ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏமன் உள்நாட்டுப் போர்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Mar 27, 2015 5:08 pm

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Mar 27, 2015 5:09 pm

ஏமனில் சவுதி தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் - ரஷியா, ஈரான் வலியுறுத்தல்

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷியா மற்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன. தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷியா மற்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஏமன் விவகாரம் தொடர்பாக ஈரான் அதிபர் ஹாசன் ரெளஹானியிடம், ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் பேசியுள்ளார். "உடனடியாக ஏமனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும், நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்." என்று புதின் கேட்டுக் கொண்டதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜவாத் ஜாரிப்பும், ஏமனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பிராந்தியத்தில் மேலும் உறுதியைக் குலைப்பதாகவே இருக்கும், கடந்த சிலமாதங்களாக பெரும் தாக்குதல் காரணமாக கடும் வன்முறை ஏற்பட்ட பின்னர் ஹவுதி கையில் சிக்கியுள்ளது. என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், ஏமனில் ராணுவ நடவடிக்கையை உடனடியாக சவுதி நிறுத்த வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம். என்று கூறினார். இதற்கிடையே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான்தான் பயிற்சி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை தெக்ரான் மறுத்து உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Mar 27, 2015 5:10 pm

ஏமனில் சவுதி அரேபிய விமானங்கள் குண்டு வீச்சு இந்தியர்கள் வெளியேற்றம்

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் மன்சூர் காதி அதிபராக உள்ளார். இவருக்கு எதிராக ஷியா பிரிவினர் ஹூதி என்ற புரட்சி படையை உருவாக்கி அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தலைநகர் சனாவில் இருந்து அதிபர் காதி வெளியேறி ஏடன் நகரில் உள்ள மாளிகை யில் குடியேறினார். இந்த நிலையில் அந்த மாளிகை மீது புரட்சி படையினர் திடீரென குண்டு வீச்சு நடத்தினர். இதற்கிடையே புரட்சி படையின் பாது காப்பு மந்திரியை சிறை பிடித்தனர்.இந்த நிலையில் புரட்சிப் படையினரை முறியடித்து ஏமன் நாட்டை காப்பாற்ற சவுதி அரேபியா முன் வந்தது. அதை தொடர்ந்து நேற்று ஏமன் தலைநகர் சனா மற்றும் புரட்சி படையினர் வசம் இருக்கும் பகுதிகளில் சவுதி அரேபியாவின் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குண்டு வீசி தக்குதல் நடத்தின

அதில் புரட்சிப் படையின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. மேலும் சவுதி அரேபியாவின் 1 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர் கள் ஏமனில் குவிக்கப் பட்டுள்ளனர்.

இவர்களுடன் கத்தார் ஜோர்டான், குவைத், பக்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.

தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் ஏமனில் தங்கி பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

ஏமனில் 3,500 இந்தியர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் தலைநகர் சனா மற்றும் ஏடன் உள்ளிட்ட பெரிய நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது அவர்கள் ஏமனில் உள்ள அல்-ஹூடியா துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இந்தியா திரும்புகின்றனர்.

புரட்சி படையினரின் தாக்குதலை தொடர்ந்து ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் எந்த நாட்டுக்கு சென்றார் என திட்ட வட்டமாக தெரிவிக்க வில்லை.எகிப்து நாட்டிற்கு சென்று இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். ஆனால் அதிபர் ஹாதி சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி அரேபியா அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏடன் நகரில் இருந்து வெளியேறிய அவர் தலைநகர் ரியாத்தை சென்றடைந்தாக கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by ayyasamy ram on Fri Mar 27, 2015 5:14 pm


கிளச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் லட்சக்கணக்கான
ராணுவ வீரர்களையும் ஏமனுக்கு அனுப்ப சவுதி தயாராகி
வருகிறது. தொடர்ந்து ஏமனில் நெருக்கடி நிலவுவதால்,
அங்கு பணியாற்றி வரும் இந்தியர்களை மீட்க கப்பல்களை
அனுப்ப உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்களை உடனடியாக
வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டில் 3,500 இந்தியர்கள் வசித்து வருவதாகக் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்நிலையில், தலைநகர் சனாவில் மட்டும்
2,500 இந்தியர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அதில் பெரும்பாலானோர் செவிலியர்களாகப் பணிபுரிந்து
வருகின்றனர். அந்நாட்டை விட்டு புறப்படத் தேவையான
சிறப்பு உதவிகளை சனாவில் உள்ள இந்திய தூதரகம் அளிக்கும்
என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை 00-967-734 000 658
மற்றும் 00-967-734 000 657 என்ற அவரச தொடர்பு எண்ணில்
தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தூதரகம்
தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:06 pm

ஏமனில் சவுதி அரேபியாவின் தாக்குதலுக்குக் காரணமான ஹவுத்திகள் யார்?

ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் மீது சவுதி அரேபியா நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர்.

ஹவுத்திகள் யார்?

ஹவுத்திகள், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள். இவர்கள் வடமேற்கு ஏமன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவானார்கள் என்பது பற்றி டவ்சன் பல்கலைக் கழக பேராசிரியர் சார்ல்ஸ் ஷ்மிட்ஸ் ஒரு முறை எழுதிய போது 1990-ம் ஆண்டுகளில் ஷபாப்-அல்-முமானின் (Believing Youth)என்ற குழுவிலிருந்து ஹவுத்தி கிளர்ச்சி படை உருவானதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பெரும்பாலும் ஷியா இஸ்லாமியத்தின் ஸயாதி கிளைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளாக ஏமனை ஆதிக்கம் செலுத்தி வந்தப் பிரிவாகும் இது. ஆனால் 1960-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சிவில் யுத்தத்திற்குப் பிறகு ஏமன் நாட்டு அரசால் இவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

2003-ம் ஆண்டு இராக் நாட்டின் மீது அமெரிக்கா தனது படையெடுப்பை நடத்த Believing Youth குழுவின் தலைவர்களில் ஒருவரான ஹுசைன் அல்-ஹவுத்தி அமெரிக்காவை கடுமையாக எதிர்த்ததோடு அப்போது ஏமன் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேயை கடுமையாக விமர்சித்தார் ஹுசைன் அல் ஹவுத்தி.

இதனையடுத்து ஹவுத்தியின் ஆதரவாளர்கள் அரசுப்படைகளுடன் மோதிய போது ஏமன் படைகளால் ஹவுத்தி கொல்லப்பட்டார். அதன் பிறகு இந்த அமைப்பு இவரது பெயருக்கு மாறியது.

ஆனாலும் இவரது மரணம் கிளர்ச்சிப் போக்கை மாற்றிவிடவில்லை. இவரது உறவினரான 33-வயது அப்துல் மாலிக் ஹவுத்தி தற்போது தலைவராக உள்ளார்.

பேராசிரியர் ஷ்மிட்ஸ் மேலும் இவர்கள் எப்படி சக்தி வாய்ந்த இயக்கமாக உருமாறினார்கள் என்பதை எழுதும் போது, அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்குள் நுழைந்த ஹவுத்திகள், மாணவ செயல்வீரர்கள் நிலையிலிருந்து கிளர்ச்சியாளர்களாக உருப்பெற்றனர். இவர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறையும் தொடர்ந்தது.

தொடர் சண்டைகளுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு அரசுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அதிபர் சலேவுக்கு எதிராக பெரிய ஆர்பாட்டங்கள் அடுத்த ஆண்டே எழுந்த போது ஹவுத்திகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தது.

இதனைப் பயன்படுத்தி வடமேற்குப் பகுதியில் பெருமளவு கட்டுப்பாட்டை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. மேலும் அதிபர் சலே ஆட்சியிலிருந்து இறங்கிய பிறகு தேசிய உரையாடல் மாநாட்டில் பங்கு பெற்றனர்.

2012-ஆம் ஆண்டு ஐ.நா.வின் அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு ஹாதி அதிபர் பதவி நாற்காலியில் அமர்ந்தார். அது முதல் ஹாதிக்கு பிரச்சினைகள் தொடங்கின. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் இயக்கம் தலைதூக்கியிருந்தது. அல்-காய்தா ஒரு புறம். இதனை விட ராணுவத்தில் பல தலைகள் முன்னாள் அதிபர் சாலேவுக்கு மறைமுக ஆதரவு அளித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தங்களது முந்தைய ‘முந்தைய வெற்றி’-யை மனதில் இறுத்தி தங்களது செயல்பாட்டை ஹவுத்திகள் இன்னும் இறுக்கினர். அரசுப் படைகளின் உதவியுடனேயே ஹவுத்திகள் ஏமன் தலைநகர் சனாவை நெருங்கினர்.இந்த வாரத்தில் சனாவில் தீவிர சண்டை மூண்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:06 pm

இது இஸ்லாமியத்தின் உட்பிரிவு மோதலா?

இந்தக் கேள்விக்கு ஆம்/இல்லை என்று இருபதில்களும் பொருந்தும். ஹவுத்திகள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது சன்னி பிரிவினருக்கு எதிராக. ஏமன் நாட்டின் ஷியா சிறுபான்மையினரை பிரதிநித்துவம் செய்வதான கருத்தின் அடிப்படையில் அவர்கள் இயங்குவதாகக் கூறுகின்றனர். ஏமன் நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 35% ஷியா பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எதார்த்தம் மிகவும் சிக்கலானது. ஸயாதி ஷியா பிரிவினர் மற்ற ஷியா இஸ்லாம் பிரிவிலிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். மைய நீரோட்ட ஷியா இஸ்லாமியம் 12 இமாம்களை அங்கீகரிக்கிறது என்றால் இவர்கள் 5 இமாம்களையே அங்கீகரிக்கின்றனர். இன்னொரு புரியாத புதிர் என்னவெனில் ஸயாதி ஷியா இஸ்லாமியம் இறையியல் ரீதியாக சன்னி இஸ்லாமியத்துடன் நெருக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.

இங்கு இன்னொரு புரியாத புதிரையும் குறிப்பிடுவது அவசியம், ஏமனை 12 ஆண்டுகள் ஆண்ட அதிபர் சலே, ஸயாதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதே. இவரையும் ஹவுத்திகள் தாக்கினர். ஆனால், அதிகாரத்திலிருந்து இறங்கிய பிறகு ஹவுத்திகளுடன் இவர் நட்புறவு கொண்டுள்ளார் என்ற சந்தேகமும் பரவலாக இருந்து வருகிறது.

ஆகவே, இந்த கிளர்ச்சிப்படையின் நோக்கம் பற்றி ஆய்வாளர்கள் கூறும் போது முழுதும் ஷியா-சன்னி உட்போராக இதனை பார்க்க முடியாது என்கின்றனர்.

ஸயாதி அடையாளம் மற்றும் பொருளாதார அதிருப்தி ஆகியவற்றினால் இவர்கள் ஒன்று திரண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கிளர்ச்சிப்படைக்கு போதிய ஆதரவு இருப்பதற்குக் காரணம், ஏமன் மேட்டுக்குடியினருக்கு எதிரான ஒரு இயக்கமாக இதனை மக்கள் பார்ப்பதே என்று மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள சில்வனா டோஸ்கா என்பவர் கூறுகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:07 pm

இந்த விவகாரத்தில் ஈரானின் பங்கு என்ன?

சவுதி அரேபியா மற்றும் பிற சன்னி இஸ்லாமிய நாடுகள் ஈரானின் உதவி ஹவுத்திகளுக்கு இருப்பதை மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றனர். ஆனால் ஹவுத்திகள் இதனை மறுத்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், சவுதி, ஏமன், மற்றும் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் பேசிய போது, அனைவரும் ஒருகுரலில் ஈரான், ஹவுத்திகளுக்கு பணம், பயிற்சி, ஆயுதம் அளிப்பதாக குற்றம்சாட்டினர்.

இருந்தாலும் ஈரானின் உதவி பற்றி உறுதியாக ஒன்றும் கூற முடியவில்லை.

இதில் அமெரிக்காவின் நலன் என்னவென்பதையும் தெளிவாக கணிக்க முடியவில்லை. காரணம் ஏமனில் அமெரிக்காவின் பெரிய கவலை அல்-காய்தாவே.

ஈரான் உதவி ஹவுத்திகளுக்கு கிடைப்பதை சற்றே ஏமன், சவுதி அரேபியா ஊதிப்பெருக்கக் காரணம் அமெரிக்க உதவியைப் பெறவே.

தற்போதைய சன்னி ஆதரவு ஏமன் அரசு கவிழ்ந்தால், சவுதி அரேபியாவின் உதவியுடன் வாழ்ந்து வரும் ஏமன் நாடு அதனை இழக்கும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும்.

எது எப்படியிருந்தாலும் ஏமன் நாட்டை ஒரு மிகப்பெரிய பிரச்சினை சூழ்ந்துள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

[இந்தக் கட்டுரை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆடம் டெய்லர் என்பாரால் எழுதப்பட்டது.
தமிழில்: ஆர்.முத்துக்குமார்]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:09 pm

ஏமன் தலைநகரில் விடிய, விடிய குண்டுமழை ஏதன் நகரில் இருந்து தூதர்கள் வெளியேற்றம்

அரபு நாடான ஏமன் நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். நாட்டின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பல இடங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர்.

அவர்களுக்கு எதிராக சவுதி அரேபிய கூட்டணி படை வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அதற்கு மத்தியிலும் அவர்கள் முன்னேறி வருகிறார்கள்.

ஏமனின் துறைமுக நகரான ஏதனிலிருந்து சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்களையும், தூதரக அதிகாரிகளையும் பாதுகாப்புடன் வெளியேற்றும் நடவடிக்கையை சவுதி கடற்படை தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தலைநகர் சனாவில் விடிய விடிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதன் சேத விவரம் தெரிய வரவில்லை.

இதற்கிடையே சவுதி அரேபிய மன்னர் சல்மானை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஏமனில் சவுதி அரேபியா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைக்கு தனது முழுமையான ஆதரவை தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தை மூலம் ஏமனில் அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Mar 29, 2015 12:10 pm

வெளியேறும் மக்கள்

ஏடனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுகின்றனர். வெள்ளிக்கிழமை காலை முதல் நடந்த இரண்டாம் கட்ட தாக்குதலால் அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்கின்றனர்.

ஹவுத்திக்கு ஆதரவு, சவுதிக்கு எதிர்ப்பு: ஈரான்

ஹவுத்தி ராணுவத்தின் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதல்கள் மற்றும் படையெடுப்பு நடவடிக்கை ஏமனின் வருங்கால நிலைமையை மோசமானதாக்கும் என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

அதே சமயம். சவுதி அரேபியா நடத்தும் போருக்கு உதவ எகிப்து போர் கப்பல்கள் ஏடனுக்கு விரைந்துள்ளது.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சனாவை, ஹவுத்தி கிளர்ச்சிப் படை கைப்பற்றியது. அதிபர் மன்சூர் ஹதி துறைமுக நகரான ஏடனுக்கு தப்பிச் சென்று அந்த நகரை ஏமனின் தலைநகராக அறிவித்தார். கடந்த வாரம் ஏடன் மீதும் ஹவுத்தி கிளர்ச்சிப் படை தாக்குதலை தொடங்கியது.

கிளர்ச்சிப் படை முன்னேறி வரும் நிலையில் அதிபர் மன்சூர் ஹதியும் அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து ஏமனுக்கு அருகில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ளன. அந்த நாடுகளின் தலைவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்த ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை ஆதரித்து வருகின்றனர்.

அதேநேரம் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்தப் பின்னணியில் அதிபர் மன்சூர் ஹதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் ஏமனுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:13 pm

உள்நாட்டுப் போர் மேகம் சூழ்ந்துள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்டுவர சிறப்பு விமானங்கள், கப்பல்: சுஷ்மா அறிவிப்பு

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் ஆண்கள், பெண்கள் என சுமார் 3500 இந்தியர்கள் தங்கியுள்ளனர். பெண்களில் பலர் நர்ஸ்களாகவும், ஆண்களில் பலர் அலுவலகப் பணியாளர்களாகவும், கூலி தொழிலாளிகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.

அரேபிய நாடுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடான ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா நேற்று முன்தினம் வான்வழி தாக்குதலை தொடங்கியது.

இதனால், அங்கு வாழும் இந்தியர்களை ஏமனில் இருந்து வெளியேற்ற அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் முயன்று வருகின்றது. அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள 24 மணிநேர அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருகட்டமாக சுமார் 80 இந்தியர்கள் தலைநகர் சனாவில் இருந்து ஏமனி ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று ட்ஜிபவுட்டி நகரை வந்தடைந்தனர்.

இந்நிலையில், ஏமன் அரசுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு நாளைக்கு 3 மணிநேர காலக்கெடுவில் அங்குள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்தார்.

இதேபோல், சுமார் 1500 பேரை ஏற்றிவரக்கூடிய கப்பலை ஏமனுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Mon Mar 30, 2015 5:34 pm

ஏமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர புறப்பட்டது இந்திய விமானம்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு சார்பில் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 180 பேர் வரை பயணம் செய்யக் கூடிய இந்த விமானம் அங்குள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று மாலை ஏமனில் இருந்து தாயகம் திரும்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அரபு நாடான ஏமனில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளை எதிர்த்து தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அரேபிய நாடுகள் கூட்டணி அமைத்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றி இருப்பதால் ஏமனில் வசிக்கும் 3,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நர்சுகள் ஆவர்.

இதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் வசிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்தியர்களை மீட்டு வருவதற்கான விமான அட்டவணை தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், மத்திய வெளியுறவு அமைச்சகம், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் ஏமனில் திறந்து உள்ளது.

ஏமனின் தலைநகரான சனா நகரில் இருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பறப்பதற்கான அனுமதியை நாங்கள் பெற்று இருக்கிறோம். இந்த நேரத்தை பயன்படுத்தி தினமும் ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள்.

மேலும் 1500 இந்தியர்களை ஏற்றி வருவதற்கான கப்பல் ஒன்றை ஏமனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by krishnaamma on Tue Mar 31, 2015 9:12 am

எல்லா இடத்திலும் இப்படி ஆகிறதே நம் இந்தியர்களுக்கு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by M.Saranya on Tue Mar 31, 2015 12:11 pm

ஆமாம் அம்மா ........பாவம் நம் மக்கள் ............
வேலைக்காக சென்ற இடத்தில் இப்படி நடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்........... சோகம் சோகம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Mar 31, 2015 5:03 pm

ஏமனில் சிக்கியுள்ள 50 தமிழக பெண்கள்

''உள்நாட்டு போர் மூண்டுள்ள, ஏமன் நாட்டில் சிக்கியுள்ள, என் மகளை காப்பாற்றுங்கள்,'' என, திண்டுக்கல்லைச் சேர்ந்த சுபாஷினி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்லில், டெய்லராக இருப்பவர் தயாளராஜன். இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஏஞ்சலின் ஜெரீனா, 27; நர்சிங் டிப்ளமோ படித்து உள்ளார்.

உள்நாட்டு போர்:

கடந்த, ஆண்டு மே மாதம், 14ம் தேதி, நர்ஸ் பணிக்காக, ஏமன் நாட்டுக்கு ஏஞ்சலின் சென்றார். அந்நாட்டில், தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் ஏஞ்சலின் தவிப்பதாக சுபாஷினி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: குடும்ப கஷ்டத்தைப் போக்க, ஏஞ்சலின் வருமானம் எங்களுக்கு முக்கியம். அதனால், வெளிநாடு என்றும் பாராமல், ஏமன் நாட்டுக்கு அனுப்பினோம். அங்கு, சனா நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சாக, ஏஞ்சலின் வேலை செய்கிறார். மருத்துவமனை இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில், அவர் தங்கியுள்ளார். அங்கிருந்து பஸ் மூலம், மருத்துவமனைக்கு தினமும் சென்று வருகிறார். இந்நிலையில், 'ஏமன் நாட்டில், உள்நாட்டு போர் நடக்கிறது. இந்தியர்கள் யாரும், அந்நாட்டில் இருக்க வேண்டாம்' என, மத்திய உள்துறை அறிவித்தது. உள்நாட்டு போர் தொடர்பாக, ஏஞ்சலினும் எங்களிடம் போனில் கூறினார். அவர் தங்கி யிருக்கும் இடத்தில் இருந்து, மருத்துவமனைக்கு செல்லும் பாதையில், குண்டு வெடித்ததாகவும் கூறினார். உடனடியாக, ஊர் திரும்பும் படி அவரிடம் கூறினோம். தான் இருக்கும் இடத்தில், 50க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் இருப்பதாகவும், அவர்கள் வேறு மருத்துவமனைகளில் வேலை செய்வதாகவும், ஏஞ்சலின் தெரிவித்தார். அனைவரும், ஊர் திரும்ப, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட், சம்பளம், வேலை சான்றிதழ் ஆகியவற்றை அளித்து, ஊருக்கு அனுப்புவதாக, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், இவற்றை அளிக்கும் அதிகாரி, மருத்துவமனைக்கு கடந்த, இரு நாட்களாக வரவில்லை. போனில் தொடர்பு கொண்டால், போன், 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளதாக, ஏஞ்சலின் கூறினார்.

தண்ணீர் கிடைக்கவில்லை:

'சில நாட்களாக, உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை. பாதுகாப்பாக இருக்க, மருத்துவமனைக்கு வந்து விடுகிறோம்' என தெரிவித்துள்ளார். எங்களுக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காக, வேலைக்கு அனுப்பினோம். ஆனால், அங்கு என் மகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது, வேதனை அளிக்கிறது. எப்படியாவது என் மகளை, மீட்டுத் தர வேண்டும். தன்னுடன் தங்கியுள்ள, கேரள மாநில பெண்களை மீட்க, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, ஏஞ்சலின் கூறினார். அவர்களை மீட்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏஞ்சலின் குறித்த விவரங்களை, திண்டுக்கல் கலெக்டரிடம் அளிக்க உள்ளோம். இவ்வாறு, சுபாஷினி கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Mar 31, 2015 5:04 pm

ஏமனில் உள் நாட்டு போர் : இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உதவி செய்வதாக சவுதி அரேபியா மன்னர் பிரதமர் மோடியிடம் உறுதி

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா மற்றும் அதன் 10 நட்பு நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அங்கு தங்கி யிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறி வருகிறார்கள். பாகிஸ்தான் தங்கள் நாட்டு மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்களை விமானங் கள் மூலம் அழைத்து சென்றது.

ஏமனில் 6 ஆயிரம் இந்தியர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர். அவர் களில் 96 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அங்கு 4 ஆயிரம் பேர் தகுந்த ஆவணங்களுடன் இருக்கின்றனர். 2 ஆயிரம் பேர் ஆவணங்கள் ஏதுமின்றி தங்கியுள்ளனர்.

தற்போது போர் நடை பெறும் வேளையில் அங்கு அவர்கள் சிக்கி தவிக்கின் றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்கும் நடவடிக் கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தலைநகர் சனா மற்றும் ஏமனில் இந்தியர்கள் தங்கியுள் ளனர். அவர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் மீட்க திட்டமிட்டுள்ளது. கொச்சியில் இருந்து 2 கப்பல்கள் விரைந்துள்ளன. இந்திய போர் விமானம் ஒன்று டிஜி பவுட்டி நகருக்கு சென்றுள்ளது.-

ஏற்கனவே 500 இந்தியர் கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் இந்தியா திரும்ப தயாராக உள்ள னர். அதே நேரத்தில் ஏர்- இந்தியா நிறுவனம் மஸ்கட்டில் 2 விமானங்களை கூடுத லாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

கடற்படையின் ஐ.என்.எஸ். சுமித்ரா என்ற ரோந்து கப்பலும் பயணிகளை ஏற்றி வர தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

தொடக்கத்தில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் மீட்டு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ரோடுகளிலும், வீதிகளிலும் ஒவ்வொருவரும் துப்பாக்கிகளுடன் சுற்றி திரிகிறார்கள். இதனால் பொது மக்கள் வெளியே வர முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.எனவே, அவர்களை வேறு வழியில் வெளியேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு சவுதி அரேபியாவின் உதவியை நாடியுள்ளது. ஏனெனில் போர் மேகம் சூழ்ந்துள்ள ஏமனில் வான்வெளி தற்போது அதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதை தொடர்ந்து சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஷ் அல் சவுத்யுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு டெலிபோனில் பேசினார். அப்போது ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர் களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்க உதவும்படி அவரிடம் கோரிக்கை விடுத் தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் உதவுவதாக உறுதி அளித்தார். அப்போது அவரது முயற்சியால் ஏமனில் ஸ்திரதன்மையும், அமைதியான சூழ்நிலை விரைவில் உருவாகவும் மோடி வாழ்த்தினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Mar 31, 2015 5:08 pm

ஏமன் நாட்டில் 500–க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

உள்நாட்டு சண்டை உக்கிரமடைந்துள்ள ஏமனில் இருந்து 500–க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011–ம் ஆண்டு முதல் அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த சண்டை உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதனால் நாட்டின் அதிபரான அப்த்–ரபு மன்சூர் ஹாதி கடந்த வாரம் தலைநகர் சனாவில் இருந்து வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். மேலும், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் அவர் சவுதி அரேபியாவைக் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரேபியா, ஏமனில் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிராக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 9 அரபு நாடுகள் ஏமன் அதிபருக்கு ஆதரவாக இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவுடன் கைகோர்த்து உள்ளன. இந்த நிலையில், ஏடன் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியுள்ள முகாம்கள், சனா விமான நிலையம், ஹோடெய்டா துறைமுகம் ஆகிய இடங்களில்சவுதி அரேபிய விமானப்படை போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 35 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 88 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சவுதி அரேபிய பிரிகேடியர் ஜெனரல் அகமது அசெரி தெரிவித்தார்.

இதனிடையே உள்நாட்டு சண்டை உக்கிரமடைந்துள்ள ஹொடெய்டா துறைமுக பகுதியில் சிக்கித் தவித்த 500 பாகிஸ்தானியர்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில் சவுதி அரேபியா நேற்று வான்வெளித் தாக்குதலை சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து 500–க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் விமானங்கள் மூலம் ஏற்றப்பட்டு அவர்களது நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதேபோல் ஏமனில் சிக்கித் தவிக்கும் சீன அதிகாரிகள், மருத்துவ மற்றும் தொழில் நுட்ப குழுவினரை மீட்பதற்காக ஏடன் நகர துறைமுகத்தில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சரவணன் on Tue Mar 31, 2015 9:01 pm

.... சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Tue Mar 31, 2015 9:37 pm

ஏமனில் விபரீதம் போர் விமான குண்டு வீச்சில் 45 அகதிகள் பலி கிளர்ச்சியாளர்கள் மீது வைத்த குறி தப்பியது

ஏமன் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுதி ஆதரவு படையினர் மீது அரபு நாடுகளின் போர் விமானங்கள் கடந்த 5 நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அரபு நாடுகளின் போர் விமானங்கள் குண்டு வீசியதில் சில குண்டுகள் வடக்கு ஏமன் பகுதியில் உள்ள ஹாரத் மஸ்ரக் அகதிகள் முகாமில் விழுந்து வெடித்துச் சிதறின. இதில் சம்பவ இடத்திலேயே 45 அகதிகள் பலியானார்கள். 65 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி அரபு படை போர் விமானங்கள் குண்டுகளை வீசியபோது, அவை குறி தவறி அருகில் இருந்த அகதிகள் முகாமிகள் விழுந்து பலத்த உயிர்சேதத்தை ஏற்படுத்தியதாக அகதிகளுக்கு உதவும் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by krishnaamma on Tue Mar 31, 2015 10:06 pm

அடாடா.....சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by krishnaamma on Wed Apr 01, 2015 12:20 am

ஏமனில் இருந்த 400 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மத்திய அரசு !

புது தில்லி

ஏமனில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள 400 இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற கப்பல்கள் மூலம், மீட்கப்பட்ட 400 இந்தியர்களும், விரைவில் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamani


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Thu Apr 02, 2015 9:05 pm

ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது அல்கொய்தா

ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் உட்பட 300 சிறைக்கைதிகளை விடுவித்தனர்.

ஹாத்வார்த் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அல்கொய்தா மூத்த தலைவர்களில் ஒருவரான காலித் பாதார்பி என்பவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இன்று இந்த சிறைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள் சிறையை உடைத்து தங்கள் தலைவர் காலித் பாதர்பி உட்பட 300 பேரை விடுவித்தனர். சிறைச்சாலைக்குள் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு சிறைக்காவலர்கள் மற்றும் ஐந்து சிறைக்கைதிகள் பலியாகினர்.

ஹாத்வார்த் மாகாணத்தில் உள்ள சிறையில் மட்டுமின்றி மாகாண தலைநகரான முகல்லாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திலும், வங்கி கிளை மற்றும் போலீஸ் தலைமையகத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே போர் பதற்றத்தால் அச்சத்தில் இருக்கும் அங்குள்ள மக்கள், தற்போதைய சிறை தகர்ப்பு சம்பவத்தால் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது நினைவுகூறத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Thu Apr 02, 2015 9:06 pm

ஏமனில் சிக்கியுள்ள இலங்கை மக்களை மீட்க உதவுகிறது இந்தியா

ஏமனில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களை மீட்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஷியா கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனில் உள்ள இலங்கை நாட்டு மக்களை மீட்டுக்கொண்டு வர இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம், சானாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் சர்வதேச இமிகிரேஷன் அமைப்பு ஆகியவற்றின் மூலம் கோரிக்கை விடுத்தது.

அதேபோல்,ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் போது அங்குள்ள இலங்கை நாட்டவர்களையும் மீட்க வேண்டும் என்ற இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பி பெரேரா இந்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்தார். இதை இந்திய அரசும் உடனடியாக ஏற்றுக்கொண்டது.

ஏமனில் 75-100 இலங்கை நாட்டு மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் மாணவர்களும் உள்ளடங்குவர். ஏமனில் நிலவும் குழப்பமான சூழலால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களை மீட்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Thu Apr 02, 2015 10:04 pm

ஏமனில் அதிபர் மாளிகையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

ஏமனில் அதிபர் மாளிகையை ஷியா கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆடெனில் உள்ள அதிபர் மாளிகையை கடும் சண்டைக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

சவுதி அரேபிய படைகள் வான் வழித்தாக்குதல்களை நடத்தி வந்த போதும், இன்று அதிபர் மாளிகையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மாளிகையில்தான் தற்போது சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ள அதிபர் ஹாதி ஆட்சிப் பீடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Thu Apr 02, 2015 11:49 pm

2வது கட்டமாக ஏமனில் இருந்து 400 பேரை மீட்கும் முயற்சியில் கடற்படை கப்பல் தீவிரம்

ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள சில மணி நேரங்களில் அடுத்த கட்டமாக கடற்படை கப்பல் மூலம் மேலும் 400 பேரை மீட்கும் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.

அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அல் ஹொடெய்டா துறைமுகத்தை கடந்த அக்டோபர் மாதம் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்துறைமுக நகரிலிருந்து தான் 400 இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்கப்படும் 400 இந்தியர்களும் ஐ.என்.எஸ். சுமித்ரா கடற்படை கப்பல் மூலம் ட்ஜிபவ்ட்டி நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதற்காக ஏமன் கடற்பகுதியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டிருக்கும் சுமித்ரா கப்பல், துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

அந்நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற விரும்பினால் உடனடியாக அல் ஹொடெய்டா துறைமுகத்துக்கு விரைந்து செல்லுமாறு ஏமனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அங்கிருந்து வெளியேற விரும்பும் அனைவரும் 12 மணி நேரத்தில் பாதுகாப்பாக ட்ஜிபவ்ட்டி நகருக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும், பின்னர் 2 இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் மற்றொரு போர்கப்பலான ஐ,என்.எஸ். மும்பை ஏடன் நகரில் சிக்கியுள்ள 250 இந்தியர்களை மீட்க விரைந்து கொண்டிருக்கிறது. அங்கு தான் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு தரப்புக்கும் இடையே உக்கிரமான சண்டை நடைபெற்றது. இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக அந்நாட்டில் சிக்கி தவித்துவரும் 4000 இந்தியர்களில் 750 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by சிவா on Fri Apr 03, 2015 10:09 pm

சனாவிற்கு செல்ல ஏர்-இந்தியாவிற்கு அனுமதி, 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்படுவர் என நம்பிக்கை

ஏமன் தலைநகர் சனாவிற்கு செல்ல ஏர்- இந்தியா விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, எனவே 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

அவர்களை மீட்பதற்காக முதல் கட்டமாக ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ என்ற போர்க்கப்பல், ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மூலம் 40 தமிழர்கள் உள்பட 358 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ஏமனில் இருந்து மீட்கப்படுபவர்கள் ஜிபோட்டி மூலம் இந்தியாவிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான படை வான்வழி தாக்குதல் நடத்தியதை அடுத்து விமானங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவிற்கு செல்ல ஏர்- இந்தியா விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, எனவே 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஏர் இந்தியா விமானங்கள் சனா நகருக்கு செல்வதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சனாவிற்கு செல்வதற்கு அனுமதி மறுப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விமானம் இயக்கப்படவில்லை. தற்போது ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு பெரும் நிவாரணமாக இந்திய விமானங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியை உறுதிபடுத்தி உள்ள மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், சனாவில் இருந்து ஜிபோட்டிக்கு இரண்டு முறை பயணம் செய்ய இந்தியாவின் இரண்டு விமானங்கள் முயற்சி செய்யும். கடந்த இரண்டு நாட்களாக விமானங்கள் சனாவிற்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள அனுமதி நல்ல முறையில் அமைந்தால், நாம் ஏமனில் இருந்து இன்று 500க்கு மேற்பட்ட இந்தியர்களை வெளியே கொண்டுவர முடியும். என்று கூறியுள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்திய விமானங்கள் மஸ்கட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் அனுமதியின்படி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஏமன் உள்நாட்டுப் போர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum