ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏமன் உள்நாட்டுப் போர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Mar 27, 2015 5:08 pm

First topic message reminder :

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 03, 2015 10:12 pm

ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்?

உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்து உள்ள ஏமனில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சுக்கள் 100-க்கும் மேற்பட்டோர்கள் சிக்கிஉள்ளனர். அவர்கள் சம்பளத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்புவதா அல்லது வாங்கிய கடனை அடைக்க கூடுதல் சம்பளத்தில் சேர்ந்த வேலையில் தொடர்ந்து நீடிப்பதா என்ற சூழ்நிலையில் மிகவும் கடுமையான முடிவை எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்திய அரசு ஏமனில் சிக்கிஉள்ள இந்தியர்களை 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்கள் நர்சுகளே.

ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரை தங்கள் வசம் கொண்டுவந்து உள்ளனர். அவர்களை தடுக்கும் விதமாக சவுதி அரேபியா தலைமையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டான ஒரு சங்கடத்திற்கு இந்திய மருத்துவ தொழிலாளர்கள் எதிர்க்கொண்டு உள்ளனர். ஏமனில் சிக்கி தவிப்பர்கள் பெரும்பாலானோர் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அதிகளவு கடன் வாங்கி படிக்க வைத்து தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு பணத்தை சம்பாதிப்பதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

கடன்கள் வாங்கி படிக்கும் அவர்கள், கூடுதல் கட்டணம் இடைத்தரகர்களுக்கும் கட்டி வெளிநாட்டில் வேலை பெறுவதற்காக கூடுதல் கடன் அடைகின்றனர். இதற்கிடையே நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு ஆள் எடுப்பதை தடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

ஏடனில் உள்ள அல்-நாஹிப் மருத்துவமனையில் வேலை செய்துவரும் இந்திய ஆண் நர்சு ஜாய் பேசுகையில், "நான் தற்போது இங்குதான் தங்கிஉள்ளேன்," என்று தொலை பேசியில் தெரிவித்துஉள்ளார். ஏமனில் சிக்கிதவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்தியா தீவிரமாக இறங்கி உள்ளது. ஏடனில் இருந்து கடந்த செவ்வாய் அன்று இந்திய கடற்படை விமானம் 349 இந்தியர்களுடன் வெளியேறியது. ஆனால் ஜாய் இந்திய கப்பலில் ஏற கூடாது என்று முடிவு எடுத்துவிட்டார்.

"இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரபலமான மருத்துவமனை நர்சுக்கு ஒருமாதம் சம்பளமாக 400 அமெரிக்க டாலர்கள் வழங்கும். ஆனால் தங்கும் இடம் மற்றும் உணவு மிகவும் அதிகவிலையாக இருக்கும். ஆனால் ஏமன் எனக்கு மிகவும் நன்றாக உள்ளது. என்னால் எனது சம்பளத்தை வங்கியில் சேமிக்க முடியும்" என்று ஜாய் கூறிஉள்ளார். வேலையில் அனுபவம் இல்லாத நிலையில், நல்ல இடத்தில் வேலை கிடைக்க சுமார் லட்சக்கணக்கில் இடைத்தரகருக்கு பணம் கொடுத்து உள்ளார். ஜாய் தற்போது மாதத்திற்கு 600 அமெரிக்க டாலர்கள் (ரூ. 37000) சம்பளமாக பெறுகிறார். ஜாய்க்கு அங்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை இலவசம் ஆகும். தன்னால் பெற்றோருக்கு பணம் அனுப்ப முடியும், கல்வி கடனை அடைக்க முடியும். என்று கூறி உள்ளார்.

ஏடனில் இருந்து கப்பல் மூலம் இந்தியா மக்களை வெளியேற்றிய நிலையில், சனாவில் இருந்தும் மக்களை விமானம் மூலம் வெளியேற்றி உள்ளது. தொடர்ந்து சவுதி தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்துவதால் கூடுதல் விமானங்கள் அங்கு செல்ல முடியவில்லை. கேரளாவில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி மையங்கள் சுமார் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. ஊள்ளூரில் வழங்கப்படும் ஊதியம் வருத்தம் அளிக்கக்கூடிய நிலையில், கூடுதல் ஊதியம் பெறவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். கேரளாவில் நர்சுகளுக்கு தொடக்க ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. வயது மூப்பு மற்றும் அனுபவம் அதிகமாக இருந்தால் வருமானமானது ரூ. 25 ஆயிரமாக அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கு மிகவும் கடும் போட்டி உள்ளது. இதற்கிடையே வேலைக்கு செல்ல விரும்புவர்களிடம் அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பு எனகூறி கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரம் கொச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஏஜெண்ட் நிறுவனம் ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். ஊழல், சதிதிட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றி பெயரில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கி உள்ளது. நிறுவனம் சுமார் 1200 நர்சுகளை துபாய்க்கு வேலைக்கு செல்லை எடுத்து உள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 19.5 லட்சம் வரையில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது சட்டமுறை கட்டணத்தை விட 100 மடங்கு அதிகமாகும்.

இந்திய தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் நிபந்தனைகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களால் வெளிநாடுகளுக்கு நர்சுகள் பணியமர்த்தப்படுவதற்கு மத்திய அரசு தடைவிதித்து உள்ளது. மே மாதத்தில் இருந்து இரண்டு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே கேரளாவில் செயல்பட அனுமதி அளிக்கப்படும். சாதாரண கட்டணம் மற்றும் இராஜதந்திர வழிகளில் நாடுகளில் லஞ்சத்தை தடுப்பது ஆகியவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 03, 2015 10:12 pm

ஏமனில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 519 பேர் உயிரிழப்பு - ஐ.நா. அறிவிப்பு

உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 519 பேர் உயிரிழந்தனர் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011–ம் ஆண்டு முதல் அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையை பிடிப்பதற்கு, அதிபர் ஆதரவு படையினருடன் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அவர்களுடன் கரம் கோர்த்துள்ள முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கடந்த சில நாட்களாக கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்கள் வலுவான நிலைக்கு முன்னேறியதை தொடர்ந்து அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதி, சவுதி அரேபியாவுக்கு தப்பினார்.

இந்த நிலையில், ஏடனில் கடுமையான தாக்குதல் நடத்தி, அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் இதை உறுதி செய்தனர். இந்த தாக்குதலின்போது 18 சிவிலியன்கள் உள்பட 44 பேர் கொல்லப்பட்டனர். ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வந்ததை கட்டுப்படுத்துவதற்கு சவுதி கூட்டுப்படைகள் மேற்கொண்ட முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

நாட்டின் அதிபரான அப்த்–ரபு மன்சூர் ஹாதி தலைநகர் சனாவில் இருந்து வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து உள்ளார். மேலும், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் அவர் சவுதி அரேபியாவைக் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரேபியா, ஏமனில் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிராக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 9 அரபு நாடுகள் ஏமன் அதிபருக்கு ஆதரவாக இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவுடன் கைகோர்த்து உள்ளது. அங்கு இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 519 பேர் உயிரிழந்தனர் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது. இவர்களில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர். சவுதி அரேபியா தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தாலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் நடந்த போரில் 1,700 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் வேலரி அமோஸ் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 03, 2015 10:23 pm

சிரியாவின் பாதையில் போகிறதா ஏமன்?

உள்நாட்டுப் போர் எனும் சாபம் ஏமன் நாட்டையும் விட்டுவைக்க வில்லை. ஏமனின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே மோதல் முற்றிவிட்டதால் அங்கு வாழும் மக்களுக்குச் சொல்ல முடியாத துயரம் தொடங்கிவிட்டது.

வெவ்வேறு ஆயுதக் குழுக்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத ஏமன் அரசு, உதவிக்கு அழைத்ததால் ‘வளைகுடா கூட்டுறவு கவுன்சில்’ என்ற அமைப்பில் உள்ள நாடுகள் தங்களுடைய ராணுவங்களுடன் உதவிக்குச் சென்றுள்ளன. இந்த நாடுகளுக்கு சவூதி அரேபியா தலைமை தாங்குகிறது. ஏமனில் உள்ள ஹவுதி புரட்சிப் படைகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா வான் தாக்குதலை நடத்துகிறது. எகிப்து, ஜோர்டான் போன்ற அரபு நாடுகளும் பாகிஸ்தான், சூடான் ஆகியவையும் உதவிவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தத் தாக்குதலுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்க அரசு செய்துவருகிறது.

தன்னுடைய போட்டியாளரான ஈரானின் செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே சவூதி அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. தன்னுடைய நட்பு நாடான சவூதி அரேபியாவுக்காகவும் போட்டிக் குழுக்களின் தாக்குதலால் நசுக்கப் பட்டிருக்கும் ஏமனின் இடைக்கால அரசுக்காகவும் அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது. ஏமனின் இடைக்கால அரசுக்கு எதிராகத் தாக்குதலை நடத்திவரும் ஹவுதிகளுக்கு ஈரான் பண உதவியும் ஆயுத உதவியும் அளிப்பதாக சவூதி அரேபியாவும் அதன் தோழமை நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

ஹவுதிகள் ஜைதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஏமனை நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர் அப்துல்லா சாலேவுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள்தான் அவர்கள். இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டபோது ஹவுதிகளுக்கு அதில் பிரதிநிதித்துவமோ, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவமோ தராமல் ஒதுக்கிவைக்கப்பட்டனர். அதனாலேயே அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராட ஆரம்பித்தார்கள்.

ஏமன் தலைநகரம் சானா உட்பட நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஹவுதிகள் மட்டுமல்ல, அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் அரசுக்கு எதிராக, அன்சர் அல்-ஷாரியாவுடன் இணைந்து அல்-காய்தா நடத்தும் தாக்குதலும் ஏமனுக்குத் தலைவலியாக உருவாகி யிருக்கிறது. ஹவுதிகளுக்கு எதிராக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நடத்தும் தாக்குதல், மறைமுகமாக அல்-காய்தாவுக்குத்தான் வலுவை அளிக்கும்.

ஏமன் மக்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். இடைக்கால அரசின் செயல்படாத தன்மையால் மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படவில்லை, நாட்டிலும் அமைதி திரும்பவில்லை. பொருளாதாரமும் வலுவிழந்துகொண்டுவருகிறது. எனவே, அரசை எதிர்க்கும் குழுக்கள் வலுவடைந்துவருகின்றன. தெற்குப் பகுதியில் ஹவுதிகள் தங்களை வலுப்படுத்திக்கொண்டு தங்களுடைய செல்வாக்கை வலுப்படுத்தியிருந்தார்கள். அரசு அவர்களைச் சமமாக நடத்தியிருந்தால், பிரச்சினை இந்த அளவுக்குப் பூதாகாரமாக ஆகியிருக்காது. இப்போதோ சவூதி தலையிட்டுவிட்டதால் எதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

சிரியாவில் வெவ்வேறு குழுக்கள் தங்களுடைய பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு மற்ற குழுக்களுடன் சண்டையிட்டுவருவதைப் போல் ஏமனின் நிலையும் ஆகிவிட்டது. அரபு வசந்தத்தின் மூலம் துளிர்த்த ஜனநாயக நம்பிக்கையை இந்த உள்நாட்டுப் போர் துடைத்தெறிந்துவிட்டதுதான் அவலம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Apr 07, 2015 3:14 am

ஏமன் போர், சவுதி அரேபியாவிற்கு ராணுவஉதவி குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் விவாதம்

ஏமனில் அரசு தரப்பிற்கும் - கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் சண்டை தீவிரம்அடைந்து உள்ளநிலையில் சவுதி அரேபியாவின் நெருக்கடி தொடர்பாக முடிவு எடுக்க பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் விவாதம் தொடங்கி உள்ளது.

ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. தீவிரவாதிகளும் ஏடன் நகரில் முன்னேறி வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவஉதவி அளிக்க வேண்டும் என்று அதன் நட்பு நாடான சவுதிஅரேபியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் தடைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை கிளர்ச்சியாளர்க்கு எதிரான போரில் இறங்க வேண்டும் என்று சவுதி அரேபியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில் நடைபெறும் போரில் சவுதி அரேபியாவிற்கு உதவிசெய்வது தொடர்பாக முடிவு எடுக்க பாகிஸ்தானின் விவாதத்தை தொடங்கி உள்ளது. முக்கிய முடிவினை எடுப்பதற்கு பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவிற்கு உதவிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததைஅடுத்து சிறப்பு பாராளுமன்ற கூட்டம் தொடங்கி உள்ளது. சிறப்பு கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி காவாஜா ஆசிப், ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் சேரவேண்டுமா என்பது தொடர்பாக விவாதம் நடத்த தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

பாகிஸ்தான் மந்திரி தனது கொள்கைஅறிக்கையில், ஏமன் விவகாரத்தில் அரசியல் மற்றும் ராஜதந்திர அணுகுமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். “பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இவ்விவகாரத்தில் ஆழமான விவாதமானது அரசு ஒரு முக்கியமான முடிவினை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்.” பிரதமர் நவாஸ் செரீப் அண்டைய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக துருக்கியும் சென்றார். இதுதொடர்பாக கூடுதல் ஆலோசனைக்காக பிறநாடுகளுக்கும் சென்றார். சவுதி அரபியா விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவ வீரர்களை கேட்டு உள்ளது. நட்பு நாடான சவுதி அரேபியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்பட்டால், தனது நட்பு நாட்டின் பாதுகாப்புக்காக கூட்டணி நாடுகளுடன் பாகிஸ்தான் கைகோர்க்கும் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் ஆசிப் தெளிவு படுத்தினார்.

காலை பாராளுமன்றம் தொடங்கியபோது, அவையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இல்லை, இலங்கை அதிபர் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர் அவைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் பிரதமர் நவாஸ் செரீப் அவைக்கு வருவரையில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சவுதிக்கு உதவி செய்வது தொடர்பாக பாகிஸ்தான் விரைவில் முடிவு எடுக்க உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Apr 07, 2015 3:15 am

ஏடனில் கடந்த 24 மணிநேரங்களில் நடைபெற்ற சண்டையில் 53 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனில் கடந்த 24 மணிநேரங்களில் நடைபெற்ற சண்டையின்போது 53 பேர் உயிரிழந்தனர் என்று ராணுவ மற்றும் மருத்துவ துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் கிளர்ச்சியாளர்களின் பல்வேறு நிலைகள் அழிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அங்கு இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. இந்தநிலையில் ஏமனில் ஏற்கனவே தாக்குதல் நடத்தி வரும் அல்கொய்தா தீவிரவாதிகள், அங்குள்ள 2–வது பெரிய ராணுவ தளமான முகல்லா தளத்தில் திடீர் தாக்குதல் நடத்தி, முகல்லா நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

தொடர்ந்து அங்கு இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனில் கடந்த 24 மணிநேரங்களில் நடைபெற்ற சண்டையின்போது 53 பேர் உயிரிழந்தனர் என்று ராணுவ மற்றும் மருத்துவ துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன. பொதுமக்களில் 17 பேரும், அதிபர் மன்சூர் ஹதியின் படைவீரர்கள் 10 பேரும் சண்டையில் பலியாகினர் என்று மருத்துவதுறை தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதேபோல் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்ற சண்டையில் பலர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அங்கு இரதரப்பு இடையே சண்டை நீடித்து வருவதாகவும், கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரை பிடிக்க தீவிரம் காட்டிவருவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏமனில் உள்நாட்டுப்போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து உள்ளது. ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையை பிடிப்பதற்கு, அதிபர் ஆதரவு படையினருடன் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அவர்களுடன் கரம் கோர்த்துள்ள முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கடந்த சில நாட்களாக கடுமையாக சண்டையிட்டனர். கிளர்ச்சியாளர்கள் வலுவான நிலைக்கு முன்னேறியதை தொடர்ந்து அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதி, சவுதி அரேபியாவுக்கு தப்பினார். அப்போது ஏடனில் கடுமையான தாக்குதல் நடத்தி, அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கடந்த 2-ம் தேதி கைப்பற்றினர். ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் இதை உறுதி செய்தனர்.

ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வந்ததை கட்டுப்படுத்துவதற்கு சவுதி கூட்டுப்படைகள் மேற்கொண்ட முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by ரிபாஸ் on Tue Apr 07, 2015 10:06 am

தகவலுக்கு நன்றி தல
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by krishnaamma on Tue Apr 07, 2015 1:54 pm

தகவலுக்கு நன்றி சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by M.Saranya on Tue Apr 07, 2015 2:13 pm

தகவலுக்கு நன்றி............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Wed Apr 08, 2015 3:53 pm

ஏமனில் இருந்து இதுவரை 4,000 இந்தியர்களை மீட்டது கடற்படை; வெளிநாட்டினர் 230 பேர் மீட்பு

மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கும் ஏமனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய குடும்பம். |படம்: ராய்ட்டர்ஸ்.
மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கும் ஏமனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய குடும்பம். |படம்: ராய்ட்டர்ஸ்.

போர்ச் சூழல் நிலவும் ஏமனில் இருந்து இதுவரை 4,000 குடிமக்களை மீட்டுள்ள இந்திய கடற்படை, 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டுள்ளது.

ஏமனிலிருந்து சிக்கி தவித்த இந்தியர்கள் பலகட்டமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களையும் மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் ரஹாத் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

ஆபரேஷன் ரஹாத் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை மற்றும் கடற்படையின் உதவியோடு இதுவரை சுமார் 4000 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அந்த துறையின் செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறும்போது, "ஏமனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் பணி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அங்கிருந்து வெளியேற நினைப்பவர்கள் நமது இறுதிகட்ட பயணத்தில் இணைய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 700-க்கும் அதிகமானோர் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் கிட்டத்தட்ட 600 பேர் மிக மோசமான நிலையில் இருக்கும் சனா பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்கள். பெரும்பாலானோரை மீட்கும் பணி நிறைவுபெற்றது. எஞ்சியவர்களை கடல் போக்குவரத்து வழியாக மீட்டு கொண்டு வரும் பணி சில நாட்களுக்கு தொடரும்" என்றார்.

இந்தியர்களை மட்டுமல்லாமல் 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டவர்களை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த சில வருடங்களில் உக்ரைன், இராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது அங்கிருக்கும் மக்களை வெளியேற்றும் பணிகளில் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவியது.

கடந்த 2006-ல் நடந்த லெபனான் போருக்கு பின்னர் மீட்பு பணிக்காக கடற்படை போர் கப்பல்களை ஈடுப்படுத்தப்படாமல் இந்தியா தவிர்த்து வந்தது. ஆனால் ஏமன் நிலவரத்தில் மீட்பு பணிக்காக பல ஆண்டுகளுக்கு பின்னர் கடற்படை போர் கப்பல் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Wed Apr 08, 2015 3:57 pm

ஏமனில் தவித்த 11 இந்தியர்களை மீட்டது பாக். கடற்படை

போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனின் தென்கிழக்கு நகரமான முக்காலாவில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 11 இந்தியர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.

இந்தியர்கள் 11 பேரும் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மூலம் கராச்சி சென்றடைந்தனர். இந்தத் தகவலை, இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கராச்சியில் உள்ள 11 இந்தியர்களையும் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்புவதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இதற்கான பணிகளை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசீத் செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்வந்து செய்த இந்த மீட்புப் பணி உதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Wed Apr 08, 2015 4:44 pm

ஏமன் உள்நாட்டுப் போர்: சவுதி கூட்டணி படைகளுக்கு ஆயுத சப்ளையை விரைவுபடுத்தும் அமெரிக்கா

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சவுதி அரசுக்கு ஆயுத சப்ளையை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்படுகிறது.

சவுதி அரேபியா குண்டு வீச்சு தொடங்கிய மார்ச் 19 முதல் இதுவரை அதாவது 3 வாரத்தில் 540 பேர் பலியாகி உள்ளனர். 1700 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார். போரின் போது 74 குழந்தைகள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சவுதி அரசுக்கு வழங்கும் ஆயுதங்கள் துரிதமாக சென்றடைய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை இணை மந்திரி டோனி பிளிங்கன் ரியாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ஏமனை ஆயுத பலத்தால் ஒருபோதும் கைப்பற்றிவிட முடியாது என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாங்கள் ஆயுதங்கள் சப்ளையை விரைவுபடுத்தியிருக்கிறோம். உளவுத்துறை பகிர்வை அதிகரித்திருக்கிறோம். இதற்காக கூட்டு ஒருங்கிணைப்பு திட்ட மையத்தையும் ஏற்படுத்தி உள்ளோம்” என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சரவணன் on Thu Apr 09, 2015 3:03 pm

எல்லாரும் கிளம்பி வாங்க சம்பரிச்சது போதும்...இங்க விவசாயம் பாக்க ஆள் இல்லை..
ம்ம்ம் கிளம்புங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கிட்டு ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

.. :நல்வரவு:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by ராஜா on Thu Apr 09, 2015 3:36 pm

@சரவணன் wrote:எல்லாரும் கிளம்பி வாங்க சம்பரிச்சது போதும்...இங்க விவசாயம் பாக்க ஆள் இல்லை..
ம்ம்ம் கிளம்புங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கிட்டு ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

.. :நல்வரவு:
மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Thu Apr 09, 2015 10:35 pm

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 'உதவி செய்யும்' ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 'உதவி' செய்து வரும் ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அரபு நாடுகள் தாக்குதல்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுதி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுதி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன. சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன. தொடர்ந்து அங்கு இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதுவரையில் 520-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏமனின் துறைமுக நகரான ஏடனில் பெரும் போர் முற்றிஉள்ளது. ஏடன் நகரை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான படை தாக்குதல் நடத்தி வருகிறது. உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய ஏற்கனவே அமெரிக்கா முன் வந்துள்ளது. ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஏமனில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் வெளிப்படையாக ஈரான் இதனை மறுத்து வருகிறது.

இருப்பினும், ஏமனின் தெற்குகடல் பகுதியில் உள்ள ஏடன் வளைகுடாவிற்கு ஈரான் இரண்டு போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. கடற்படை கமாண்டர் ஹாபிபோல்லாக் சய்யாரி, கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை ஆகும் என்று கூறினார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 'உதவி' செய்து வரும் ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

“மத்திய கிழக்கில், ஈரான் நாட்டால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உணரும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும், பிராந்தியத்தில் ஒரு ஸ்திரமின்மையை ஈரான் உருவாக்க முயற்சி செய்தால் அமெரிக்கா அமைதியாக இருக்காது,” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரான் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அனைத்து உதவிகளும் ஈரானில் இருந்து கிடைக்கிறது என்று தெளிவாக வெளிப்படையாகவே தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் ஈரான் நாட்டின் விமானங்கள் ஏமனுக்குள் பறக்கிறது. பிராந்தியத்தில் ஸ்திரமின்மை இல்லாத நிலைஏற்படும் போது அமெரிக்கா அமைதியாக இருக்காது என்பதை ஈரான் தெரிந்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளது. என்று கெர்ரி தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் பங்குபெறுவது தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. அங்கும் எதிர்ப்பும் மற்றும் ஆதரவும் வெளியாகி வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 10, 2015 12:40 pm

உலகம் வியந்த இந்திய கடற்படையின் மீட்புப் பணிகள் நிறைவு: ஏமனில் தூதரகம் மூடல்

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய இந்திய கடற்படையின் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் ஏமனில் இருந்து 960 வெளிநாட்டவர்களும், 4,640 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்ததால், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் போர்ச் சூழலில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் முயற்சியை கடற்படை மற்றும் விமானப் படையின் அபார பங்களிப்புடன் வெளியுறவுத் துறை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக 4,640 இந்தியர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் என 5,600 பேர் மீட்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, "ஏமனில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த பணிக்கு பொறுப்பேற்ற வி.கே.சிங் இன்று இரவு திரும்புவார். இத்துடன் அங்கிருக்கும் நமது தூதரகமும் மூடப்படுகிறது" என்றார்.

முன்னதாக இதனையே குறிப்பிட்ட வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன், எஞ்சிய 630 பேரை 3 சிறப்பு விமானங்கள் மூலம் ஏமன் தலைநகர் சனாவிலிருந்து மீட்டு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், "ஏடன் துறைமுகத்தில் வான்வழித் தாக்குதல் தொடங்கிவிட்டது. இதனால் இதற்கு மேற்பட்டு நாம் விமானப் போக்குவரத்தை உபயோகிக்க முடியாது. இதுவரை 18 பிரிவுகளாக வந்த விமானங்கள் மூலம் மட்டும் 2,900 பேர் மீட்கப்பட்டனர்.

கடற்படைப் போர் கப்பல்கள் மூலம் ஏடன், அல்-ஹுதையா, அல்-முக்காலா துறைமுக நகரங்களிலிருந்து மார்ச் 31-ஆம் தேதி முதல் சுமார் 1,670 பேர் மீட்கப்பட்டனர். ஐ.என்.எஸ். சுமித்ராவில் 46 இந்தியர்கள், 303 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 349 பேர் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வந்து சேர்ந்தனர்" என்றார் அவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by M.Saranya on Fri Apr 10, 2015 2:17 pm

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய இந்திய கடற்படையின் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது.


அருமை அருமை........
நம் நாட்டின் மீட்பு நடவடிக்கைகள் அபாரமானது.......
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sat Apr 11, 2015 12:21 pm

ஏமன் உள்நாட்டுப் போர்: சவுதியுடன் இணைந்து தாக்குதல் நடத்த பாக். மறுப்பு

ஏமன் உள்நாட்டுப் போர் நடை பெற்று வரும் இந்தச் சமயத்தில் சவுதி அரேபியாவுடன் இணைந்து அங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மறுப்பு தெரி வித்துள்ளது.

ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி யாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா போராடி வருகிறது. இந்தப் போரில் தன்னுடன் இணைந்து போராட பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பு குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக விவாதிக்கப்பட்டது. அதில் பல உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து நேற்று எடுக்கப்பட்ட தீர்மானத்தில், ஏமன் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் களமிறங்காது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஏமன் விஷயத்தில் நாங்கள் நேரடியாகப் போராட மாட்டோம். எனினும், சவுதி அரேபியா மற்றும் ஹவுத்தி ஆகிய இரு தரப்புக்கும் இடையே சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இந்தப் பிரச்சினையில் அமைதி யான முறையிலேயே தீர்வு காண வேண்டும். இவ்வாறு பாகிஸ்தான் கூறியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by M.Saranya on Sat Apr 11, 2015 2:38 pm

பரவாயில்லையே ! பாகிஸ்தானா கூறியது....

நம்பவே முடியவில்லை .
இருந்தாலும் நல்ல முடிவைத்தான் எடுத்துள்ளது .......
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Apr 12, 2015 1:30 pm

எல்லை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 500 ஏமன் கிளர்ச்சி படையினர் பலி: சவுதி அரசு தகவல்

எல்லை பகுதிகளில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் இதுவரை 500 கிளர்ச்சியாளர்கள் பலியாகி உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகுதிகளிலும் சவுதி கூட்டணிப்படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. மார்ச் 26-ம் தேதி முதல் சனிகிழமை வரையில் சவுதிக்கும் ஏமனுக்கும் இடைப்பட்ட எல்லை பகுதிகளில் 1200 முறை தாக்குதல் நடந்துள்ளதாகவும், இந்த மோதலின் போது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 500 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதி எல்லை பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

சரியான தருணத்தில் தரைவழி தாக்குதலையும் தொடங்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Apr 14, 2015 9:52 pm

ஏமன் தலைநகரில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில் இருந்து 4,700 இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில், அதன் தலைநகர் சனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் இந்தியா இன்று வெளியேற்றியுள்ளது.

இது குறித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறும்போது, ஏமனில் இருந்து எங்களது தூதரக ஊழியர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் என கூறியுள்ளார்.

இந்தியா கடந்த ஏப்ரல் 9ந்தேதி தனது தூதரகத்தை மூடியது. அதனுடன் 41 நாடுகளை சேர்ந்த ஆயிரம் வெளிநாட்டு மக்களையும் இந்தியா மீட்டு வெளியேற்றியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by M.Saranya on Wed Apr 15, 2015 12:42 pm

தகவலுக்கு நன்றி..............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by monikaa sri on Wed Apr 15, 2015 2:38 pm

பதிவுக்கு நன்றி!
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Apr 21, 2015 11:50 pm

ஏமனில் சவுதிஅரேபியா வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு, அமெரிக்காவின் விமானம் தாங்கிய கப்பல் சென்றது

ஏமன் தலைநகர் சனாவில் சவுதிஅரேபியா தலைமையிலான அரபுபடைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் களமிறங்கி உள்ளனர்.

இவர்களை எதிர்த்து, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சவுதி கூட்டுப்படைகளின் வலிமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஷாப்வா மாகாணத்தின் தலைநகரான அட்டாக் நகருக்குள் நுழைந்தனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை வலுத்து வருவதால் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி உள்ளனர். 2,200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏறத்தாழ ஒரு லட்சம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அரசியல் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி வலியுறுத்தினார். இந்த நிலையில், தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்தன. இந்த வான்தாக்குதல்களில் 28 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 300 பேர் காயம் அடைந்து உள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து சவுதி அரேபியா 2,000 முறை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஏமனில் அரசுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பெரிதும் உதவிசெய்து வருகிறது என்பதே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது. ஈரான் கடல்வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம், மருத்துவம் மற்றும் பிறஉதவி பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் உதவி கிடைப்பதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. அமெரிக்கா ஏமன் கடற்பகுதிக்கு விமானம் தாங்கிய போர்கப்பலை அனுப்பி உள்ளது. ஈரானின் கப்பல்களை இடைமறிக்க அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பிஉள்ளது என்று பெண்டகன் செய்தி வெளியிட்டு உள்ளது. இது கிளர்ச்சியாளார்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Thu Apr 23, 2015 12:54 am

ஏமனில் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!

ஏமனில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த சவுதி அரேபிய அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக தொலைக்காட்சியில் அறிவித்தது.

உள்நாட்டு போர் காரணமாக, கடந்த மார்ச் 19-முதல் அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா ரணுவம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வந்தது.

இதுவரை நடைபெற்று வந்த ‘தீர்வுக்கான புயல்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகள் முடிவு பெறுவதாகவும், தற்போது ‘நம்பிக்கையை மீட்டெடுப்பது’ என்ற புதிய நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏமன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 24, 2015 1:26 am

தாக்குதல் முடிந்தது என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமனில் சவுதி அரேபியா ஏவுகணைகள் வீச்சு

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா மீண்டும் ஏவுகணைகளை வீசிஉள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர். இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் இதுவரை 944 பேர் கொல்லப்பட்டனர். 3,487 பேர் படுகாயம் அடைந்தனர். 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.

இந்த தாக்குதல்களினால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் அதிபர் மன்சூர் ஹாதி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 4 வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏமனில் சவுதி அரேபியா மீண்டும் ஏவுகணைகளை வீசிஉள்ளது. தெற்கு ஏமனில் சவுதி அரேபியா படை ஏவுகணைகளை வீசிஉள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கிளர்ச்சிப்படை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து உள்ளது. ஐ.நா. இருதரப்பும் சண்டையை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிளர்ச்சிப்படை மற்றும் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது கிளர்ச்சியாளர்கள் அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum