உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

Admins Online

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by சிவா on Fri Apr 03, 2015 10:32 pm

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Sagaaptham_2361231f

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் சகாப்தம்.

தமிழ் சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகர் உருவாகி இருக்கிறார். படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அலையடித்தன. சகாப்தம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

கிராமத்தில் இருக்கும் சண்முக பாண்டியன் தன்னைப் போலவே வேலை வெட்டி இல்லாத நண்டு ஜெகனுடன் சுற்றித் திரிகிறார். பவர் ஸ்டாரை நம்பி வேலை தேடி மலேசியா செல்கிறார்கள். அங்கு வேலைக்கு வந்து அடிமையாக அவதிப்படும் தமிழர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார் சண்முக பாண்டியன். இறுதியில் பகை முடித்தாரா? பழி தீர்த்தாரா? தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது க்ளைமாக்ஸ்.

கோயிலில் காணாமல் போன முருகன் சிலையைக் கண்டுபிடித்து தரும் அறிமுகக் காட்சியிலேயே சண்முக பாண்டியனுக்கு விசில் பறக்கிறது.

ஊருக்குப் பெருமை உன்னாலே உற்சாகம் மலரும் தன்னாலே என்று ஊரே கொண்டாட அசத்தலான பாட்டுக்கு கொஞ்சம் முன்னே பின்னே டான்ஸ் ஆடி டயர்ட் ஆக்கி டரியல் பண்ணுகிறார் சண்முக பாண்டியன். ஆனாலும், சண்முக பாண்டியன் என்ட்ரிக்கு கிளாப்ஸ் காதைக் கிழித்தது.

அத்தைப் பெண் நேகா ஹிங் பிறந்தநாள் அன்று காதல் கண்களோடு பார்க்காமல் வெறுமனே அட்டென்ஷனில் நின்று கொண்டு அவர் கொடுத்த ஸ்வீட்டை அவருக்கே ஊட்டிவிட்டு தேமே என்று நிற்கிறார் ஹீரோ.

பவர் ஸ்டாருடன் அடிக்கும் ரகளை, டீக்கடை காமெடி கலாட்டா என்ற பெயரில் செய்யும் மரணக் கடி, நண்டு ஜெகன் காமெடி என்ற பெயரில் பெண்களை கேவலமாகப் பேசுவது என முகம் சுளிக்கும் காட்சிகளே அதிகம்.

மன்னிப்பு என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை என்று பெட்ரோல் பங்க் சண்டைக் காட்சியில் பேசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட அவரது ஆட்களை வெளுத்து வாங்கும் சண்முக பாண்டியனுக்கு அடித்த விசில் சத்தம் காதை ஜிவ்விடவைத்தது.

எதற்காக சண்டை போட்டோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் சொல்லாமல் மவுனம் காக்கும்போது, தேவயானி உண்மை சொல்லும் இடத்தில் 'நீ உன் அப்பா மாதிரி' என உதவி செய்யும் குணத்தைப் பாராட்டும்போது ரசிகர்கள் வலிக்க வலிக்க கை தட்டுகிறார்கள்.

ஆனால், அதே போலீஸ் ஸ்டேஷனில் தான் சண்முக பாண்டியன் அப்பா இருக்கிறார். ரெண்டடி தள்ளி உங்க பையன் உங்களை மாதிரின்னு தேவயானி டயலாக் பேசி இருக்கலாம். இதுல கூட குறியீடு வெச்சிருக்காங்க பாஸ் என முன் சீட்டில் அமர்ந்திருந்தவர் முணுமுணுத்தார்.

மலேசியாவில் வேலை செய்யப் போகிறோம் என்கிற கெத்தொடு பவர் ஸ்டாரிடம் வாங்கிய கைலியைக் கட்டிக்கொண்டு சண்முக பாண்டியனும், நண்டு ஜெகனும் அலப்பறை என்கிற பெயரில் அநியாயம் செய்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு வடிவேலு பாணியில் காமெடி பண்ண டிரை பண்ணியிருக்கீங்க சாரே. இதை கேப்டன் எப்படி கவனிக்காம விட்டார்?

சண்முக பாண்டியனும், நண்டு ஜெகனும் ஒரு வழியாக மலேசியா புறப்படுகிறார்கள். மலேசியாவில் காலடி எடுத்துவைக்கும்போது விமான நிலையத்திலேயே போலீஸ் கைது செய்கிறது. இடைவேளை.

இடைவேளையில் ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டிருந்தவர்களிடம் காதைக் கொடுத்தோம். படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட், கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று எல்லாருமே அவசர கதியில் நடித்திருக்கிறார்கள். சண்முக பாண்டியன் தலை வகிடு கலையாமல் அவ்வளவு கவனமாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட்டும், தேவயானியும் சீரியலை மிஞ்சிய ஓவர் ஆக்டிங்கில் பின்னிப் பெடல் எடுக்கிறார்கள் என்கிற பேச்சுகள் காதில் விழுந்தன.

இரண்டாவது பாதி எப்படி இருக்குமோ என்ற திகிலுடன் உட்கார்ந்தோம். பக்கத்து இருக்கையில் படம் பார்த்தவர் தூங்கியேவிட்டார்.

இன்னொருவர் ஒலிச்சித்திரம் மட்டும் கேட்கிறேன் என்று கண்களை மூடிக்கொண்டார்.

சிங்கம் புலி கூட வேண்டா வெறுப்பில் நடித்திருப்பார் போல. படம் முழுக்க காமெடி என்று கடுப்பைக் கிளப்புகிறார்கள் மை டியர் ஆடியன்ஸ். தாங்க முடியவில்லை. வாய்விட்டு கதறும் அளவுக்கா கலங்கடிப்பது? நீங்களே சொல்லுங்கள்.

அதுவும் மலேசியாவில் நடக்கும் சண்டைக் காட்சியில் குதிப்பதும், தாவுவதுமாக சின்ன குட்டிக்கரணம் கூட அடிக்கிறார் நம்ம ஜூனியர் கேப்டன். ஆனால், ரசிக்கதான் முடியவில்லை. நாமெல்லாம் பாவம்தானே.

நடை, உடை, பாவனை என எதிலும் தன்னைப் பொருத்திக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறார் சண்முக பாண்டியன். சஜஷன் ஷாட்டில் கூட அவர் பார்வை வேறு எங்கோ உள்ளது.

நேகா பேசுவதற்கும், டப்பிங்கும் ஒத்துப்போகவே இல்லை.

நேகா ஹிங்கும், சுப்ரா ஐயப்பாவும்போனில் பேசிக்கொண்டதும் ஒரு குத்துப்பாட்டுக்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கிறது. அந்த அடியே ரதியே குத்துப்பாடலை சிம்பு பாடி இருக்கிறார். சிம்புவின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்? நீங்களே யோசிச்சுப் பாருங்க.

டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலைக்கு சேருவதும், உடனுக்குடன் பல சாகசங்கள் செய்து போலீஸ் நண்பனாக சண்முக பாண்டியன் மாறுவதும் பக்கா டிராமா.

வில்லனிடம் சண்முக பாண்டியன் சிக்கிய நிலையில், கேப்டன் தரிசனம் தருகிறார். அவர் பங்குக்கு கொஞ்சம் அட்வைஸ் செய்து மகனுடன் கைகோர்த்து எதிரிகளைப் பந்தாடுகிறார்.

வில்லன்களிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறார் சண்முக பாண்டியன்.

இதுக்கு மேல முடியல... மன்னிச்சுக்குங்க ஃப்ரெண்ட்ஸ்...

தியேட்டரில் ஒரு குரூப் ஆரம்பத்துல இருந்தே காதைப் பிளக்குற மாதிரி விசில் அடிச்சது. கைதட்டி ஆரவராம் செய்தாங்களே. படம் முடிஞ்சதும் ஏன்? என்னாச்சுன்னு ஒருவரிடம் கேட்டேன்.

படம் சூப்பர் என்றார். நிஜமாவா? என கேட்டதும், 'படம் ஹிட்' என்று சொல்லிவிட்டு சரசரவென கடந்துபோய்விட்டார் ஒருவர்.

வீடியோ பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். என்ன சொல்கிறார்கள் என்று உற்றுக் கவனித்தோம்.

சண்முக பாண்டியன் சூப்பர். கேப்டனைப் பார்த்ததே போதும் என்று சிரித்த முகத்தோடு சொல்லிக் கடக்கிறார்கள்.

நமக்குதான் பிரச்சினையோ என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். அமைதியா இருங்க பாஸ். எல்லாம் கும்பலா வந்திருக்காங்க. படம் நல்லாயில்லைன்னு சொன்னா அவ்ளோதான் என்றார் இன்னொருவர்.

இவங்கள்லாம் குரூப்பா அலையுறாங்களாமாம்.
மக்களே உஷார்!


உதிரன் @ தி இந்து


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by சிவா on Fri Apr 03, 2015 11:28 pm

சகாப்தம் - படம் எப்படி?

இந்தியாவைக் காப்பத்த இப்போது கேப்டன் வாரிசு வந்துட்டாரு... இதுதான் சகாப்தம் படத்தின் ஒன் லைன்!

மலேசியாவுக்கு வேலை தேடி போகும் கிராமத்து இளைஞனா சண்முகபாண்டியன். எதிர்பாரா விதமா துப்பறியும் தனியார் ஏஜென்சியில் வேலைக்குச் சேர்கிறார். மலேசியாவில் இருந்து இந்தியா மார்கெட்ட்டைக் குறிவைத்து மிகப்பெரும் சட்ட விரோத வேலைகள் நடக்குது. அதற்கு இங்கிருந்து வேலைக்குச் செல்லும் இந்தியர்களையே வில்லன் கும்பலின் தலைவன் பயன்படுத்தி வருகிறான். அது என்ன சட்ட விரோத செயல், அதை தடுத்து இந்திய நாட்டுக்கு நன்மை செய்தாரா சண்முகபாண்டியன்... இதுதான் மீதி கதை.

ஃபைட், டான்ஸ் என சண்முகபாண்டியன் பாஸ் ஆனாலும், நடிப்பு, வசனங்கள்னு சற்றே தடுமாற்றம்தான். இதில் சும்மா பறந்து பறந்து, தாவி , குதித்து, அந்தரத்தில் எல்லாம் தொங்கி சண்டை காட்சிகளில் வேலை செய்திருக்கிறார். நேஹா ஹிங்கே, காயத்ரி சுப்ரா இப்படி இரண்டு ஹீரோயின்கள். சும்மாவே வராங்க, போராங்க. இருந்தாலும், நல்லா குத்தாட்டாம் போடுறாங்க. அவ்ளோதான் அவங்களுக்கு வேலை.

அட போங்கப்பா, பவர் ஸ்டார நாங்களே உங்களவிட நல்லா கலாய்ச்சுட்டோம்னு சொல்லத் தோணுது. மத்தவங்களா வராங்க, போராங்க, கொடுத்த வசனத்த பேசியிருக்காங்க. தேவயானி, சென்டிமென்ட் டைம்.

படத்தோட சீன்கள் அங்கங்க டக்டக்குன்னு கட்டாகுது. இல்லை, அப்பிடியே கட்டாகாமலே தொடருது. எடிட்டிங் கொஞ்சம் சுமார். இயக்குநர் சுரேந்திரன் முதல் பாதியிலேயே கதையைத் துவங்கியிருக்கலாம்.

மலேசியாவை இன்னமும் அற்புதமாக காட்சிப்படுத்த மறந்துவிட்டனர். 'அடியே ரதியே' பாடல் செம பீட்.. பின்னணி இன்னமும் பழைய பஞ்சாங்கம்தான்.

சரி... படம் பார்க்கலாமா? கடைசியாக கேப்டன் அவரோட ஸ்பெஷல் லெஃப்ட் லெக் ஃபைட்டோட வராரு, கூடவே நாட்டுக்கு நல்ல கருத்துகள் வேற சொல்றாரு. இதுவே இன்னமும் ஒரு வருஷத்துக்கு போதுமே என நினைப்பவர்கள் கண்டிப்பாக படத்தைப் பார்க்கலாம்!

சினிமா விகடன் குழு


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by M.Saranya on Sat Apr 04, 2015 3:38 pm

தகவலுக்கு நன்றி..............
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by ayyasamy ram on Sun Apr 05, 2015 11:33 am


-
படம் பார்க்கலாமா, வேண்டாமா..?!
-
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by சிவா on Wed Apr 08, 2015 5:59 pm

‘காலை தூக்கும்போது கேப்டன் மாதிரியே இருந்துச்சு!’ ‘சகாப்தம்’ படம் பார்த்த சந்தோஷத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள்...

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) P02a

‘‘நீ பார்த்துட்டியா... நீ பார்த்துட்டியா... நீ பார்த்துட்டியா?’’- தே.மு.தி.க-வினர் இரண்டு மூன்று பேர் சந்தித்தால் தற்போது முதலில் கேட்கும் கேள்வி இதுதான்! ‘எனக்குக் கொடுத்த ஆதரவை நீங்க என்னோட மகன் சண்முகபாண்டியனுக்கும் கொடுக்கணும்!’ என்று விஜயகாந்த் அன்புக்கட்டளை போட... தே.மு.தி.க-வினர் தியேட்டர் வாசலிலேயே தவமிருக்கிறார்கள். தே.மு.தி.க-வினர் மத்தியில் இப்போது சண்முகபாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ பற்றி மட்டுமே பேச்சு!

‘கூடுமான வரைக்கும் நம்ம கட்சிக்காரங்க எல்லோரும் குடும்பத்தோடு போய் படம் பாருங்க. யாரும் பார்க்காம இருக்கக் கூடாது. கேப்டன் அடுத்த முறை எப்போ உங்களைப் பார்த்தாலும் ‘சகாப்தம்’ பற்றி கேட்பாரு!’ என்று சென்னையில் இருந்து மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவு போயிருக்கிறது. இதனால் பல ஊர்களில், ‘யாரெல்லாம் படம் பார்க்கவில்லை’ என்ற லிஸ்டையும் ஒரு குரூப் எடுத்தபடியே இருக்கிறது.

படம் ரிலீஸ் அன்று காலை தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் யாருக்கு போன் போட்டாலும், ‘‘சார் தியேட்டர்ல இருக்கேன்... வெளியில வந்துட்டு பேசுறேன்!’’ என்றே பதில் வந்தது. படம் பார்த்துவிட்டு வந்த தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம்.

மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், ‘‘ ‘சகாப்தம்’ படத்துல தம்பி சொல்லியிருக்கும் மெசேஜை எல்லோரும் கவனிக்கணும். உள்ளூர்லயே எவ்வளவோ வேலைகள் இருக்குது. இங்கயே உழைச்சு நம்ம வீட்டுக்கும் நாட்டுக்கும் கெளரவமா வாழலாம். ஆனால், பலருக்கும் வெளிநாட்டு மோகம்தான். அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுது என்பதை தோலுரிச்சு காட்டியிருக்கு தம்பி. அவர் போடுற ஒவ்வொரு ஃபைட்டும் செம ஹிட்டு. இது முதல் படம்தானான்னு நம்பவே முடியலை. ஒரு ஸீன்ல, ‘மன்னிப்பு.... எங்க பரம்பரைக்கே பிடிக்காத விஷயம்!’னு சொல்லுவாரு பாருங்க... அப்படியே எங்க தலைவரைப் பார்க்கிற மாதிரியே இருந்துச்சு. எங்க கேப்டன் 30 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவை கட்டுப்பாட்டில் வெச்சிருந்தார். இனி தமிழ் சினிமா தலைமுறை எங்க சண்முகபாண்டியன் கட்டுக்குள் இருக்கும். ஏன்னா தமிழ் சினிமாவுல இவ்வளவு பெரிய ஹைட்டு வெயிட்டான ஹீரோ யாருமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், தமிழ் சினிமாவுல 6 அடி 7அங்குலம் யாருமே கிடையாது. சத்யராஜ்கூட 6 அடி 5 அங்குலம்தான். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், க்ளைமாக்ஸ்ல கேப்டன் வருவது. அவர் வரும்போது தியேட்டரே அதிருது. அவர் வருஷத்துக்கு ஒரு படமாவது நடிச்சா நல்லா இருக்கும். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்காக இப்போதும் இருக்காங்க!’’

அடுத்து நாம் பேசியது சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அழகாபுரம் மோகன்ராஜ். “முதல் படத்துலயே அவர் போட்ட ஃபைட்ல எங்க கேப்டனை ஞாபகப்படுத்திட்டார். கேப்டன் எப்படி லெக் ஃபைட் பண்ணுவாரோ அதே மாதிரி பண்ணியிருக்கிறார். கேப்டன், வில்லனோட நெஞ்சு வரைக்கும் காலை தூக்கி உதைப்பார். இவரோட ஹைட்டுக்கு வில்லனோட தலை வரைக்கும் தூக்கி அடிக்கிறது அதிரடியா இருக்குது. அப்படியே, காலை தூக்கும்போது கேப்டன் மாதிரியே இருந்துச்சு. டான்ஸும் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். அவர் பேசுற ஒவ்வொரு டயலாக்குமே பிரமாதம். இன்னைக்கு மாஸ் ஹீரோன்னு சொல்ற விஜய், தனுஷ், ‘ஜெயம்’ ரவின்னு எல்லோருக்குமே முதல் படம் வெற்றி. இவரும் அதேபாணியில் வந்திருக்காரு. இதுமாதிரியான ஆக்‌ஷன் படங்களா மட்டும் இல்லாம ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘சின்னக்கவுண்டர்’ மாதிரியான ஆக்டிங்கை வெளிப்படுத்துற படமும் நிச்சயமா பண்ணுவார்’’ என்று சொல்கிறார்.

பண்ருட்டி எம்.எல்.ஏ சிவக்கொழுந்துவிடம் பேசினோம். “கட்சிக்காரங்க எல்லோருக்குமே படத்தைப் பார்த்துட்டு அப்படி ஒரு சந்தோஷம். எங்க கேப்டனையே திரையில பார்த்த மாதிரி இருந்துச்சு. ஃபைட் சீன்ல பொளந்து கட்டியிருக்காரு. அவருக்கு முதல்படம்னு யாருகிட்ட சொன்னாலும் நம்பவே மாட்டாங்க. பண்ருட்டியில முதல் நாள் எல்லா ஷோவும் ஹவுஸ்ஃபுல்!’’ என்று சந்தோஷத்துடன் பேசுகிறார்.

கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ சுபா சொல்வதைக் கேளுங்கள்.

‘‘பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான அறிவுரை சொல்லும் படம். சொல்லப்போனால் இது படம் இல்லை... பாடம்! கேப்டன் தன்னோட மகன் படம் என்பதற்காக மட்டும் இதுல நடிக்கலை. இதுக்கு முன்னாடி விஜய்க்காக ‘செந்தூரபாண்டி’ல நடிச்சாரு. சூர்யாவுக்காக ‘பெரியண்ணா’வுல நடிச்சாரு. அவுங்க எல்லாமே இன்னைக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்கள். எங்க சண்முகபாண்டியனும் அந்த இடத்தைத் தொட இன்னும் வெகுநாட்கள் இல்லை!’’

தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் படம் பார்த்த சந்தோஷத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. ‘‘படம் பார்த்தபோது எங்க ஜூனியர் கேப்டனோட ஆக்‌ஷனைப் பார்த்து எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை. ஆக்‌ஷன், டான்ஸ், மெசேஜ்னு தலைவர் படம் எப்படி இருக்குமோ அப்படியே இருக்குது. கட்சிக்காரங்க எல்லோரையும் குடும்பத்தோட படம் பார்க்கச் சொல்லியிருக்கோம்” என்றார் நெகிழ்ச்சியோடு.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும்

தே.மு.தி.க-வின் கொள்கைபரப்புச் செயலாளருமான சந்திரகுமாரிடம் பேசினோம். “பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இயல்பான முகம் சண்முகபாண்டியனோடது. அதுதான் அவருக்கான பெரிய ப்ளஸ். மக்களை ரொம்பவும் ஈஸியா ஈர்த்துட்டாரு. தியேட்டர்ல படம் பார்த்த பெண்கள் பலரும், ‘நம்ம பையன் மாதிரியே இருக்கான்!’னு பேசிகிட்டாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி 20 வருஷம் இருந்தாங்க. அடுத்து ரஜினி, கமல். அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா கேப்டன், சத்யராஜ். இப்போ விஜய், அஜித், சூர்யா. அடுத்த தலைமுறை என்றால் அது சண்முகபாண்டியன்தான். போன தலைமுறை நடிகர்களின் படம் இந்த தலைமுறை ரசிகர்களுக்குப் பிடிக்காது இல்லையா? இப்போ இருக்கும் யங்ஸ்டர்ஸ்க்கு சண்முகபாண்டியன் பிடிக்கும்’’ என்று உறுதியாகச் சொல்கிறார்.

திருக்கோவிலூர் எம்.எல்.ஏ வெங்கடேசன், ‘‘பெட்ரோல் பங்க்ல ஒரு ஃபைட் ஸீன் வரும். எனக்கு கண் கலங்கிடுச்சு. தியேட்டர்ல விசில் சத்தம் அடங்குறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. சமூகவிரோதச் செயல்களைக் கண்டுபிடிச்சு தண்டிக்கிறதுதான் படத்தோட ஒன்லைன். சண்முகபாண்டியன் ஒரு ஆளாக மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார். இதுநாள் வரை ஆக்‌ஷன் என்றால், கேப்டன்தான் நினைவுக்கு வருவார். இனி சண்முகபாண்டியன்தான் அந்த இடத்தைப் பிடிப்பார்’’ என்றார்.

அப்புறம் என்ன தம்பி?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by ayyasamy ram on Wed Apr 08, 2015 7:22 pm

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) 103459460
-
இனி சண்முகபாண்டியன்தான் அந்த இடத்தைப் பிடிப்பார்’’ என்றார்.
-
நம்பிக்கைதானே வாழ்க்கை...!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by T.N.Balasubramanian on Wed Apr 08, 2015 7:37 pm

இவர் எதில் பம்பரம் விடப்போகிறார் ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by ராஜா on Thu Apr 09, 2015 11:04 am

வாழ்த்துகள் சண்முகபாண்டியனுக்கு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by சிவா on Fri Apr 10, 2015 12:57 pm

@ayyasamy ram wrote:
-
படம் பார்க்கலாமா, வேண்டாமா..?!
-
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பார்க்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்!

தரவிறக்கம் செய்து வைத்துள்ள படத்தையே நான் பார்க்க வேண்டாம் என்றிருக்கிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by krishnaamma on Fri Apr 10, 2015 1:18 pm

//சண்முக பாண்டியன் சூப்பர். கேப்டனைப் பார்த்ததே போதும் என்று சிரித்த முகத்தோடு சொல்லிக் கடக்கிறார்கள்.

நமக்குதான் பிரச்சினையோ என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். அமைதியா இருங்க பாஸ். எல்லாம் கும்பலா வந்திருக்காங்க. படம் நல்லாயில்லைன்னு சொன்னா அவ்ளோதான் என்றார் இன்னொருவர்.////காலை தூக்கும்போது கேப்டன் மாதிரியே இருந்துச்சு!’ ‘சகாப்தம்’ படம் பார்த்த சந்தோஷத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள்...//


//பார்க்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்! 

தரவிறக்கம் செய்து வைத்துள்ள படத்தையே நான் பார்க்க வேண்டாம் என்றிருக்கிறேன்!//ஹா................ஹா...................ஹா............ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Empty Re: சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை