ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

View previous topic View next topic Go down

அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Post by krishnaamma on Sat Dec 27, 2014 2:34 pm

சொல்லின் செல்வர், வாயு புத்திரன், மாருதி, அஞ்சனை மைந்தன், சிரஞ்சீவி எனும் நாமங்களால் பேப்றப்படுபவர், ஆஞ்சநேயர்.ராமபக்தனான அனுமன் யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர். அவரை மனதார துதித்து சரணடைந்தால், கிடைத்தற்கரிய பேறுகளை அளித்து கிரகதோஷ பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பார்.அவர் எட்டு சிறப்பு அம்சங்களைக் கொண்ட அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயராக சேவை சாதிக்கும் தலம், கோவை பீளமேடு, முதலில் அந்த அஷ்ட அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.

வரம் தரும் வலது கை: ஆஞ்சநேயரின் வலதுகை, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு "அஞ்சேல்' என அபயம் அளிக்கும் வகையில் பக்தர்களின் பயத்தைப் போக்கும் அபயகரமாக உள்ளது.இடது கையில் கதாயுதம்: ஐந்து வகையான ஆயுதங்களில் கதை எனும் ஆயுதம் சிறந்ததென கருதப்படுகிறது. அதை தனது இடது கையில் கொண்டுள்ளார். பக்தர்களின் மனதில் இருக்கும் காமம், குரோதம், மதம், மாச்சரியம் போன்ற எதிரிகளை அழிக்கவல்லது இந்த கதாயுதம். எனவே ஆஞ்சநேயரை சேவிக்கும் பக்தர்களுக்கு உள் எதிரியும் வெளி எதிரியும் இல்லை. தன்னை பணியும் பக்தர்களுக்கு எந்தவிதமான தோல்விகளும் ஏற்படாதவதறு பார்த்துக் கொள்கிறார். சகல காரியங்களிலும் வெற்றியைக் கொடுக்கிறார்.

மேற்கு நோக்கிய திருமுகம்: ராவணனுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ராமர், லட்சுமணன் மற்றும் அவருடைய படைவீரர்கள் அனைவரும் மயங்கிக் கிடந்த நிலையில், அவர்களுடைய மயக்கத்தைப் போக்கவல்ல அருமருந்தான சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்து அருஞ்சாதனை படைத்தவரல்லவா ஆஞ்சநேயர்! அந்த சஞ்சீவி மலையின் ஒரு பாகமான மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் பார்க்கும் ஆஞ்சநேயரின் திருமுகம், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றதாகும்.தெற்கு நோக்கிய கால்கள்: மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. இறப்பிற்குப் பொறுப்பு வகிப்பவர் எமதர்மன். அவருக்குரிய திசை தெற்கு தென் திசைக்கு அதிபதியான எமனை நோக்கி தன் கால்களை வைத்துள்ளார். இந்த ஆஞ்சநேயரை சேவிக்கும் பக்தர்களை எமபயத்திலிருந்தும், விபத்துக்கள் ஏற்படாதவாறும் காத்தருள்வார்.

வடக்கு நோக்கிய வால்: எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம். ஆனால் ஆஞ்சநேயருக்கு அவருடைய வால் பகுதியே தலைசிறந்தது. இத்தலத்தில் ஆஞ்சநேயரின் வால்பகுதியை ஆரம்பம் முதல் முடிவு வரை பக்தர்கள் முழுமையாக தரிசிக்கலாம். இதனால் நவகிரக தோஷங்கள் அடியோடு நீங்குகின்றன. செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கும் மகாலட்சுமிக்கும் உரியது வடக்குதிசை, ஆஞ்சநேயரின் வடக்கு நோக்கிய வால், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குபேரனின் ஆசியால் அழியாத சொத்துகள் கிடைக்கவும் அருள்புரியும்.ருத்ராம்சம்: பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்தார். ருத்ரவீரியம் எனப்படும் சிவபெருமானின் ஆற்றல்கள் அனைத்தும் ஆஞ்சநேயரிடம் உள்ளன. ஆஞ்சநேயரும் சிவபெருமானும் ஒன்றே என்பதற்கு சான்றாக சிவலிங்கத்திற்கு மத்தியில் இந்த ஆஞ்சநேயர் இடம் பெற்று அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் சிவபெருமானை வணங்கிய பலன் கிட்டும்.

லட்சுமி கடாட்சமான அனுக்ரஹம்: திருமலையில் ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்கிறார். இங்கே ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கையில் மகாலட்சுமி அமர்ந்து இருக்கிறார். இவரை சரணடைந்த பக்தர்களுக்கு அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைக்கின்றன.நேத்ர தீட்சண்யம்: இந்த ஆஞ்சநேயரின் கண்களில் காலை நேரத்தில் சூரிய பிரகாசம் பளிச்சிடுகிறது. மாலைநேரங்களில் சந்திரன் குளுமையை உணரமுடிகிறது. இத்தலத்தில் எந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தாலும் உயிரோட்டமுள்ள ஆஞ்சநேயரின் அருள் பார்வையை உணரமுடிகிறது.
இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களையும், சாளகிராமத்தையும் வைகானச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பக்தரிடம் கொடுத்து, இவற்றை வழிபட்டு வா! ஒரு காலகட்டத்தில் இப்பகுதியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் அமையும். அதில் இந்த விக்ரகங்களை பிரதிஷ்டை செய் எனக் கூறினார்.

சுவாமிகள் அனுகிரகத்தின்படி கோவை பீளமேடு அவினாசி ரோட்டின் அருகே அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கட்டப்பட்டது. அவரது ஆணைப்படி அந்த விக்ரகங்களையும் சாளகிராமத்தையும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.


அச்சமயம் நான்கு வருடமாக மழை இல்லாமல், வறட்சியின் பிடியில் கோவை சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனால் 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜையின்போது, மழைக்காக சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட, மக்களை குளிர்விக்கும் வண்ணம் பெருமழையை பெய்வித்து, நீர்நிலைகள் நிரம்பிவழியும்படி அனுகிரகம் செய்தார் இந்த ஆஞ்சநேயர்
.
இடுப்பில் கத்தியுடன் போர்க்கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார். அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர். இதுபோன்ற தோற்றத்தில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம் என்கின்றனர்! மகாவிஷ்ணுவின் அம்சமான நெல்லிமரம் தலவிருட்சமாக விளங்குகிறது. தினசரி ஆறு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி நடந்து வருகின்றன. சனிக்கிழமைகளிலும், மூல நட்சத்திர நாளிலும் சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்படகின்றன. சித்திரை முதல் நாள், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி முப்பது நாட்கள், தை முதல்நாள் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் மார்கழி அமாவாசையன்று கொண்டாடப்படும் ஆஞ்சநேய ஜெயந்தியே பெருந்திருவிழாவாகும். அன்று புஷ்பாங்கி சேவை நடைபெறும்.இத்தலத்தில் சேவை சாதிக்கும் அனுமன் அலங்காரப் பிரியன். தமிழ் வருடப்பிறப்பன்று 10008 கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பழக்காப்பு அலங்காரம். புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று 10008 வடைகாப்பு அலங்காரம், இரண்டாவது சனியன்று செந்தூரக்காப்பு அலங்காரம், மூன்றாம் சனியன்று ரோமங்களுடன் கூடிய வானர உருவம், 4வது சனிக்கிழமை முத்தங்கி சேவை, தை முதல் நாள் கரும்பு வன அலங்காரம் என அருள்பாலிக்கும் அழகைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர வெண்ணெய்க் காப்பு, ராஜ அலங்காரமும் இவருக்குச் செய்யப்படுகிறது.

கடன் தொல்லை, தொழில் மந்தம், உடல்நல பாதிப்பு, குழந்தையின்மை போன்ற குறைபாடுகள் நீங்க இந்த அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டு பலன் பெற்றோர் ஏராளம். குழந்தைப்பேறுக்காக வேண்டிக்கொண்டவர்கள், குழந்தை பெற்ற பின், அக்குழந்தையை ஆஞ்சநேயர் முன் கிடத்தி தீர்த்த பிரசாதம் பெற்று கதாயுதத்தால் ஆசிபெறும் காட்சியை இங்கு அடிக்கடி காணலாம்.

எங்கே இருக்கு: கோவை அவினாசி சாலையில், எஸ்ஸோ பங்க் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்தும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் பீளமேடு செல்லும் அனைத்து பேருந்துகள் மூலமும் கோயிலை அடையலாம். சுமார் 4 கி.மீ.,

தரிசன நேரம்: காலை 7.30 - 11.30 வரை; மாலை 5.30 - இரவு 8.30 மணி.

ஆலாலசுந்தரம், கோவை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Post by ayyasamy ram on Sat Dec 27, 2014 2:44 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Post by M.Saranya on Sat Dec 27, 2014 5:21 pm

நல்ல பகிர்வு...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Post by krishnaamma on Mon Dec 29, 2014 2:22 pm

நன்றி சரண்யா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Post by mbalasaravanan on Mon Dec 29, 2014 3:35 pm

நல்ல பதிவு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum