகிறது .
பாசும் கஷ்டப்பட்டு ....கஷ்டப்......பட்டு பலமுறை வேவேறே இன்புட் போட்டு தயார் பண்ணுகிறார் .
2 மணி நேரம் --மூளையே குழப்பி , ராஜாவை கேட்டு , சில modification பண்ணி , தயாரித்தால் ,
சிவப்பு கலரில் ஒரு மெச்செஜ் வருகிறது .
"நீங்க என்னதான் உயர்ந்த ,மதிப்பு மிக்க இன்புட் கொடுத்தாலும் --அந்த பெயருக்கு இதுக்கு மேலே
பெஸ்ட் இந்த CNC யால் கொடுக்க முடியாது "

ரமணியன்   -


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by யினியவன் on Fri Apr 24, 2015 1:34 pm

@T.N.Balasubramanian wrote:பாஸ் புரோக்ராம் பண்ணி , நல்ல முளை என்று ஒன்றை தயார் பண்ணுகிறார் .
வருகிறது எல்லாம் தண்டமாக வருகிறது .
பாசும் கஷ்டப்பட்டு ....கஷ்டப்......பட்டு பலமுறை வேவேறே இன்புட் போட்டு தயார் பண்ணுகிறார் .
2 மணி நேரம் --மூளையே குழப்பி , ராஜாவை கேட்டு , சில modification பண்ணி , தயாரித்தால் ,
சிவப்பு கலரில் ஒரு மெச்செஜ் வருகிறது .
"நீங்க என்னதான் உயர்ந்த ,மதிப்பு மிக்க இன்புட் கொடுத்தாலும் --அந்த பெயருக்கு இதுக்கு மேலே
பெஸ்ட் இந்த CNC யால் கொடுக்க முடியாது "

ரமணியன்   -

அய்யகோ நவீன டெக்னாலஜிக்கும் சோதனையா? சிரிப்பு சிரிப்பு சிரிப்புavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by T.N.Balasubramanian on Fri Apr 24, 2015 4:02 pm

yiniyavan wrote:அய்யகோ நவீன டெக்னாலஜிக்கும் சோதனையா? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கவலைய விடுங்க பாஸ் !
டார்வின் ஈகரைலே சேர்ந்து இருக்காரு .
CNC lathe லே விளையாடுவாராம் .
ஸ்பெஷலா ஒரு மெஷினே தயாரித்து , உங்கள் குறையை தீர்த்துடறேன் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by monikaa sri on Fri Apr 24, 2015 9:49 pm

புதிய தகவலுக்கு நன்றி!
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: அச்சு வார்க்கும் 'பிரிண்டர்'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum