ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

View previous topic View next topic Go down

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by சிவா on Thu Feb 26, 2015 1:25 am

திமுக தலைவர் உடன்பிறப்புகளுக்கு கடிதம்:

’’தமிழக ஆளுநர் 17-2-2015 அன்று ஆற்றிய உரை மீதான விவாதத்திற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 23ஆம் தேதி பதிலளித்திருக்கிறார். ஆளுநர் உரை விவாதத்திற்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆற்றிய உரைக்குப் பதில் சொல்வதைவிட, முன்னாள் முதல் அமைச்சர், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய்அபராதமும் விதிக்கப்பட்டு, பதவி இழந்த தன்னுடைய கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத்தான் பன்னீர்செல்வம் முக்கிய கடமையாகக் கருதியிருப்பார் போலும்!

பேரவையில் ஆற்றிய உரையில் “அம்மா அரியணை யில் மீண்டும் அமர்ந்திடுவார், இது உறுதி”என்று கூறிய போதிலும், அவர்களுடைய கட்சி நாளேட்டில், முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்துள்ள இரண்டு பக்க விளம்பரத்தில் “ஆற்றலை ஆயுத மாக்கி அரசாட்சி நடத்தி வரும் அம்மா அவர்களே, தங்களின் 67வது பிறந்த நாள் தமிழகத்தின் திருநாள், பல்லாண்டு, புகழுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றுதான் உள்ளதே தவிர, அதிலே “மீண்டும் அரியணையில் அமர்ந்திடுவார்” என்பதைக் குறிப்பிடாமல் விட்டிருப்பதில் இருந்தே அவரது ஆழ்ந்த உள்ளக்கிடக்கை தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கவனமாக அந்த விளம்பரத்தைக் கூட கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தான் தந்திருக்கிறாரே தவிர, “முதலமைச்சர்” என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. ஒருவேளை, அவரு டைய விளம்பரத்திலே கூறியிருப்பதைப் போல “அரசாட்சி நடத்தி வருவதாகத்” தெரிவித்திருப்பதால், தன்னை முதலமைச்சர் என்று போடக் கூடாது என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

குற்றம் புரிந்தவர் என்று நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டப்பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறலாமா? ஆனால் இந்த ஆட்சியில் மரபுகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு எதை வேண்டுமானாலும் செய்வார்கள்! எதிர்க்கட்சித் தலைவரை “குடிமகன்” என்று பேரவையில் விமர்சனம் செய்வார்கள்; அதை எதிர்த்துக் கருத்துக் கூற அந்தக் கட்சியின் சார்பில் எழுந்தால் ஜனநாயக ரீதியாக அனுமதி அளிக்காமல், அவையிலிருந்தே வெளியேற்று வார்கள்; காவலர்களை விட்டே வெளியேற்றுவார்கள்; பின்னர் அந்தக் காவலர்களில் ஒருவரை மருத்துவமனையிலே அனுமதிக்கச் செய்து, அவரிடமே புகார் மனு எழுதி, எதிர்க் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கைது செய்ய முற்படுவார்கள்! இவையனைத்தும் சரியான நடைமுறைகளா என்பதைப் பத்திரிகையாளர்கள்தான் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு செயலுக்கு, உரிமைக் குழு நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை எனப் பல முனை நடவடிக்கை இயற்கை நீதிக்கு ஏற்றதுதானா என்பது ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சமாகும்.

ஆளுநர் உரை பற்றி நான் கருத்து கூறும்போது, “ஆளுநர் உரை கடந்த ஆண்டில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றிய விளம்பர உரையாக இருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை” என்று தெரிவித்திருந்தேன். என்னுடைய இந்தக் கருத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், முதல் அமைச்சரின் பதிலுரையும், கடந்த காலத்தில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றியே இருக்கிறதே தவிர, இந்த ஆண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று கூறப்படவில்லை.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, அதன் பொது விவாதத்திற்குப் பதில் அளிப்பது போலத்தான் முதலமைச்சரின் உரை அமைந்துள்ளது. நிதியமைச்சராக இருந்தவர் அல்லவா, அவருக்கு இன்னமும் முதல்வராகப் பொறுப்பேற்ற நினைவே வரவில்லைபோலும்! கேட்டால், “நாங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால்தானே, இந்த ஆண்டு ஆளுநர் உரையிலே அதனைக் குறிப்பிட முடியும். எங்களிடம் நிதி ஆதாரம் வற்றிப் போய் விட்டதால் திட்டம் எதுவும் இல்லாத போது நாங்கள் எப்படி அதைப் பற்றியெல்லாம் சொல்ல முடியும்? திட்டம் தீட்டுவதாக இருந்தால், கடந்த ஆண்டு இறுதியில் ஆண்டுதோறும் கூட்டுகின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித் திருக்க மாட்டோமா? நானாக ஏதாவது திட்டங்களை அறிவித்து விட்டால், பிறகு இந்தப் பதவியில் நீடித்திருக்க வேண் டாமா?” என்றெல்லாம் விளக்கம்
அளிக்கக்கூடும்!

தண்டனை பெற்ற ஒருவருக்கு ஆளுநர் உரையிலே பாராட்டு தெரிவிக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று கூட ஆளுநர் உரையிலே குறிப்பிடப்படவில்லை. சாதாரணமாக “செல்வி ஜெ. ஜெயலலிதா” என்றுதான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் பன்னீர்செல்வம் தனது பதிலுரையில் கூறுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதைப் பற்றி முதல்வர் பன்னீர்செல்வம் வாயே திறக்கவில்லை!

செம்மொழி பற்றியும், தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் தராதது பற்றியும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தியதைப் பற்றியும் தெரிவித்திருந்தேன். முதல் அமைச்சரின் பதிலிலே அது பற்றி எதுவும் இல்லை. “மத்திய அரசு திட்டக் குழுவை மாற்றியிருப்பது பற்றி ஆளுநர் உரையில் வரவேற்றிருக் கிறீர்களே, அப்படியானால் மாநிலத்தில் திட்டக் குழுவின் கதி என்ன” என்று கேட்டிருந்தேன். பேரவையில் முதலமைச்சர் அளித்த பதிலில் இதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. “அ.தி.மு.க. ஆட்சியினால் அறிவிக்கப்பட்ட விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை இன்னும் 90 லட்சம் பேர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்ட ஆடு, மாடுகளும் சந்தைகளிலே விற்கப்படுகிறது என்றும் வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்” என்று கேட்டிருந்தேன். அதற்கு “நான் என்ன செய்வேன்?” என்பதைப் போல முதலமைச்சர் பதில் கூறவே இல்லை.

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையெல்லாம் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடு நடத்தப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தீர்களே, இப்போது அந்த மாநாடே நடைபெறாமல், வரும் மே மாதத்தில்தான் அந்த மாநாட்டினைக் கூட்டப் போவதாகத் தெரிவிக்க என்ன காரணம் என்று வினவியிருந்தேன். இதற்கெல்லாம் முதல்வர் பன்னீர்செல்வம் “நீ யார் கேட்க, நான் யார் பதில் சொல்ல; நான் அம்மாவின் முதன்மைச் சீடன்” என்ற ரீதியில் இருந்திருக்கிறார்.

தி.மு. கழகத்தின் சார்பில் பேரவையில் ஆளுநர் உரை மீது உரையாற்றிய தம்பி ஐ. பெரியசாமியும், தம்பி எஸ்.எஸ். சிவசங்கரும், மற்ற எதிர்க்கட்சிகளின் சார்பில் உரையாற்றியவர்களும் அடுக்கடுக்கான பிரச்சினை களை எழுப்பி, அவற்றிற்கெல்லாம் பதில் எங்கே என்று கேட்டார்களே, எதற்காவது பன்னீர்செல்வம் பதில் சொன்னாரா என்றால் கிடையாது.

ஏற்கனவே மின் திட்டங்கள் பற்றிப் பேரவையிலே அவர் படித்த அறிக்கை யையே மீண்டும் ஒரு முறை படித்திருக்கிறார். எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின் திட்டம் ஆகியவை என்னவாயிற்று என்று கேட்டிருந் தேன். அதற்கு அந்தத் திட்டங்களின் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் பேரவையிலே பதில் கூறியிருக்கிறார். வடசென்னை அனல் மின் திட்டம், மூன்றாம் நிலை, உடன்குடி அனல் மின் திட்ட விரிவாக்கம், தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான மாற்றுத் திட்டம் இவைகள் எல்லாம் என்ன ஆயிற்று என்றால், இந்த மின்சாரத் திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்திருக்கிறார் பன்னீர்செல்வம்!

செய்யூர் அனல் மின் நிலையம் எங்கே என்றால், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசால் முடிக்கப்பட்டுள்ளன என்பதுதான் முதல் அமைச்சரின் பதில். 25-4-2013 அன்று ஜெயலலிதா சட்டப்பேரவை யில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 2000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தாரே, என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்? - என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் நேற்று முதலமைச்சர் அளித்த பதில் என்ன தெரியுமா?

“2000 மெகாவாட் திறனுள்ள மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி முனைப்புடன் நடைபெற்று வருகின்றன” என்பதுதான்! “விரைவில்” என்ற சொல்லுக்கு இந்த ஆட்சியில் என்ன பொருளோ? ஒரு வாரமா? ஒரு மாதமா? ஓராண்டா? - ஒன்றும் புரியவில்லை; அல்லது “எப்போதும் இல்லை; நடக்கவே நடக்காது” என்பதுதான் பொருளா?

மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனது பதிலுரையில் “மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழி வகை செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லியிருக்கிறார். இந்த அளவுக்கு மின்சாரம் கிடைக்க இந்த அரசு வழி வகை செய்திருக்கிறது என்பது உண்மையானால்; நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரமும், நடுத்தரக் காலக் கொள்முதல் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் வாங்குவதற்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தம் செய்திருப்பது ஏன்? விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறதா, இல்லையா?

அடுத்து, முதலமைச்சர் தனது பதில் உரையில் 2011-12இல் 101.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு ம்தானிய உற்பத்தி செய்யப்பட்டதாகவும், 2013-2014இல் 110.02 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இடையில் 2012-2013இல் உணவு தானிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட என்ன காரணம்? அப்போதும் அ.தி.மு.க. ஆட்சிதானே? தொடர்ந்து மூன்று ஆண்டுகள், டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி பொய்த்துப் போய் விட்ட நிலையில், கொடுத்திருக்கும் உற்பத்தி குறித்த புள்ளி விபரம் உண்மையானதுதானா என்று விவசாயிகளே சந்தேகிக்கிறார்கள்!

2012-13இல் வறட்சி நிவாரணமாக 20 லட்சத்து 89 ஆயிரத்து 554 விவசாயிகளுக்கு 1,328.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று பெருமைப்பட்டுக் கொண் டிருக்கிறார் முதலமைச்சர்! பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் முழுமையாக முறையாக வழங்கப்பட்டு விட்டதா? தி.மு. கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே விவசாயிகள் வாங்கிய சுமார் 7,000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து, அவ்வாறே செய்யப்பட்டதின் காரணமாக 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள், அதிலே பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் பயன் பெற்றார்கள் என்பதையும் பன்னீர்செல்வம் மறந்து விட்டாரா?

பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயாக உயர்த்தியதை தனது பதிலுரையில் முதல மைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். கொள்முதல் விலையைக் குறிப்பிட்ட முதலமைச்சர் பால் விற்பனை விலையைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா? ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டிலேயே, கழக ஆட்சியில் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 ரூபாய் 75 பைசா என்றிருந்த நிலையினை மாற்றி, 24 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தினார்கள்.

2014ஆம் ஆண்டு அக்டோபரில் 24 ரூபாய் என்பதிலேயிருந்து மேலும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 34 ரூபாய் என்று ஆக்கினார்கள். பால் விற்பனை விலையை இரண்டு மடங்காக உயர்த்திய அந்தச் சாதனையை பன்னீர் செல்வம் பேரவையில் மறைக்கலாமா? ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பற்றி முதல் அமைச்சர் வாயே திறக்கவில்லையே? அமைச்சர் ஒருவரையே வீட்டிற்கு அனுப்பினார்களே? ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே கைது செய்யப்பட்டாரே? மடியில் கனமில்லை என்றால், அந்த விவரங்களையும் பேரவையில் நேர்மையுடன் தெரிவித்திருக்க வேண்டாமா?

கால்நடைத் துறை பற்றிப் பதிலளித்த பன்னீர் செல்வம், அ.தி.மு.க. ஆட்சியில் 585 கால்நடை கிளை நிலையங்கள் ஊரகக் கால்நடை மருந்தகங்களாகவும், 20 கால்நடை மருந்தகங்கள் புதியதாக ஏற்படுத்தப் பட்டதாகவும் பேரவையில் பேசியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் 2007- 2008இல் 888 கால்நடை கிளை நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை நிலையங் களாக ஆக்கப்பட்டன. மேலும் 51 புதிய கால் நடை மருந்தகங்கள், 30 கால்நடை கிளை நிலையங்கள்மற்றும் 55 பார்வை கிளை நிலையங்கள் 218.24 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்பட்டன என்பதையும்; ஆசியாவிலேயே முதல் கால்நடைப் பல்கலைக் கழகம் கழக ஆட்சியிலேதான் உருவாக்கப்பட்டதென் பதையும் முதல் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

மீனவர்களின் நலன் பேணும் வகையில் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகையை 2000 ரூபாயாக அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட தாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இந்த உதவித் தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 500 ரூபாய் என்றிருந்ததை 800 ரூபாயாக வும்,அதன் பிறகு 1000 ரூபாயாகவும், இரட்டிப்பாக்கி உத்தரவு பிறப்பித்தது தி.மு.கழக ஆட்சிதான். அதன் பிறகுதான் இவர்கள் ஆட்சியில் அதனை இரண்டு மடங்காக உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கூடிய தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 1,80,000 மீனவர்களுக்கு மே 2006 முதல் 5 ஜனவரி 2011 வரை 88 கோடியே 57 லட்சத்து 1029 ரூபாய் நிவாரணமாக கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. இது தவிர வேறு பல நிவாரணத் திட்டங்களும் மீனவர் நலனுக்காக கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தமிழக இலங்கை மீனவர்களிடையே 5-3-2015 அன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்திட மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தனது உரையிலே கூறியிருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை 5ஆம் தேதி கிடையாதென்றும், அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது என்பதையும் அவருக்கு நான் நினைவூட்டுகிறேன்.

பள்ளிக் கல்வித் துறையில் அ.தி.மு.க. ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எத்தனை என்ற புள்ளி விவரத்தை பேரவையில் முதலமைச்சர் படித்திருக் கிறார். அதில், “182 தொடக்கப்பள்ளிகள் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன. 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 400 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் 2006 முதல் 2010-2011 வரையில், 569 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டதுடன், 2,626 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகவும், 645 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளி களாகவும், 570 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன என்பதை நினைவூட்டுவதோடு, முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் படித்த இந்த விவரங்கள் அனைத்தும், பொதுவாக மானியக் கோரிக்கைகளின் போது, அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் பதிலுரை யிலும், கொள்கை விளக்கக் குறிப்பிலும் சுட்டிக்காட்டு கின்ற புள்ளி விவரங்களாகும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். எனவே பன்னீர்செல்வம் அமைச்சர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு முதல் அமைச்சராகப் பதில் சொல்ல இனியாவது முயற்சிக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு பற்றியும் முதலமைச்சர் ஏதோ பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அதற்கு நான் பதில் கூற வேண்டியதில்லை. தினந்தோறும் தமிழகத்தில் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும், வழிப்பறிகளும், செயின் திருட்டுகளும், மோசடிகளும் பற்றிய விபரங்கள் நாளேடுகள் மூலம் வெளியாகி அவற்றைத் தமிழ்நாட்டு மக்கள் முறையாகப் படித்து தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு தபன்னீர்செல்வம், “கடந்த கால மைனாரிட்டி ஆட்சி போல, இருட்டு இல்லை, திருட்டு இல்லை, புரட்டு இல்லை, புனை சுருட்டு இல்லை ” என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதே பாணியில் “குற்றவாளி ஜெயலலிதா ஆட்சியில் இருட்டும் உண்டு, திருட்டும் உண்டு, புரட்டும் உண்டு, புனை சுருட்டும் உண்டு” என்று அவர் பாணியிலேயே பதிலளிக்க எவ்வளவு நேரமாகும்?’’
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by ayyasamy ram on Thu Feb 26, 2015 4:44 am

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Feb 26, 2015 8:19 am

எங்க நாட்டுலேயும் உள்ள ஓர் அரசியல் கட்சியிலேயும் இதே தான் நடந்தது. மக்களை ஏமாத்தியே வாழ்ந்திட்டானுங்க, இன்னும் வாழ்ந்து கிட்டு இருக்கனானுங்க. இப்போ அந்த கட்சியில ஒரே ஒரு நல்லவர்தான் என் கண்களுக்கு தெரியிராரு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum