ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களே...அழகு உங்கள் கையில்....!

View previous topic View next topic Go down

பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Post by Powenraj on Wed Dec 24, 2014 11:48 pm

சருமம், முடியின் அடர்த்தி, வயது இவற்றையே அழகின் அளவுகோல்களாகப் பலரும் நினைக்கின்றனர். ஏதேதோ க்ரீம்களைப் பூசுவதாலோ என்னென்னவோ ஷாம்பூகளைப் பயன்படுத்துவதாலோ... இளமையைக் கொண்டுவந்துவிட முடியாது. இவை வெளிப்புறத் தோற்றத்தை அழகாக்கிக்கொள்வதற்கான ஒரு தற்காலிகத் தீர்வுதான்.

''நம் உடலில் அழகைக் குறைக்கும் காரணிகள் நிறையவே இருக்கின்றன' என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் பிரியா.

பரம்பரைத்தன்மை

சருமத்தின் அழகை நிர்ணயிக்கும் முதல் காரணி, பரம்பரைவாகு. சிலருக்கு வயதானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. தலைமுடி நரைக்காது. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.

- ஒருவருக்கு தோலில் சுருக்கம் பரம்பரைத்தன்மை காரணமாக ஏற்பட்டிருந்தால், அதற்கு எந்த க்ரீமைப் பயன்படுத்தினாலும் சுருக்கத்தைப்போக்க முடியாது.

சூரியக் கதிர் வீச்சு

புற ஊதாக் கதிரின் தாக்கத்தால் தோலில் வறட்சி ஏற்படும். இந்தப் புற ஊதாக் கதிர் பாதிப்பு, சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்கும்போதும் அதிக ஒளியுள்ள செயற்கை வெளிச்சத்தில் இருக்கும்போதும் வெகு நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போதும் தொலைக்காட்சியை வெகு அருகில் உட்கார்ந்து பார்க்கும்போதும் ஏற்படலாம்.

- வெளியில் செல்லும்போது எஸ்.பி.எஃப்.15 உள்ள சன்ஸ்கிரீன் லோஷன் தடவி, அரை மணி நேரத்துக்குப் பிறகு செல்வது புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். பருத்தி உடைகளை அணிவதன் மூலம், புற ஊதாக் கதிர் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஊட்டச் சத்து

குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் மற்றும் காபி, டீ குடிக்கும் பழக்கம்கூட சருமத்தைப் பாதிக்கும். இந்தப் பழக்கம், உடலில் உள்ள நீர்ச் சத்தைக் குறைத்து, வறட்சியடையச் செய்கிறது. இதனால் சருமம் வறண்டு முதிர்ந்த தோற்றத்தைத் தரும்.

- சருமம் ஆரோக்கியமாக இருக்க நீர்ச் சத்து மிகவும் அவசியம். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மோர் அல்லது இளநீர் குடிக்கலாம். ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சத்தான உணவுப்பொருட்கள், தோலின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கும். வறட்சி மறைந்து சுருக்கங்கள் வராமல் காக்கும்.

சரும சிகிச்சை சாதனங்கள்

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சரும சிகிச்சை சாதனங்களில் மஞ்சள், சந்தனம் மற்றும் சிட்ரஸ் பழங்களில் செயற்கை ரசாயனம் கலந்திருக்கலாம். அதில் தயாரிக்கப்பட்ட சோப், க்ரீம் மற்றும் பவுடர் போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், தோல் வறண்டுபோகும். இந்தப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களைத் தவிர்ப்பதே நல்லது.

ரசாயனம் அதிகம் இல்லாத சோப்பு, ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்வியல்

தூக்கப் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால், மன அழுத்தம் ஏற்படும். அதிகக் கோபம், டென்ஷன், இயலாமை, தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். இதனால், ஹார்மோன் பிரச்னை வரலாம். சீக்கிரம் முதுமைத் தோற்றத்தைத் தந்து, தலைமுடியும் நரைக்க ஆரம்பித்துவிடும். தினமும் குறைந்தது ஏழு மணி நேரம் தூக்கம் கட்டாயம் தேவை. தூக்கம் சரியாக இருந்தால், உடலில் ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். முக்கியமாக, தோல் வளமாக இருக்கத் தேவையான 'கொலாஜன்’ எனப்படும் ஹார்மோனின் சுரப்பு நன்றாக இருக்கும். இதனால் தோலில் சுருக்கம் வராது.

நன்றி:டாக்டர்விகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Post by mbalasaravanan on Fri Dec 26, 2014 4:47 pm

நல்ல பகிர்வு நன்றி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Post by M.Saranya on Fri Dec 26, 2014 5:18 pm

தகவலுக்கு நன்றி....

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 5:51 pm

இந்த காலத்தில் அதிகமான பெண்கள் இதை கடை பிடிக்கிறார்கள் .
ஸ்கூட்டரில் போகும் பெண்கள் ,உடுக்கும் உடை தவிர , தலை முழுதும் ,
துப்பட்டாவால் மூடி , கண் பாகம் மட்டும் திறந்திருக்க , இரு கையும் ,முழங்கை
வரையில் , க்ளவுஸ் போட்டு வண்டி ஓட்டுகிறார்கள் .
சில சமயம் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் , இது அவசியமான ஒன்று .

விவரமான சில கல்லூரி பெண்கள் , நண்பிகளின் , துப்பட்டாக் கொண்டு , முகம் மறைத்து ,
................,அ......க .....பூ ......செ.....கொ..வும் .

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Post by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:36 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண்களே...அழகு உங்கள் கையில்....!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum