ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராட்சஷ பறவை 'ரபேல்'

View previous topic View next topic Go down

ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by ayyasamy ram on Sun Apr 12, 2015 2:30 am


-

பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்க முடிவு செய்துள்ள
"ரபேல்' போர் விமானங்கள், மிகவும் நவீனத்துவமும்
போர் திறனும் வாய்ந்தவை.

ரபேல் என்ற பிரெஞ்ச் வார்த்தைக்கு "வெடிப்பு' ,
"தொடர் வெடி' என்று அர்த்தம். இப்படிப்பட்ட 36 "ரபேல்'
ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

"மல்டி ரோல் பைட்டர் ஏர்கிராப்ட்' வகையை சேர்ந்த
இந்த போர் விமானம், பல்வேறு பணிகளை செய்யக்
கூடியது. பிரான்சில் உள்ள "டசால்ட்' என்ற நிறுவனம்
இவ்வகை விமானங்களை தயாரிக்கிறது.

1986ம் ஆண்டு தான் முதன்முதலாக இது தயாரிக்கப்பட்டது.
ஏற்கனவே பிரான்ஸ் விமானப்படையில் இவை பயன்
பாட்டில் உள்ளன. சாதாரணமான குண்டுகளை மட்டுமல்லாமல்,
அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடியது.


ஏற்கனவே ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் ஆகிய
நாடுகளில் நடந்த தாக்குதலில் இந்த விமானம் வெற்றிகரமாக
பயன்படுத்தப்பட்டது.

நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி உள்ள
இவ்விமானம், தற்காலத்தில் உள்ள நவீன போர் விமானங்களில்
ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டு விமானிகள் ஓட்டக் கூடிய
இவ்விமானங்களை ரேடாரில் கண்காணிப்பது சிரமம்.

இதில் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
லேசர் வழிகாட்டி வெடிகுண்டுகளையும் இதில் சுமந்து செல்ல
முடியும். நடு வானில் எதிரி நாட்டு விமானங்களுடன்
சண்டையிடும் திறன் படைத்தது. நான்கு ஏவுகணைகளையும்,
ஒரு பீரங்கியையும் தூக்கிக்கொண்டு பறக்கக் கூடியது.

குறைவான தூர ரன்வே போதும் என்பதால் விமானம் தாங்கி
கப்பலிலும் இவற்றை இறக்க முடியும்.


சிறப்பு அம்சங்கள்:
விமானத்தின் நீளம் - 15.27 மீ


இறக்கைகள் நீளம் - 10.80 மீ
உயரம் 5.34 மீ


காலி விமான எடை - 9,500 கிலோ
வெடிகுண்டுகளுடன் எடை - 14,016 கிலோ


தொடர்ந்து பறக்கும் தூரம் - 3,700 கி.மீ.,
அதிக உயரத்தில் வேகம் - 1912 கி.மீ.,/ஒரு மணி நேரத்திற்கு


குறைந்த உயரத்தில் வேகம் - 139 கி.மீ/ஒரு மணி நேரத்திற்கு
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by ராஜா on Sun Apr 12, 2015 10:29 am

ஆனா இந்த விமானத்தை வாங்கினா , கோர்ட்டில் வழக்கு போடுவேன் என்று சுப்ரமணியசாமி அறிக்கை விட்டுள்ளதே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by சிவா on Sun Apr 12, 2015 12:25 pm

நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி

ஆனால் வானில் பெட்ரோல் ஸ்டேஷன்கள் இல்லையே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by சிவா on Sun Apr 12, 2015 12:35 pm

ரஃபேல் போர் விமான உடன்பாடு இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும்

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான உடன்பாடானது, இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கோவா மாநிலம், பனாஜியில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரான்ஸ் அதிபர் ஹொலாந்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா எடுத்த முடிவு மிகச் சிறந்ததாகும். இந்திய விமானப் படையை வலுப்படுத்த இம்முடிவு பெரிதும் உதவும்.

கடந்த 17 ஆண்டுகளாக, புதிய தலைமுறையைச் சேர்ந்த எந்தப் பெரிய போர் விமானத்தையும் நாம் வாங்கவில்லை. இது, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த மிகச் சிறந்த முடிவாகும்.

இந்த விமானங்களை வாங்குவதற்கான நடைமுறைகள் பல ஆண்டுகளாக தாமதமாகி வந்தன. இந்த நடைமுறைகள் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கின. ஆனால் பல்வேறு குழப்பங்கள் காரணமாக அவை இன்னும் முடிவடையவில்லை. இந்தச் சூழ்நிலையில், தற்போது பிரதமர் மேற்கொண்டுள்ள முன்முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது.

ரஃபேல் போர் விமானங்கள் இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும். விமானப்படையில் உள்ள உடனடி இடைவெளியை நிரப்ப இந்த 36 விமானங்களும் தேவைப்படுகின்றன. இந்தியாவின் தேவைக்கேற்ப அவற்றை வடிவமைக்க வேண்டியுள்ளது. தற்போது அவற்றின் விலை ரூ.700 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விலை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியுள்ளது.

ஒற்றை என்ஜின் கொண்ட சில இலகு ரக விமானங்கள் நமக்குத் தேவை. அதேசமயம், நவீன தொழில்நுட்பமும், மற்ற சாதனங்களும் கொண்ட இரட்டை என்ஜின் விமானங்களும் தேவைப்படுகின்றன. தனது பாரம்பரிய எதிரிகளை விட இந்தியா கூடுதல் வலுவுடன் திகழ இவ்வகை விமானங்கள் அவசியம்.

பிரான்ஸிடம் இருந்து முதற்கட்டமாக 36 ரஃபேல் விமானங்களை வாங்கிய பிறகு, "இந்தியாவில் தயாரிப்போம்' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் இந்தியாவுக்கு இதுபோன்ற மேலும் சில விமானங்கள் கிடைக்கும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் விமானமான தேஜாஸ், அடுத்த மாதம் இறுதிக்கட்டமாக சோதனை செய்யப்படும். நமது விமானப்படையின் பலத்துக்கு நீண்ட காலத் தீர்வாக "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் இருக்கும்.

இந்தியாவில் தற்போது பழைய தலைமுறையைச் சேர்ந்த மிக்-21, மிக்-27, சு-30 போன்ற வகை விமானங்கள் உள்ளன. அவற்றுடன் தற்போது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள் இணையப் போகின்றன. நம்மிடம் உள்ள பழைய போர் விமானங்கள் தரம் உயர்த்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

"சீன ஊடுருவல் குறைந்துள்ளது'

கடந்த ஓராண்டில் இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

சீனாவுடனான எல்லைத் தகராறு புதிதல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே அது நீடித்து வருகிறது.

கற்பனைக்கோடு: எல்லை என்பது கற்பனையான கோடாகவே இருந்து வருகிறது. அது தொடர்பாக சில பிரச்னைகள் இருந்து வருகின்றன. இப்பிரச்னைகளைத் தீர்க்க கடந்த சில ஆண்டுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு, சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றார் அவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by யினியவன் on Sun Apr 12, 2015 12:37 pm

@ராஜா wrote:ஆனா இந்த விமானத்தை வாங்கினா , கோர்ட்டில் வழக்கு போடுவேன் என்று சுப்ரமணியசாமி அறிக்கை விட்டுள்ளதே

அது இந்திய கோமாளி ரப்சர் பறவை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by யினியவன் on Sun Apr 12, 2015 12:40 pm

@சிவா wrote:
நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி

ஆனால் வானில் பெட்ரோல் ஸ்டேஷன்கள் இல்லையே?

பாஸ் பெட்ரோல் டாங்கர் விமானங்கள் இருக்கே - நாடு வானில் பெட்ரோல் போடும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by சிவா on Sun Apr 12, 2015 12:42 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:
நடு வானிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதி

ஆனால் வானில் பெட்ரோல் ஸ்டேஷன்கள் இல்லையே?

பாஸ் பெட்ரோல் டாங்கர் விமானங்கள் இருக்கே - நாடு வானில் பெட்ரோல் போடும்


அப்ப அந்த பெட்ரோல் டாங்கர் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் போட முடியுமா தல?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by யினியவன் on Sun Apr 12, 2015 12:45 pm

@சிவா wrote:அப்ப அந்த பெட்ரோல் டாங்கர் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் போட முடியுமா தல?
இன்னொரு டாங்கர் விமானம் போடலாமே - ஆனால் தேவை இல்லை பாஸ் - மார்சிலையா சண்டை போடப் போறாங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by சிவா on Sun Apr 12, 2015 12:47 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:அப்ப அந்த பெட்ரோல் டாங்கர் விமானங்களுக்கு நடுவானில் பெட்ரோல் போட முடியுமா தல?
இன்னொரு டாங்கர் விமானம் போடலாமே - ஆனால் தேவை இல்லை பாஸ் - மார்சிலையா சண்டை போடப் போறாங்க


அப்ப அந்த இன்னொரு டாங்கர் விமானத்துக்கு யார் பெட்ரோல் போடுறது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by யினியவன் on Sun Apr 12, 2015 12:50 pm

@சிவா wrote:அப்ப அந்த இன்னொரு டாங்கர் விமானத்துக்கு யார் பெட்ரோல் போடுறது? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உங்கள இப்ப யாரு போடப் போறதுன்னு தெரிஞ்சு ஓடிட்டீங்களே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by சிவா on Sun Apr 12, 2015 2:12 pm

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு ஊக்கம் தருமா?

இந்தியாவில் போர்விமானங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வரும் சூழலில், பிரான்சிடமிருந்து 36 விமானங்கள் வாங்கப்படும் என பிரமதர் மோடி அறிவித்துள்ளார்.

பிரான்சிடமிருந்து 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது விமானப்படைக்கு புதிய வலுவைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப் படைக்கு புதிய போர் விமானங்களை வாங்க கடந்த பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சி தற்போது பலன் தந்துள்ளது.

30 டன்களுக்கு எடை குறைவான, அதே நேரத்தில் வான் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தரை மீதான இலக்குகளை தாக்கும் வல்லமை உள்ளிட்ட 126 விமானங்கள் தேவை என்று இந்திய விமானப் படை பல ஆண்டுகளாக கேட்டுவருகிறது.

விமானப்படையின் தேவைக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 6 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் பிரன்சின் ரஃபேல் விமானமே இந்தியாவின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதாகக் கூறி இந்திய விமானப்படை அந்த விமானத்தை தேர்ந்தெடுத்தது.

பிரான்சிடமிருந்து நேரடியாக 18 விமானங்களை வாங்கிவிட்டு, மீதமுள்ள 108 விமானங்களை பிரான்ஸ் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்க முதலில் உத்தேசிக்கப்பட்டது.

ஆனால் தொடர்பான தொழில்நுட்ப பேச்சுக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை நேரடியாக வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. சுமார் 17 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு போர் விமானங்கள் வாங்குவதாக இந்தியப் பிரதமர் அறிவித்தது தமக்கு நிம்மதியை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்

விமானப்படைக்குத்தேவைப்பட்டால் கூடுதலான ரஃபேல் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். இந்த விமானம் ஒன்றின் விலை 700 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். பாரமரிப்பு மற்றும் இயக்கச்செலவுகளும் கணிசமாக இருக்கும்.

இரண்டு ஆண்டுகளில் இந்த விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட மிராஜ் 2000 விமானங்கள் ஏற்கனவே இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படுவதால், பிரஞ்சு தொழில்நுட்பத்தை கையாள்வது பெரிய சவாலாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் புதிதாக ஒரு விமானத்தை தேர்வு செய்வதைவிட, ஏற்கனவே விமானப்படையில் இருக்கும் சுகாய் 30 விமானங்களைக் கூடுதலாக வாங்கலாம் என்று சில முன்னாள் விமானப்படையினர் கருத்துவெளியிட்டுள்ளனர்.

ரஃபேல் விலையை விட சுகாய் விமானங்களின் விலை குறைவு என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம் ஆயுதங்களுக்காக ரஷ்யாவை மட்டுமே சார்ந்து இருப்பது நல்லதல்ல என்ற எதிர்வாதமும் வைக்கப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்திடமிருந்து வாங்கப்பட்ட மிக் 21 மற்றும் மிக் 27 ரக விமானங்கள்தான் இந்திய விமானப்படையில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இருக்கின்றன.

இவை அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன; நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட இந்த விமானங்களை பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கிறது.

விமானப் படையின் மிகவும் சக்தி மிக்க ஆயுதமாகக் கருதப்படும், சுகாய்30 ரக விமானங்களின் பாரிய தொழில்நுட்ப பிரச்சனைகளை ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக அந்த விமானங்கள் முழுமையாக இயக்கப்படாமல் இருக்கின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் என்று பெயரிடப்பட்ட இலகுரக போர் விமானம், விமானப் படையில் சேர்க்கப்படும் தகுதியை சில மாதங்களுக்கு முன்தான் பெற்றுள்ளது.

கணிசமான எண்ணிக்கையில் இந்த விமானங்களைத் தயாரிக்க மேலும பல ஆண்டுகள் பிடிக்கும்.

நீண்டதூரம் சென்று தாக்குதல் மேற்கொள்ளும் வல்லமை கொண்ட ரஃபேல் போர்விமானங்கள், பாகிஸ்தானுடனான இந்தியாவின் ராணுவ வல்லமையை சற்றே உயர்த்தும்.

ஆனால் வை சீனா தொடர்பான பாதுகாப்பு சூழலில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராட்சஷ பறவை 'ரபேல்'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum