ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

‘சுக்கு நுாறானது’ பாக்., * வெ.இண்டீஸ் ‘சூப்பர்’ வெற்றி!

View previous topic View next topic Go down

வாழ்த்து ‘சுக்கு நுாறானது’ பாக்., * வெ.இண்டீஸ் ‘சூப்பர்’ வெற்றி!

Post by krishnaamma on Sun Feb 22, 2015 9:17 am

கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவிடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீளாத பாகிஸ்தான் அணி, மீண்டும் சொதப்பியது. நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆன்ட்ரூ ரசல் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்தினார்.


நியூசிலாந்தின் கிறைஸ்ட்­சர்ச்சில் நடந்த உலக கோப்பை ‘பி’ பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

கெய்ல் ஏமாற்றம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (23), கெய்ல் (4) சோபிக்­க­வில்லை. பின் பொறுப்பாக ஆடிய டேரன் பிராவோ (49), சாமுவேல்ஸ் (38), ராம்தின்(51), சிம்மன்ஸ்(50), சமி (30) நம்­பிக்கை தந்தனர்.

ரசல் அதிரடி:

கடைசி கட்டத்தில் ஆன்ட்ரி ரசல் அதிரடி காட்டினார். சோகைல் கான் பந்துவீச்சில் மூன்று சிக்சர் பறக்கவிட்டார். பின் வகாப் ரியாஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்தது. ரசல் (42 ரன், 3 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.

மூன்று ‘டக்’:

கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் ‘வேகத்தில்’ சுக்கு நுாறானது. ஜெரோம் டெய்லர் வீசிய முதல் ஓவரிலேயே ஜாம்ஷெத்(0), அனுபவ யூனிஸ் கான்(0) நடையை கட்டினர். மீண்டும் பந்துவீச வந்த டெய்லர் இம்முறை ஹாரிஸ் சோகைலை(0) அவுட்டாக்கினார். ஹோல்டர் பந்தில் ஷேசாத்(1) வெளியேற, பாகிஸ்தான் அணி 4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு ஒரு ரன் மட்டும் எடுத்து தத்தளித்தது.

அக்மல் ஆறுதல்:

கேப்டன் மிஸ்பாவும் (7) அணியை கைவிட்டார். இதன் பின் மக்சூட், உமர் அக்மல் ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். மக்சூட் 50 ரன்கள் எடுத்தார். ‘சீனியர்’ வீரர் அப்ரிதி (28) தாக்குப்பிடிக்கவில்லை. அரை சதம் கடந்த உமர் அக்மல் (59) ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். வகாப் ரியாஸ் (3), சோகைல் கான் (1) சரணடைய, பாகிஸ்தான் அணி 39 ஓவரில் 160 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வியடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெரோம் டெய்லர், ஆன்ட்ரூ ரசல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய ரசல், ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இப்போ ‘பெஸ்ட்’ இண்டீஸ்

உலக கோப்பை தொடரில் தனது முதல் லீக் போட்டியில், அயர்லாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்ததால், ‘வேஸ்ட்’ இண்டீஸ்’ என, அப்போது விமர்சிக்கப்பட்டது. இப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ‘பெஸ்ட்’ இண்டீசாக ஜொலித்தது.

சொதப்பல் ‘பீல்டிங்’

பாகிஸ்தான் அணியின் ‘பேட்டிங்’, ‘பவுலிங்’ மட்­டு­மல்ல ‘பீல்டிங்கும்’ சொதப்பலாக இருந்தது. டுவைன் ஸ்மித் 11 ரன்கள் எடுத்த போது, தந்த ‘கேட்ச்’ வாய்ப்பை ஜாம்ஷெத் வீணடித்தார். இதே போல, ரியாஸ் பந்தில் சாமுவேல்ஸ் (2 ரன்கள்) கொடுத்த ‘கேட்ச்சை’ அப்ரிதி கோட்டைவிட்டார்.

பதம் பார்த்த பந்து

வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பேட்டிங்கின்’ போது, 24வது ஓவரில் 4வது பந்தை ரியாஸ் வீசினார். இதை அடித்த சாமுவேல்ஸ், ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுமுனையில், டேரன் பிராவோ ஓடி வந்தார். அந்த நேரத்தில், பாகிஸ்தானின் யூனிஸ் கான் எறிந்த பந்து, பிராவோ ‘ஹெல்மெட்டின்’ இடதுபுறத்தில் தாக்கியது. இதனால், சில நிமிடங்கள் பிராவோ வலியால் அவதிப்பட்டார்.
* 32வது ஓவரில் டேரன் பிராவோ (தொடையின் பின்பகுதி) காயத்தால் வெளியேறினார்.

3.1ஓவர், 1 ரன், 4 விக்.,

பாகிஸ்தான் அணியின் ‘டாப்–­ஆர்டர்’ அப்படியே சரிந்தது.3.1 ஓவரில் ஒரு ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் குறைந்த ரன்னில் 4 விக்கெட்டை இழந்த அணிகளின் பட்டியலில் கனடாவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது. கனடா அணி (எதிர்– ஜிம்பாப்வே) 4 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது.

* பாகிஸ்தான் அணியின் ‘டாப்–4’ வீரர்கள் சேர்ந்து ஒரு ரன்தான் எடுத்தனர். இது, ஒரு நாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் ‘டாப்–4’ வீரர்கள் எடுத்த குறைந்தபட்ச ரன்னாக அமைந்தது. இதற்கு முன், அயர்லாந்து அணி வீரர்கள் (2007, எதிர்–ஆஸி.,) 2 ரன் எடுத்தனர்.

150
ஒரு நாள் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்(150) வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1992ல், சிட்னியில் நடந்த போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2
வெஸ்ட் இண்டீசின் டேரன் பிராவோ 49 ரன்களில் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். இதன் மூலம், உலக கோப்பை அரங்கில் காயத்தால் வெளியேறி, மீண்டும் பேட்டிங்கிற்கு திரும்பாத, இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரரானார். முதலிடத்தில் லாரா (1992, எதிர்–பாக்., 88 ரன்) உள்ளார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum