ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

யூதிகா பரமேஸ்வரன்!

View previous topic View next topic Go down

யூதிகா பரமேஸ்வரன்!

Post by ayyasamy ram on Tue Mar 10, 2015 12:13 pm

எம்பெருமான் ஈசனுக்கு எத்தனை எத்தனையோ
திருப்பெயர்கள் உண்டு. ஆனால் வித்தியாசமான,
"யூதிகா பரமேஸ்வரன்' என்ற பெயரோடு அவர்
அருளும் தலம் ஒன்று நாகை மாவட்டத்தில்
உள்ளது.
-
யூதிகா பரமேஸ்வரருக்கு "முல்லைவன நாதர்'
என்றும் ஒரு பெயர் உண்டு. அப்பெயர் வந்ததற்கான
புராண வரலாறு, மன்னன் முதலாம் கிளிவளவனுடன்
தொடர்புடையது.
-
ஒருசமயம் மன்னன் தன் பரிவாரங்களுடன்
வேட்டைக்குச் செல்கையில் வனத்தில் ஓரிடத்தில்
அரசரது குதிரையின் கால்கள் முல்லைக்கொடிகளில்
சுற்றிக் கொள்ளவே, தன் வாளால் அந்தக்
கொடிகளை வெட்டினான்.
-
முல்லைக்கொடி வெட்டுப்பட்ட கணத்தில்
அங்கிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அதிர்ந்து
போனான் மன்னன். உள்ளே தவம் செய்த முனிவர்
யாரையோ அறியாமல் வெட்டி விட்டோம் என
நினைத்து பயந்து நடுங்கியபடி, கொடிகளை
அகற்றிப் பார்த்தார்.
-
அங்கே சிவலிங்கம் ஒன்றிலிருந்து குருதி வழிந்தபடி
இருக்க, ஈசனையே வெட்டி விட்டோமே என்ற
வேதனை தாளாமல் தனது தலையை வாளால் வெட்ட
முனைந்தான்.
-
உடனே தன நாயகியுடன் அங்கு தோன்றி,
மன்னனை மன்னித்து ஆசியளித்தார்.
-
முல்லைவனத்தில் தோன்றியதால் இறைவன்,
முல்லைவனநாதர். அவருடன் அணியாகவந்ததால்
அம்பிகை அணிகொண்ட கோதை நாயகி
திருமுல்லைவாசல், தென் திருமுல்லைவாசல் எனவும்
இத்தலம் அழைக்கப்படுகிறது.
-
அரசன் வாளால் வெட்டுண்ட தழும்பு இன்றும்
முல்லைவனநாதரின் லிங்கத்திருமேனியில் காணப்ப
டுவதாகச் சொல்கிறார்கள். இத்தழும்பு இருந்தாலும்
இவரை வழிபடுவதில் எந்தக் குற்றமும் இல்லை
என்பதால், மாசிலா மணீஸ்வரர் என்றும்,
வடமொழியில் யூதிகா (குற்றமற்ற) பரமேஸ்வரர்
எனவும் அழைக்கப்படுகிறார் இத்தலத்து இறைவன்.
-
ஒருசமயம் கிள்ளிவளவனுக்கு உடல் முழுவதும்
கொப்புளங்கள் ஏற்பட்டு வெப்பநோயால் பெரும் அவதிப்
பட்டான். அந்த நோய் மருந்தால் தீராததால், இறைவனை
வேண்டி யாகம் ஒன்றைச் செய்தனர்.

அப்போது அங்கே வந்த அகத்திய மாமுனிவர், முதலில்
கடலிலும் அதன்பின், முல்லைவனநாதர் ஆலய
தீர்த்தங்களுள் ஒன்றான சந்திர புஷ்கரணியிலும்
நீராடும்படி சொல்ல, அவ்வாறே செய்து நோய் நீங்கப்
பெற்றான் மன்னன்.

அவன் இத்தலத்தில் நீராட வந்தபோதுதான், வழியில்
முல்லைவன நாதர் வெளிப்பட்டதாகவும் சொல்வதுண்டு.

வாமதேவன் எனும் முனிவன் தனது தந்தையின்
அஸ்தியை புணணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் இட்டார்.
அப்படி இத்தலத்து புண்ணிய தீர்த்தத்திலும் போட்டபோது,
அது ரத்தினக்கல்லாக மாறியதாம்.

அதே சமயத்தில் வானில் இருந்து பிரம்மா என்று ஓர்
ஒலி முழங்க, அதுமுதல் இந்த தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
என அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில்
இந்தத் தீர்த்தக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்தால்
முன்னோரின் ஆசியோடு, சகல நலன்களையும் பெறலாம்
என்பது ஐதிகம்.

இந்த தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் சந்திர
தீர்த்தம் ஆகியவற்றிற்கு இணையாக தேவலருகில்கூட
எந்தத் தீர்த்தமும் இல்லை என்கிறார்கள் சித்தர்கள்.

சந்திரன், பெண்ணால் சாபம் பெற்று இந்த இரு
தீர்த்தங்களிலும் நீராடி சாபவிமோசனம் பெற்றதாகவும்
ஒரு புராண சம்பவம் உண்டு.

இத்தலம் வந்து ஈசனையும் அணி கொண்ட கோதை
நாயகியையும் வழிபட்டால், வாழ்க்கையில் பதவி,
மேன்மை, ஆரோக்கியம் பெறலாம் என்கிறது வரலாறு.

இந்தக் கோயிலின் தலவிருட்சம், முல்லை. கோயிலின்
பின்புறம் ஒரு மரத்தில் பெரிதாகப்படர்ந்து செழித்துள்ளது.
பௌர்ணமி நாட்களில் இங்கே வந்து சந்திரதீர்த்தத்தில்
நீராடி இறைவனை வழிபட்டு, பின் தலவிருட்சத்தை
வணங்கினால் தோல் நோய்கள், மூட்டு எலும்பு
தேய்மானம் போன்ற நோய்கள் விலகுமாம்.

பன்னிரண்டு அமாவாசை தினங்களில் இங்கு வந்து
கடலில் நீராடி, பின் சந்திர, பிரம்ம தீர்த்தத்தில் குளித்து
முல்லைவனநாதரை நினைத்த பிதுர் பூஜை செய்தால்
நிச்சயம் செல்வந்தர் ஆகலாம் என்கிறார் காக முனிவர்.

இந்த கோயிலில் பள்ளியறை கிடையாது.
இதற்கும் ஒரு சுவாரஸ்ய தகவல் வரலாற்றில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாட்சர மந்திரத்தை
பொருளோடு சிவபெருமானிடம் கற்கவேண்டும் என்று
ஆசைப்பட்ட பார்வதிதேவி, இது குறித்த சிவனிடம்
வேண்ட, அவரும் இத்தலத்தில் தேவிக்கு பஞ்சாட்சர
மந்திரத்தையும், அதன் பெருமையையும் உபதேசித்தார்.

இத்தலத்தில் சிவன் குருவாகவும், அம்மன் சத்தியானந்த
சவுந்தரியாக சிஷ்யையாக இருந்ததால் இத்
திருக்கோயிலில் பள்ளியறை இல்லை. இறைவன்
இங்கே குருவாக அமர்ந்ததால் ஜாதகத்தில் குருவின்
ஸ்தானம் சரியாக அமையப் பெறாதவர்கள்
முல்லைவனநாதரை பூஜித்தால் குருதோஷ பாதங்கள்
நீங்கும் என்பது ஐதிகம்.

யூதிகா பரமேஸ்வரர் என்று அழைக்கப்படும்
முல்லைவனநாதர் மூலவராக வீற்றிருக்க, அவருக்கு
அருகே தனிசன்னதியில் அணிகொண்ட கோதையாக
சத்தியானந்த சவுந்தரி அருள்பாலிக்கிறாள். சன்னதியின்
மேற்குதிசையில் முருகப்பெருமான் வள்ளி -
தெய்வானையுடனும், தென்திசையில் தட்சிணாமூர்த்தியும்
காட்சி தருகிறார்கள்.
-
ஈசானிய மூலையில் சந்திரத்தீர்த்தமும், வட திசையில்
பிரம்ம தீர்த்தமும் அமைந்திருக்கின்றது.
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, காவிரி வடகரைத்
தலங்களுள் ஒன்றான இங்கே வந்து இறைவனையும் -
இறைவியையும் வழிபட்டு வளமான வாழ்வினை
நீங்களும் பெறலாமே!

எங்கே இருக்கு:
நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து கிழக்கே சுமார்
12 கீ.மீ. தொலைவில் திருமுல்லைவாசல் உள்ளது.
-
தரிசன நேரம்: காலை 6-12, மாலை 4-9
-
- ஆர். விவேக் ஆனந்தன்.
-
--------------------------
குமுதம் பக்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யூதிகா பரமேஸ்வரன்!

Post by ராஜா on Tue Mar 10, 2015 12:46 pm

திருக்கருகாவூர் இருக்கும் சிவபெருமானுக்கும் முல்லைவனநாதர் என்று தான் பெயர்

இந்த திருக்கருகாவூர் கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் அடிக்கடி கருசிதைவு ஆகுபவர்களுக்கும் நல்லபடியாக குழந்தை பேரு கிட்டும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யூதிகா பரமேஸ்வரன்!

Post by M.Saranya on Tue Mar 10, 2015 2:23 pm

நல்ல பதிவு.....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: யூதிகா பரமேஸ்வரன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum