உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுய அறிமுகம்
by JalajaSivakumar Yesterday at 10:53 pm

» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை!
by சிவனாசான் Yesterday at 8:37 pm

» அதிர்ச்சி : எஸ்பிஐ ஏடிஎம்மில் கள்ளநோட்டுகள்
by சிவனாசான் Yesterday at 8:34 pm

» வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» தூக்கு தண்டனை - எவ்வளவு தூக்கணும் சார்?
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» மும்பையில் இடிந்து விழுந்த நான்குமாடிக் கட்டடம்- 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» காமராசர்
by Sudharani Yesterday at 3:10 pm

» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
by Sudharani Yesterday at 2:56 pm

» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
by Sudharani Yesterday at 2:45 pm

» RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.
by சக்தி18 Yesterday at 2:06 pm

» புத்தக தேவைக்கு...
by ajaydreams Mon Jul 15, 2019 7:22 pm

» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை
by T.N.Balasubramanian Mon Jul 15, 2019 5:40 pm

» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:
by T.N.Balasubramanian Mon Jul 15, 2019 5:17 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by prajai Mon Jul 15, 2019 2:39 pm

» வனவாசம் − ப.வீரக்குமார்
by VEERAKUMARMALAR Mon Jul 15, 2019 4:07 am

» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா? சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்
by சிவனாசான் Sun Jul 14, 2019 10:13 pm

» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:55 pm

» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:45 pm

» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:37 pm

» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:22 pm

» சமயம் ஜோக்ஸ்
by T.N.Balasubramanian Sun Jul 14, 2019 7:46 pm

» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்
by i6appar Sun Jul 14, 2019 3:15 pm

» சினிதுளிகள் - வாரமலர்
by ayyasamy ram Sun Jul 14, 2019 2:26 pm

» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்!
by சக்தி18 Sun Jul 14, 2019 1:12 pm

» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:27 am

» உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:17 am

» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:13 am

» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:01 am

» காசியில் (வாரணாசி) எங்கே தங்க?
by T.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:43 pm

» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு
by T.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:30 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:23 pm

» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:18 pm

» நீங்களும் வைரம்தான்சார்…! – மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:15 pm

» இறைவனின் திருவருள் தித்திக்கும்…! – விகடன் போட்டோ கார்டுகள்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:13 pm

» கூர்கா: சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:03 pm

» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...!!
by ayyasamy ram Sat Jul 13, 2019 5:49 pm

» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:04 pm

» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:00 pm

» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:58 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:55 pm

» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:46 pm

» கலப்படம் உணவில் கலப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:45 pm

» காவியும் காசியும்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:44 pm

» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:27 pm

» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:22 pm

» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:20 pm

» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:14 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat Jul 13, 2019 11:35 am

» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
by சக்தி18 Sat Jul 13, 2019 11:21 am

Admins Online

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 7:23 pm

இரண்டு மொழி கற்றவர் இரு மனிதருக்கு சமமாம்.
ஆயினும்..,
பிற மொழிகள் கற்கலாம். கற்றுக் கொள்ள வேண்டும்; வேண்டாம்; என்ற திணிப்பிரண்டும் இக்கால கட்டத்தில் அவசியமில்லை என்பதே என் எண்ணமும்.
எல்லோரும் பணி புரியும் இடம் பற்றி முழுதாக நானறிந்திருக்க வில்லை, ஆயினும் அறுபது எழுபது சதவிகிதம் வரை தமிழர்கள் ஒப்பந்த பணியாளர்களாக வளைகுடா நாடுகளில் பணிபுரிய வரும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வாயு சார்ந்த தொழிற்கூடம் மற்றும் தொழிற்சாலைகளில் எனக்குத் தெரிந்து ஒப்பந்த பணியாளர்களாக ஒரு சிலரே 'அரேபியர் பணி புரிகிறார்கள். மீதம் என்பது தொண்ணூறு சதவிகிதம் இந்தியரோடு பணிபுரியும் தமிழர்களுக்கு ஆங்கிலத்தை விட ஹிந்தி மொழி அவசியப் படுகிறதென்பதால் அதை அன்று மறுத்த காரணம் கொண்டு இன்றும் தவிர்க்கப் படுகிறதே என்ற ஆதங்கமே எழுகிறது.
பிரன்ச்சோ ஜெர்மனியோ அரபியோ கற்றுக் கொள்ள நம்மிடம் எந்த எதிர்ப்பும் இல்லை ஆனால் ஹிந்திக்கான எதிர்ப்பும்; அதற்கான காரணமும் இருக்கிறது என்றாலும், நானிங்கு ஹிந்தி கற்றுக் கொண்டு தான் உயிர்வாழவேண்டுமென்று நிச்சயமாக சொல்லவே இல்லை. அதை மறுப்பவர்களுக்கே இன்று தேவை இருக்கையில் நாமும் புரிந்துக் கொள்வோம் என்கிறேன்.
நம் தமிழுக்கு எதிராய் அல்லது தமிழுக்கு பதிலாக நமக்கு எம்மொழியும் வேண்டாம். அதை எதிர்க்க எந்த கொம்பனும் வேண்டாம்; நம் உடம்பில் உறைந்துள்ள தமிழச்சி பால் குடித்த நம் ரத்த நாளங்களில் ஓடும் ஓவ்வொரு அணுவும் போதும்.
பல மொழி கற்பதன் அர்த்தம் 'தேவையின் காரணம் பொருத்தது மட்டுமே. அது அவரவர் அவசியம் பொருத்தது. பிற நாடுகளுக்கு வந்தும் 'அலுவலில் பணி புரிவோருக்கு' பிற மொழியின் அவசியம் ஆங்கிலத்தை விடுத்து அத்தனை இல்லை தான். நான் ஆரம்பத்தில் பற்றவைப்பாளராக (வெல்டராக) இருந்த போது மலையாளிகளும் பிற மாநிலங்களை சேர்ந்தோரும் 'வேலையில் என்னை எதிர்க்க திராணியின்றி' வேறேதோ பேசி கேலி செய்து சண்டை இட்டு நிற்கையில், எத்தனை பேரிடம் நான் அவன் பேசும் மொழி தெரியாமல் எதிர்த்து நிற்க முடியும். அன்று அவுமானம் கற்றுத் தந்த பாடங்கள் சில இன்று அதே துறையில் மேலாளார் (Dept. of QA/QC Manager / QMR) ஆன பிறகு கூட மறக்க இயலவில்லை.
தமிழ் நம் அடையாளம். வாழ்தலின் பலம். நம் உணர்வுகளின் வெளிப்பாடு. நம் தோழமையின் ஆதாரம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த நம்மை ஒரு சகோதரர்களாய் கட்டிப் போட்டுள்ள நம் உயிர்ப்பு. எனை வாழ வைத்தலின் பருப்பொருள். ஆயினும், அவசியப் படுவோர்க்கு அதன் பின்னே 'தமிழர் எங்கு சென்றாலும் அங்கும் ஜெயிக்க மாற்று மொழியும் ஒரு அவசியமெனில் 'நம்மொழிக்குள்ளே அனுமதிக்க வேண்டாத அளவிற்கு' கற்றுக் கொண்டு போகட்டுமே.
தமிழை வளர்க நாம் 'நம்மை தமிழராய் அடயாளப் படுத்தி, தமிழரை காண்கையில் பிறமொழி கலக்காமல் தமிழில் மட்டும் பேசி, தமிழரின் மான இன உணர்வுகளை மதித்து, நம்மால் நம் தமிழர்க்கு என்ன செய்ய இயலுமோ அதை செய்ய ஒவ்வொரு தமிழரும் முன் வந்தால், அத்தனை ஒற்றுமையை மட்டும் நாமெல்லாம் கைகொண்டால், நாம் யாரையும் எதிர்க்க வேண்டாம்; நம்மை எதிர்க்கும் துணிவு யாருக்குமே வராது தோழர்களே..
உலகின் பிற வல்லரசு நாடுகளை வென்றெடுக்க அவர் மொழி ஆங்கிலமும், என் தேசத்திற்கு வாசல் முடியும் இடத்தில் நின்று எனக்கே தண்ணீர் தர மறுக்கும்; அழியும் எம் தமிழரை கண்டும் காணாமல் இருக்கும் அண்டை மாநில மற்றும் தலை நகர் தொல்லைகளை அவனுக்கு புரியும் படி எடுத்துரைக்க அவர் மொழி ஹிந்தியும், ஆயிரம் முறை வந்து அவனாக இடித்து விட்டு ஏனடா என்றால் 'போடா ஒமார் ' (கழுதை) என்று துச்சப் படுத்தும் அரபியை எதிர்த்து அவர் தவறுகளை புரிய வைக்கவாவது என்னை போன்று நாடோடி பிழைப்பு பிழைப்பவர்களுக்கு, 'என் தமிழை தாண்டாத அளவில் பிற மொழி அவசியப் படுகிறது தோழர்களே...

என் மொழியை காட்டிலும் எந்த பிற மொழியை வலியுறுத்தியும் என் செயல்பாடுகள் சுட்டாலும் இருக்காது. தவறெனில் சொல்லுங்கள், திருத்திக் கொள்ள முனைகிறேன். தவறுகள் திருத்திக் கொள்ளப் படுவதே மானுட வளர்ச்சி என நம்புவோம்.
தமிழ் என் அடையாளம், உயிர்ப்பு. அது நானுள்ள வரை, நாம் இறந்த பின்பும் நமை பற்றி அறிவிக்க நம்மை பற்றி பேச நம்மை போன்றோரை உயிர்பிக்க அவசியப் பட்டுக் கொண்டே இருக்கிறது. இருக்கும்!

நன்றிகளுடன்..

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 8:14 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty Re: பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by nandhtiha on Tue Nov 10, 2009 7:57 pm

வணக்கம்
நான் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்த போது ஒருங்குறி பற்றிய பேச்சு வந்தது, அப்பொழுது ஒரு நிருபர் என்னைப் பார்த்து யார் உண்மையிலேயே நல்ல தமிழ்த்தலைவர் என்றார். உடனே நான் எவெருடைய குழந்தைகள் ஆங்கிலப் பள்ளியில் ஹிந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப்படிக்கின்றனரோ அவர்கள் தான் உண்மையான தமிழ்த் தலைவர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள் என்று கூறினேன். இன்று கம்ப ராமாயணப் பட்டி மன்றங்கள் நடத்தப்படுகின்றன, அவற்றுக்குக் காரணமாக இருந்தவர்களில் இருவரில் ஒருவர் அமரர் ப.ஜீவானந்தம் மற்றவர் திரு கண்ணதாசன் ஸ்வீகாரம் சென்ற வீட்டின் உறவினரான திரு சா கணேசன், அவர்களும் ஆவர். ஜீவா அவர்கள்சிறந்த தமிழ்ப் பற்றாளர்.தன்பெயரை உயிர் இனியன் என்று மாற்றிக்கொண்டார், ஒரு முறை அவர் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவரான திரு மறைமலை அடிகள வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தினார், உள்ளே இருந்து யாரது போஸ்ட் மேனா என்ற குரல் கேட்டது, திகைத்துப்போனார் ஜீவா, போஸ்ட் மேன் தமிழ்ச் சொல்லில்லையே. பிறகு ஜீவா என்ற பெயரே இருக்கட்டும் என்று விட்டு விட்டார். (ஜீவா அவர்களிடம்பழகிய நண்பர் கூறியது)
இது தான் உண்மை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty Re: பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 8:17 pm

என் அன்பிற்கினிய சகோதரியின் குரல் இதயத்திற்குள் புது உயிரையே பாய்ச்சிகிறது..

தங்களின் மேற்கோளிட்ட 'நிகழ்வுகளின் சில நிஜ வரிகளால்' மேலுள்ளக் கட்டுரை தானே உயிர் பெற்றிருக்கும்.

மிக்க நன்றி சகோதரி.. பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty Re: பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Nov 10, 2009 8:53 pm

சகோதரி நந்திதா சொன்ன ஜீவா அவர்களின் சமத்துவத்தை படிக்கும் போது, நான் படித்த கல்லூரியில் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் பேசும் போது ' வணிகம் செய்வோர் தங்கள் பெயர்ப் பலகைகளை தூய தமிழில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழ் நாட்டில் வசிக்கும் நாம் தமிழில் வைத்தால் போதுமானது. ஆங்கில பெயர்ப்பலகைகளை வைக்காமல் இருப்பது நலம். Adayar Bakery என்பதை 'அடையார் அடுமனை' என்று தூய தமிழில் வைத்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம். எனவே 'அடையார் பேக்கரி' என்று வைத்தால் போதுமானது. தமிழை சுவாசமாக உங்களுக்கு இல்லை என்றாலும் நேசிக்கவாவது செய்யுங்கள்' - என்று சொன்னார்.
இதன்பிறகு தமிழில் பெயர்ப்பலகைகள் சிறப்பாகவே வைக்க முற்பட்டனர் வணிகர்கள்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty Re: பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 9:26 pm

அப்படி ஆரம்பிப்பது மெல்ல முழு தமிழில் கூட மாறும் ஐயா.. வேறொன்றும் உதாரணம் வேண்டாம் 'என் மனைவி ஆங்கிலத்தில் தான் பட்டப் படிப்பும் ஆரம்பக் கல்வியும் படித்திருக்கிறார். முதலெல்லாம் பேசுகையில் நிறைய ஆங்கில வார்த்தைகள் சேர்த்து பேசுவார்.. பிறகு நாளடைவில் நாங்கள் விவாதித்து பேசி கலந்துரையாடிக் கொள்ளும் அவ்வப்பொழுதின் பற்றுதலில் டாடாவிறக்கு கூட ஆங்கிலத்தில் சொல்ல மறுத்து போயிட்டு வறேன், பிறகு பார்ப்போம் என்கிறார்.. அவராக. யாரிடம் பேச எடுத்தாலும் வணக்கம் சொல்லி பேசுகிறார். தமிழரிடத்தில் ஆங்கில கலப்பு அத்தனை வந்து விட்டது அகற்றி விட வேண்டுமென மட்டும் மனதில் கொண்டு விட்டால் தானே நீங்கும்.

தமிழர் தமிழராக வாழ்கையில் தமிழ் தானே தன்னை தனக்குள் இருத்திக் கொள்கிறது.. ஆனால் நம் மேதாதைகள் நிறைய பேர் தமிழை வாழவைக்கிறேனென தமிழரை கொன்றுவிட்டு தன்னை வளர்த்துக் கொண்டு தொலைகாட்சிகளில் மட்டும் வந்து திட்டம் வகுக்கும் பேட்டி அளிக்கிறார்கள்...

தமிழர்; உலகின் கோடி வரை பலதர பட்ட வாழ்க்கை முறைக்கு உட்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் இதுபோன்று ஒரு வாய்ப்பேற்படுத்தி பேசுகையில், நம்மை நாமே அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. மாற்றி.. அவசியமெனில் திருத்திக் கொள்ளவும் முடிகிறது.

நான் மேலே கட்டுரையில் குறிப்பிட்டது கூட 'நமை போல் தேசம் விட்டு வெளி வாழும் நாட்டினருக்குத்தானே யொழிய தமிழ் மொழி துறந்தல்ல என்று நிறைய பேருக்கு புரிய மறுக்கிறது ஐயா..

போகட்டும். நாம் நாமாகவே இருக்க முயல்வோம். தங்களின் ஆமென்ற கருத்துக்கும் தலை வணங்குகிறேன். மிக்க நன்றி ஐயா..

தமிழினி வென்று வாழுமென்றே நம்புவோம்!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty Re: பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by வித்யாசாகர் on Thu Nov 12, 2009 9:27 pm

இரவு வணக்கம்!

விடை பெறுகிறேன் அன்புள்ளங்களே..

நாளை சந்திப்போம்..

மிக்க நன்றி..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான் Empty Re: பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை