புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_m10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10 
7 Posts - 54%
heezulia
குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_m10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_m10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10 
49 Posts - 61%
heezulia
குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_m10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_m10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_m10குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:20 am

குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு


கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கருவுறுதலுக்காக மருத்துவரீதியாக நடைபெறும் ஆய்வுகளின் எண்ணிக்கை மிக அதிகம். அவை தரும் வழிமுறைகளும் அனேகம்.

குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியினருக்கு, அந்தக் கவலை நீங்கி குழந்தை கிடைக்கக்கூடிய வரப்பிரசாதமாய் பல மருத்துவ வசதிகள் நடைமுறையில் உள்ளன.

இவற்றில் புதிதாய் ஓர் ஆய்வு சேர்ந்துள்ளது.

பெண்கள் கருவுறாமல் இருக்க, வலுவற்ற கருமுட்டைகள் பெரும் காரணமாய் உள்ளன.

கருமுட்டைகள் பெண்களின் கர்ப்பப்பையில் இருந்து பிறக்கின்றன. ஆரோக்கியமான, முதிர்ந்த கருமுட்டைகளை வெளியிட முடியாதவண்ணம் கர்ப்பப்பைகள் பற்றாக்குறையோடு இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் இத்தகைய குறைபாட்டோடு ஏறக்குறைய 70 லட்சம் பெண்கள் வாழ்கிறார்கள்.

இவர்களின் கர்ப்பப் பையை வலு கொண்டதாக ஆக்கிவிட்டால், குழந்தையின்மை பிரச்சினை தீர்ந்துவிடும்.

கரு தங்காததற்கான இப்பிரச்சினை குறித்து அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவர்கள் தீவிரமாய் ஆராய்ந்து ஒரு புதிய வழிமுறையைக் கொண்டுவந்துள்ளார்கள்.

இதற்கு வேறு வழி உள்ளதா?

கர்ப்பப்பையில் வலிமையான கருமுட்டைகள் உருவாக வழியில்லாத இப்பிரச்சினைக்கு இதுவரை கரு முட்டைகளை கடனாய் பெற்று தீர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'எக் டோனர்' (Egg Donor) என்ற சிகிச்சை இது.

இளவயது பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து வளமான கருமுட்டைகள் பெறப்படும். யாருக்கு சூல் முட்டை பிரச்சினை உள்ளதோ அந்தப் பெண்ணின் கணவரின் உயிரணுவுடன் இந்த வளமையான கருமுட்டைகள் சேர்க்கப்படும். இதனால் உருவாகும் சிசு, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டு வளர்ச்சி அடையும். இதுதான் 'எக் டோனர்'.

இந்தப் புதிய கண்டுபிடிப்பால் பழைய சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 'ஈஸ்ட்ரோஜன்' என்பது பெண்மை இயக்க நீர். மாதாமாதம் ஆரோக்கியமான கருமுட்டைகளை உருவாக்கிப் பேணிப் பாதுகாக்க ஈஸ்ட்ரோஜன் அவசியமாகிறது. இந்த பெண்மை இயக்க நீர் சராசரியான அளவு உற்பத்தியாகாவிட்டால், உருவாக்கும் முட்டைகளும் வலு குன்றியே இருக்கும். இத்தகைய பெண்களுக்கு சீக்கிரமாகவே மாதவிடாய் நின்றுவிடும்.

ஆனால் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளர்களான ஷ¨ மற்றும் செங் ஆகியோர், தங்களுடைய IVA முறையால், நலமான கருமுட்டைகளை தரும்படி பெண்ணின் ஆற்றலை உயர்த்திவிட முடியும் என்கிறார்கள்.

புதிய முறை சொல்வது என்ன?

IVA என்றால், In Vitro Activation என்று பொருள். 'உள்ளார்ந்து வலுவூட்டல்' என்று இதற்குப் பொருள் சொல்லலாம். முதலில் கருப்பை அல்லது கருப்பையின் முக்கிய திசுக்கள் வெளியே எடுக்கப்படுகின்றன. உடலில் இருந்து வெளியே வைத்து, புரதம் மற்றும் இதர சத்துகளை அளித்து இதை போஷாக்காய் மாற்றுகிறார்கள். கருமுட்டைகள், முதிர்ச்சியற்ற நிலையில் இருந்து நல்ல முதிர்ந்த முட்டைகளாய் மாறுவதற்கு, கருப்பைக்கு வலிமை தேவை. இதற்கு தேவைப்படும் எல்லா சத்துகளும் சிகிச்சையின்போது அளிக்கப்படும்.

புதிதாக உருமாற்றம் அடைந்துவிடும் திசுக்கள் அல்லது பை, மறுபடியும் பெண்ணின் உடலுக்குள் பொருத்தப்படும்.

இப்போது, வலுவூட்டப்பட்ட இதில் உருவாகும் கருமுட்டைகள் வளமாய் அமைந்துவிட, முட்டைகளை மற்றொரு பெண்ணிடம் இருந்து கடனாய்ப் பெறாமலேயே, கரு உருவாகும் வாய்ப்பு கருப்பைக்கு கூடிவிடுகிறது.

இதன் தேவை என்ன?

புற்றுநோய்ச் சிகிச்சை பெறும் பெண்களின் கருப்பை வலு குன்றிப் போய்விடுகிறது. புற்றுநோய்ச் சிகிச்சையின் பின்விளைவாக, அவர்களால் ஆரோக்கியமான கருமுட்டைகளை வெளிப்படுத்த இயலாமல் ஆகிவிடுகிறது.

இதேபோல வயதாகி திருமணம் செய்யும் பெண்களுக்கும், குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவதால் முதிர்ந்துவிடும் பெண்களுக்கும், வளமையான கருமுட்டைகள் குறைந்து விடுவது உண்டு.

இத்தகைய பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், ஐ.வி.ஏ. சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

அமெரிக்காவில் 27 பெண்மணிகள் ஐ.வி.ஏ. முறைப்படி கர்ப்பம் தரிக்க முன்வந்தார்கள். இவர்களில் ஐந்து பெண்களால் தொடர்ந்து சிறந்த கருமுட்டைகளை சுயமாய் உற்பத்தி செய்ய முடிகிறது. ஒரு பெண் அழகான குழந்தையையும் பெற்றுவிட்டார். ஒருவர் கர்ப்பமாக இருக்க, இருவர் இப்போது உருவாகியுள்ள சிசுவை கருப்பைக்குள் மாற்றுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

வலேரி பேக்கர் எனும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக டாக்டர், 'இதன் வெற்றியை உறுதிசெய்ய ஆய்வக ரீதியான விஷயங்கள் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ஆனால் இது ஒரு முக்கியமான மைல்கல்' என்கிறார்.

குழந்தைப் பேறு இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு பெரும் பாக்கியமாக வந்துள்ளது ஐ.வி.ஏ. முறை.

சில முக்கிய கேள்விகள்:

எத்தனையோ செயற்கை கருத்தரிப்பு முறைகள் இருக்கும்போது, இது என்ன தனிச்சிறப்பானதா?

அடிப்படையிலேயே கருமுட்டைகளை உருவாக்கிட முடியாத கருப்பை (Primary Ovarian Insufficiency -POI) கொண்ட பெண்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரே தீர்வு, தத்தெடுத்தல்தான். அல்லது வேறு பெண்ணின் கருமுட்டையை தன் கணவரின் உயிரணுவுடன் சேர்த்து, பின்னர் அதை தன் வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றல். இவை இரண்டையும் தவிர்த்து வேறொரு வழிமுறையே கிடையாது. இந்நிலையில், பயனாகாத கருமுட்டைகளுக்கு சக்தியூட்டி, தனது கருவை தானே சுமக்கும் வாய்ப்பை ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்தித் தரும் இம்முறை, நிச்சயம் தனிச்சிறப்பானதுதான்.

ஐ.வி.ஏ. முறையின் வெற்றி விகிதம் எப்படி உள்ளது?

இந்த முறை ஆரம்பமாகியிருக்கும் அறிமுக நிலையிலேயே இதன் வளர்ச்சி விகிதம் 50 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கரு திசுவை சேகரித்து தரப்படும் ஐ.வி.ஏ. சிகிச்சை, நோயாளியின் வயது, சமூக, புவியியல் மற்றும் தனிமனித சூழல்கள் சாராதது. பெண் கர்ப்பம் தரிப்பதற்கு பலவகை முறைகள் பரவலாக வெற்றி பெற்றிருந்தாலும், கருமுட்டையை வெளியே வளர்த்து பிறகு அப்பையை வயிற்றுக்குள் 'இம்பிளான்ட்' செய்யும் இம்முறை, கற்பனைக்கு எட்டாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் இது சாத்தியப்பட்டுள்ளது. ஜப்பான் நாடும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமும் இந்தச் சிகிச்சையை உச்சத்துக்குக் கொண்டு போக முன்வந்துள்ளன.

தற்போது ஜப்பானில் மட்டும்தான் இது நடைமுறையில் உள்ளதா?

ஆமாம், ஏனெனில் இதைச் சாதித்திருக்கும் மருத்துவர்கள் ஜப்பானியர்கள். தவிர, ஐ.வி.ஏ. முறை அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதே சமீபத்தில்தான். இதுகுறித்த அறிமுகங்களுக்காக சர்வதேச கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. பலவீனமான கருமுட்டைகள் வலுவேற்றப்பட்டு, கர்ப்பம் தங்கிவிட்டால் போதும், வீடு திரும்பிவிடலாம். இது எதிர்காலத்தில் பரவலாக வெற்றி பெறும்.

வயதாவதால் கருமுட்டை குறையும் பிரச்சினையை இந்த முறை தீர்க்கிறதா?

தரம் மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் இம்முறையின் மூலம் கருமுட்டையின் ஆற்றலை வலுப்படுத்த முடியும். பல வலுவான முட்டைகளை ஐ.வி.ஏ. உருவாக்கித் தரும். கருத்தரிப்பதற்கு அவற்றில் ஒரு முட்டை போதும். இதுபற்றிய தனிப்பட்ட சாத்தியக்கூறுகளை இதற்கான டாக்டரை ஆலோசித்து அடைய வேண்டும்.

தினத்தந்தி



குழந்தையின்மை பிரச்சினைக்கு புதிய தீர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக