உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

ஐ - விமர்சனம்

ஐ - விமர்சனம் Empty ஐ - விமர்சனம்

Post by soplangi on Wed Jan 14, 2015 2:20 pm

ஐ - விமர்சனம் 31087-a

தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.,
இயக்கம் : ஷங்கர்
நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்
எடிட்டிங் : ஆண்டனி

மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன?

கதைக்களம்

‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் திரியும் விக்ரமை, ‘கூன்’ போட வைக்கிறார்கள். மீண்டும் விக்ரம் நிமிர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘ஐ’.

படம் பற்றிய அலசல்


ரொம்பவும் சாதாரணமான பழிவாங்கல் கதைதான். அதை தன் பாணியில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

மணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்துவிடுகிறது ‘ஐ’. பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

டெக்னிக்கலாக ஷங்கர் படம் எப்போதுமே முதல் தரத்திலிருக்கும். இந்த ‘ஐ’யும் அந்த நம்பிக்கையைக் வீணாக்கவில்லை. அழகான லோகோஷன்கள், அற்புதமான இசை, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் மேக்அப், ஆச்சரியப்படுத்தும் சிஜி என எல்லாமே இப்படத்திலும் உயர்தரம்!

முதல்பாதியின் ஸ்லோவான திரைக்கதை, விக்ரம் எமிக்கிடையே இருக்கும் காதலில் ஆழமில்லாமல் இருப்பது, எளிதில் யூகிக்கக்கூடிய ‘ட்விஸ்ட்’ போன்றவை ‘ஐ’யின் பலவீனங்கள். அதோடு... இதற்குத்தானா இவ்வளவு பிரம்மாண்டங்களும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்! லிங்கேஸன், லீ, கூனன் என மூன்று பரிமாணங்களிலும் அவரின் டெடிகேஷன் மலைக்க வைக்கிறது... ‘ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்’.

மாடலிங் பியூட்டி ‘தியா’ கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், அவரைத்தவிர இவ்வளவு ‘தாராளம்’ காட்ட தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஆள் இல்லை!

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். டாக்டராக வரும் சுரேஷ் கோபி, அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடித்திருக்கிறார். உபேன் பட்டேல், ராம்குமார் ஆகியோரும் சரியான தேர்வே!

பலம்

1. விக்ரமின் கடின உழைப்பு
2. பாடல்களும், அதை படமாக்கிய இடங்களும், விதமும்!
3. ஒளிப்பதிவு, மேக்அப், சிஜி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. ரொம்பவும் சாதாரணமான கதை
2. எளிதில் யூகிக்கக் கூடிய ‘ட்விஸ்ட்’டுகள்
3. ஆங்காங்கே படத்தை ஸ்லோவாக்கும் ஒருசில காட்சிகள்
4. படத்தின் நீளம்

மொத்தத்தில்...


இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஐ’ ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

ஒரு வரி பஞ்ச் : விழலுக்கிறைத்த நீராக இருந்தாலும், அது விக்ரமின் வியர்வையாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்!

ரேட்டிங் : 5.5/10

-- டாப் 10 சினிமா


Last edited by soplangi on Wed Jan 14, 2015 2:27 pm; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by ராஜா on Wed Jan 14, 2015 2:24 pm

அட அதுக்குள்ளே பார்த்தாச்சா ....

இங்கே மதியம் இரண்டு மணிக்கு தான் முதல் show ஆரம்பிக்குது , அதுவும் full ஆகிவிட்டது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by யினியவன் on Wed Jan 14, 2015 2:24 pm

பிரம்மாண்டத்தைத் தவிர ஷங்கர் படத்தில் வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது புன்னகை

கூர்ந்து நோக்கினால் ஒரே கதையை பல வேறுபட்ட பிரம்மாண்டங்களில் தருவது தான் அவர் ஸ்பெஷாலிடி.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by krishnaamma on Wed Jan 14, 2015 5:00 pm

//இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஐ’ ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!//

முளையை கழட்டி ஒரு மூலை இல் வைத்து விட்டுத்தானே இப்போவெல்லாம் தமிழ் படங்கள் பார்க்க வேண்டி இருக்கு? ......................இல்லாட்ட காதுல பூக்கூடை யே சுத்துவாங்க....................சாரி வெப்பாங்க புன்னகை.....பிரும்மாண்டம் தான் முக்கியம் என்று ஆகிவிட்டது இப்போதெல்லாம்..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by veeyaar on Thu Jan 15, 2015 3:23 pm

ஒரே ஆள் பத்து பதினைந்து பேரை அடித்து வீழ்த்துவதாக தமிழ் சினிமாவில் காட்டி எப்போது அதை மக்கள் வரவேற்றார்களோ அப்போதே சினிமாவில் லாஜிக் செத்து விட்டது.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by சிவா on Thu Jan 15, 2015 3:26 pm

@veeyaar wrote:ஒரே ஆள் பத்து பதினைந்து பேரை அடித்து வீழ்த்துவதாக தமிழ் சினிமாவில் காட்டி எப்போது அதை மக்கள் வரவேற்றார்களோ அப்போதே சினிமாவில் லாஜிக் செத்து விட்டது.
தமிழ் சினிமா ஓரளவு பரவாயில்லை, தெலுங்கில் ஒரே நேரத்தில் 50, 100 பேரையாவது அடித்தால் தான் ரசிப்பார்கள்!

ஐ படம் உலகளவில் வெற்றி பெற்று தமிழனுக்கு பெருமை சேர்க்கட்டும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by ayyasamy ram on Thu Jan 15, 2015 3:34 pm


படம் முடிந்ததும் ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது கிடைத்த பாயின்ட்ஸ்:

அதிகம் பகிரப்பட்டவை: "மெர்சலாயிட்டேன்", "அதுக்கும் மேல", "விக்ரம், ஷங்கர் கிரேட்"!

ஓரளவு சொல்லப்பட்டவை: "தமிழ் சினிமாவை அடுத்த ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்கப்பா!"

மிகச் சிலர் குறிப்பிட்டவை: "ஒரு தடவை பார்க்கலாம்!"

ஆக, முதல் காட்சியில் ரசிகர்கள் உணர்த்திருயிருப்பது... ‘ஐ’-யைத் தவறேல்!
===\
-தமிழ் தி இந்து.காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by யினியவன் on Thu Jan 15, 2015 3:35 pm

வாங்க பாஸ் நீங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆயிட்டீங்களா புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by சிவா on Thu Jan 15, 2015 4:02 pm

@யினியவன் wrote:வாங்க பாஸ் நீங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆயிட்டீங்களா புன்னகை


ஆம் தல! பொங்கலுக்குக்காகவும், நன்னடத்தையின் காரணமாகவும் இரண்டு மாதத்தில் ரிலீஸாகிவிட்டேன்! அருமையிருக்கு


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by யினியவன் on Thu Jan 15, 2015 4:20 pm

@சிவா wrote:ஆம் தல! பொங்கலுக்குக்காகவும், நன்னடத்தையின் காரணமாகவும் இரண்டு மாதத்தில் ரிலீஸாகிவிட்டேன்! அருமையிருக்கு

தூங்கிட்டே இருந்திருப்பீங்க போல அதான் நன்னடத்தை புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by பாலாஜி on Thu Jan 15, 2015 4:38 pm

@சிவா wrote:
@யினியவன் wrote:வாங்க பாஸ் நீங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆயிட்டீங்களா புன்னகை


ஆம் தல! பொங்கலுக்குக்காகவும், நன்னடத்தையின் காரணமாகவும் இரண்டு மாதத்தில் ரிலீஸாகிவிட்டேன்! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1115421

பொங்கலுக்குக்காக ரிலீஸ் ஆகியிருப்பிங்க ....... நன்னடத்தை என்று கதை விடாதிங்க .......
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by soplangi on Thu Jan 15, 2015 5:18 pm

ஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார்.

இந்நிலையில், தனது நண்பன் சந்தானம் மூலம் எமி ஜாக்சனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிட்டுகிறது. எமியை படப்பிடிப்பிற்கு சென்று சந்திக்கும் விக்ரம், அவளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதோடு, தனது விசிட்டிங் கார்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு திரும்புகிறார்.

இதற்கிடையே எமியுடன் இணைந்து நடிக்கும் மாடலான உபேன் பட்டேல், அவளுக்கு பாலியல் தொந்தரவு தருகிறார். இதுகுறித்து தனது குடும்ப டாக்டரான சுரேஷ் கோபியிடம் முறையிடுகிறாள் எமி. அவர், உபேன் பட்டேலை நேரடியாக எச்சரிக்கிறார்.

இதனால் கோபமடையும் உபேன் பட்டேல், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் விளம்பர படங்களில் இருந்து எமி ஜாக்சனை நீக்கி விடுகிறார். எமி ஜாக்சனுக்கு வேறு மாடல் யாரும் இல்லாததால் அவளுக்கு விளம்பர படங்களும் கிடைப்பதில்லை.

அந்த வேளையில், விக்ரம் இவளிடம் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை பார்க்கும் எமி ஜாக்சன், அவனை தனக்கு மாடலாக உருவாக்கி அதன் மூலம் விளம்பர படங்களை பெறலாம் என்று முடிவு செய்து விக்ரமை தேடி செல்கிறாள். எமி ஜாக்சன் மீது தீவிர பற்றுடன் இருக்கும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாகி, தனது லட்சியத்தை விட்டுவிட்டு மாடலாக உருவாகிறார்.

விக்ரமுக்கு மேக்கப் மேனாக ஒரு திருநங்கையை நியமிக்கிறாள் எமி ஜாக்சன். திருநங்கை விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், விக்ரமோ எமிஜாக்சனை காதலிப்பதால், அவளது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விக்ரமை பழிவாங்க திருநங்கை காத்துக் கொண்டிருக்கிறாள்.

எமியும்-விக்ரமும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறார்கள். இவர்களது விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதால், இவர்களை தேடி நிறைய விளம்பரங்கள் வருகிறது.

ஒருநாள் பெரிய விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தும் ராம்குமாரின் விளம்பரத்தில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், விக்ரம் மீது ராம்குமார் வெறுப்பில் இருக்கிறார். இவர்களது வளர்ச்சி பிடிக்காத மாடலான உபேன் பட்டேலும் விக்ரமை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் விக்ரமின் முகம் திடீரென அகோரமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம்? அவர்களை விக்ரம் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா? என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

நாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

மாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது.

சந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார்.

இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.

மற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.

மொத்தத்தில் ‘ஐ’ ஆச்சர்யம்.

(96/100)

-- மாலைமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Jan 15, 2015 6:56 pm

3 மணி நேரம் சலிப்பில்லாமல் போனாலும் பல காட்சிகள் யூகிக்கும் படியாகவே இருந்தது.எந்த ஒரு எதிர்பாரத திருப்பமும் இல்லை...படமாக்கப்பட்ட இடங்களும் காமிராவின் திறமையும் அருமை...விக்ரமின் அழகும் நடிப்பும் அருமையோ அருமை...விக்ரமின் உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை...எதிர்பார்ப்புகள் இன்றி பார்த்தால் சிறப்பான படம்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by M.M.SENTHIL on Fri Jan 16, 2015 7:50 pm

@சிவா wrote: தமிழ் சினிமா ஓரளவு பரவாயில்லை, தெலுங்கில் ஒரே நேரத்தில் 50, 100 பேரையாவது அடித்தால் தான் ரசிப்பார்கள்!

ஐ படம் உலகளவில் வெற்றி பெற்று தமிழனுக்கு பெருமை சேர்க்கட்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1115409

சூப்பருங்க மகிழ்ச்சி ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by ராஜா on Sat Jan 17, 2015 11:28 am

DVD அல்லது bluray தரவிறக்கம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஐ - விமர்சனம் Empty Re: ஐ - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை