உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
by ayyasamy ram Today at 3:17 pm

» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

Admins Online

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by seltoday on Fri Dec 12, 2014 8:01 am

சுப்ரமணியபாரதி வாழ்ந்தபோதும் யாரும் கண்டுக்கிடலை. அவரைப்பற்றித் தெரிந்த பிறகும் பாரதியின் பிறந்தநாளான டிசம்பர் -11 ஐ பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக தொ(ல்)லைக்காட்சிகள் கண்டுக்கிடலை. டிசம்பர் -12 ரஜினிகாந்த் எனும் திரை பிம்பத்திற்கு பிறந்தநாளாம் ,இதைக் கொண்டாட ஒரு மாதமாக தவமிருக்கிறார்கள். புத்தகங்கள் பற்றியோ,எழுத்தாளர்கள் பற்றியோ, மற்ற கலைஞர்கள் பற்றியோ, கிராமங்கள் பற்றியோ,நகரங்கள் பற்றியோ ,சமூகத்தின் அங்கங்கள் பற்றியோ சிறு நிகழ்ச்சி கூட தயாரிக்க முன்வராதவர்கள் இந்த தொ(ல்)க்காட்சிக்காரர்கள்.

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?
உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கனும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் தொ.கா.கள் தான் முக்கிய காரணம்.

தி இந்து நாளிதழின் நடுப்பக்கத்தில் ரஜினி இடம்பெற்றால் அது, இதுவரை நடுப்பக்கத்தில் இடம்பற்றவர்களுக்கும், தி இந்துவிற்கும் மாபெரும் அவமானம்.

இந்த பிம்பத்தைக் கொண்டாடப்போகும் ஊடகங்களிடமிருந்து டிசம்பர் -12ஐக் காப்பாற்றுங்க.

தமிழன் சுயமரியாதை உள்ளவனா ? இல்லையா ? நாளை தெரிந்துவிடும்.

ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை. தனது திரைப்படங்கள் வாயிலாக புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்தியவர். இன்று வரை தனது ரசிகர்களை ஏமாற்றி தவறாக பயன்படுத்துபவர் தான் இந்த ரஜினி. ரஜினி படம் வந்தா திரையரங்கிற்கு போங்க, படம் பாருங்க.ரஜினியை அங்கேயே விட்டுட்டு வாங்க. ரஜினி ஒரு எண்டர்டெய்னர் (entertainer) அதனால் அவரைக் கொண்டாடுறோம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், நமது எல்லோரது வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கும் வசனங்களைப் பேசி நடித்து ,நடிக்காதப் போதும் கூட நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலு தான்யா உண்மையான எண்டர்டெய்னர். உண்மையான கலைஞன். வடிவேலுவை விடவா ரஜினி பெரிய எண்டர்டெய்னர் ? இல்லையே.
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
மதிப்பீடுகள் : 53

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by T.N.Balasubramanian on Fri Dec 12, 2014 8:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை

உண்மை ,முற்றிலும்  உண்மை.
தன்னை வளர்த்துக்கொண்டார் .அவ்வளவே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by mmani15646 on Fri Dec 12, 2014 12:17 pm

அப்பட்டமான உண்மை. சினிமாவில் காண்பிப்பதை உண்மை என்று எண்ணி ஏமாறும் தமிழகத்தை எண்ணி வருந்தத்தான் முடியும். அன்றைய திரைப்படத்தில் ஒரே ஒரு அட்டை கத்தயை வைத்துக்கொண்டு ஒரு படையை விரட்டினார் ஒரு நடிகர். இன்றைய திரைப்படத்தில் அது கூட இல்லாமல் வெறும் கையால் பத்து குண்டர்களை அடித்து துவைக்கிறார்கள் இந்த கூத்தாடிகள். திரைப்படத்தை பொழுது போக்குச் சாதனமாகப் பார்க்காததின் கொடுமைதான் திரைப்படத்துறையினர் தமிழக அரசியலில் நடித்துக்கொண்டு காலத்தை ஓட்டுகின்றனர்.
தமிழகத்தில வ.வு.சி, உ.வே.சா, போன்றோர்க்கில்லாத முக்கியத்துவம் ஒப்பனையுடன் தன் பேத்தி வயதுடைய கதாநாயகிகளுடன் காதல் புரியும் கூத்தாடிகளுக்கு அளிக்கப்பட்டது, அளிக்கப்படுகிறது. இனியும் அளிக்கப்படுமா என்பதைக் காலம்தான் கூறவேண்டும்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by M.Saranya on Fri Dec 12, 2014 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான கேள்வி நண்பரே .
எனக்கும் அந்த ஆதங்கம் உள்ளது இருந்தாலும் நம் சமூகத்தினரிடையே சினிமா அவ்வளவு பிரபலமாகிவிட்டு இருக்கிறது...

நம் மக்களை அதுவும் குறிப்பாக ரசிகர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.....
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by david87 on Fri Dec 12, 2014 12:44 pm

சுப்பர் .... நீங்க சரியாய் சொன்னிர்கள் இப்போது அவரின் பெயரை வைத்து கட்சி தொடங்க போறாங்க அப்பாவி தமிழ் மக்கள் ...... பாவம் தமிழ் ரசிகர்கள் .
david87
david87
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/12/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by ஜாஹீதாபானு on Fri Dec 12, 2014 2:14 pm

அருமையான நெத்தியடி பதிவு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by mbalasaravanan on Fri Dec 12, 2014 3:10 pm

அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by பாலாஜி on Fri Dec 12, 2014 5:50 pm

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! K7Po3qGQqK8xBeS4clVT+10366281_598527910245903_8406363705130542975_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by ayyasamy ram on Fri Dec 12, 2014 6:02 pm

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54483
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by SajeevJino on Fri Dec 12, 2014 7:10 pm

.
கொஞ்சமாவது சிந்திக்கும் மக்களை பார்க்க முடிவது நிம்மதி ..

பெண்கள் அவர்கள் போக்கில் நாடகம் ...ஆண்கள் அவர்கள் போக்கில் சினிமா படம்

வெளங்கிடும்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 313

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by ராஜா on Fri Dec 12, 2014 9:21 pm

இதற்கெல்லாம் முடிவு கட்டவேண்டுமானால் இப்ப எங்கோ ஒரு இடத்தில் அத்தி பூத்தாற்போல சிந்திக்கும் தமிழன் , தமிழ்நாடு பூராவும் சிந்திக்க வேண்டும் அதன் பிறகு தான் தமிழினம் முன்னேறும்.

சினிமாவை பாருங்கள் , அதை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பாருங்கள். அத்துடன் வேலை முடிந்தது அதன் பிறகு அடுத்தவேலையை பார்க்க வேண்டும் அது தான் சரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by seltoday on Fri Dec 12, 2014 9:42 pm

ரஜினி மட்டுமல்ல , விஜய் ,அஜித் ,தனுஷ் ,சிம்பு என அடுத்தும் இந்தக் கதாநாயகத் துதிபாடல் மனநிலையை எடுத்துச் செல்ல நிறைய பேர் தயாராகவே இருக்கிறார்கள் . துதிபாடல் மனநிலையை வளர்த்தெடுப்பதில் தொல்லைக்காட்சிகள் தான் முக்கிய பங்கு வகிகின்றன . இன்றைய தலைமுறை நடிகர்கள் மது குடிப்பதை அளவுக்கு அதிகமாக ஊக்கப்படுத்தும் வகையிலான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கிறார்கள் .

எம்.ஆர்.ராதா , கவுண்டமணி போன்றவர்கள் தான் இந்த துதிபாடும் மனநிலையை வெறுத்தவர்கள் .
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
மதிப்பீடுகள் : 53

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by உதயசுதா on Sat Dec 13, 2014 2:16 pm

நெத்தியடி கட்டுரைதானுங்க. ஆனா எத்தனை தடவை எத்தனை பேர் வந்து சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்கன்னு அடிச்சு சொன்னாலும் இந்த முட்டாள் ரசிகர்கள் திருந்தாத வரை இது போல எத்தனை கட்டுரை வந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான்.

நேத்து கே.டிவில நாடு விட்டு நாடு போய் சம்பாதிக்க போய் இருக்கும் தமிழர்கள் தங்கள் வேலையெல்லாம் விட்டுவிட்டு ரஜினி பிறந்த நாள் கொண்டாடியதை பார்க்கும்போது வேதனையாக தான் இருந்தது. அது மட்டும் இல்ல வெளிநாட்டு தமிழர்களுக்கு எதேனும் பிரச்சினை என்றால் வராத
தமிழ்சங்கங்கள் கூட இவர் பிறந்த நாளை கொண்டாட ஒண்ணு கூடி இருந்ததனை பார்த்த போது அதிக கோபம் வந்தது.

இந்த மாதிரி முட்டாள் தனமான ரசிகர்கள் இருக்கும் வரை இவர் 60 வயசுல என்ன 80 வயசுல கூட பேத்தி வயசுல இருக்கிற நடிகை கூட டுயட் பாடலாம்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by T.N.Balasubramanian on Sat Dec 13, 2014 6:07 pm

வேலை இல்லாத பட்டதாரிகளும் , வேலைக்கு போவதற்கு முயற்சிக்காமல்  ,இவர் படத்திற்கு பாலாபிஷேகம் , கற்பூர ஆரத்தி செய்கின்றனர். நல்ல நடிப்பை புகழவேண்டியதுதான் . அதற்காக , பைத்தியகாரத்தனமான காரியங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது . பாலாபிஷேகம் பண்ணும் பாலை , 100 ஏழை எளியவருக்கு கொடுங்களேன் . ரஜினி பேரை வாழ்த்தி , உங்களையும் வாழ்த்துவார்களே . ரஜினியும் இதை விரும்புவார் என்றே நம்புகிறேன் . Idol worship ஐ வெறுக்கும் சிலரும் matinee idol worship ஐ செய்கிறார்கள் , அரசியலுக்காக .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by krishnaamma on Sat Dec 13, 2014 7:13 pm

@T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை

உண்மை ,முற்றிலும்  உண்மை.
தன்னை வளர்த்துக்கொண்டார் .அவ்வளவே .

ரமணியன்

ரொம்ப சரி ஐயா...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஒரு எட்டணா எதுக்காகவும் யாருக்காகவும் செலவு செய்தது இல்லை
சோகம்............மஹா பாவி ....................... கோபம் ...நான் அந்தா ஆள் படத்தைக்கூட பார்க்கமாட்டேன்..................மஹா அபத்தமாய் இருக்கும் ஒவ்வொன்றும்.....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை