ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தீராத விளையாட்டுப் பிள்ளை...

View previous topic View next topic Go down

best தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by krishnaamma on Mon Mar 02, 2015 12:58 amதீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணபரமாத்மா விளையாடியதெல்லாம் வெறும் விளையாட்டல்ல; தெய்வீகத் திருவிளையாடல்கள்! ஆனால் நாமோ, கண்ண பரமாத்மாவின் சிறுவயது வாழ்க்கையை ஏதோ விளையாட்டுப் போலக் கருதி, பின்னர் அவன் பஞ்சபாண்டவர்களுக்கு அருளியது, மகாபாரத யுத்தத்தில் அவன் புரிந்த லீலைகள், முடிவாக அவன் அருளிய கீதை போன்றவற்றைத்தான் பெரிதாகப் பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அப்படியானால், அவன் ஓரிடத்தில் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து, வெண்ணெய்யைத் திருடித் தின்று, கொக்கு அரக்கன், பாம்பு அரக்கன், அந்த அரக்கன், இந்த அரக்கன் எனக் கொன்று திரிந்ததற்கு வேறு பொருளோ, காரணமோ இல்லையா?

பொழுது போக்குவதற்கும், படமாக வரைவதற்கும், புத்தகங்கள் போட்டு விற்றுக் கல்லாவை நிரப்புவதற்கும், கார்ட்டூன் படங்களாகவும் திரைப்படங்களாகவும் திகிலூட்டும் பின்னணி இசையோடு பார்த்துப் பின்பு மறப்பதற்கும், பலர் பணமாய் சம்பாதிப்பதற்கும், அளவே இல்லாமல் விளம்பரங்களைச் சேர்த்துத் தொலைக்காட்சிமுன் குழந்தைகளை உட்கார வைத்து மூளைச் சலவை செய்வதற்கும், கண்களை உருட்டி, வாயை விரித்துக் கதைகளைக் கூறி சோறு ஊட்டுவதற்குமானதா அவன் பால்ய கால லீலைகள்?

..................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by krishnaamma on Mon Mar 02, 2015 1:02 am

இப்படிக் கதை கேட்டுச் சோறு உண்ட குழந்தை வளர்ந்து, 'நானும் கொக்கைப் பிடித்துக் கொல்லப் போகிறேன். அடுத்த வீட்டில் வெண்ணெய் திருடப் போகிறேன்’ என்று கிளம்பினால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இதுவரை எவராவது இதன் உட்பொருள் என்னவென்று விளங்கிக்கொண்டு சொன்னதுண்டா? கம்ஸன் அரக்கர்களை ஏவினான்; கண்ணன் அவர்களைக் கொன்றான். இதுதானே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. கம்ஸன், கண்ணனைக் கொல்ல அரக்கர்களை ஏவினால், அதனால் நமக்கென்ன? இதை ஏன் நம் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும்? படமாக, சிலையாக ஏன் பார்க்க வேண்டும்? வேண்டியதில்லையல்லவா? பாகவதத்திலேயே மாமன் மருமகன் பிரச்னையை ஓரிரு வரியில் முடித்திருக்கலாமே..! அப்படியாயின், இதற்கு ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும்; பெரிய வாழ்வியல் தத்துவங்கள் இருக்க வேண்டும். இல்லாதது ஏதுமில்லை நமது புராண இதிகாசங்களில்!
பரம்பொருள் பிறப்பெடுத்தால் நிச்சயம் அதன் தன்மை வெளிப்பட்டுத்தான் ஆகும். அவனது ஒவ்வொரு அசைவும், மனித குலத்துக்குப் பாடமாக அமையும்.

அவன் பிறப்பில் இருந்தே பார்ப்போமே! முன்வினை காரணமாக (இதை அப்படியே வைத்துக்கொள்வோம்) பெற்றோர் சிறைச்சாலையில் இருக்க, கண்ணன் பிறப்பு அங்கே நிகழ்கிறது. பின் அங்கிருந்து இடம் பெயர்கிறான். காரணம், மாமன் கொன்றுவிடுவான் என்கிற பயம், பெற்றவர்களுக்கு. இதுதானே பாகவதத்தின் ஆரம்பம்!

இதை மிக எளிதாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்க முடியும். குழந்தைகளோடு இருக்கும் பெற்றோர்கள் மனதில் இவை பதியவேண்டும். குழந்தைகளுக்கு எப்படி நாம் கண்ணன் கதைகளைக் கூறவேண்டும் என்பதற்காகத்தான் இது. முக்கியமாக, குழந்தைகளுக்கு அரக்கர் கதைகளைக் கூறும்போது, அவை நம் வாழ்க்கையோடு பொருந்துவது போல் சொல்லவேண்டும். அப்போதுதான் அவற்றின் உட்கருத்து குழந்தைகள் மனதில் பதியும். அதுதானே வேண்டும் நமக்கு?

................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by krishnaamma on Mon Mar 02, 2015 1:04 am

கண்ணன் வெண்ணெயைத் திருடியதுபோல், உங்கள் குழந்தை தன்னுடைய திறமையால், மற்றவரின் உள்ளங்களைத் திருடலாம். கண்ணன் செய்தது அதைத்தான்!

அழகாய் குழந்தை வளர்கிறது, கண்ணனைப் போலே! பள்ளியிலும் வெளியிலும் பாராட்டுகளும் பரிசுகளும் வாங்குகிறார்கள். சும்மா இருப்பார்களா சுற்றி இருப்பவர்கள்? பூதனை போலப் புறப்பட்டு வருவார்கள். வஞ்சப் புகழ்ச்சி மழை பொழிவார்கள். அப்போது செய்ய வேண்டியது என்ன? கண்ண பரமாத்மா பூதனை போக்கிலேயே போய், அவள் கதையை முடித்ததுபோல், இந்த வஞ்சப் புகழ்ச்சிக்காரர்களின் போக்கிலேயே போய், அவர்களையும் அவர்களது சதி வேலைகளையும் வெற்றிகொள்ள வேண்டும்.சரி, இந்தக் கொக்கு அரக்கன் ஏன்? அது என்ன உணர்த்துகிறது? ராட்சதக் கொக்கின் நீண்ட கூரிய அலகு தண்ணீரில் வெகு தூரம் நுழைந்து மீனைப் பிடிப்பதுபோல், பலர் தங்களின் கூரிய வார்த்தைகளால் உங்கள் அடிமனம் வரை போய்த் தைப்பார்கள். உங்கள் ஆற்றலை மெள்ள ஆட்டம் காண வைக்க முயல்வார்கள். கொக்கைப் போலக் காத்திருந்து, நேரம் பார்த்து வீழ்த்த முனைவார்கள். கூரிய சொற்களால் காயப்படுத்துவார்கள். அப்போது, கண்ணபரமாத்மா கொக்கின் அலகைப் பிளந்து கிழித்ததை நினைவுகூர்ந்து, பொறாமைக்காரர்களின் கூரிய சொற்களைக் கிழித்துத் தூரப் போடுங்கள். கொக்கைப் போன்ற இவர்கள் உங்கள் உள்ளத்தின் உரம் கண்டு ஒதுங்கிப் போவார்கள்; ஒடுங்கிப் போவார்கள்.

.......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by krishnaamma on Mon Mar 02, 2015 1:05 am

அதென்ன பாம்பு அரக்கன்..? பாம்பைப்போல் அழகாகப் படம் எடுத்து மயக்கி, 'மடார்’ என்று கவ்வி இழுக்க உலகத்தில் பலர் இருக்கிறார்கள். 'நான் இவனை எப்படிக் கொண்டு வருகிறேன் பாருங்கள்; இவனை என்னிடம் விட்டுவிடுங்கள்’ என்று சுருட்டிப் பிடித்து முடக்கப் பார்ப்பார்கள். அவற்றுக்கெல்லாம் மயங்கி மாட்டிக்கொள்ளவே கூடாது. பாம்பின் விஷ மூச்சைப் போன்றது இவர்களது இனிக்கும் பேச்சு. அதற்கு நாம் மயங்கினோமோ போச்சு! ஓங்கி அதன் தலையில் ஒரு தட்டு தட்டி அடக்கிவிட்டு, உங்கள் சாதனையை நோக்கிப் பயணப்படுங்கள் குழந்தைகளே!கழுதை அரக்கனைப்போல் எட்டி உதைக்கவும், குதிரை அரக்கனைப்போல் திமிறித் தாக்கவும், சுழற்காற்றாக வாழ்க்கையைப் புரட்டிப் போடவும் பலர் காத்திருப்பார்கள். இவர்களையெல்லாம் கண்ணன் காட்டிய பாதையில் போய் சாதுர்யமாகக் கடப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

எல்லாம் சரி! யானை ஒன்று தாக்க வருமே, அது? ஆம்! மிகப் பெரிய அசுர பலத்தோடு அதிகாரம், ஆணவம், பதவி என்ற பல யானைகள், நம்மைச் சுற்றிப் பிடித்துச் சுழற்றி அடித்து, நசுக்கக் காத்துக்கொண்டுதான் இருக்கும். அவற்றை நமது உறுதியாலும், நேர்மை மற்றும் இறைபக்தியாலும் வீழ்த்திவிடலாம்.

அவ்வளவு பெரிய மதங்கொண்ட ராட்சத யானையைச் சின்னக் கண்ணன் தும்பிக்கையைப் பிடித்துத் தூக்கியடித்தது இந்த உண்மையை நமக்கு உணர்த்துவதற் குத்தானே தவிர, வேறெதற்கும் இல்லை. கண்ணன் இப்படியாக லீலைகள் நிகழ்த்தியது இதையெல்லாம் நமக்குச் சொல்லத்தான். இவற்றை வளர்ந்து பெரியவனாகித்தான் நம்மால் சாதிக்க முடியும் என்றில்லை; பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே இதுபோன்ற சவால்களை மேற்சொன்னவற்றின் துணையோடு முறியடித்து வெற்றிநடை போடமுடியும். அதனால்தான் கண்ணன் சிறுவனாக இருக்கும்போதே இவற்றைச் செய்து காட்டினான்.

..................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by krishnaamma on Mon Mar 02, 2015 1:07 am

அவன் இறைவன். பாதை காட்டுவதும் அவன்தான்; பாடம் கூறுவதும் அவன்தான். அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங் கள். வெறுமனே அரக்கர்களைக் கொல்வது அவன் வேலையல்ல. அந்த அரக்கர்கள் யாரும் இல்லாமலேயே, அவனால் வளர்ந்திருக்க முடியாதா? யோசித்துப் பாருங்கள். பிறப்பிலிருந்து இந்தப் பள்ளி, கல்லூரிப் பருவம் என்பது நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய மானது! எத்தனை இனிமையானது! ஆனாலும், இடையிடையே இதுபோன்ற சோதனைகளும் வரும். அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க, உதாரணங்களுடன் விளக்கி உள்ளத்தில் உரமேற்றவே இந்தத் திருவிளையாடல்கள்.அவன் அர்ஜுனனுக்குச் சொன்னது மட்டும்தான் கீதை என்று எண்ணிவிடாதீர்கள். அவனது வாழ்க்கை முழுவதுமே கீதைதான்; பாடம்தான். பாடம் என்றால் பலருக்கு வேப்பங் காயாகக் கசக்குமல்லவா? எனவேதான், அதைச் சுவாரஸ்யமாக நமக்குக் காட்ட, அவன் சில வண்ணங் களைச் சேர்த்துக் கொண்டான் (வனமாலி அல்லவா!). புரிந்து நடக்க வேண்டியது நமது கடமை.

.........................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by krishnaamma on Mon Mar 02, 2015 1:11 am
இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் அவன் தன் பெற்றோரை யும், பெரியவர்களையும் மதித்த பாங்கைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வையுங்கள். இத்தனை அரக்க குணங்களையும் தாண்டி வந்து சாதித்து, தடைபோட முயன்றவர்களை வியப்பிலாழ்த்தி, இந்த உலகம் உய்ய, நாம் பிறந்த நாடு முன்னேற, கீதை அளவுக்கு இல்லாவிட்டாலும், சில உயர்ந்த தத்துவங்களை, உண்மைகளை, பொன்மொழிகளை, வழிகாட்டுதல்களை நம்மாலும் அளிக்க முடியும் என்பதுதான் ஸ்ரீகண்ணபிரான் நமக்கெல்லாம் உணர்த்தும் பாடம்; காட்டும் வாழ்க்கை நெறி!

'அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல, நமது முயற்சிகள் அத்தனைக்கும் அந்தக் கண்ணனே துணை இருப்பான் என்கிற உறுதியான நம்பிக்கையோடு நடைபோடுங்கள்.

நிச்சயம் நாரணன் உங்கள் கூடவே இருப்பான்!

பத்மவாசன் - சக்தி விகடன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by ayyasamy ram on Mon Mar 02, 2015 8:22 am

நல்ல பதிவு..
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

best Re: தீராத விளையாட்டுப் பிள்ளை...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum