புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
14 Posts - 88%
Manimegala
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_m10ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:26 pm

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் 201503092023305456_ShivaIn-ThiruvadiKaraikalMadame_SECVPF

யாருக்கும் கிடைக்காத அரும்பேறு பெற்றவர் காரைக்கால் அம்மையார். திருக்கயிலையில் வீற்றிருக்கும் கயிலைநாதனாலேயே, ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டவர். ஈசன் அருளும் இடத்தில் தன் காலடி படக்கூடாது என்பதற்காக தலையால் நடந்து சென்ற அருளாளர் காரைக்கால் அம்மையார் ஆவார்.

புனிதவதி

கடற்கரை பட்டினமான காரைக்கால் பகுதியில் தனதத்தன் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி தர்மவதி. இந்த தம்பதியருக்கு நெடுங்காலமாய் புத்திர யோகம் வாய்க்காமல் இருந்தது. சிவபெருமானை போற்றி துதித்து வழிபட்டு வந்த இந்த தம்பதியருக்கு விரைவிலேயே பெண் குழந்தை பிறந்தது. ஒளிவீசும் வசீகர முகத்துடன் அழகுற இருந்த அந்த குழந்தைக்கு, புனிதவதி என்று பெயரிட்டு போற்றி வளர்த்து வந்தனர்.

சிறுவயது முதலே ஈசனிடம் தீராத பற்று கொண்டு, பக்தியில் திளைத்து வந்தார் புனிதவதி. பருவ வயதை எட்டியதும் புனிதவதிக்கு திருமணம் செய்து வைக்க தனதத்தனும், தர்மவதியும் முடிவு செய்தனர். அதற்காக பல இடங்களில் நல்ல வரன்களைத் தேடினர். இறுதியில் பரமதத்தன் என்னும் இளைஞனுக்கு, புனிதவதியை திருமணம் செய்து கொடுக்க முடிவாகி, அந்த நற்காரியம் விரைவாகவே நடந்து முடிந்தது. புனிதவதியும், பரமதத்தனும் தங்கள் இல்லற வாழ்வை சிறப்புற நடத்தி வந்தனர்.

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:27 pm

மாங்கனியால்...

ஒரு முறை வணிகம் தொடர்பாக பரமதத்தன் பணியில் இருந்தபோது, ஒரு வியாபாரி தன் வீட்டில் விளைந்த இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அதனை தன் பணியாளரிடம் கொடுத்து, வீட்டில் சேர்த்துவிட்டு வரும்படி அனுப்பி வைத்தான். அந்த பணியாளனும் மாங்கனியை எடுத்துக் கொண்டு போய், வீட்டில் இருந்த புனிதவதியிடம் கொடுத்து விட்டு திரும்பிச் சென்றான். இந்த மாங்கனியை வைத்து தனது மாய திருவிளையாடலைத் தொடங்கினார் சிவபெருமான்.

பணியாளன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், புனிதவதியின் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். அவர் உணவு வேண்டி நின்றார். அவரை அன்புடன் வரவேற்று வீட்டிற்குள் அமரச் செய்தார் புனிதவதி. பின்னர் தயார் செய்து வைத்திருந்த உணவை படைத்து, அத்துடன் தன் கணவர் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாருக்கு அன்புடன் பரிமாறினார். உணவை உண்டு முடித்த சிவனடியார் புனிதவதியை வாழ்த்தி விட்டு அங்கிருந்து அகன்றார்.

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:27 pm

ஈசனின் அருள்

இதற்கிடையில் மதிய உணவுக்காக பரமதத்தன் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு தான் சமைத்திருந்த சுவை மிகுந்த பல பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறினார் புனிதவதி. மேலும் மீதம் இருந்த மாங்கனி ஒன்றையும் எடுத்து வந்து வைத்தார். அந்த மாங்கனியை உண்ட பரமதத்தன், அதன் சுவையில் மயங்கிப் போனான். அவனுக்கு அந்த சுவை மீண்டும் வேண்டும் என்பது போல் இருந்தது. ஆகையால் புனிதவதியிடம், ‘நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன் அல்லவா?. அதில் மற்றொரு கனியையும் எடுத்துவா!’ என்று கூறினான்.

‘மற்றொரு மாங்கனி இருந்தால் தானே எடுத்து வருவதற்கு. அதைத்தான் சிவனடியாருக்கு வழங்கியாயிற்றே. சிவனடியாருக்கு உணவிட்டு விட்டேன் என்று கூறினால், கணவன் கோபப்பட்டு விடுவாரோ?’ என்று நினைத்த புனிதவதி, உடனடியாக சமையல்அறைக்குள் சென்றார். அங்கு சிவபெருமானை நினைத்து, ‘ஐயனே! உன் அடியாருக்கு ஒரு மாங்கனியை நான் உணவிட்டு விட்டேன். இப்போது மற்றொரு மாங்கனியையும் என் கணவர் கேட்கிறார். என்னை இந்த இக்கட்டில் இருந்து காத்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:28 pm

தெய்வத்தன்மை...

மறுநொடியே புனிதவதியின் கையில் மாங்கனி ஒன்று தோன்றியது. இறைவனின் அன்பில் உருகிப்போன புனிதவதி, மாங்கனியை எடுத்துச் சென்று, அதை கணவனுக்கு பரிமாறினார். அந்த மாங்கனியை சாப்பிட்ட பரமதத்தன், அது முந்தைய கனியை காட்டிலும் மிகுந்த சுவையுடன் இருப்பதை கண்டு சந்தேக முற்றான். ஒரே மரத்தில் விளைந்த கனியில் இத்தனை மாற்றம் இருக்குமா? என்று நினைத்தவன், இதுபற்றி புனிதவதியிடம் கேட்டான். கணவன் கேட்டதும் நடந்ததை அப்படியே கூறிவிட்டார் புனிதவதி.

ஆனால் இதனை நம்ப பரமதத்தனின் மனம் ஒப்பவில்லை. ‘சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், என் கண்முன்னே மீண்டும் ஒரு கனியை இறைவனிடம் கேட்டு பெற்றுத்தருக!’ என்று கூறினான். புனிதவதியும் சிவபெருமானை வணங்கினார், மீண்டும் அவரது கையில் மாங்கனி ஒன்று தோன்றியது. இதைக் கண்டு வியந்த பரமதத்தன், புனிதவதியை தெய்வப்பிறவி என்று கருதினான். தெய்வத்துடன் மனிதனாகிய தான் வாழ்வது ஒவ்வாது என்று நினைத்தவன், புனிதவதியிடம் இருந்து விலக நினைத்தான்.

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:28 pm

வேறு திருமணம்

வணிகம் செய்யச் செல்வதாக கூறிவிட்டு, கடல் பயணம் மேற்கொண்டான். பாண்டிய நாட்டிற்கு சென்ற பரமதத்தன், அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்து அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு, புனிதவதி என்று பெயர் சூட்டினான் பரமதத்தன்.

இந்த நிலையில் வணிகத்திற்காக சென்ற தன் கணவன் இதுவரை திரும்பாததை எண்ணி வருந்தி தவித்து வந்தார் புனிதவதி. அப்போது பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, உறவினர்கள் வாயிலாக புனிதவதியை எட்டியது. உறவினர்கள் சிலருடன் அங்கு விரைந்தார் புனிதவதி. தன்னை தேடிவந்த மனைவியை கண்ட பரமதத்தன், அவரை தெய்வமாக கருதி இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புனிதவதியின் காலில் விழுந்து வணங்கினான். பதறி விலகினார் புனிதவதி. உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ‘பரமதத்தா! நீ செய்யும் இந்த செயலின் உட்பொருள் என்ன?’ என்று உறவினர்கள் கேட்டனர்.

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:29 pm

பேய் வடிவம்

அதற்கு பரமதத்தன், ‘இவர் தெய்வத்தன்மை உடையவர். அதை நான் நேரடியாகக் கண்டேன். தெய்வத்துடன் வாழ்வது ஒப்பாது என்பதால் இங்கு வந்தேன். தற்போது தெய்வத்தன்மை பெற்ற இவரை மீண்டும் கண்டதால் காலில் விழுந்து வணங்கினேன். நீங்களும் இவரை வணங்கி போற்றுங்கள்’ என்றான்.

இதைக் கேட்டதும், ‘இறைவா! கணவருக்காக தாங்கிய இவ்வுடலை நீக்கி, பேய் வடிவத்தை அடியேனுக்கு தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார் புனிதவதி. மறுகணமே அவர் பேய் உருவுக்கு மாறினார். இறைவனும் இறைவியும் அங்கு தோன்றி புனிதவதியை ஆசீர்வதித்தனர். இதனைப் பார்த்த உறவினர்களும், புனிதவதியின் தெய்வத் தன்மையை உணர்ந்து அவரை வணங்கி அங்கிருந்து அகன்றனர்.

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:30 pm

தலையால் நடந்து...

இதையடுத்து சிவபெருமானை நினைத்து பல பாடல்களை பாடி அருளினார் புனிதவதி. பின்னர் கயிலாயம் சென்று இறைவனையும், அம்பாளையும் தரிசிக்க எண்ணினார். அதற்காக வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருக் கயிலையின் எல்லையை அடைந்த போது, ‘இப்புனித தலத்தில் என்னுடைய காலடி படுவது ஆகாது’ என்று நினைத்த புனிதவதி, தலையால் நடந்து சென்றார். இதனை பார்த்த பார்வதி தேவி, ‘சுவாமி! தங்கள் மேல் இத்தனை பக்தி கொண்ட இவர் யார்?’ என்று வினவினார்.

‘உமையே! நம்மை காண வரும் இவள் நம்மைப் பேணும் அம்மையாவாள். பெருமைமிகுந்த இவ்வடிவத்தை என்பால் வேண்டிப் பெற்றாள்’ என்று கூறிய சிவபெருமான், திருக்கயிலாயம் வந்தடைந்த புனிதவதியை, ‘அம்மையே!’ என்று அழைத்தார். ஈசனின் பாதம் பணிந்தார் காரைக்கால் அம்மையார்.

மறவாத வரம்

‘அம்மையே! வேண்டும் வரம் கேள்!’ என்றார் சிவபெருமான். அதற்கு காரைக்கால் அம்மையார், ‘இறைவா! பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல், உன்னை என்றும் மறவாமை வேண்டும். இறைவா நீர்! ஆனந்த தாண்டவம் புரியும்போது, உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும்’ என்றார்.

அவ்வாறே அருளிய இறைவன், காரைக்கால் அம்மையாருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி, திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அவருக்கு முக்தியளித்துத் தன் திருவடியின் கீழ் இருக்கச் செய்தார்.

தினத்தந்தி

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2015 10:04 pm

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் 103459460 ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார் 3838410834
-
'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்
பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ' என்று
பாரதியார் பாடிiயது பெரியபுராணத்தில் வரும்
பெண்களுக்கும் பொருந்தும் போல தெரிகிறது.

-

- Dr.Chandralekha Vamaedava (Australia)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக