ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மிஸ்டர் கழுகு: அம்மாவுக்காக ‘கோ’ தானம்!

View previous topic View next topic Go down

மிஸ்டர் கழுகு: அம்மாவுக்காக ‘கோ’ தானம்!

Post by Powenraj on Wed Feb 25, 2015 2:25 pm


நாடு முழுக்க மாடு...

''ஸ்டார்ட் மியூசிக்'' என்றபடி ஆர்ப்​பாட்டமாக உள்ளே நுழைந்தார் கழுகார்.

''உமது செய்திக் கச்சேரிக்கு எதற்காக மியூசிக்?' என்றோம்.

''எனக்கு அல்ல. ஆளும் கட்சியினர் தங்களது ஆராதனை ஆட்டத்தை ஆரம்பித்து​விட்டனர் என்பதைச் சொல்ல வந்தேன். ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தண்டனை தரப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, அவரை விடுதலை செய்ய வேண்டி அனைத்து அமைச்சர்களும் செய்தார்கள் அல்லவா ஆர்ப்பாட்​டங்கள்? அதை மீண்டும் ஆரம்பித்து​விட்டார்கள். அப்போது சிலர் தாடி வளர்த்தார்கள், சிலர் தலை முடி வளர்த்தார்கள், பலரும் கோயிலுக்கு வேண்டிக்கொண்டார்கள், அக்னிச் சட்டி முதல் அலகு குத்துதல் வரை நிறைய நடந்தன. இவை கொஞ்ச நாட்களாக அமுங்கி இருந்தது. இதோ மீண்டும் அவை ஆரம்பம் ஆகிவிட்டது. கூடுதலாக இந்தக் கூட்டத்தில் பசுவும் சேர்ந்துள்ளது.''

''பசுவா?'''ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு கோயில்​களில் பூஜை, பரிகாரங்கள் செய்யவும் தங்கத் தேர் இழுக்கவும் மற்றும் ஏழை எளியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கவும் உத்தரவு போயிருக்கிறது. தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் 113 ஜோடிகளுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் 72 வகை சீர்வரிசைகள் கொடுத்தார். அத்துடன் பசுவும் கன்றும் வழங்கி திருமணம் செய்து வைத்தாராம். வைத்திலிங்கம் ரகசியமாக ஏற்பாடு செய்வதைக் கேள்விப்பட்ட அமைச்சர் காமராஜும் தன் பங்குக்கு திருவாரூரில் 104 ஜோடிகளுக்கான சீர்வரிசை​களுடன் பசுவும் கன்றும் கொடுத்தாராம்.''

''எதற்காக பசுவும் கன்றும்?'

''எல்லாம் பரிகாரம் என்று​தான் சொல்கிறார்கள். ஜெயலலிதாவின் ஜாதகக் கட்டங்களை, அவரைவிட அவரின் கட்சிக்காரர்கள்தான் அதிகம் பார்க்கிறார்கள். '2016-ம் ஆண்டு சனி புத்தி முடிந்து, புதன் புத்தி ஆரம்பமாகிறது அம்மாவுக்கு. புதனின் வாகனங்களில் ஒன்று பசு. இதைத் தானமாகக் கொடுத்தால், வரவிருக்கும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். அம்மாவின் ஜாதகத்தில் 9-ம் இடமாகிய பதவி ஸ்தானத்தில் புதன் அமர்கிற காரணத்தால், ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்கு இப்போதில் இருந்தே பரிகாரத்தை முறையாகச் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதன் ஒரு கட்டமாக, திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் கோதானம் கொடுத்திருக்கிறோம். கோர்ட் வழக்குகளில் இருந்து ஜெயிப்பது உள்ளிட்ட பல அம்சங்களுக்கு இந்தப் பரிகாரம் உதவும். தஞ்சாவூர்க்காரர்கள் இந்தச் சூட்சுமத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு கோதானம் கொடுத்துவிட்டார்கள். மற்றவர்கள் இனிதான் இவர்கள் பாணியை பின்பற்றப்போகிறார்கள். இதைத் தெரிந்துகொண்டு ஐந்து பசுக்களை வைத்து சென்னிமலை கோயிலில் கோ பூஜை நடத்துகிறாராம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.இதைக் கேள்விப்பட்ட மற்ற அமைச்சர்களும் தங்கள் மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து பசு தானம் கொடுக்க மாடு​களைத் தேட ஆரம்பித்துள்ளார்கள். நாடு முழுக்க மாடு தேடும் படலம் நடக்கிறது. முன்பு கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் சர்வ மதப் பிரார்த்தனைகள்தான் நடக்கும். ஆனால் இந்த முறை கோதானம் அதிகமாக நடக்கப் போகிறது. மார்ச் மாதத்தில் பெங்களூரு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முழுமையாக முடிந்து தீர்ப்பு வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை இந்தப் பசு தானம் நாடு முழுவதும் தொடருமாம்!'

''மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்றபடியே தலையாட்டினார் கழுகார், ''தி.மு.கவும் பி.ஜே.பியும் நெருங்கி வருகிறது போலிருக்கிறதே?'

''திருப்பூர் திருமண வீட்டில் நடந்த விஷயங்​களை வைத்து சொல்கிறீரா? தயாநிதி மாறன் தொடர்புடைய பி.எஸ்.என்.எல் முறைகேடு விவகாரம் மார்ச் முதல் வாரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் சூடுபிடிக்கப் போகிறது. அதில் கைதான மூன்று பேரை ஜாமீனில்விட எதிர்ப்பு தெரிவிக்கிறது சி.பி.ஐ. அதனால், அவர்கள் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டும் என்று டெல்லியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், எப்படி தி.மு.கவை நோக்கி பி.ஜே.பி வரும் என்று சிலர் சந்தேகக் கேள்வியைப் போடுகிறார்கள்.பொன்.ராதாகிருஷ்ணனும் மு.க.ஸ்டாலினும் திருப்பூரில் திருமண மேடையில் ஜோடியாக போஸ் கொடுத்தார்கள். 'ஸ்டாலினை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று நிருபர்களிடம் பொன்னார் வார்த்தையை உதிர்த்துவிட்டுப் போனார். பிப்ரவரி 22-ம் தேதியன்று திருப்பூரில் பி.ஜே.பி கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மகன் திருமணம் நடந்தது. மணப்பெண்ணின் வீட்டார், கருணாநிதி குடும்பத்தினருடன் அறிமுகம் ஆனவர்கள். இதனால், இரண்டு கட்சிகளின் முக்கிய வி.ஐ.பிகள் பலரும் திருமணத்துக்கு முந்தின நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அதேநேரத்தில், மு.க.ஸ்டாலினும் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே நேரத்தில் மேடையில் வாழ்த்துச் சொல்லப் போயிருந்தார்கள். இந்தத் திருமணத்துக்கு டெல்லியின் பி.ஜே.பி பிரபலங்கள் பலரும் வர இருந்தார்களாம். அத்வானியின் 50வது திருமண நாள், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்... என அடுத்தடுத்து வந்ததால், முக்கிய பெருந்தலைகள் திருமணத்துக்கு வரமுடியவில்லையாம்.திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலை​வில் உள்ள டாலர் தோட்டம் என்கிற இடத்தில் திருமணம் நடந்தது. வழிநெடுகிலும் தி.மு.க மற்றும் பி.ஜே.பி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. காற்று வேகத்தில் இரண்டு கொடிகளும் சில இடங்களில் பின்னிப் பிணைந்து கிடந்தன. இதை மேடையில் பி.ஜே.பிக்காரர் ஒருவர் சுட்டிக்காட்டி கமென்ட் அடிக்க.. 'இருக்கட்டும்யா.. ஏற்கெனவே இரண்டு கட்சிகளும் கூட்டணியாக இருந்தவைதானே?... அப்படியே மறுபடி நடந்தாலும் சந்தோஷம்தான்’ என்று சொல்லியிருக்கிறார். உடன் இருந்த இரு கட்சிகளின் தலைவர்கள் மௌனமாகச் சிரித்தனர். மு.க.ஸ்டாலின் வந்தபோது, மணமேடையில் பொன்னார் இல்லை. ஆனால், அவரை வரச் சொல்லுங்கள் என்று ஸ்டாலின் அழைத்துத் தன் அருகே நிற்கவைத்துக்கொண்டார். அப்போது பொன்னார் காதில், 'கோவை ஏர்போர்ட் வி.ஐ.பி லவுஞ்சில் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டுக் கிளம்​பினார். அவரைப் பின்தொடர்ந்து பொன்​னாரும் கிளம்பி​விட்டார்.''

''ஓ அப்படியா?'

''மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த அறைக்குள் பொன்னார் நுழைந்ததும் அங்கேயிருந்த தி.மு.க பிரமுகர்கள் ஜகா வாங்கிக்​கொண்டனர். துர்க்கா உடன் இருக்க... மு.க.ஸ்டாலினும் பொன்னாரும் தனியாக 30 நிமிடங்கள் அரசியல் பேசிக் கொண்டிருந்​தார்களாம். பரஸ்பர அரசியல் பரிமாற்ற​மாகத்​தான் அது இருந்துள்ளது. கூட்டணி பேச்சு

வார்த்தைக்​கான முதல் தொடக்கம் இது என்றும் சொல்கிறார்கள்.''

''பி.ஜே.பிக்காரர்கள் இந்த ரகசிய சந்திப்பை எப்படிப் பார்க்கிறார்கள்?'

''திருமணத்தில் சந்திப்பு என்பதை வேண்டுமானால் யதேச்சையாக என்று எடுத்துக்​கொள்ளலாம். ஆனால், ஏர்போர்ட்​டில் பொன்னார் போய் ரகசிய​மாக மு.க.ஸ்டாலினை சந்திக்கவேண்டிய அவசியம் என்ன? டெல்லி தலைமைக்குத் தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா எனத் தெரிய​வில்லை’ என்று பி.ஜே.பியினர் நினைப்பதாகச் சொல்கிறார்கள்.

இதே திருமண நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்திருந்தனர். ஜெயலலிதா, ஸ்பெஷல் மெசஞ்ஜர் மூலம் குத்து விளக்கும் வாழ்த்துக் கடிதமும் கொடுத்தனுப்பியிருந்தாராம்.''

''போலீஸ் அதிகாரிகள் மாற்றத்தில் ஏதேனும் தகவல் உண்டா?'

''சென்னை மாநகரக் கூடுதல் கமிஷ​னராக இருந்த கருணாசாகர் ஐ.பி.எஸ் திடீரென மாற்றப்பட்டு நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனர் ஜார்ஜின் நம்பிக்கைக்குரியவராகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ்ந்த கருணாசாகருக்கு டம்மி பதவி வழங்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. அவர் செய்த ஒரு செயல்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம். தனக்குத்தானே அவர் சூன்யம் வைத்துக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!'

''என்னவாம் அது?'''போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தேன். 'பிப்ரவரி 4-ம் தேதி கருணாசாகரின் 25-வது திருமண நாள். இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடி இருக்கிறார் அவர். இதற்கான விழா மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துள்ளது. அதில் முக்கியப் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் நெருங்கிய சொந்தக்காரர்களும் மட்டுமே பங்கேற்றுள்ளனர். விழாவில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மேலிடத்துக்குத் தெரிந்து தூக்கி அடித்துவிட்டார்கள்’ என்கிறார்கள்.

2012-13-ம் ஆண்டில் கருணாசாகர் நெல்லை மாநகர கமிஷனராக இருந்துள்ளார். அப்போது 86 பேர் துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் 62 பேருக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் பெற்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உள்ளனர். லைசென்ஸ் பெற்றதில் 34 பேர் மட்டுமே துப்பாக்கி வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் வாங்கவில்லையாம். இப்போது லைசென்ஸ் புதுப்பிக்கவும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்தச் சிக்கலும் அவருக்குச் சேர்ந்துவிட்டது. இப்போது திருமண விழா, பரிசுப் பொருள் சிக்கல் என இரண்டுமே கருணாசாகரின் பதவியைப் பறித்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து துறைவாரியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் ஆலோசகர் ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற விழாக்களைக் கொண்டாடிய மற்ற போலீஸ் உயரதிகாரிகள் இப்போது கலக்கத்தில்

இருக்​கிறார்களாம்.''

''ஓஹோ!'

''வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க பிரமுகரது உதவியாளர் (பி.ஏ.,) மற்றும் கார் டிரைவர் சோளிங்கர் பேரூராட்சி பகுதியில் வசிக்கிறாராம். அங்குள்ள ஒருவரது வீட்டுக்குள் இந்த பி.ஏ. அத்துமீறி உள்ளே போயிருக்கிறார். அங்கிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். அந்தப் பெண், சத்தம் போட்டதைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். மனிதரைக் கையும் களவுமாகப் பிடித்து உதைத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று ஒப்படைத்தனர். அங்கு, அவர் லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.

மறுநாள் விடியற்காலையில், அந்த அ.தி.மு.க பிரமுகர் தனது தம்பியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததாகவும் தனது உதவியாளரை அதிரடியாக அழைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படு​கிறது. பின்னர், அந்த உதவியாளர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அந்தப் பிரமுகர் தரப்பு இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சோளிங்கர் போலீஸார், அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், அந்த உதவியாளர் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

அத்தோடு, சூட்டோடு சூடாக எஸ்.பியை சந்தித்துள்ளார் அந்த ஸ்டேஷன் அதிகாரி. 'என்னால் சோளிங்கரில் நியாயமாக, நேர்மையாக வேலை செய்ய முடியவில்லை; அரசியல் கட்சியினர் டார்ச்சர் தாங்க முடியவில்லை; வேறு எங்காவது மாற்றி விடுங்கள். இல்லையேல், மருத்துவ விடுப்பு கொடுத்து, கொஞ்ச நாளைக்கு அனுப்பி வையுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். 'நீங்களே, சோளிங்கரில் வேலை செய்யாவிட்டால், வேறு யாரை அங்கே கொண்டு போடுவது? கொஞ்ச நாளைக்குப் பொறுமையாக வேலை பாருங்க. பிறகு ஆலோசனை செய்து, எந்தவொரு முடிவும் எடுக்கலாம்’ என்று, ஆறுதல் சொல்லி, அனுப்பி வைத்தாராம். இப்படித்தான் பல ஊர்களில் நடக்கிறது. அதனைத் தட்டிக் கேட்கத்தான் யாரும் இல்லை'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

பட்டு வேட்டி பரிசுதி.மு.க-வில் முதன்முதலாக இப்போது வர்த்தக அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளராக கவிஞர் காசி.முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அந்த அணியின் நிர்வாகிகள் கூட்டத்தை அறிவாலயத்தில் 23-ம் தேதி கூட்டினார். நிர்வாகிகள் அனைவருக்கும் பட்டு வேட்டி பரிசளித்து வரவேற்றார். 'வணிகர் நல வாரியத்தை உயிர்ப்பிக்க வேண்டும். தமிழக பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னர் அனைத்து வணிகர் சங்கங்களையும் அழைத்துப் பேசி ஆலோசனை கேட்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார்கள். கூட்டம் முடிந்த பிறகு வர்த்தக அணி நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல், அறிவாலயம் ஸ்டாப்புகளுக்கும் வஞ்சிரம் மீனோடு, பிரியாணி சாப்பாடு போட்டு அசத்தினார் காசி.முத்துமாணிக்கம்.

செயற்குழு சஸ்பென்ஸ்!

மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள். 5-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பரபரப்புகளின்போது 2016 சட்டமன்ற தேர்தலுக்குக் கட்சியினரை ஆயத்தப்படுத்துவது, தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது, அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்துவது என்று பல முடிவுகள் எடுக்க இருக்கிறார்களாம். முக்கியமாக கிராமம், ஒன்றியம், நகரம், பேரூர் நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.

கள்ள லாட்டரி பராக்!

தமிழகத்தில் விரைவில் மகாராஷ்டிர மாநில கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை பட்டையைக் கிளப்ப உள்ளது. அதற்கான வேலைகள் கடந்த வாரத்தில் மும்பையில் தீவிரமாக நடந்துள்ளன. தமிழகத்தில் சுரண்டல் லாட்டரியின் மூளையாக செயல்பட்ட ஒருவர்தான் இதற்கான மூளையாக செயல்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து கள்ள லாட்டரி விற்பனைக்கான டீலர்கள் நியமனத்தை ஆடம்பரமான விருந்துடன் நடத்தியிருக்கிறார் அந்தப் புள்ளி!

இல.கணேசன் '71’

தமிழக பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு பிப்ரவரி 22-ம் தேதி 71-வது ஜென்மநட்சத்திர பிறந்தநாள். அதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாஞ்சியம் என்ற இடத்தில் ஆயுஸ் ஹோமம் நடந்ததாம். அதில் கலந்துகொண்டதால், அதே நாளில் நடந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்திருமண விழாவுக்கு வரமுடியவில்லையாம்.

நன்றி- ஜூனியர் விகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: மிஸ்டர் கழுகு: அம்மாவுக்காக ‘கோ’ தானம்!

Post by M.Saranya on Wed Feb 25, 2015 2:34 pm

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum