ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

View previous topic View next topic Go down

ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by Aathira on Tue Mar 03, 2015 10:09 pm
ஓடிப் போன கணவர் தியாகுவைக் கண்டுபிடிக்கக் கோரி கவிஞர் தாமரை போராட்டம்!

ஆறுமாதங்களுக்கு முன்பே தன்னைவிட்டு ஓடிப் போன கணவர் தியாகுவை கண்டுபிடிக்கக் கோரி, சென்னையில் தொடர் போராட்டம் அறிவித்துள்ளார் கவிஞர் தாமரை. கவிஞர் தாமரையும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தியாகுவும் கடந்த 1994-ம் ஆண்டு திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு சமரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2012-ல் இருவருக்கும் கருத்துவேறுபாடு எழுந்தது. தனது முழுமையான அரசியல் பணிக்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருப்பதாகக் கூறி, தாமரையை விட்டு விலகுவதாக தியாகு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் தியாகு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. வீட்டை விட்டு ஓடிப் போன என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று கோரி, தியாகுவின் அலுவலகம் உள்ள சூளை மேட்டில் தன் மகனுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் தாமரை.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வணக்கம், கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன் வேறொரு செய்தியோடு நின்று கொண்டிருக்கிறேன். ‘சொல்லொண்ணாத் துயரம்" என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன்.

மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த் தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் திரு. தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014ல் வீட்டை விட்டு ஒரு திருடனைப் போல் வெளியேறித் தலைமறைவாகி விட்டார். அதன் பின் இன்று வரை நான் அவரைக் காணவில்லை. என் சிறு வயது மகனுக்குக் கூற என்னிடம் பதில் இல்லை. சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த்தேசியத் தலைவன் செய்கிற செயலாக இல்லை இது.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டேயிருந்தார். அதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாண்டார். ஆதன் ஊடாக நான் பட்ட சித்ரவதைகளைக் கூற இயலவில்லை. எனினும் நான் பொறுமை காத்ததின் காரணம் இதில் என் குடும்ப நலன் மட்டுமின்றி, இவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித உரிமை, தமிழ்த்தேசிய அரசியல் ஆகியவற்றின் மரியாதையும் அடங்கியிருந்ததுவே.

2012ல் இவர் வீட்டை விட்டு ஓடிய போது சில தமிழ்த் தலைவர்கள் நல் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று காலம் கடந்து விட்டது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் என் மகனும் நியாயம் கோரித் தெருவிற்கு வந்திருக்கிறோம்.

தமிழை நேசித்தால் இதுதான் கதியா?

‘தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன். ஊரறிந்த தமிழ்க்கவிஞராகிய எனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம் ? இதன் பின்னணி என்ன ? தியாகு வீட்டை விட்டு ஓட, சொல்லிக் கொள்ளும் காரணம் ‘புரட்சிகர அரசியலுக்கு என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளப் போகிறேன், அதற்குக் குடும்பம் தடையாக இருக்கிறது' என்பதுதான்.

அது என்ன புரட்சி?

அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார் ? எனவே அது என்னவகைப் புரட்சி, அதன் நன்மை, தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.

தியாகு 2001 இல் என்னைப் பெண் கேட்டு என் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், ‘என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன், என்னைப் போலவே தாமரையையும் அவர்கள் நன்கறிவார்கள். எங்கள் மீதும் எங்கள் உறவின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம்' என்று உறுதி கூறியே என்னைத் திருமணம் செய்து கொண்டார். இணைவதற்கு அனுமதி வாங்கிய தியாகு, வீட்டை விட்டு ஓடுவதற்கு இவர்களிடமெல்லாம் அனுமதி வாங்கினாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அவர்கள் முன் வந்து இதற்குப் பதில் சொல்ல வேண்டுகிறேன். அந்தப் பதிலினூடாக, தமிழ்த்தேசியம்... என்றால் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, நாளை இவர்கள் அமைக்கப் போகிற தமிழ்த் தேசத்தில் என்னவகையான விழுமியங்கள் இடம் பெறப் போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ்மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்.


என்னுடைய கோரிக்கைகள்

1. வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தலைமறைவான தியாகு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடு திரும்ப வேண்டும்.

2. நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.


நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன். எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் திராவிடத் தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

னக்கு நியாயம் கிடைக்காமல் நானும் என் மகனும் வீடு திரும்ப மாட்டோம். இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எனக்கும் என் மகனுக்கும் என்ன நேரிட்டாலும் அதற்குத் தியாகுவே பொறுப்பு. நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர் கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள் ? -இவ்வாறு கவிஞர் தாமரை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


நன்றி வல்லமை குழுமம்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian on Tue Mar 03, 2015 10:27 pm

இன்னும் அந்த விடியோவை பார்க்கவில்லை .

பதிவிட்ட கட்டுரை 28/2/15 தமிழ் ஹிந்துவில் படித்தேன் .

அதில் பின்னூட்டங்கள் பல இருந்தன . சிலவற்றை பதிவிடுகிறேன் . ஒரு முழுமை கொடுக்கும் என நினைக்கிறேன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
responses

1.Gandhi  
தியாகு. தூக்கு தண்டனைக் கைதியாக இருந்த போது, 'பரோலில்' வெளிவந்து, தனது நண்பரின் சகோதரியை மணந்து, கர்ப்பமாக்கி விட்டு, சிறை சென்ற பின் குழந்தை பிறந்தது உண்மையா? தனது குழந்தையின் தகப்பனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு 'அந்த மனைவி' கொடுத்த கருணைமனு காரணமாக தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் பெற்றதா? பின் சிறையிலிருந்து விடுதலையாகி, விடுதலைப் புலி ஆதாவாளராக, தாமரையைக் 'காதலித்து' திருமணம் செய்தது உண்மையா? 'என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவு' எடுத்தது உண்மையானால், அவர்களும் 'அந்த மனைவிக்கு' துரோகம் இழைக்கத் துணை போனார்களா? அந்த மனைவிக்கு' துரோகம் இழைத்து தாமரை தியாகுவை மணந்தது சரியா? இந்த தவறுகளை 'சரியான ஜனநாயகத் தீர்வு' என்று நியாயப்படுத்தலாமா?

2.Shankar  
இவர் தனது முதல் கணவரை விட்டு வந்தவர்.அது இவரது தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது கணவர் அதுதான் இப்போது ஓடி போயிருப்பவர், அவரும் தன் மனைவியும் மற்றும் ஒரு மகளையும் விட்டு இவருடன் இணைந்தார்.அந்த முதல் மனைவிக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் யார் வாழ்கை கொடுப்பார்கள்/கொடுத்தார்கள்.இந்த தமிழ் தேசியம்,திராவிட புரட்டு இதெல்லாம் பணம் சம்பாதிக்க ஒரு வழி- புண்ணாக்கு .அப்படி போகும் வழியில் தன் உடல் பசிக்கு ஏதேனும் கிடைத்தால் அது போனஸ்.இதை சீரியஸ் ஆக நினைத்து ஏமாறும் அப்பாவிகளும் இருக்கிறார்கள், தாமரையை போல. இவர் பல வருடங்களாக புலம்புவதே வேலையாக வைத்து கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழ் செனிமாவை பொறுத்தவரை ஒரு முதல் தர கவிஞர்.
3.Sithi  
தியாகுவிற்கு முதல் திருமணமாகி இரண்டு வயதுக்கு வந்த பெண் குழந்தைகள். உள்ளது கவிஞருக்கு தெரிந்து தானே இரண்டாவது துணையாக சென்றார் இவர் திருமணத்தின் போது தியாகுவின் முதல். மனைவியை பற்றி இவர் ஏதாவது கவலை பட்டாரா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி தி ஹிந்து /தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by Aathira on Tue Mar 03, 2015 10:34 pm

நன்றி ரமணியன் சார்.
இப்போதுதான் சூடு பிடிக்கிறது.
நானும் அதையேத்தான் கேட்கிறேன். அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரிந்துதான், தனக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டதால் தியாகுவைத் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியின் மகளுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கக் கூடாது. அதுதான் தாமரையின் ஒரே கண்டிசன். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by ayyasamy ram on Wed Mar 04, 2015 6:26 am

தியாகு தனது மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பி
இருக்கிறாராம்....அதில் ஒரு பகுதி

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்:
எனக்கு அகவை 64. பட்டினிப் போருக்கு முன்பே
நோயாளியாகத்தான் இருந்தேன். அந்தப் போராட்டம்
தந்த புதிய உடல்வருத்தங்களிலிருந்தும் இதுவரை
மீண்டேனில்லை.

முதுமையின் தளர்ச்சியை அண்மைக் காலமாகப் பெரிதும்
உணர்கிறேன். இவை இறுதி ஆண்டுகளாகவோ மாதங்களாகவோ
நாட்களாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் இறுதி என்பது
மட்டும் உறுதி.

இறுதிக் காலத்தை மனைவியோடு சண்டையிடுவதில் இவன்
கழித்தான் என்று பேர்வாங்க விரும்பவில்லை.
அமைதியான சூழலில், அக்கறையுள்ள தோழர்களின் காப்பில்
ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.
-
....
நீ உன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளாதே.
நலம்பேண உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.
ஆனால் மனம் உடலைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்.
பொறுமையாகச் சிந்தித்து சீர்தூக்கி விடைதர வேண்டுகிறேன்.

தியாகு
-
--------------------
உபயம் - தமிழ் ஒன் இந்தியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian on Wed Mar 04, 2015 10:58 am

@Aathira wrote:நன்றி ரமணியன் சார்.
இப்போதுதான் சூடு பிடிக்கிறது.
நானும் அதையேத்தான் கேட்கிறேன். அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரிந்துதான், தனக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டதால் தியாகுவைத் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியின் மகளுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கக் கூடாது. அதுதான் தாமரையின் ஒரே கண்டிசன். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1124103

பெண்களுக்கு பெண்களே எதிரி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் , ஆதிரா !
த்யாகுவை மறுமணம் செய்வதற்கு முன்பே , தாமரை அவர்கள் ஒரு சிறந்த கவிதாயினி .
ஆங்கில கலப்படமற்ற , தூய அழகு தமிழ் , துள்ளிவிளையாடும் கவிதைகள் .
"சிநேகிதனே "ஒன்றே போதும் . கலை உலகில் இந்த அங்கிகாரம் போதவில்லையா இவருக்கு .
முதல் மனைவியின் ,மகளுக்கு , எந்த பொறுப்பும் கொடுக்ககூடாது எனில் ,
நெருடுவது வேறு ஏதோ .

இவர் ,ஒரு இஞ்சினீரிங்க் பட்டதாரி என நினைக்கிறேன் .
படித்தவர்கள் மத்தியில் ,பகுத்தறியும் குணம் , அதிகம் தேவைப் படுகிறது.
இவர் மேலிருந்த உயர் அபிப்பிராயம் , இறங்கு வரிசையில் உள்ளது

ரமணியன் .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by கோ. செந்தில்குமார் on Thu Mar 05, 2015 3:59 pm

கணவன் மனைவி இடையே உள்ள பிணக்கை ஊரறிய செய்தால் எப்படி சரியாகும்?
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 332
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by Aathira on Thu Mar 05, 2015 5:05 pm

@T.N.Balasubramanian wrote:
@Aathira wrote:நன்றி ரமணியன் சார்.
இப்போதுதான் சூடு பிடிக்கிறது.
நானும் அதையேத்தான் கேட்கிறேன். அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரிந்துதான், தனக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டதால் தியாகுவைத் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியின் மகளுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கக் கூடாது. அதுதான் தாமரையின் ஒரே கண்டிசன். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1124103

பெண்களுக்கு பெண்களே எதிரி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் , ஆதிரா !
த்யாகுவை மறுமணம் செய்வதற்கு முன்பே , தாமரை அவர்கள் ஒரு சிறந்த கவிதாயினி .
ஆங்கில கலப்படமற்ற , தூய அழகு தமிழ் , துள்ளிவிளையாடும் கவிதைகள் .
"சிநேகிதனே "ஒன்றே போதும் . கலை உலகில் இந்த அங்கிகாரம் போதவில்லையா இவருக்கு .
முதல் மனைவியின் ,மகளுக்கு , எந்த பொறுப்பும் கொடுக்ககூடாது எனில் ,
நெருடுவது வேறு ஏதோ .

இவர் ,ஒரு இஞ்சினீரிங்க் பட்டதாரி என நினைக்கிறேன் .
படித்தவர்கள் மத்தியில் ,பகுத்தறியும் குணம் , அதிகம் தேவைப் படுகிறது.
இவர் மேலிருந்த உயர் அபிப்பிராயம் , இறங்கு வரிசையில் உள்ளது

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1124205
ஆமாம் ரமணியன் சார். அவர் பாடலாசிரியர்தான். ஆனால் தியாகு ஈழப் போராட்டத்தில் ஒர் முக்கிய புள்ளி. இருவரும் முதல் மணம் முறிவு ஆனவர்கள்தான். இப்போது இவரது போராட்டத்தின் பின்புலம் சேர்ந்து வாழ்வதாகத் தெரிகிறதா? அப்படியே இருந்தாலும் இப்படி ஊர் கூடிய பின் ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் வெறுப்பு தானே கூடும். இனி சேர்ந்து வாழ யாருக்கேனும் மனம் இடம் கொடுக்குமா? இதன் பின்புலம் பழிவாங்கும் நோக்கம் மட்டும் இருப்பதாகத் தெரியவில்லையா?


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by Aathira on Thu Mar 05, 2015 5:06 pm

சென்னை: கவிஞர் தாமரைக்கு அவரது கணவர் தியாகு எழுதிய கடிதத்தின் முழு விவரம் வெளியாகியுள்ளது. கணவர் தியாகு, வீட்டை விட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் எனக் கோரி, திரைப்பட பாடலாசிரியர் தாமரை, சென்னை, சூளைமேட்டில் உள்ள தியாகுவின் கட்சி அலுவலகம் முன் மூன்று நாட்களாக, தன் மகனுடன் தர்ணா நடத்தினார். இதையடுத்து நான் எங்கும் ஓடவில்லை. வேளச்சேரியில் எனது முதல் மனைவியின் மகள் வீட்டில்தான் இருக்கிறேன் என்று தியாகு கூறியிருந்தார். இதையடுத்து தனது போராட்டத்தை வேளச்சேரிக்கு மாற்றியுள்ளார் தாமரை . இந்த நிலையில் தியாகு, தாமரைக்கு இமெயிலில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தாமரை! நான் விலகியிருப்பதால் உனக்கும் சமரனுக்கும் எவ்வளவுத் துன்பம் என்று எனக்குப் புரியாமலில்லை. ஆனால் அன்புமில்லாத, அறனுமில்லாத இல்வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதால் ஏற்படும் பெருங்கேட்டினைக் களைவதற்கு இது தவிர வேறு வழியில்லை. இப்போதைய துன்பம் உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும்தான். தொடக்கத்துக்கே திரும்பிச் சென்று நீண்ட விவாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அது முடியவே முடியாத தொடர் விவாதமாகி விடும். கடந்த ஓராண்டுக்கால நிகழ்வுகளை மட்டும் எண்ணிப் பார்த்தாலே போதும், நம்மால் மீண்டு வர முடியாத கட்டத்தை அடைந்து விட்டோம் என்பது விளங்கும். 2013 அக்டோபர் முதல் நாள் தொடங்கிய என் உணவு மறுப்புப் போராட்டம் 15ஆம் நாள் முடிவுற்ற பின் இனி அலுவலகம்தான் என் இல்லம் என்று முடிவு செய்தேன். பிறகு அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில்தான் வீடு திரும்பினேன். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை. அதற்கோர் எடுத்துக்காட்டுதான் என் அப்பா கொடுத்த பணம் குறித்து நடந்தவையும், அதில் உன் பங்கும். உண்மையை முழுமையாக அறியவிடாமல் மறைத்து நின்றாய். ஓர் ஒளிப்படி கொடுப்பதற்கு ஓராண்டு போதவில்லை உனக்கு. "அவர் வழக்குத் தொடர்ந்தால் தொடரட்டும்" என்று என் தம்பி கூறியதாகச் சொன்னாய். ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எப்படி? என்று எனக்கு விளங்கவில்லை. அவர் அப்படித்தான் சொன்னார் என்றால் பிரிவுக்கு வழிகாட்டுகிறார் என்று பொருள். அளவுமீறிய ஒவ்வாமைக்குப் பிரிவுதான் மருந்து. அப்படியும் குணப்படாது என்றால் முறிவுக்குத்தான் வழிகோலும். உனக்கென்று சில கடமைகளும் எனக்கென்று சில கடமைகளும் உள்ளன. அவற்றை ஒருபோதும் விட்டுத்தர முடியாது, எப்படியாவது ஒட்டியிருக்க வேண்டும் என்பதற்காக நீ நீயாக இருப்பதையும் நான் நானாக இருப்பதையும் கைவிட முடியாது. நம்மிடத்தில் வேறிருவர் இருந்து உன்னிடமோ என்னிடமோ அறிவுரை கேட்டிருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்போம். நம் கடந்தகாலமே இதற்குப் போதிய சான்றல்லவா? இப்போது என்ன செய்வது? மற்றவர்களை அணுகிப் பேசுவதென்றால் பேசலாம், நீதிமன்றப் படியேறுவதென்றாலும் ஏறலாம். அதற்கு முன் நமக்குள் கொஞ்சம் உரையாடலாம் என்பது என் கருத்து. நேரில் பேசும் போது நீ உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதால் மின்னஞ்சல் வழியாகவே உரையாடலாம் என்கிறேன். அது சரிப்படாத போது மற்ற வழிகளை நாடலாம். ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: எனக்கு அகவை 64. பட்டினிப் போருக்கு முன்பே நோயாளியாகத்தான் இருந்தேன். அந்தப் போராட்டம் தந்த புதிய உடல்வருத்தங்களிலிருந்தும் இதுவரை மீண்டேனில்லை. முதுமையின் தளர்ச்சியை அண்மைக் காலமாகப் பெரிதும் உணர்கிறேன். இவை இறுதி ஆண்டுகளாகவோ மாதங்களாகவோ நாட்களாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் இறுதி என்பது மட்டும் உறுதி. இறுதிக் காலத்தை மனைவியோடு சண்டையிடுவதில் இவன் கழித்தான் என்று பேர்வாங்க விரும்பவில்லை. அமைதியான சூழலில், அக்கறையுள்ள தோழர்களின் காப்பில் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. நமக்குள் பொது என்று எதுவும் மிச்சமில்லை, சமரன் ஒருவனைத் தவிர! அவனுக்கும் கூட உடனே இடர்ப்பாடுகள் இருந்தாலும், நெடுங்கால நோக்கில் நம் பிரிவுதான் நல்லது என்பதை எண்ணிப் பார்த்தால் நீயும் ஏற்றுக் கொள்வாய். அவனை நீ வளர்க்கும் முறை சரியோ தவறோ, என் குறுக்கீடு இல்லாமல் அதைச் செய்வதுதான் அவனுக்கும் உனக்கும் நல்லது. நம் போராட்டத்தில் சமரனை ஒரு பகடையாக உருட்ட வேண்டாம் என்பது என் விண்ணப்பம். நடைமுறைச் சிக்கல்கள் எனக்குப் புரியாமலில்லை. செலவு கொஞ்சம், கனிவு கொஞ்சம் சேர்ந்து கொண்டால் எல்லாவற்றுக்கும் தீர்வு காண முடியும். அம்மாவிற்கும் துன்பம்தான், அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஓராண்டு முன்பு எடுத்திருக்க வேண்டிய முடிவு அவர்கள் சொன்னதைக் கருதித்தான் தள்ளிப் போயிற்று, ஆனால் எதற்கும் எல்லை உண்டு என்பதை எண்ணி அவர்கள் ஆறுதல் அடையலாம். நீ உன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளாதே. நலம்பேண உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால் மனம் உடலைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள். பொறுமையாகச் சிந்தித்து சீர்தூக்கி விடைதர வேண்டுகிறேன். தியாகு

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thiyagu-s-letter-thamarai-221974.ஹ்த்ம்ல்


நன்றி ஒன் இண்டியா


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian on Thu Mar 05, 2015 7:09 pm

நன்றி ,ஆதிரா ,பகிர்விற்கு .
நாணயத்தின் ஒரு பக்கம் பார்க்கமுடிகிறது .
நா நயம் தெரிகிறது .
நாணயத்தின் மறுபக்கம் பார்க்கமுடிந்தால் தான்
நா நயத்தின் நியாயம் தெரியவரும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by ராஜா on Thu Mar 05, 2015 7:14 pm

பாவமா இருக்கு சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by விமந்தனி on Thu Mar 05, 2015 9:44 pm

தாம்பத்யமும் இங்கே அரசியலாக்கப்படுகிறது........ சோகம் சோகம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian on Thu Mar 05, 2015 9:50 pm

தாம்பத்யத்திற்கு காரணமே அரசியல்தான் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by விமந்தனி on Thu Mar 05, 2015 9:54 pm

ஆமாம், அது மறுக்க முடியாத உண்மை தான் ஐயா. எல்லாவற்றையும் வியாபாரமாக்குகிறார்களே........ என்ன கொடுமை சார் இது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by விமந்தனி on Thu Mar 05, 2015 9:58 pm

அம்மணி ரொம்பவும் நியாயமாய்(!) பேசுகிறாரே..... இதில் தமிழை எதற்கு சாட்சிக்கு கூப்பிடுகிறார்? புரியவில்லையே.....


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum