உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

தேசியச் செய்திகள்

தேசியச் செய்திகள்

Post by சிவா on Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Mon May 18, 2015 3:32 pm

மும்பை மருத்துவமனையில் 42 வருடமாக கோமாவில் இருந்த நர்சு அருணா ஷான்பாக் இன்று காலமானார்

மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் 42 வருடம் கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று காலமானார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு, நவம்பர் 27-ந் தேதியன்று மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்தபோது, வார்டு பாய் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட அருணா கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் அவரது மூளை செயலிழந்தது. இதையடுத்து கே.இ.எம். மருத்துவமனையிலேயே அருணா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள வார்டு எண் 4-ல் அனுமதிக்கப்பட்ட அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நினைவு திரும்பிய பாடில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளர் பிங்கி விரானி மனு தாக்கல் செய்தார். ஆனால் கருணை கொலை செய்ய மருத்துவமனை ஊழியர்களும், நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்ததால் உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

இதனிடையே அருணாவின் சகோதரியான நாயக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அருணாவின் உடல்நிலை திடீரென மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவம் செய்யப்பட்டது. எனினும் சிறிது நாளில் அவரது உடல்நிலை மீண்டும் தேறியது. ஆகையால் மீண்டும் சாதாரண வார்டுக்கு அருணா மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனை நிர்வாகிகளும், ஊழியர்களும் சிரத்தை எடுத்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. மருத்துவர்கள் வெண்டிலேட்டர் வைத்து அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார். ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்த அருணாவுக்கு என்றாவது நினைவு திரும்பும் என்று எதிர்பார்த்த நிலையில், நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர் பிரிந்தது...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:13 pm

உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய பீகார் முஸ்லீம்கள்

20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் அளவுக்கு உலகின் மாபெரும் இந்துக் கோவில் ஒன்று இந்தியாவில் உருவாக உள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த கோவில் பாட்னாவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சம்பரன் மாவட்டம் கெசாரியாவுக்கு அருகில் ஜானகி நகரில் உருவாக உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் வரும் ஜூன் மாதம் துவங்குகிறது.

உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த இந்துக் கோவிலை மும்பையை சேர்ந்த வாலேசா கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் நிறுவனம் கட்டுகிறது. இந்த கோவில் 2,500 அடி நீளமும், 1,296 அடி அகலமும், 379 அடி உயரமும் கொண்டதாக அமையவுள்ளது. குறிப்பாக, நேபாள எல்லையில் அமைவதால் நிலநடுக்கத்தையும் தாங்கக்கூடிய வகையில் earthquake proof-வுடன் உருவாகிறது.

இந்நிலையில், மதநல்லிணக்கத்தை தழைக்கச் செய்யும் பொருட்டு இந்த கோவிலுக்காக பீகார் முஸ்லிம்கள் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்துள்ளார். ஆச்சார்யா பாட்னாவை சேர்ந்த மஹாவீர் மந்திர் டிரஸ்டின் செயலராகவும் இருக்கிறார். இந்த அறக்கட்டளைதான் உலகின் மாபெரும் இந்துக் கோவிலை கட்டுகிறது.

ஆச்சார்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

முஸ்லீம்கள் நிலத்தை நன்கொடையாக மட்டும் வழங்கவில்லை. உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலை கட்டுவதற்கு மிகக்குறைவான விலையிலும் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். முஸ்லீம்களின் உதவி மட்டும் இல்லையென்றால் இந்த கனவுத்திட்டத்தை உருவாக்குவது கடினமே. கோவில் கட்டுவதற்கு இந்துக்கள் நிலத்தை நன்கொடையாக வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், முஸ்லீம்கள் நிலத்தை நன்கொடையாக வழங்குவது இதுவே முதல்முறையாக இருக்கும் என நினைக்கிறேன். இது அபூர்வமான ஒன்று. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து 50 ஏக்கர்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

இதற்கு முன்னதாக, சில முஸ்லீம்கள் கயா மாவட்டத்தில் துர்கா கோவிலுக்கு நிதியுதவி செய்திருந்தனர். அதேபோல், சித்தாமார்ஹி மற்றும் பெகுசாராய் மாவட்டத்தில் சிவன் கோவில் கட்டுவதற்கும் உதவிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:35 pm

‘ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ ராகுல் காந்திக்கு, பாரதீய ஜனதா பதிலடி

‘ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ என்று ராகுல் காந்திக்கு, பாரதீய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதிக்கு 3 நாட்கள் பயணமாக நேற்று சென்றார். அங்கு செல்லும் வழியில், பாரபங்கி மாவட்டம் ஜெகதீஷ்பூர் என்ற இடத்தில், பருவம் தவறிய மழையால் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி ஆட்சியில், ஏழை தொழிலாளர்களும், விவசாயிகளும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். மோடி, விவசாயிகளின் வீடுகளுக்கு செல்வது இல்லை. வெளிநாடுகளுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். வெளிநாடு செல்லும்போதெல்லாம், ஒரு கேமராமேனையும் கூட்டிச் செல்கிறார். என்று குற்றம் சாட்டினார்.

‘மோடி அரசு ஓராண்டு நிறைவு செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளுக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?’ என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ராகுல் காந்தி, ‘விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை அணுகியதை பொறுத்தவரை, 10–க்கு 0 மதிப்பெண்தான் கொடுக்க முடியும். சில தொழில் அதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சினைகளை அணுகியதை கணக்கில் கொண்டால், 10–க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன்’ என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில்அடி கொடுத்துஉள்ள பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, “ராகுல் காந்தி, பாரதீய ஜனதா தலைமையிலான அரசுக்கு ஜீரோ மார்க் கொடுத்து உள்ளார். ஜீரோக்களால், ஹீரோக்களை அங்கீகாரம் செய்ய முடியாது. ஜீரோக்கள், ஜீரோக்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும்,” என்று டுவிட் செய்து உள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Sat May 30, 2015 1:53 am


டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விமான நிலையத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கதிரியக்க கசிவை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக மிகப் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துருக்கியில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானம் ஒன்றில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்காக மருத்துவக் கருவிகள் அடங்கிய சரக்குப் பெட்டி ஒன்று வந்துள்ளது. விமானம் தரையிறங்கியது முதல் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் வெளியானதாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் திடீரென கதிரியக்கம் வெளியானதால் பயணிகள் பலர் கண் எரிச்சலுக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கதிரியக்கத் தன்மை கொண்ட மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டது. எனினும், எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படுவதற்கு முன்பாக அணு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கதிரியக்கக் கசிவு நிறுத்தப்பட்டது.”

“இதனால் வழக்கமான விமான நிலையப்பணிகள் பாதிக்கப்படவில்லை. கதிரியக்க கசிவு சரக்கு வைக்கும் பகுதியில் நடந்ததால், விமான பயணிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கதிரியக்க கசிவு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

“இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் போதிய நடவடிக்கை எடுத்து கதிரியக்க கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தான் இந்திரா காந்தி விமான நிலையம் உலக அளவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கதிரியக்க கசிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுமளவிற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் விமான நிலையத்தில் உருவாகி உள்ளன வா என்று எண்ணத் தோன்றுகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Sat May 30, 2015 10:10 pm

80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரன் கைது

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரில் 80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டின் அருகேயுள்ள மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக கோடரியை எடுத்து தருமாறு தனது பாட்டி ஜம்கு தேவி(80) என்பவரிடம் அவரது பேரனான சோஹன் நாத்(28) கேட்டுள்ளார். கோடரி எங்கே கிடக்கிறதோ.., எனக்கு தெரியவில்லை என பாட்டி கூறியுள்ளார்.

பின்னர், வீடு முழுவதும் தேடி, கோடரியை கண்டுபிடித்த சோஹன் நாத் ஆத்திரத்தில் பாட்டியின் கழுத்தில் கோடரியால் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி, துடிதுடித்த ஜம்கு தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சோஹன் நாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Sat May 30, 2015 10:11 pm

ஆந்திராவில் வெயிலுக்கு 24 மணி நேரத்தில் 146 பேர் சாவு- பலியானோர் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்தது

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் மிகவும் உக்கிரமாகவே உள்ளது.

இந்நிலையில், இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு ஆந்திர மாநிலத்தில் மட்டும் கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று இரவு 8 மணிவரை 1636 பேர் பலியாகியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு 146 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 333 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 233 பேரும், கிழக்கு கோதாவரியில் 192 பேரும், விசாகப்பட்டினத்தில் 185 பேரும், விஜயநகரத்தில் 177 பேரும், நெல்லூரில் 166 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 78 பேரும், சித்தூரில் 64 பேரும், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 60 பேரும், அனந்தபூரில் 56 பேரும், கடப்பாவில் 38 பேரும், கர்நூலில் 34 பேரும், மேற்கு கோதாவரியில் 23 பேரும் பலியாகியுள்ளனர் என ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Sat May 30, 2015 10:14 pm

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இன்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் பயந்தடித்து, தெருக்களுக்கு வந்து குவியத் தொடங்கினார்கள். இதேபோல் வடக்கில் உள்ள சில முக்கிய நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Mon Jun 01, 2015 12:15 am

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து பிணைக்கைதிகள் மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் டாங்தார் என்ற இடத்தில், இரண்டு குடும்பங்களை சேர்ந்த 12 பேரை 7 பயங்கரவாதிகள் பிடித்து பிணைக்கைதிகளாக சிறை பிடித்தனர். இதனையடுத்து அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, பிணைக்கைதிகளை மீட்டனர். ராணுவத்தினர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 3:57 am


நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,338 ஆக உயர்வு

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கோடை வெயில் மற்றும் அனல் காற்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் மேலும் 42 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1719-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவிலும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21-லிருந்து 25 ஆக அதிகரித்து உள்ளது.இதைப்போல தெலுங்கானாவிலும் பலி எண்ணிக்கை 541-லிருந்து 585 ஆக அதிகரித்து உள்ளது. எனினும் இந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை என அம்மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனர் சதா பார்கவி கூறியுள்ளார்.

டெல்லியில் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு பரவலாக மழை பெய்தது. இதனால் இங்கு அதிகப்படியான வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவே இருந்தது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 4:00 am


நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,338 ஆக உயர்வு

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கோடை வெயில் மற்றும் அனல் காற்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் மேலும் 42 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1719-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவிலும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21-லிருந்து 25 ஆக அதிகரித்து உள்ளது.இதைப்போல தெலுங்கானாவிலும் பலி எண்ணிக்கை 541-லிருந்து 585 ஆக அதிகரித்து உள்ளது. எனினும் இந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை என அம்மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனர் சதா பார்கவி கூறியுள்ளார்.

டெல்லியில் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு பரவலாக மழை பெய்தது. இதனால் இங்கு அதிகப்படியான வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவே இருந்தது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 4:06 am

மேற்கு வங்கம்: எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் அபாயம்

கோல்கட்டா:இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 1.61 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் புதிதாக உருவாகியுள்ளனர்.

இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.சில ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவான மாநிலமாக இருந்த மேற்கு வங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது எச்சரிப்பதாக உள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 4:07 am

லஞ்சம் கொடுத்த எம்எல்ஏ கைது: அரசின் திட்டமிட்ட நாடகம் என தெ.தே.கட்சி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

தெலுங்கானா சட்ட மேலவையில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில் தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளரை ஆதரிக்க லஞ்சம் பேசப்பட்டு, அதில் ரூபாய் 5 கோடி பேரம் பேசி முதல் கட்டமாக ரூபாய் 50 லட்சத்தை ஐதராபாத்தில் நியமன உறுப்பினருக்கு கொடுத்தபோது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரேவேந்த்ரெட்டி கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ரேவேந்த்ரெட்டி கைது செய்யப்பட்டதை கண்டித்த தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது. தெலுங்கானா அரசு நடத்திய திட்டமிட்ட நாடகம்தான் இது. எம்எல்ஏவை திட்டமிட்டே கைது செய்துள்ளனர். எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதே புதிராக உள்ளது. இது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரான செயல். எம்எல்ஏ ரேவநாத் உயிருக்கு டிஜிபி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 4:08 am

தங்கம், வெள்ளி மீதான அடிப்படை விலை குறைப்பு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், இறக்குமதி வரியை நிர்ணயிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ள தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

பொதுவாக, இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை குறைத்து மதிப்பீடு செய்து வரி ஏய்ப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துவிட்டது. இதை தடுக்கவே, தங்கம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.

அந்த வகையில், தங்க இறக்குமதி மீதான அடிப்படை விலையை 398 டாலரிலிருந்து (10 கிராம்) 385 டாலராக மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலையை 567 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 544 டாலராக குறைத்துள்ளது மத்திய அரசு.

பெட்ரோலுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பொருளாக தங்கம் உள்ளது. எனினும், அதிக அளவிலான தங்க இறக்குமதி நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும் என்பது நினைவு கூரத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 4:09 am

நோயாளியை பார்க்க வந்த இளம் பெண் மருத்துவமனை ஊழியர்களால் பலாத்காரம்

கொல்கத்தாவில் நோயாளியை பார்க்க வந்த இளம் பெண் ஒருவர் மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைப் பார்ப்பதற்காக இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு வயது 24. சொந்த ஊர் முர்சிதாப் மாவட்டத்தில் உள்ள பஹ்ரம்பூர். தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பும்போது மருத்துவமனையின் லிஃப்ட் ஊழியர்கள் இருவர் சேர்ந்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தில் தொடர்ப்ய்டைய மவுசம் அலி கான், ஹைதர் அலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எதிர்நோக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கொல்கத்தாவின் பல்வேறு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் பெண்கள் தங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by சிவா on Tue Jun 02, 2015 10:47 pm

இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான்: இந்தியா கடும் எதிர்ப்பு

இந்தியாவுக்கு சொந்தமான, காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கில்கிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகள், இந்தியாவுக்கு சொந்தமானவை ஆகும். ஆனால், அப்பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிகளில், வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் கூறியதாவது:
கில்கிட், பல்டிஸ்தான் உள்பட ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். அப்படி இருக்கும்போது, கில்கிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தேர்தல் அறிவித்திருப்பது, அப்பகுதிகளை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்திருப்பதை மூடி மறைக்கும் செயலாகும்.

மேலும், கில்கிட், பல்டிஸ்தான் பகுதி மக்களுக்கு அரசியல் உரிமைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த பகுதிகளை விழுங்க துடிக்கிறது. பாகிஸ்தான் மந்திரி ஒருவர்தான், கில்கிட், பல்டிஸ்தான் பகுதிகளுக்கு கவர்னராகவும் இருக்கிறார் என்ற உண்மையே இதற்கு சாட்சி.அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு கொள்கைகளால், அந்த பகுதி மக்கள் சமீபகாலமாக இன கலவரங்களாலும், தீவிரவாதத்தாலும், பொருளாதார கஷ்டங்களாலும் அல்லல்பட்டு வருகிறார்கள். இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு விகாஸ் ஸ்வருப் கூறினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தேசியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை