ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்

View previous topic View next topic Go down

அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்

Post by சிவா on Sat Feb 21, 2015 11:25 pm

ஒரு யோகியால் இயற்கையின் பல விதிகளைத் தன்வசப்படுத்தி ஜெயிக்க முடியும். அதற்கான எத்தனையோ உதாரணங்களை இது வரை பார்த்து விட்டோம். இனி புவி ஈர்ப்பு விசையை வென்று, அந்தரத்தில் மிதக்க முடிந்த யோக சக்தியைப் பார்ப்போம்.

அந்தரத்தில் மிதப்பது இந்திய யோகிகளுக்கு மட்டும் முடிந்த சக்தி அல்ல. அந்த சக்தி கொண்டவர்களைப் பற்றிய உதாரணங்களை ஐரோப்பா, ஆசியா கண்ட நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியும்.

பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் அவிலாவைச் சேர்ந்த புனித தெரசா, ஆழ்ந்த இறை நிலை அனுபவங்களின் போது தரையில் இருந்து சுமார் ஒன்றரை அடி மேலே அந்தரத்தில் மிதப்பார் என்றும், அப்படியே சுமார் அரை மணி நேரம் அந்தரத்தில் இருப்பார் என்றும் கண்டவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்திய குரு மிலாரெப்பாவும், அந்தரத்தில் மிதக்கவும் நடக்கவும் முடிந்தவர் என்று சொல்கிறார்கள். சீன ஷாவொலின் பிக்குகளில் சிலரும் குறுகிய காலத்திற்கு புவி ஈர்ப்பு சக்தியை வெல்ல வல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த குறிப்பிட்ட சக்தி பரவலாக உலகின் பல பகுதிகளில் குறிப்பிட்ட சிலரிடம் இருந்திருக்கிறது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் ஒரு யோகி, அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு யோகி இந்த மகாசக்தியைப் பெற்றிருந்தார். அவர் பலர் முன்னிலையில் அந்தரத்தில் படுத்த காட்சியை ஒரு ஆங்கிலேயர் புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒரு பிரபல இங்கிலாந்துப் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அந்த சுவாரசியமான நிகழ்ச்சியை இனி பார்ப்போம்.

அந்த யோகியின் பெயர் சுப்பையா புலவர். (அவரைப் புகைப்படம் எடுத்த ஆங்கிலேயர் அவரை சுப்பையா புல்லவர் (Subbayah Pullavar) என்று குறிப்பிட்டதால், அந்தப் பெயரையே ஆங்கிலப் பத்திரிகையும் பயன்படுத்தி இருக்கிறது. தமிழ் யோகி என்பதால் சுப்பையா புலவர் என்பதே அவரது சரியான பெயராக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது).

யோகி சுப்பையா புலவர் அந்தரத்தில் சிறிது நேரம் இருக்க முடிந்தவர். அவர் அப்படி 1936–ம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி ஒரு பொது இடத்தில் இருந்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட பி.டி.ப்ளங்கெட்(P.T. Plunkett) என்ற பிரிட்டிஷ் தேயிலைத் தோட்டக்காரருக்கு ஆச்சரியமும் சந்தேகமும் ஒருசேர ஏற்பட்டன. மிகுந்த ஆர்வத்துடன் கேமரா சகிதம் குறிப்பிட்ட நாளில், அந்த இடத்தை அடைந்தார்.

அந்த இடத்தில் சுமார் 150 பேர் நிகழ்ச்சியைக் காண நண்பகல் வேளையில் குழுமி இருந்தனர். மேகங்கள் இல்லாமல் ஆகாயம் தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், ஏமாற்றுவேலை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பி.டி.ப்ளங்கெட் கண்டார். சுப்பையா புலவரின் சீடர்கள் முதலில் அந்த இடத்தில் ஒரு கூடாரம் எழுப்பினார்கள். பின் கூடாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்தார்கள். தண்ணீர் தெளித்த இடத்தைத் தாண்டி செருப்புக் காலோடு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தார்கள்.

சற்று நேரத்தில் சுப்பையா புலவர் வந்தார். அவர் கருத்த நிறத்தோடு உயரமாகவும், மெலிந்த உடல்வாகோடும் இருந்தார். எல்லோரும் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், சுப்பையா புலவர் கூடாரத்திற்குள் நுழைந்து சில நிமிடங்கள் மறைவாக இருந்தார். அதன் பிறகு அவரது சீடர்கள் கூடாரத்தை அவிழ்த்து விட்டார்கள். சுப்பையா புலவர் பூமியிலிருந்து சில அடிகள் உயரத்தில் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவர், மறு கையை ஒரு கம்பின் நுனியில் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பில் அவர் எந்த பலமும் பிரயோகிக்காமல் இருந்தது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கம்பை துணி சுற்றி மூடி இருந்தார்கள்.

பி.டி.ப்ளங்கெட்டும் மற்ற பார்வையாளர்களும் பிரமித்துப் போனார்கள். பி.டி.ப்ளங்கெட் உட்பட அனைவரும் சுப்பையா புலவர் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூர்ந்து கவனித்தார்கள். அனைவரும் படுத்துக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பல கோணங்களில் பார்த்தார்கள். எந்த தில்லுமுல்லும் அவர்களுக்குப் புலப்படவில்லை. சுப்பையா புலவரைத் தாங்கிப் பிடிக்க கண்ணுக்குத் தெரியாத மறை பொருட்கள் எதுவும் கூட இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய அங்கிருந்தவர்களுக்கு அனுமதி தரப்பட்டது. பரபரப்புடன் பி.டி.ப்ளங்கெட்டும் மற்றவர்களும் அருகில் சென்று மேலேயும் கீழேயும் கூர்ந்து பார்த்தார்கள். கம்பின் மீது அவர் வைத்திருந்த கையையும் ஆராய்ந்தார்கள். அந்தக் கம்பில் சுப்பையா புலவர் சிறிதாவது பலத்தைப் பிரயோகித்திருந்தால் அருகிலிருந்து பார்க்கும் அவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி பலம் பிரயோகித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பலத்தில் குறுக்கே நீண்ட நேரம் படுப்பதும் சாத்தியமில்லை. பி.டி.ப்ளங்கெட் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.

நான்கு நிமிடங்கள் அப்படியே இருந்து அனைவரையும் சுப்பையா புலவர் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார். பின்னர் அனைவரையும் அந்த வட்டத்திற்கு வெளியே போகச் சொன்னார்கள். அனைவரும் தங்கள் பழைய இடங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்ள, சுப்பையா புலவரின் சீடர்கள் பழையபடி சுப்பையா புலவரைச் சுற்றி கூடாரத்தை எழுப்பினார்கள். கூடாரத்தின் உள்ளே சுப்பையா புலவர் அந்தரத்திலேயே ஊசலாட ஆரம்பித்தது, சூரிய வெளிச்சத்தின் உதவியால் கூடாரத்துணி வழியாக பி.டி.ப்ளங்கெட்டுக்கு மங்கலாகத் தெரிந்தது. கடைசியில் அப்படியே சுப்பையா புலவர் தரையில் சரிந்தார். பழையபடி கூடாரம் கலைக்கப்பட்டது. சுப்பையா புலவர் கட்டையைப் போல ஒருவித ஆழ்தியான நிலையில் படுத்திருந்தார்.

அவரது கை, கால்களை மடக்க முயன்ற சீடர்களுக்கு அது எளிதில் முடியாமல் போக, அவர்கள் பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தார்கள். பார்வையாளர்கள் முயன்றும் கட்டை போல் விறைத்திருந்த அவரது கை, கால்களை மடக்க முடியவில்லை. கடைசியில் சுப்பையா புலவரின் முகத்தில் சீடர்கள் நீரைத் தெளித்தார்கள். பின் அவர் கை கால்களைத் தேய்த்து சூடாக்கிய பின், பழைய நிலைக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை The Illustrated London News என்ற இங்கிலாந்துப் பத்திரிகை பி.டி.ப்ளங்கெட்டின் புகைப்படங்களுடன் பிரசுரித்தது. அமானுஷ்ய நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள பலரையும் அந்தச் செய்தி ஈர்த்தது. அந்தத் தெளிவான புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சியில் தில்லு முல்லு எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. காரணம் 1936–ம் ஆண்டு காலத்தில் எல்லாம் புகைப்படம் எடுப்பதே அரிதானதாக இருந்ததால் புகைப்படங்களில் போலியான மாற்றங்கள் செய்யும் நவீன நுட்ப வித்தைகள் ஆரம்பித்திருக்கவில்லை.

சொல்லப்போனால் புகைப்படங்கள் மூலமாகத் தான் சில போலி தந்திரங்களை அடையாளம் கண்டார்கள். உதாரணத்திற்கு கயிறு வித்தை (Rope Trick ) என்று அக்காலத்தில் பிரபலமான வித்தையைச் சொல்லலாம்.

இந்த வித்தையில் கயிறு ஒன்றை வித்தை காட்டுபவர் எல்லோரிடமும் காட்டி, அது கயிறுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்வார். பிறகு கயிறை உதறி கம்பு போல் நிற்க வைத்து வித்தை காட்டுபவர் கம்பில் மேலேறி நுனிக்குச் செல்வார்.

இது பார்ப்பவர்களை நம்ப வைக்கும் ஒரு வகை ஹிப்னாடிச வித்தை. இந்தக் காட்சியைப் படமெடுத்துப் பார்த்தால் கயிறு தரையிலேயே விழுந்து கிடக்கும். வித்தை காட்டுபவர் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பார். இதைப் பலர் படமெடுத்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்த பின்னும் காட்சிகள் பார்த்தபடியே பதிவாகி இருந்தது அனைவரையும் நம்ப வைத்தது. துரதிர்ஷ்டவசமாக பி.டி.ப்ளங்கெட் மூலம் அந்தப் பத்திரிகையில் வந்த செய்தி தவிர, சுப்பையா புலவர் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.

என்.கணேசன் @ தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்

Post by ராஜா on Sun Feb 22, 2015 11:13 am

ஆச்சரியமாக உள்ளது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Feb 22, 2015 3:42 pm

பாவம் சாமியாரு, யாராச்சம் நல்ல மெத்தை வாங்க தாருங்களேன், நிம்மதியா படுத்து தூங்கட்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum