ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிரேசியைக் கேளுங்கள் – பேயோடு ஒரு பேட்டி!-

View previous topic View next topic Go down

கிரேசியைக் கேளுங்கள் – பேயோடு ஒரு பேட்டி!-

Post by ayyasamy ram on Sat Apr 11, 2015 8:17 pm


-
எம்.வசந்தி, கோலார்.

இப்போது பேய், பிசாசு படங்கள் பிரபலமாக உள்ளன. நீங்க ஆவி, பேய், பிசாசு, பூதங்களைப் பார்த்ததுண்டோ?

அதையேன் கேட்கிறீர்கள். நான் ‘ஆவி’யில் வேலை பார்த்தபோது (பயப்படாதீங்க ‘ஆவி’ன்னா ஆனந்த விகடன்) இணையாசிரியர் ‘ஹாய் மதன்’ ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ‘‘பேய், பிசாசு, பூதம் அட்லீஸ்ட் குட்டிச் சாத்தானையாவது ‘பேய்ட்டி’ ஸாரி… பேட்டி எடுத்துவருமாறு கட்டளையிட்டார்.

இல்லாவிட்டால் அந்த மாதப் ‘பே’யை (சம்பளம்) குறைத்துவிடுவதாக பூச்சாண்டி காட்டினார். பேட்டி எடுக்க பேய்க்கு எங்கே போவேன்? குழப்பத்தில் நான் பேய் முழி முழித்தேன்.

‘‘மோகன்… திருவல்லிக்கேணி பேயாழ்வார் சந்நிதித் தெருவில் ‘வேதாள விலாஸ்’னு ஒரு பங்களா இருக்கு. அங்கே பேய் நடமாட்டம் இருக்கிறதா சொல்றாங்க. அங்கே பேய்… ஸாரி, அங்கே போய் பாரேன்’’ என்று வயிற்றில் கள்ளிப் பாலை வார்த்தார் என் தந்தையார்.

திருவல்லிக்கேணி வேதாள விலா ஸைக் கட்டும்போதே பாழடைந்த பங்களாவாகவே கட்டியிருப்பார்கள் போல. வாசலில் காலே இல்லாமல் குந்தியிருந்தவரைப் பயத்துடன் பார்த்து ‘‘நீங்கள் யார்” என்று கேட்டேன். என்னைப் பார்த்து நகைத்தபடி ‘‘நான்தான் காலிங் பெல். அதாவது என் பேரு மணி. என்னை அடிங்க…” என்றார்.

நான் தயங்கினேன். அவர் தன் கன்னத்தில் தானே பேய் அறை அறைந்துகொள்ள, வீட்டுக்குள் கோயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது காற்று வர… கதவு திறந்தது. உள்ளே அந்தரத்தில் இரண்டு குட்டிப் பிசாசுகள் பிரம்மாண்டமான கேரம்போர்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்தன.

என்னைப் பார்த்ததும், அவை ‘‘அப்பா டேய்… உன்னைப் பார்க்க மனுஷன் எவனோ வந்துருக்கான்டா…” என்று கூச்சலிட்டபடியே, கேரம் போர்டை மடித்து சுருட்டி வாயில் சூயிங் கம் போல போட்டுக்கொண்டு, மென்றுத் தின்று… எம்.ஆர்.எஃப் பலூன் பெரிசுக்கு பபிள் விட்டன. அந்த பபிள் வெடித்து அதிலிருந்து அப்பா பேய் வெளியே வந்தார்.

வந்தவரின் பரட்டைத் தலை என்னை மயிர் கூச்செறிய வைத்தது. இரண்டு காதுகளிலும் கறிவேப்பிலை கொத்து போல முடிக் கொத்து. அப்படியே என்னை அலாக்காக தூக்கிக் கொண்டு அந்தரத்தில் போய் அமர்ந்தார். உத்தரத்தில் ஓடிய டைனோசர் சைஸில் இருந்த பல்லிகளைப் பார்த்து நான் பயப்பட, அவர் ‘‘பயப்படாதே… அதெல்லாம் செத்துப் போன பஞ்சாங்க பல்லிகள்” என்று சொல்லி அதனை விரட்ட, அந்தப் பல்லிகள் என்னைப் முறைத்து பார்த்துவிட்டு எழுந்து நடந்து போயின. ‘‘பல்லி நடக்குமா ?” என்று நான் கேட்டது பல்லிகளின் காதில் விழ… எனக்கு அவை பெல்லி டான்ஸ் ஆடி காட்டின.

பேட்டி ஆரம்பமாயிற்று.

நான்: என் லைஃப்ல நான் பேட்டி எடுக்குற முதல் பேய் நீங்கதான்.

பேய்: என் டெத்துக்குப் பிறகு என்னை பேட்டி எடுக்கற முதல் மனுஷன் நீங்கதான்.

‘‘உங்க பேர்?’’

‘‘பூதம்.’’

‘‘அப்ப நீங்க பேய் இல்லையா?’’

‘‘உயிரோட இருக்கும்போது என் பேரு மாத்ருபூதம். இப்போ நான் பேய். Funeralogyபடி என் பேரை பூதம்னு சுருக்கிட்டேன்!’’

‘‘நீங்க பேயானது எப்படி?’’

‘‘ஒரு பழத்தால என் உயிர் போய், நான் பேய் ஆகிட்டேன்.

‘‘என்ன பழம்?’’

‘‘பேயன் பழம்!’’

அப்போது வெள்ளைப் புடவையில் தலை நிறைய கருப்பு கலர் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு ஒருத்தி பிரசன்னமானாள். அவளை என்னிடம் காட்டி, ‘‘மீட் மை மனைவி… காத்துக் கருப்பாயி!’’ என்று அறிமுகம் செய்து வைத்தது பேய்.

அப்போது அங்கு சுடச் சுட ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு வந்தது.

‘‘இவங்க யாரு?’’

மனைவி பேய்: ‘‘இது என்னோட மாமியார் கொள்ளி வாய்ப் பிசாசு! எப்போ பார்த்தாலும் என்னைப் பத்தி தன் பேய் புள்ளைக்கிட்ட போட்டுக் கொடுத்துக்கிட்டே இருக் கும்.’’

மாமியார் கொள்ளி வாய்ப் பிசாசு: ‘‘போட் டுத்தான் கொடுப்பேன். நீ ஆயிரம் சொல்லு ‘பேய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ தெரிஞ் சுக்கோ’’ என்று சொல்லி மருமகளை நோக்கி நெருப்பைக் கக்கியது. பதிலுக்கு மருமகள் பேய் தண்ணீரை வீச… மாமியார் கொள்ளிவாய்ப் பிசாசு அணைந்து மறைந்தது.

‘‘சே! மண்டையைப் போட்டதுக்கு அப்புறமும் இந்த மாமியார்- மருமகள் சண்டை நிக்காது போலிருக்கு’’ என்று சொல்லியபடியே என்னைப் பார்த்து ‘‘நீங்க பேட்டியைத் தொடருங்க சார்…’’ என்றது ஆண் பேய்.

‘‘இதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்தீங்க?’’

‘‘உசிரோட இருந்தேன்!’’

‘‘அது இல்ல பேய் சார்! எங்கே வேலை பார்த்தீங்க?’’

‘‘திகிலன் என்கிற புனைப் பெயரில் பேய்க் கதைங்க எழுதுவாரே, அவருக்கு கோஸ்ட் ரைட்டரா இருந்தேன்!’’

அப்போது பார்த்து, என் பேனாவில் மை தீர்ந்து போய்விட, பேயைப் பார்த்து ‘‘உங்கள்ட்ட இங்க் இருக்குமா?’’ என்றேன்.

‘‘ரெட் இங்க் பரவாயில்லையா…’’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே பார்த்து… ‘‘ஆர்.கே இங்கே வா” என்று கூப்பிட்டார். ஆர்.கே. வந்து நின்றது. நான்: ‘‘யார் இந்த ஆர்.கே?’’

‘‘என்னோட மச்சான் ரத்தக் காட்டேரி. சுருக்கமா செல்லமா ஆர்.கேன்னு கூப்பிடுவேன்.’’ என்று எனக்குப் பதில் சொல்லிவிட்டு, ஆர்.கேவைப் பார்த்து ‘‘சாருக்கு ரெட் இங்க் போட்டுக் கொடு’’ என்று கட்டளையிட்டது பேய்.

என் பேனாவை வாங்கி அதில் ரத்தத்தை ரொப்பிக் கொடுத்தது ஆர்.கே.

பேட்டி தொடர்ந்தது…

‘‘இன்றைக்கு உங்க டூட்டி என்ன? யாரை பிடிக்கப் போறீங்க?’’

‘‘கும்பிடப் போன மனுஷன் குறுக்கே வந்தது மாதிரி… அதான் நீங்க வந்துட்டீங்களே!’’ என்றது என்னைப் பார்த்து.

ஆர்.கே: ‘‘மாமோய்… இவருக்கு ரெட் இங்க் போட்டதுல எனக்கு ரத்த சோகை வந்துட்டு.’’

பேய்: ‘‘அப்போ நீ முதல்ல இவர்கிட்டே ரத்தத்தை உறிஞ்சுக்க. அப்பால நான் இவரைப் புடிச்சுக்கறேன்!’’

உடனே ஆர்.கே என் ரத்தத்தை உறிஞ்ச என் அருகில் நெருங்கி வர… மனைவி பேய் என்னைக் கையைப் பிடித்துக்கொள்ள… மாமியார் கொ.வா.பி என்னை நோக்கி சுடச்சுட நெருங்க… நான் ‘வல்ல பேய்கள் வாலாட்டிக பூதம்… அல்லல் படுத்தும் அடங்கா முனிகள்…’ என்று கந்தர் சஷ்டி கவசத்தை சொல்ல, யாரோ என்னை உலுக்க… எழுந்து பார்த்தால் படுக்கையில் நான். பக்கத்தில் என் மனைவி. அத்தனையும் கனவு.

ஆமென்… ஸாரி ஓமன்!

==
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கிரேசியைக் கேளுங்கள் – பேயோடு ஒரு பேட்டி!-

Post by T.N.Balasubramanian on Sat Apr 11, 2015 8:59 pm

நல்ல தமாஷ் எப்போதும் போல் கிரேசியின் காமடி 
ரசித்தேன் 
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கிரேசியைக் கேளுங்கள் – பேயோடு ஒரு பேட்டி!-

Post by ராஜா on Sun Apr 12, 2015 10:38 am

சிரி கிரேசியின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் நகைச்சுவை இருக்கும் ... புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30921
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கிரேசியைக் கேளுங்கள் – பேயோடு ஒரு பேட்டி!-

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum