ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 02, 2015 12:36 am

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு?

இது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏமாற்றுகின்றனவா?

ஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

கடும் தட்டுப்பாட்டில் தடுப்பூசிகள்!

இவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.

இங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால், தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை!

சில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன? எங்கே செல்வார்கள் ஏழைகள்?

அரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது?

என்னதான் தீர்வு?

இதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி? அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

சுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்

பன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.

எங்கெல்லாம் பரிசோதனை செய்யலாம்?

அரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.

தனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.

கோவை - மைக்ரோ பயாலஜி லேப்.

நாகர்கோவில் - விவேக் லேப்.

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.

திருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.

மறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி

பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.

தாமதமாகிவிட்டது!- மருத்துவர் கு.கணேசன்

நோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.

- டி.எல். சஞ்சீவிகுமார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 02, 2015 12:37 am

பன்றிக் காய்ச்சலுக்கு 1075 பேர் பலி: 20 ஆயிரம் பேர் பாதிப்பு

பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, நாட்டிலேயே மிக உயர்ந்த அளவில் குஜராத்தில் 275 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் 261 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 153 பேரும் பலியாகியுள்ளனர். மராட்டியத்தில் 143 பேரும், தெலுங்கானாவில் 57 பேரும், கர்நாடகாவில் 46 பேரும், பஞ்சாப்பில் 42 பேரும், அரியானாவில் 21 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும், டெல்லியில் 10 பேரும், தமிழகத்தில் 9 பேரும், இமாச்சல் பிரதேசத்தில் 8 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா, பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 02, 2015 4:36 pm

பன்றிக்காய்ச்சல்: உ.பி.,யில் பரவுகிறது

லக்னோ: பன்றிக்காய்ச்சல் உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கும் இங்குமாக இருந்த பாதிப்பு தற்போது பல மாவட்டங்களுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. தலைநகர் லக்னோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்க 505 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்வதால், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 02, 2015 4:39 pm

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி

கோவையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 38 வயது பெண் ஒருவர் பலியானார்.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக தொண்டையில் புண்ணும், காய்ச்சலும் ஏற்பட்டிருந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

காய்ச்சல் தொடர்ந்ததால் அவர் நேற்று காலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by ராஜா on Mon Mar 02, 2015 4:44 pm

பயங்கரமா இருக்கு , இதுக்கு என்ன தான் தீர்வு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 02, 2015 4:50 pm

@ராஜா wrote:பயங்கரமா இருக்கு , இதுக்கு என்ன தான் தீர்வு


தீர்வு கிடைக்காததால் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Tue Mar 03, 2015 12:49 am

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு கடந்த 1-ந் தேதி வரை 1,115 பேர் பலியாகி இருக்கிறார்கள். 20,795 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 275 பேர் பலியாகி உள்ளன. ராஜஸ்தானில் 267 பேரும், மத்திய பிரதேசத்தில் 160, மகாராஷ்டிராவில் 152, தெங்லுங்கானாவில் 57, பஞ்சாபில் 44, கர்நாடகாவில் 46, டெல்லியில் 10, அரியானாவில் 22, ஆந்திராவில் 14, இமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் 7 பேர்களும் பலியாகி இருக்கிறார்கள். நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Tue Mar 03, 2015 2:01 am


பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை : பட்னவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பொது சுகாதாரத் துறைக்கு தான் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்த நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை மறுக்கக் கூடாது என்றும், அவர்களது முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Tue Mar 03, 2015 5:56 pm

சென்னையில் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்!

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 வட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருக்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பன்றிக்காய்ச்சல் நோயின் பாதிப்பு, அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால் எல்லையோர பகுதிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள பள்ளிகளில் காலை நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே பள்ளிக்கு வரக்கூடாது என்றும், விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

swine fluதேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் கட்டாயப்படுத்தி அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் போகும் மாணவர்களுக்கு வேறு நாளில் தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கு குறைவான மாணவர்களே வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும், அப்பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Wed Mar 04, 2015 1:03 am

மங்களூருவில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு மாநிலத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது உடுப்பியை சேர்ந்த பெண் ஒருவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ள சம்பவம் நடந்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா சிரூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவரது மனைவி பிக்பா அசினா (வயது 35). இவர் கடந்த மாதம் 27-ந்தேதி, கார்வார் மாவட்டம் குமடா பகுதிக்கு நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் பட்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அசினாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள், அவரை மங்களூரு வென்லாக் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர், மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் சிகிச்சை பலனின்றி அசினா இறந்தார். உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியான முதல் பெண் இவர் தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Wed Mar 04, 2015 4:37 pm


பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் பரவலா? - திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என தகவல்

சென்னை: பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் பரவல் குறித்து பீதி நிலவுவதால், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. பன்றிக் காய்ச்சல் குறித்த தகவலால், பெற்றோர்களும், மாணவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

"பள்ளியில் மூன்று பேருக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளது; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம்" என, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி, பெற்றோருக்கு அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., தகவலால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ள நிலையில், நாளை துவங்கும் பிளஸ் 2 தேர்வு, என்ன ஆகுமோ என, பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தொ டர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக, பன்றிக்காய்ச்சல் பாதிப்பும், மக்களை அச்சமூட்டி வருகிறது.

தமிழக அரசு அறிவிப்பு

பன்றிக்காய்ச்சலை தடுக்க, எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், நான்கு லட்சம் டாமிபுளூ மாத்திரைகள்; 50 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கும், இலவசமாக மாத்திரைகள் தரப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் தொடர்கின்றன. பாதிப்பு, தடுப்பு பணிகள் குறித்து, அவ்வப்போது மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மூலமும் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, பெற்றோர்களுக்கு, மொபைல் போன் வழியாக, பள்ளியில், மூன்று மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளது. உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம் என, எஸ்.எம்.எஸ்., தகவலை அனுப்பி உள்ளது. இதனால், பதறிய பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்த்தனர்.

சில மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். மேலும், ஒரு வாரத்திற்கு பள்ளியை மூடுவது குறித்தும், மாநகராட்சியுடன் ஆலோசித்து வருவதாவும், அந்த எஸ்.எம்.எஸ்., தகவல் தெரிவிக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை (மார்ச் 5) துவங்குகிறது. இந்த நிலையில், பள்ளிகளை மூடும் அளவுக்கு பாதிப்பு உள்ளதாக பரவிய தகவல், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு நடக்குமா என, பெற்றோர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தேர்வு பாதிப்பு இல்லை: பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்; பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை கூறியதாவது: பன்றிக்காய்ச்சல் தகவல் தொடர்பாக, தனியார் பள்ளியில் என்ன நடந்தது; உண்மை என்ன என விசாரித்து, அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். பிளஸ் 2 தேர்வுகள், எந்த வகையிலும் பாதிக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாதிப்பு அதிகமா?

பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரம் பேர், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,000 பேருக்கு மேல் இறந்துள்ளனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 306 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். 183 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்; 11 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு குறைவு என்றாலும், உயிர் இழப்புகள் கூடாது என்பதே தமிழக அரசின் விருப்பம். பாதிப்பு உள்ளோருக்கு, டாமிபுளூ மாத்திரை தான் தீர்வு. இவ்வாறு, அவர் கூறினார்.

தப்பிக்க என்ன வழி?

* சளி, இருமல், தொண்டை வலி, எரிச்சல், காய்ச்சல், உடல் சோர்வு, மூட்டு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு இதன் அறிகுறிகள்.

* 65 வயதுக்கு மேற்பட்டோர், 5 வயதுக்கு கீழான குழந்தைகள், கர்ப்பிணிகளையும் தாக்க வாய்ப்புள்ளது.

* இருமும் போதும், தும்மும் போதும் காற்றில் கிருமி பரவலாம் என்பதால், துணி வைத்து மூடிக் கொள்ளலாம்.

* பொது இடத்தில் எச்சில் துப்புதல் கூடாது. கைகளை சோப்பு, தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

* கடைகளில் தானாக மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்த வேண்டாம். டாமிபுளூ மாத்திரை நோய் பாதிப்பை தடுக்கும் என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி அதை பயன்படுத்தக்கூடாது.

மலிவு விலையில் பன்றி காய்ச்சலுக்கு சோதனை மருந்து கண்டுபிடிப்பு

பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ள நிலையில், குறைந்த விலையில் நோய் பரிசோதனைக்கான கருவியை பெங்களூரு மருந்து நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து உள்ளது. பெங்களூருவில் உள்ள மோல்பயோ என்ற நிறுவனம் பன்றிக்காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி மற்றும் அதற்கான பரிசோதனை மருந்தை கண்டுபிடித்துள்ளது; இதை ஒருமுறை பயன்படுத்த 850 ரூபாய்தான் ஆகும்.

இதற்கான கருவி மற்றும் மருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதை பயன்படுத்தி நோய் ஆய்வு மேற்கொள்ள அதிகபட்சம், 3,000 ரூபாய் வரை ஆகிறது.

பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதை கண்டறிவதற்கான மருத்துவ சோதனை மருந்துகளை சுவிட்சர்லாந்தின் ரோச் மருந்து நிறுவனமும், அமெரிக்காவின் லைப் டெக்னாலஜிஸ் நிறுவனமும், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. பன்றிக்காய்ச்சலுக்கு குறைந்த விலையில், இந்திய நிறுவனம் சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ள போதிலும், அதை பயன்படுத்த ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பை கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. இந்த நோய்க்கு நாடு முழுவதும் 1,175 பேர் இறந்துள்ளதாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Wed Mar 04, 2015 6:27 pm

பன்றிக்காய்ச்சலை உறுதிப்படுத்த பரிசோதனை செய்வதில்... : தனியார் ஆய்வகங்களில் 'தண்டம்' அழ வேண்டிய அவலம்

சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், அதற்கான அறிகுறி உள்ளவர்களுக்கு, 'தொண்டை தடவல் மாதிரி' பரிசோதனை செய்வதில், பெரும் கெடுபிடி செய்யப்படுகிறது. இதனால், தனியார் ஆய்வகங்களில் பல ஆயிரம் ரூபாய், 'தண்டம்' அழ வேண்டிய நிலைக்கு, பகுதிவாசிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

சென்னையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதிப்பை, 'தொண்டை தடவல் மாதிரி' எடுத்து, பரிசோதனை செய்ய வேண்டும். அரசு சார்பில், 'கிங்' பரிசோதனை நிலையத்திலும், பிரபல தனியார் பரிசோதனை கூடங்களிலும், அதற்கான பரிசோதனை செய்யப்படுகின்றன.

எங்கு பரிசோதனை

அரசு மருத்துவமனைகள், மாநகராட்சியின் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருந்து பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, 'கிங்' பரிசோதனை நிலையத்தில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையை, தனியார் ஆய்வகங்களில் மேற்கொண்டால், 4,500 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை இடத்திற்கு ஏற்ப வசூலிப்பதாக கூறப்படுகிறது. பன்றிக்காய்ச்சல் பீதி அதிகரித்து உள்ளதால், அதற்கான அறிகுறிகளான காய்ச்சல், சளியுடன் கூடிய தும்மல், உடல்வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தாலே மக்கள், அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவ மனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்.

இதுபோன்ற நோயாளிகளிடம் மருத்துவர்கள், 'தேவையில்லாமல், தொண்டை தடவல் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டாம்' என, 'கிங்' பரிசோதனை நிலையத்தில் கூறுவதாகவும், அதனால் 'டாமி புளு' மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்; பரிசோதனை வேண்டாம் என்றும் கூறி அனுப்பி விடுகின்றனர். இருப்பினும், அச்சம் நீங்காதவர்கள், தனியார் ஆய்வகங்களுக்கு சென்று, பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்கின்றனர். 'கிங்' பரிசோதனை கூடம் மற்றும் அரசு, மாநகராட்சி மருத்து வர்களின், இந்த அணுகுமுறை, மறைமுகமாக தனியார் ஆய்வகங்கள் சம்பாதிக்க வழிவகுப்பதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அறிகுறி இருந்தால், பரிசோதித்து தங்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என, மக்கள் தெரிந்து கொண்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மனதளவில் தயாராக முடியும்.

பரிசோதனையே தேவைஇல்லை; குணமாகும் வரை தனிமையில் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாருடனும் தொடர்புடன் இருக்க கூடாது என்ற அறிவுரை, ஏற்க கூடியதாக இல்லை.

பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு பீதியை போக்க, உரிய பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கு 'பட்ஸ்' மூலம் மூக்கு, தொண்டை சளி மாதிரி எடுத்து, ஐஸ் பெட்டி யில் வைத்து, பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனை முடிவு வர 48 மணிநேரம் ஆகும். அதற்கு நேரம் வீணாவதுடன், செலவும் அதிகமாகிறது. 'கிங்' நிலையத்தில், மிகவும் அவசியமான வர்களுக்கு மட்டும் சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்புங்கள், என, கூறுகின்றனர். மக்கள் தேவையில்லாமல் பீதிஅடைந்து, 'எனக்கும் பரிசோதிக்க வேண்டும்' என, கேட்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது. இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

சோதனை எந்த அடிப்படையில்?

தற்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன், சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், ரத்தம் சம்பந்தமான நோய், சர்க்கரை வியாதி, புற்றுநோய், நரம்பு சம்பந்தமான நோய் பாதிப்பும், அவர்களுக்கு மேலும் மூச்சுவிட இயலாமை, நெஞ்சுவலி, ரத்த அழுத்தம் குறைதல், ரத்தத்துடன் சளி, நகங்கள் நீல நிறமடைதல் உள்ளிட்ட அதிதீவிர பாதிப்பு இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைத்து, அதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யலாம் மாநகராட்சி?

டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற பருவகாலத்தில் வேகமாக பரவும் பாதிப்புகளை, பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த, மாநகராட்சியே ஆய்வகம் அமைக்க வேண்டும். சென்னை போன்ற பெரிய நகரங்களில் இது அவசியம். அதற்கு தேவையான அனுமதியை மத்திய, மாநில அரசுகளிடம் பெற வேண்டும். அதுவரை, இதுபோன்று நோய் பரவும் காலகட்டத்தில் மட்டும், தனியார் ஆய்வகங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி கட்டணம் செலுத்தி, மக்களுக்கு இலவச பரிசோதனை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Thu Mar 05, 2015 2:12 am

தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகி இருப்பதாகவும், மருத்துவமனைகளில் 4 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், நோயை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், பன்றி காய்ச்சலை கண்டறிவதற்கான ஆய்வக ஏற்பாடுகள் மற்றும் பன்றி காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கிண்டி கிங் தடுப்புமருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரகநல பணிகள் இயக்குநர் டாக்டர் எ.சந்திரநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, கிங் தடுப்புமருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டாக்டர் குணசேகரன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பன்றி காய்ச்சலை தடுப்பதற்கு அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அப்போது, பன்றி காய்ச்சலுக்கு ‘ஒசில்டாமிவீர்’ (டாமிபுளூ) என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்நோயை எளிதாக குணப்படுத்தலாம் என்றும், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் 4 லட்சம் ‘டாமிபுளூ’ மாத்திரைகள் தயார் நிலையில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என, தனியாக சிறப்பு வார்டுகள், சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மத்திய சுகாதாரத்துறை அறிவுரையின்படி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு இந்நோய் வராமல் தடுக்க, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு இந்த ஊசி போடப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால், இந்த நோயின் தாக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 319 நபர்களில், 183 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 103 நபர்கள் அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர, 24 நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை பன்றி காய்ச்சலால் 11 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by M.Saranya on Thu Mar 05, 2015 2:40 pmஅரசு ஏன் இவ்வளவு அக்கறையின்மையோடு இருக்கிறது?? சோகம் சோகம் சோகம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Thu Mar 05, 2015 3:24 pm

பன்றி காய்ச்சல் பாதிப்பா: 'டாமி புளூ' போட்டு தேர்வு எழுதலாம்: சுகாதாரத்துறை செயலர் தகவல்

சென்னை: ''தமிழகத்தில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. பீதி அடையும் அளவுக்கு நிலைமை இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்; பாதிப்புள்ள மாணவர்கள், 'டாமி' புளூ மாத்திரை போட்டு தேர்வு எழுதலாம்; எந்த சிக்கலும் இல்லை,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு, இதுவரை, அரசு கணக்குப்படி, 11 பேர் இறந்துள்ளனர். நேற்று, தாராபுரத்தில் ஒருவர் இறந்துள்ளார். 'பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மாணவர்களுக்கு உள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம்' என, பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் அளவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இந்த நிலையில், சென்னை, கிண்டி, 'கிங்' ஆய்வு மையத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர்.

பின், சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், பீதி ஏற்படுத்தும் வகையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. தமிழகத்தில், ஜனவரி மாதம் முதலே தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்தால், கட்டுக்குள் உள்ளது. வட மாநிலங்களில் இருந்து வருவோர், அங்கு சென்று வருவோரால் தான் பாதிப்பு உள்ளது. நாடு முழுவதும், 21,000 பேர் பாதிக்கப்பட்டதில், 1,158 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில், மொத்த பாதிப்பு, 319 பேருக்கு மட்டுமே. 187 பர் வீடு திரும்பி விட்டனர்; 11 பேர் இறந்துள்ளனர். இதில், இரண்டு பேர் தானாக மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டதும், மூன்று பேர் தாமதமாக சிகிச்சைக்கு வந்ததும் காரணம். பாதிப்பு, இந்திய அளவில், ஒரு சதவீதம் கூட இல்லை; இருந்தபோதிலும், இறப்பு ஏற்படக்கூடாாது என்பதில், அரசு கவனமாக உள்ளது. பீதி அடையும் வகையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏதும் இல்லை; நிலையை கட்டுக்குள்தான் இருக்கிறது. நான்கு லட்சம் 'டாமி' புளூ மாத்திரைகள்; 50 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் கேட்டால், இலவசமாக தர தயாராக உள்ளோம். தும்மல், இருமல் பட்ட இடத்தைத் தொட்டுவிட்டு, அப்படியே கை கழுவாமல் விட்டுவிடுவது நல்லதல்ல. சோப்பு போட்டு, சுத்தமாக கைகழுவ வேண்டும். இதுகுறித்து, மாணவர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, காய்ச்சல் பாதிப்பு இருந்தால், 'டாமி புளூ' மாத்திரை போட்டு தேர்வு எழுதலாம்; அதில், எந்த சிக்கலும் இல்லை; அதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துள்ளது. அப்படி பாதிப்பு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. சென்னை, கோவை போன்ற நகரங்களில் பாதிப்பு இருந்தாலும், கிராமப்புறங்களில் எந்த பாதிப்பும் இல்லை. வெயில்காலம் வந்தால் பாதிப்பு குறைந்து விடும். காய்ச்சல் வந்தால், மருத்துவமனை செல்லுங்கள். தேவையற்ற பீதி வேண்டாம்;வதந்திகளையும் நம்ப வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால்...மீறினால் நடவடிக்கை!

தமிழகத்தில், ஆறு மையங்களுடன், புதுவை, 'ஜிப்மர்' என, ஏழு அரசு பரிசோதனை மையங்களும், 14 தனியார் மையங்களும் உள்ளன. தனியார் மையங்கள், 3,750 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அறிவுறுத்தினோம்; அதற்கு மேல் வாங்க மாட்டோம் என, உறுதி அளித்துள்ளனர். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும். 'கிங்' ஆய்வு மையத்தில், காலையில் கொடுத்தால், மாலையே முடிவுகள் தரப்படுகிறது. 48 மணி நேரம் காத்திருப்பு எல்லாம் இல்லை. 'பயோ செக்யூரிட்டி' காரணங்களால், இஷ்டம்போல் மையங்களை திறக்க முடியாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Thu Mar 05, 2015 6:04 pm

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 9 பேர் பலி

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 9 பேர் பலியாகினர். ஜெய்ப்பூரில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா எங்கும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை 5,822 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 295 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 55 பேர் ஏற்கெனவே பலியான நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை நிலவரப்படி 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் அந்த மாநிலத்தில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை அதன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Wed Mar 11, 2015 12:49 am

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்

காலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,482 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 26,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

இந்நோய்க்கு நாடு முழுவதும் 26455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1482 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 347 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 343 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 221 பேரும், மராட்டியத்தில் 201 பேரும் பலியாகியுள்ளனர்.

பாராளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக முன்னர் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கத்தை கண்டறிவதற்காக நாடு முழுவதும் 21 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை போதாது. அனைத்து மாநிலங்களிலும் இதற்கான தனி ஆய்வகங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.

பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வும் மக்களுக்கு தேவை. வெறும் தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டும் பன்றிக்காய்ச்சல் தாக்காது என்று இருந்து விடக்கூடாது. முகமூடி அணிவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது உள்ளிட்ட தனிநபர் சுகாதாரமும் மிகவும் அவசியமானது.

நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்திருந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Wed Mar 11, 2015 12:50 am

பன்றி காய்ச்சல் எதிரொலி: வாகனங்களை நிறுத்தி ஊதச் செல்லும் போலீசார் உஷார்

ஈரோடு மாவட்டம் முழுவதும் சட்டம்– ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் என போட்டி போட்டு கொண்டு வாகன சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.

அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி வருபவர்களையும் குறிப்பாக மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களையும் கண்காணித்து வழக்கும் அபராதமும் தீட்டி வருகிறார்கள். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அடிக்கடி போலீசாரின் சோதனைக்கு ஆளாகிறார்கள்.

போலீசாரிடம் கேட்டால், ‘‘எங்கள் கடமையை செய்றோம்’’ என்கிறார்கள்,. கடமையை செய்யட்டும். அதன் மூலம் வாகன விபத்துகளையும் குறைக்கட்டும்.

போலீசாருக்கு இப்போது ஒரு உஷார் தகவல். இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் பீதி ஏற்பட்டு உள்ளது. இந்த பன்றி காய்ச்சலுக்கு 1,482 பேர் பலியாகி உள்ளனர். 26,455 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பன்றி காய்ச்சல் நோய் உள்ளவர்கள் மற்றும் அதன் அறிகுறி உள்ளவர்களின் மூச்சுக்காற்று பட்டாலே நோய் தொற்றி கொள்வதாகவும் குண்டை தூக்கி போட்டு உள்ளனர்.

இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்களா..? என போலீசார் ஊதச் சொல்கிறார்கள். இந்த விஷயத்திலே போலீசார் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

இப்படி ஊதுபவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கம் இருந்தால் கூட அதன் தாக்கம் அருகே உள்ளவர்கள் மீதும் தொற்றிவிடும் என்று சொல்கிறார்கள்.

மேலும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் இப்படி ஊதச்சொல்லும் போது முக கவசம் அணிந்திருப்பார்கள். அதேபோல் ஈரோடு போலீசாருக்கும் வழங்கப்பட வேண்டும். இப்படி முக கவசம் அளித்து ஊதச் சொன்னால் எந்த தொற்று நோயும் ஏற்படாது.

ஆகவே மூலைக்கு மூலை... வீதிக்கு வீதி.. இரு சக்கர வாகனங்களை நிறுத்தி ஊதச் சொல்லும் போலீசார் உஷார்... உஷார்....!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Thu Mar 12, 2015 1:58 am

கைகுலுக்கினால் பன்றிக்காய்ச்சல் : அரியானா அமைச்சர் எச்சரிக்கை

சண்டிகர்:ஆங்கிலேயர்களைப் போல் கை குலுக்காமல், இந்தியர்களைப் போல் இருகரம் கூப்பி வணக்கம் கூறி பழகினால் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம் என அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். சட்டசபையில் அவர் கூறிய இந்த கருத்திற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1370 பேர் பலியாகி உள்ளதாகவும், 25,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பன்றிக்காச்சலுக்கு அரியானா மாநிலமும் தப்பவில்லை. மார்ச் 8ம் தேதி நிலவரப்படி அரியானாவில் 252 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக பரிதாபாத்தில் 47 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குருஷேத்ராவில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

சட்டசபையில் விவாதம்:

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரியானா சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. 27 பேர் பலியான பின்னரும் அரசு போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதற்கு விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், "பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவக்கூடாது என்றால் இந்தியனாக வாழுங்கள். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி கை குலுக்காமல், இந்திய கலாச்சாரப்படி இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துங்கள். அப்போது கைகள் மூலம் நோய் கிருமிகள் பரவாது. கை கூப்பி வணக்கம் சொல்வது இந்துக்களின் முறை என்று யாராவது நினைத்தால், நீங்கள் வணக்கம் என்று சொல்வதற்கு பதிலாக உங்கள் மதம் சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

அமைச்சருக்கு ஆதரவு:

அனில் விஜ்ஜின் இந்த வார்த்தைகள் அவையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. அவையில் சிரிப்பொலியும், மேஜை தட்டல்களும் அடங்க வெகு நேரமானது. பின்னர் அவையினரை நோக்கி, கை குலுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது கருத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் என கேட்டதற்கு, பெரும்பாலானவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து, சபாநாயகரிடம் ஆங்கில கலாச்சாரத்தை விடுத்து இந்தியர்களாக வாழ்வோம் என்ற கோரிக்கைக்கு அதிக ஆதரவு இருப்பதால், அதனை தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என விஜ் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Thu Mar 12, 2015 5:56 pm

மிரட்டும் பன்றிக் காய்ச்சலை விரட்டும் பாட்டி வைத்தியம்

சென்னை: பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1, 500 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கடந்த முறை பரவியதை விட மோசமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள். நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?

கற்பூரம்

ஒரு கற்பூரம், 6 ஏலக்காய் மற்றும் 6 கிராம்பை எடுத்து அதை பொடியாக்கி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்து அதை அடிக்கடி முகர்ந்து பார்க்கவும். இரண்டு நாளைக்கு ஒரு முறை துணியில் புதிய பொடியை நிரப்பவும்.

துளசி

தினமும் காலை எழுந்தவுடன் 5 துளசி இலைகளை மென்று விழுங்கவும். துளசி தொண்டை பிரச்சனைகளுக்கு நல்லது.

பால்

தினமும் இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் தூளை கலந்து குடிக்கவும்.

பூண்டு

தினமும் காலை 2 பல் பூண்டை சுடுதண்ணீருடன் எடுத்துக் கொள்வதும் பன்றிக் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

(பன்றிக் காய்ச்சல் உள்ளவர்கள் இம்முறைகளை முயற்சிக்க வேண்டாம், இவைகள் வரும் முன் காப்பத்ற்கு மட்டுமே)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Fri Mar 13, 2015 12:05 am

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் நோய் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். லாரி டிரைவர். இவருடைய மகன் தேவராஜன் (வயது 4). ராஜேஷ்குமாரின் தம்பி கரூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பார்க்க குடும்பத்துடன் நேற்று முனதினம் ராஜேஷ்குமார் கரூர் வந்தார். அன்று இரவு சிறுவன் தேவராஜனுக்கு திடீர் என்று காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறுவனை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள், சிறுவனை பரிசோதனை செய் தனர். அப்போது சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனுக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Fri Mar 13, 2015 10:34 pm

அதிக உக்கிரத்துடன் தாக்கும் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1,627 ஆக உயர்ந்தது

காலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,627 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 28,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

இந்நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று (12-ம் தேதி) வரை 1,627 பேர் பலியாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் இந்நோயால் 22,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 368 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், ஒருவரின் உடலுக்குள் புகுந்து, பிற உடல்களுக்கு மாறி, மாறி பரவி வரும் எச்1என்1 வைரஸ் முன்பைவிட அதிக உக்கிரத்துடன் பரவிக் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மாஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் நேற்று எச்சரித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Fri Mar 13, 2015 10:35 pm

ராஜஸ்தானில் மேலும் 8 பேர் சாவு: பன்றிக்காய்ச்சல் பலி 366 ஆக உயர்வு

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 பேர் தலைநகர் ஜெய்ப்பூரில் பலியாகியுள்ளனர்.

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இம்மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6,123 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று (12-ம் தேதி) வரை மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் 68 பேர், அஜ்மீரில் 41 பேர், ஜோத்பூரில் 33, நகவுர்-29, பார்மர்-23, கோட்டா-18, சிட்டோர்கர்-13, சிகர் மற்றும் உதய்ப்பூர் மாவட்டங்களில் தலா 12 பேரும் இதர மாவட்டங்களில் தலா பத்துக்கும் குறைவானவர்களும் பலியாகியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Fri Mar 13, 2015 10:41 pm

மானாமதுரையில் பன்றிக்காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள்

சிவகங்கை மண்டல பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மானாமதுரை சி.எஸ்.ஐ. ஆரம்ப பள்ளியில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் மாணவ– மாணவிகள் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி கிசிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். பேருந்து, தொடர் வண்டி, பள்ளிகள், அலுவலகங்கள், கோவில்கள் மற்றும் பொது கழிப்பிடங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்த பிறகு கைகளில் அனைத்து பகுதிகளையும் சோப்பு நீரால் 20 விநாடி முதல் 40 விநாடி வரை சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய கைக்குட்டைகள் மற்றும் துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும்போது, கை சுத்தகரிப்பான் கொண்டு செல்லப்பட வேண்டும். தண்ணீர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும்போது கை சுத்திகரிப்பானை பயன்படுத்தி குறைந்தபட்சம் 20 விநாடிகள் கைகளின் அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். கைகுலுக்கும்போது பிறரிடம் இருந்து இந்நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் கைகளை சுத்தப்படத்தினாலே 80 சதவீதம் இந்நோய் ஏற்படாமல் தடுக்க இயலும். மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். நெருக்கடியான இடங்களில் மனிதர்களுக்கு மிக அருகில் செல்லாமல் ஓரளவு இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் இந்நோய் கண்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் மூலம் நோய் கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்க வழிவகை செய்யும்.

மேற்கண்ட விவரங்களை பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் விளக்கி கூறினார்கள்.

மாணவர்களுக்கு கை சுத்தம் செய்யும் முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பேரூராட்சி சார்பில் சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்பரவு மேபார்வையாளர் மணிகண்டன், பாலசுப்பிரமணியன், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பிராங்கிளின், குமாரவேலு, கோபாலகிருஷ்ணன் மற்றும் ஞானசேகரன், சி.எஸ்.ஐ. ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஞானஜெபஜோதிபாய் மற்றும் ஆதாரக்கல்வி ஆசிரியர் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 1:50 am

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 1,710 பேர் பலி

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோய்க்கு நேற்று மேலும் 36 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 1,710 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 382 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் 29 ஆயிரத்து 558 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum