ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

View previous topic View next topic Go down

பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by ராஜா on Thu Dec 25, 2014 11:22 am

வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர். குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய் பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் வாஜ்பாய் அரசியலில் நுழைந்தார்.

1941-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

1942-ல் மகாத்மாகாந்தி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

1946-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய ‘ராஷ்டிரீய தர்மா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புதிதாகத்தொடங்கிய சில பத்திரிகைகளின் ஆசிரியரானார். அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவருடைய எழுத்தாற்றல் வெளிப்பட்டது.

1950-ல் ‘ஜனசங்கம்’ கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.

1951-ம் ஆண்டு லக்னோ தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தார். எனினும் பிறகு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

1962, 1986-ம் ஆண்டுகளில் டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி ‘நெருக்கடி நிலை’ அறிவித்தபோது, 1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்றபோது, ஜெயப்பிரகாசரின் யோசனைப்படி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’ என்ற கட்சியை அமைத்தன.

வாஜ்பாய் தன்னுடைய ‘ஜனசங்கம்’ கட்சியை, ஜனதாவுடன் இணைத்தார். 1977 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இந்திராகாந்தியும் தோல்வி அடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனதா அரசில், வெளி விவகார மந்திரியாக வாஜ்பாய் பொறுப்பு ஏற்றார்.

வெளிவிவகார மந்திரியாக இருந்தபோது, ஐ.நா. சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியில் உரை நிகழ்த்தினார். பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கு கொண்டார். ஜனதா கட்சி உடைந்த பின், ‘பாரதிய ஜனதா’ கட்சியை அமைத்தார்.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும், பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்ததால், மந்திரிசபை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

1996-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்க இயலாமல் போனதால் 13 நாட்களில் ராஜினாமா செய்தார்.

1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்ரல் 17-ந்தேதி வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

1999 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அக்டோபர் 13-ந்தேதி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக வாஜ்பாய் பதவி ஏற்றார். அரசியலுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டுள்ள வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வாஜ்பாய், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர். கவிதைகள் எழுதுவதிலும் வாஜ்பாய் வல்லவர். இவருடைய கவிதைகளும், சொற்பொழிவுகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சித்தலைவர்களில், எல்லாக்கட்சித்தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் வாஜ்பாய். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதரத் தடை என மிரட்டின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக அரங்கில் நிலை நாட்டியவர் வாஜ்பாய்.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு வாஜ்பாய் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே தங்கியுள்ளார். அவரது வளர்ப்பு மகள் அவரை கவனித்து வருகிறார். 1992-ல் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது.

மதன் மோகன் மாளவியா

மஹாமணா என்று இந்தி பேசும் பகுதிகளில் பெருமையுடன் அழைக்கப்படும் மதன் மோகன் மாளவியா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1861-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி பிறந்தார். தந்தையார் பிரிஜ்நாத், தாயார் மூனாதேவி. ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் மதன் மோகன் மாளவியா.

இவரது மூதாதையர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மால்வா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் மாள்வியாக்கள் என்று அழைக்கப்பட்டனர். தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே சமஸ்கிருத மொழியை பயிலத் துவங்கினார் மாளவியா.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். பின்னர் கல்வி உதவித்தொகை பெற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். தான் படித்த அதே அலகாபாத் சில்லா பள்ளியில் ஓர் ஆசிரியராக தன்னுடைய பணியைத் துவங்கினார்.

சில காலம் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார். ஆசிரியப் பணிக்குப் பிறகு 1891-ல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தன்னுடைய சட்டப்பணியைத் துவங்கினார். அரசியலில் ஈடுபாடு கொண்டு இந்திய தேசிய காங்கிரசில் கட்சியின் தலைவராக 1909, 1918, 1930 மற்றும் 1932-ம் ஆண்டுகளில் பொறுப்பேற்றார்.

இந்தியாவில் சாரணர் இயக்கம் முறையாக 1909-ம் ஆண்டு பெங்களூருவின் பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் பிரித்தானிய அரசு துவங்கினாலும் உள்நாட்டு இந்தியர்களுக்காக நீதியரசர் விவியன் போசு, மதன்மோகன் மாளவியா, இருதயநாத் குன்சுரு, கிரிஜா சங்கர் பாஜ்பாய், அன்னி பெசன்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் 1913-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மேலும் சாரணர் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட மாளவியா சேவா சமிதி என்ற சேவை அமைப்பையும் நிறுவினார்.

இந்தியாவின் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை 1916-ல் நிறுவினார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.

1928-ல் சைமன் குழுவிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார்.

1939-ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றார்.

1909-ல் மிகவும் பிரபலமாக இருந்த ‘தி லீடர்’ என்னும் ஆங்கில நாளேட்டை அலகாபாத் நகரில் இருந்து நடத்தினார்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பணியாற்றினார். இந்து மகாசபா என்ற அமைப்பு உருவாக பாடுபட்டவர்களில் மாளவியாவும் ஒருவர்.

மாளவியா சமூகநீதிக்காகவும் கோவில்களில் அனைத்து சாதியினரும் நுழைவதற்கும் போராடினார். இவரது தலித் தொடர்புகளைக் கண்டித்து இவரது சாதியினர் இவரை தங்கள் சாதியிலிருந்து வெளியேற்றினர்.

இவர் கலாராம் கோவிலில் ரத யாத்திரையின்போது 200 தலித் மக்களுடன் கோவிலுக்குள் ஆலயப்பிரவேசம் செய்தார்.
அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கப்படி தனது 16-வது வயதிலேயே மாளவியா மிர்சாப்பூரின் குந்தன் தேவியை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் பிறந்தனர்.

நவம்பர் 12, 1946-ம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா மரணம் அடைந்தார்.

-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by ayyasamy ram on Thu Dec 25, 2014 11:58 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 8:02 am

டிசம்பர் 24,25 , பெரும் தலைவர்கள் ஜனித்த நாளாகவோ , மரணித்த நாளாகவோ இருக்கிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 8:08 am

அடல் பிஹாரி வாஜ்பாய் .
அடல் ---என்றால் ஒன்று சேர்ப்பது
பிஹாரி -- பிரிப்பது .
பெயரிலே சிந்தை கிளப்பும் விந்தை மனிதர் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 8:10 am

நல்லத் தகவல் பகிர்வு , ராஜா !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 8:34 am

@T.N.Balasubramanian wrote:அடல் பிஹாரி வாஜ்பாய் .
அடல் ---என்றால் ஒன்று சேர்ப்பது
பிஹாரி -- பிரிப்பது .
பெயரிலே சிந்தை கிளப்பும் விந்தை மனிதர் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1111440

வெளியே போக வேண்டியுள்ளது .
திருத்தம் தரவேண்டும் என நினைக்கிறேன் .
போய் வந்து தருகிறேன் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 10:27 am

என்னுடன் கூட வேலை செய்த ஒருவர் பெயர் ,முகேஷ் அர்தா புரே .
உங்கள் பெயரில் சிறு குழப்பம் உள்ளதே , அர்தா என்றால் அரை /பாதி ,
புரே என்றால் முழுதும் ,முழுமை , அப்போது நீங்கள் அரை முழுமை முகேஷா என்பேன் .
அதற்கு அவர் , என் பெயரில் மட்டுமா குழப்பம் , நம் பிரதமர் (அப்போதைய ) வாஜ்பாய் பெயரிலும்
குழப்பம் உள்ளதே . அடுல் என்றால் இணைப்பது , பிஹாரி என்றால் பிரிப்பது , ரெண்டும் எப்பிடி சேரும்
என்று கேட்பார் .
மனதில் பதிவான இதன் காரணமாக வெளி வந்த பதிவு 8.08 மணிக்கு.
அப்போதைய அரைகுறை ஹிந்தி அறிந்த லக்ஷணம் தான் அந்த வெளிப்பாடு .
யோசித்ததில் , ஹிந்தி அகராதியை புரட்டியதில் ,
அடக்னா (வினைச் சொல் ) என்றால் ஒன்று சேர்த்தல் --
அடுல்-- (பெயர்ச்சொல்) இணைப்பது .
அதுல் ---இணையற்றவர் , (matchless ) ஆங்கிலத்தில் எழுதும் போது ATAL என்ற எழுதி
விடுவதால் குழப்பம் . பிஹாரி வாஜ்பாய் எல்லாம் ஊர் ,குடும்ப பெயர் , surname ஆக இருக்கவேண்டும் .

மாமனிதர் ஒருவரை , கேளிக்கு உள்ளாக்க கூடாது என்பதால் இவ்விளக்கம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by M.Saranya on Fri Dec 26, 2014 12:56 pm

நல்ல பதிவு....

நன்றி...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by ராஜா on Sat Dec 27, 2014 11:44 am

நல்ல விளக்கம் ஐயா .... புன்னகை நாம் தான் பெயரின் கடைசி பகுதியையோ அல்லது முதல் பகுதியை மட்டுமே சொல்லி பழக்கப்பட்டவர்கள் ஆச்சே , அதனால் வாஜ்பாய் அவர்களின் இந்த பெயர்க்குழப்பம் யாருக்கும் தெரிந்திருக்காது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by T.N.Balasubramanian on Sat Dec 27, 2014 11:53 am

@ராஜா wrote:நல்ல விளக்கம் ஐயா .... புன்னகை நாம் தான் பெயரின் கடைசி பகுதியையோ அல்லது முதல் பகுதியை மட்டுமே சொல்லி பழக்கப்பட்டவர்கள் ஆச்சே , அதனால் வாஜ்பாய் அவர்களின் இந்த பெயர்க்குழப்பம் யாருக்கும் தெரிந்திருக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1111688

உண்மைதான் . நன்றி .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum