சென்னை : நாட்டில் நல்லதோ, கெட்டதோ என்ன நடந்தாலும் உடனடியாக அது தொடர்பாக கண்டனம் அல்லது ஆதரவு அறிக்கை வெளியிடுவது நமது கட்சித் தலைவர்களின் வழக்கம். அந்த வகையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் காணப்படுகின்றனர். எனவே, இந்திய அணியின் தோல்வி குறித்து நமது தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படி இருக்கும் என்று யாரோ ஒரு புண்ணிவான் ரொம்பக் கஷ்டப்பட்டு கற்பனை செய்து அந்த அறிக்கையை வாட்ஸ் ஆப் போட்டுள்ளார். அது இப்போது காட்டுத் தீயாக பரவி செல்களை சூடாக்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பில் வரும் அந்த கற்பனை அறிக்கை இதுதான்... நீங்களும் படித்து ரசியுங்கள்...
 ‪
#‎எழுச்சி_தமிழர்‬: இந்திய அணி தோல்விக்கு பாமக ராமதாஸ் அவர்களே காரணம்.சிறுபான்மை கிறிஸ்த்தவ மக்களுக்கு கிடைத்த வெற்றி. 

‪#‎கலைஞர்‬: ஆஸ்திரேலிய அதிமுகவினரின் அராஜக விளையாட்டை திமுக கண்டிக்கிறது. 

#‎ஓபிஎஸ்‬: மாண்புமிகு அம்மா அவர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் 

#‎கிருஷ்ணசாமி‬: கொம்பன் படமும் நெல்லை தூத்துக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதுமே தோல்விக்கு காரணம்.தோனி தலைமையிலான இந்திய அணியை கலைக்க வேண்டும். 

‪#‎சுப_வீரபாண்டியன்‬: சென்ற ஆண்டு உலககோப்பையை வாங்கியதின் எதிர்வினை. 

‪#‎கீ_வீரமணி‬: ஆதிக்க சாதி இந்து சக்திகளுக்கு எதிராக கிறித்துவ ஆஸ்திரேலியவினருக்கு கிடைத்த வெற்றி. 

‪#‎விஜயகாந்த்‬: மிகப்பெரிய மைதானத்தில் 11 பேர் பீல்டிங் செய்யும் வேளையில் நம் அணியினர் இரண்டு பேர் மட்டுமே பேட்டிங் செய்ததும் மற்ற 9பேர் உட்கார்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுமே இந்திய அணியை தோல்வியடையச் செய்தது. ‪#‎ஜிகே_வாசன்‬: காமராஜர் தலைமையிலான இந்திய அணி அமையாததே காரணம் 

‪#‎தமிழிசை‬: விரைவில் அமித்ஷா மோடி தலைமையில் கோவையில் உலககோப்பையை வெல்வோம். ‪#‎ஜெயா‬: தெய்வம் விதி சதி செய்துவிட்டது. 

‪#‎வைகோ‬: உலககோப்பையை முல்லைபெரியார் மைதானத்தில் நடத்தாதே காரணம் 

‪#‎சீமான்‬: நம் அணியில் ஈழத்தமிழர்கள் இல்லாததும்,சிங்கள அம்பயர்கள் இருந்ததும் தோல்விக்கு காரணம்.
நன்றி : ஒன் இந்தியா
ரமணியன்