உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 9:11 am

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Today at 8:48 am

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:35 am

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by ayyasamy ram Today at 8:31 am

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Today at 8:29 am

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:19 am

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Today at 6:43 am

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Today at 6:41 am

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:38 am

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Today at 6:28 am

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Today at 6:24 am

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 6:21 am

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Today at 6:18 am

» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
by ayyasamy ram Today at 6:12 am

» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
by ayyasamy ram Today at 6:10 am

» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
by ayyasamy ram Today at 6:07 am

» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 5:59 am

» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
by ayyasamy ram Today at 5:55 am

» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...!!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by Dr.S.Soundarapandian Yesterday at 7:13 pm

» புரட்டாசி நல்வாழ்த்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:11 pm

» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 7:09 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:07 pm

» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:02 pm

» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:00 pm

» இப்போது Sandboxie - Sandbox இலவசம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:26 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» புத்தக தேவைக்கு...
by rajabhai Yesterday at 3:14 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சக்தி18 Yesterday at 11:23 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Yesterday at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Yesterday at 6:16 am

» நட்பு !!!
by jairam Tue Sep 17, 2019 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Tue Sep 17, 2019 9:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Tue Sep 17, 2019 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 4:07 pm

Admins Online

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 11:56 am

இந்த சனிபெயர்ச்சி குறிப்புகள் அனைத்தும் தினத்தந்தியில் இருந்து எடுத்து பகிரப்பட்டது.
நன்றி - தினத்தந்தி


விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Aries

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை - (45/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

கவனத்துடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

தளராத மனதோடு பணியாற்றி வரலாறு படைக்கும் மேஷ ராசி நேயர்களே!

திட்டம் போட்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக விளங்கும் உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டது. இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இப்பொழுது எட்டாமிடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஏராளமான மாற்றங்களை வழங்கப்போகிறார்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், எட்டில் சஞ்சரிக்கும் பொழுது தொழில்மாற்றச் சிந்தனைகள், இடமாற்றச் சிந்தனைகள், வீடு மாற்றச் சிந்தனைகள் மற்றும் நாடுமாற்றச் சிந்தனைகள் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.

வலிமை வாய்ந்த சனியால் நாம் வளர்ச்சியைக் காணவும், தளர்ச்சியில் இருந்து அகலவும் செலுத்த வேண்டியது பக்தியும், யுக்தியும் தான். நீங்கள் தினந்தோறும் பக்தி செலுத்தி பாராயணமாக, 'கருநிறக் காகம் ஏறிக் காசினி தன்னைக் காக்கும்' என்ற கவசத்தைப் பாடுவதன் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். யுக்தி என்பது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்க காலத்தில் நீங்கள் எதையும் யோசித்து நுணுக்கமாக செய்வதாகும்.

மூன்றாண்டு காலங்கள் எட்டாமிடத்தில் முற்றுகையிடும் சனியால், வேண்டிய நற்பலன்களைப் பெற வேண்டுமானால் தன்னம்பிக்கையும், தைரியமும் தான் உங்களுக்கு அவசியம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய், 'தைரிய காரகன்' தானே!. எனவே தாக்குதல்களைச் சமாளித்து முன்னேறும் தன்மை இயல்பாகவே உங்களுக்கு உண்டு.

இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்திலும் அது இருக்கும் இடம், பார்க்கும் கிரகம், அதோடு இணைந்திருக்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் தாராபலம் பார்க்க வேண்டும். பின்னர் உங்களுக்குரிய யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளையும், தசாபுத்திக்கேற்ப அனுகூலம் தரும் தெய்வத்தைக் கண்டறிந்து அதற்குரிய வழிபாடுகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் முன்னேற்றத்தின் முதற்படிக்கு நீங்கள் செல்லலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிட, இனி டிசம்பர் 16 முதல், காக வாகனத்தானை கைகூப்பித் தொழ வேண்டியது அவசியமாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்!

மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். இதுவரை உங்களுக்கு கண்டகச் சனியாக இருந்தது. இனி மார்கழி 1-ந் தேதி முதல் அஷ்டமத்துச் சனியாக அடியெடுத்து வைக்கிறது. அஷ்டமத்துச் சனி எல்லோருக்கும் பாதிப்பை கொடுத்தாலும், உங்களைப் பொறுத்தவரை உற்சாகத்தோடு பணிபுரிய வைக்கப்போகிறார். காரணம் சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே குருபகவான் கடக ராசிக்கு வக்ரமாக சென்று, அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்துள்ள சனியை தனது அருள் பார்வையால் பார்க்கப் போகிறார். எனவே ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது.

உங்களுக்கோ அல்லது குடும்பத் தினருக்கோ ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும். எனவே சனியையும், குருவையும் வாரந்தோறும் வழிபட்டு வருவது நல்லது.

அதே நேரத்தில் சுக்ரன் மற்றும் புதனின் ஆதிக்க திசாபுத்தி நடப்பவர்கள், எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நல்ல திசாபுத்தி நடைபெற்றால், சனியால் ஏற்படும் சோதனைகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும். நல்ல தெசாபுத்திகள் நடைபெறுமானால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் வீண் விரயங்களை தடுக்க, சுபவிரயங்களைச் செய்யலாம்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால், குடும்பச் செலவுகள் கூடும். இரவு, பகலாக கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களை திருப்திப் படுத்த பலவித போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். படபடப்பு, கோபம் போன்றவை வந்திணையும்.

நிதானத்தோடு செயல்படுவதாலும், கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணத்தோடு நடந்து கொள்வதாலும், சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபட இயலும்.

சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். அவர்களுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை அதிகம் வாங்கிக் கொடுப்பீர்கள். கல்யாணக் கனவுகளை நனவாக்கத் திட்டமிடுவீர்கள்.

எந்தக் காரியத்தையும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வதே நல்லது. பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினையை, பேச்சு வார்த்தையிலேயே சுமுகமாக முடித்துக் கொள்ளுங்கள்.

சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால், குடும்ப பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. முதல் ஆறு மாதங்களும், கடைசி 6 மாதங்களும், நடுவில் 6 மாதங்களும் சனியின் வலிமை அதிகரிக்கும். அக்காலத்தில் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடும், பாக்கியாதிபதிக்குரிய கிழமையோடும் இணையும் நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்தால், உத்தி யோகம் மேன்மை அடையும்.

தெசாபுத்தி பலம் இழந்து இருப்பவர்களுக்கு, செய்யும் வேலையைவிட்டுவிட்டுப் புதிய வேலை தேடும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, தனித்து இயங்க முற்படுவார்கள். அனுசரித்துச் செல்வதன் மூலமே நன்மைகளைப் பெற முடியும்.

குதூகலம் தரும் குருப் பெயர்ச்சி காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 1, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பங்காளிப் பகை மாறும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைக் குரு பார்க்கப் போகின்றார். எனவே குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் பங்குதாரர்களாக புதியவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். வியாபார இழப்புகளை ஈடுசெய்வீர்கள். அந்நிய தேசம் அல்லது பிற மாநிலங்களில் பணிபுரிய செய்த ஏற்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி அனுகூலமாக இருக்கும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் நேரடிப் பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். கோவில் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். சர்ப்பசாந்தி செய்தால் சந்தோஷ வாய்ப்பு தேடிவரும்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வது கடினம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ராகு-கேது பிரீதி நலம் தரும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டிலும் மூன்று முறை வக்ரம் பெறும்பொழுது, வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறியே வந்துகொண்டு இருக்கும். குடும்பச் சுமை கூடும். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கடுமையாக முயற்சித்தும் காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் அரைகுறையாகப் பணியை முடித்துக் கொண்டு வர நேரிடலாம். இல்லத்தில் உள்ளவர்கள் எல்லாம் எதிரியாக இருக்கிறார்களே! என்று நினைப்பீர்கள். ஆயினும் அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் விரைவில் சுமுகமாக முடியும். அதற்கு அடித்தளமாக காலையில் கணபதியையும், மாலையில் சனி பகவானையும், அதன்பிறகு அனுமனையும் வழிபட்டு வந்தால் துயரங்கள் விலகி ஓடும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

சனி பகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி உங்களுக்கு சகல யோகமும் வழங்குவார். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில், தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில் சென்று விநாயகர் மற்றும் நவக்கிரகம் அனைத்தையும் வழிபட்டு வருவது நல்லது. அருகிலுள்ள திருமங்கலக்குடி மங்களேஸ்வரர் வழிபாடும், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 11:57 am

ரிஷபம்சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை (60/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

இடமாற்றங்களால் இனிய மாற்றம் வந்து சேரும்!

களைப்பின்றி உழைத்து காசினியில் புகழ் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!

நன்றி மறக்காத குணத்தால் நல்லவர்கள் என்று பெயர் பெற்று விளங்கும் உங்களுக்கு, இதுவரை 6-ல் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து கண்டகச் சனி என்ற ஆதிக் கத்தில் உலாவரப் போகிறார்.

கண்டகச் சனி என்றால் எல்லோரும் கவலைப்படுவார்கள். ஆனால் நீங்கள் மட்டும் கவலைப்பட வேண்டிய தில்லை. காரணம் உங்கள் ராசிக்கு அதிபதியாகிய சுக்ரன், சனிக்கு நட்பு கிரகமாக விளங்குகிறார். நண்பர்கள் எப்பொழுதுமே கெடுதல் செய்வதில்லை. பகைவர்களாக இருந்தால் தான் பயப்பட வேண்டும்.

சனியோ கண்டகச் சனியாக இருக் கிறது. ஆனால் அவரது நட்பு கிரகமான சுக்ரனது வீடு உங்களது ராசியாக அமைந்ததால், திண்டாட்டங் களை வழங்காமல் கொண்டாட்டங் களையும், குதூகலங்களையும் வழங்கப்போகிறது.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனி, சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். எனவே இதுவரை நீங்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நற்பலன் இப்பொழுது நடைபெறப் போகின்றது. விருச்சிகத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது விருத்தியம்சத்தைக் கொடுக்கப் போகிறார்.

மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தும், ஒரு சல்லிக்காசு கூட சேர்க்க முடியவில்லையே என்று சஞ்சலப்பட்டவர்கள் இப்பொழுது வங்கிச் சேமிப்பு வரலாறு காணாத அளவு உயர வழிவந்து விட்டதே என்று ஆச்சரியப்படுவார்கள். தடைகள் அகலும். தைரியத்தை மட்டும் உடன் வைத்துக் கொண்டால், வாழ்க்கையில் பகை என்பது இருக்காது.

மூன்று ஆண்டு காலங்கள் சப்தம ஸ்தானத்தில் முற்றுகையிடும் சனியால், போதிய நிதி வசதியும் பொன்னான வாழ்க்கையும், வந்து சேரப்போகிறது. அதற்கு நீங்கள், சனியை பக்தியோடு வழிபட வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் கேட்கும் வரங்களை மட்டுமல்லாமல், கேட்க நினைக்கும் வரங்களையும் கூட சனிபகவான் வாரி வழங்குவார்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் இடம், அதோடு இணைந்து இருக்கும் கிரகம், அதனைப் பார்க்கும் கிரகம் என அனைத்தையும் ஆராய்ந்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாடுதான் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறது. சப்தம ஸ்தானத்தில் சனி வந்தால், அனுமனை வழிபட வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே மந்தனின் பார்வையால் மகத்துவம் காண அனுமனையும் வழிபாடு செய்வது நல்லது.

இனிய பலன் தருமா ஏழாமிடத்துச் சனி?

மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் உலா வந்து கொண்டிருந்தார். ஆகையால் உத்தியோக பிரச்சினை, ஊதிய பிரச்சினை, உடனிருப்பவர்களால் பிரச்சினை என்று நிம்மதியில்லாத வாழ்க்கை அமைந்திருந்தது.

இப்பொழுது மார்கழி ஒன்றாம் தேதி முதல் சப்தம சனியாக வந்து உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கப் போகின்றது. எப்படி கண்டகச் சனி இன்னல் களை தீர்க்கும் என்று நினைக்கலாம். கவலையை ஒரு நொடியில் போக்கு பவனும் சனிபகவான் தான்.

சிந்திப்பதைவிட நேரடியாக செயல்பட வேண்டுமென்று நினைக்கும் உங்களுக்கு, சந்திக்கும் சனியின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படாது. காரணம் அதன் ஆதிபத்யமும், நட்பு கிரகத்தின் அடிப்படையிலும் தான். தந்தை வழி உறவிலிருந்த விரிசல்கள் அகலும். தடைப்பட்டு நின்ற காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

என்னயிருந்தாலும் சனிதானே ஆயுள்காரகன்!. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு வித்திடும் ஒரு கிரகம் மந்த கதியில் இயங்கி உங்களைப் பார்ப்பதால், உற்சாகக் குறைவும், சலிப்பும் ஏற்படும். உங்களை நீங்களே நொந்து கொள்ளும் நிலையும் உருவாகும்.

களத்திர ஸ்தானமாக ஏழாமிடம் கருதப்படுவதால், அங்கிருக்கும் சனியால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க, விட்டுக் கொடுத்தல் அவசியம். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்தால் குழப்பம் ஏற்படாது.

பார்க்கும் சனி, யோகத்தை சேர்க்க வேண்டுமானாலும், பணவரவு திருப்திகரமாக அமைய வேண்டுமானாலும் சனிக்கிழமை தோறும் சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றுங்கள்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனிபகவான், ஏழாமிடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 1, 4, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகம், வாகனம், தாய், தந்தை, பூர்வீகம் அனைத்து ஆதிபத்யங்களிலும் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கப்போகிறார்.

சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். ஆயினும் சனி உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகம் என்பதால், பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்காது. உங்கள் சுய ஜாதகம் யோகம் தரும் விதத்தில் இருந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலைத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவு உருவாகலாம்.

புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் என்றாலும், வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற பெரிய முயற்சிக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். சனி பகவானின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும், திகைக் கவும் வைக்கும்.

யோக பலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு இணையும் நாளில், பாக்கியாதிபதியாக விளங்கும் கிரகம் பலம் பெற்றிருக்கும் பொழுது சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் சனியால் பொன் பொருட்கள் குவியும் வாய்ப்பும், புகழும் வந்து சேரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

குதூகலம் தருமா குருப்பெயர்ச்சி?

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழவுள்ளது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை பலத்தால், 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். இருந்த இடம் தெரியாமல் நோய் மறைந்து போகும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, புதிய தொழில் தொடங்க முயற்சிப்பார்கள். நீண்ட தூரப் பயணங்கள் கைகூடும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசி மற்றும் 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குரு பார்வை கோடி நன்மைகளைத் தரும். வாடிய நிலைமாறி வளர்ச்சி கூடும். இல்லத்தில் திருமண வாய்ப்பு உருவாகும். பிள்ளைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குருவருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொய்வு இழந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அல்லல் கொடுத்து வந்த உறவினர்கள் விலகுவார்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், உழைப்பிற்கேற்ற பலனும் கிடைக்கும். நாடு மாற்றங்களாலும், வீடு மாற்றங்களாலும் நன்மை உண்டாகும்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடன் பிறப்புகளை நம்பிச்செய்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண நெருக்கடி அதிகரிக்கும். பதவி உயர்விலும், உத்தியோக உயர்விலும் குறிக்கீடு சக்திகள் வந்து சேராமல் இருக்க, முறையாக சர்ப்ப சாந்திகளை முன்னதாகவே செய்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். இந்த காலகட்டத்தில் உடன்பிறப்புகளிடையே ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். கடன் சுமை குறையும். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். கடக ராகு இடர்பாடு நீக்கி, இனிய வாழ்வை தருவார். அதே நேரத்தில் மகர கேது மன நிம்மதி குறைவை உண்டாக்குவார்.

தூர தேசத்தில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்பும் வாய்ப்பும், தாய்நாட்டில் இருப்பவர்கள் தூர தேசம் செல்லும் வாய்ப்பும் உருவாகும். தந்தை வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்து இடர்பாடு விலகும். ராகு-கேது வழிபாடு நன்மை அளிக்கும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் வந்து சேரும். தொட்டது துலங்கும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். கெட்டவர்கள் சகவாசம் தானாகவே விலகும். கிளர்ச்சியூட்டி வந்த எதிரிகள் மனம் மாறுவார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாசல் தேடி வந்து திரும்பிச் சென்ற வரன்களே, மீண்டும் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மித மிஞ்சிய பொருளாதாரம் வந்து சேரும். வேலைப்பளு கூடினாலும் விரும்பும் விதத்தில் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற காலங்களில் விஸ்வரூப ஆஞ்சநேயர் வழிபாட்டை நீங்கள் மேற்கொண்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிக்கிழமை தோறும், சனி பகவான் சன்னிதியில் ஜோடி தீபம் ஏற்றுங்கள். சனிகவசம் பாடுங்கள். வாழ்க்கை வளமாகும். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் கண்டவராயன் பட்டி அருகில் நல்லிப்பட்டியில் உள்ள நல்லாண்டவர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஒற்றைச் சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 11:58 am

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Gemini
சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, (75/100)
புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

பதவி உயர்வோடு பாராட்டும் வரும் நேரம்!

சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு இமயம்போல் உயர்ந்த மிதுன ராசி நேயர்களே!

அனுபவத்தின் மூலமாக அனைத்தையும் அறிந்து கொண்டு செயல்படும் உங்களுக்கு, ஆறாம் இடத்துச் சனியின் ஆதிக்கம் வந்து விட்டது. இதுவரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், பணியில் தொய்வும், பாகப்பிரிவினையில் தடைகளையும், பழக்க வழக்கத்தில் பகையையும் கொடுத்திருக்கலாம். இனி ஆறாமிடத்து சனி ஜோரான வாழ்க்கையை வழங்கப் போகிறது!. யோசிக்காது செய்த காரியங்களில் கூட யோகங்கள் வந்து சேரும்.

தேசப்பற்று மிக்கவர்களுக்கு திடீர் என பொறுப்புகள் கூடும். நேசம் மிக்கவர்கள் நிழலாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். பூசல்கள் மறையும். பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் பெருகும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றித் தானாகவே முடிவடையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி அமையவில்லையே என்ற கவலை அகலும். வரந்தரும் தெய்வங்கள் ஏறெடுத்துப் பார்க்க வழி பிறக்கும். மறந்து போன காரியங்களைச் செய்வீர்கள். மற்ற காரியங்களையும் செய்துமுடிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மூன்றாண்டு காலங்கள் 6-ம் இடத்தில் முற்றுகையிடும் சனியால், வேண்டிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கவும், வேதனைகள் மாறவும், காக வாகனத்தானைக் கைகூப்பித் தொழ வேண்டும். வழிபாட்டின்போது எள் கலந்த சாதத்தை இல்லம் தேடி வரும் காகத்திற்கு வையுங்கள். அதன்பிறகு உணவு அருந்துங்கள். இயன்றவர்கள் அன்னதானம் செய்வதன் மூலமும் ஆற்றல் மிக்க சனியின் அருளைப் பெற இயலும்.

இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் இடமறிந்து, அதோடு இணைந்திருக்கும் கிரகத்தையும் பார்த்து, அதைப் பார்க்கும் கிரகத்தின் தன்மையையும் கண்டறிந்து அதற்கேற்ற விதத்தில் அனுகூலம் தரும் தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது மேக மழைபோல பொருளாதார நிலை உயரும். சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் சனிப்பெயர்ச்சி சமயத்தில் மேலோங்கி இருப்பதால், முறையாக சர்ப்ப சாந்திகளை அனுகூல நாளில், அதற்குரிய ஸ்தலத்தில் செய்து கொள்வது நல்லது.

ஆறாமிடத்துச் சனியால் வரும் மாற்றம்!

சனி பகவான், மந்த கதியில் இயங்குவதால் அவரை மந்தன் என்றும் சொல்கின்றோம். அவர் மறைவிடத்தில் சஞ்சரிக்கும் நேரம் நிறைவான பலனை வழங்குவார். அதுமட்டுமல்ல அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் கடக ராசிக்கு சென்று சனியைப் பார்க்கப் போகிறார்.

உச்ச குருவின் பார்வை பதிந்து செயல்பட போகும் சனி, அச்சமில்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். மிச்சம் வைக்கும் அளவு பொருளாதார நிலை உயரும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள். கன்னியர்களால் ஏற்பட்ட கவலை அகலும். புண்ணிய காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.

உத்தியோகத்திற்காக செய்த முயற்சி கைகூடும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். சக ஊழியர்களுக்கு மத்தியில் உங்கள் புகழ் உயரும். தானாகவே உத்தியோக உயர்வு வந்து சேரும்.

என்ன இருந்தாலும் ரோக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சிறு ஆரோக்கியத் தொல்லைகள், சினம் கொள்வதன் மூலம் மனக்கவலை போன்றவை உருவாகும்.

மண், மனைகளை கட்டி விற்பனை செய்வோர் மகத்தான பலன் காண்பார்கள். எல்லா நண்பர்களும் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். முடியாத காரியங்களை முடித்துக் கொடுக்கும் வல்லமை உங்களுக்கு இருந்தாலும், அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முடியாமல் சில சமயம் திணறுவீர்கள். விரயங்கள் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று சிந்திப்பீர்கள்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 3, 8, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே முன்னேற்றத்தின் முதற்படிக்கு செல்ல பல வாய்ப்புகள் கைகூடி வரும். உடன் பிறப்புகள் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சிலருக்கு அரசு பணிகள் கிடைக்கலாம். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

அதே நேரத்தில் அஷ்டமாதிபதி, அஷ்டம ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து வளர்ச்சிக்கு வித்திடுவர். மூடிக்கிடந்த தொழில்களுக்கு, திறப்பு விழா நடத்தும் சூழ்நிலை உருவாகும். சரும நோய்கள் குணமாகி சந்தோஷப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டபுதிய வழி பிறக்கும்.

சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் பதிவதால் திடீர் பயணங்கள் உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். அந்நிய தேச வாய்ப்புகள் அலைமோதும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாய் மாறும். வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உருவாகும். குழந்தைகளின் படிப்புக்காக ஒரு பெரும் தொகையைச் செலவிடப் போகிறீர்கள்.

யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு இணையும் நாளில், பாக்கியாதிபதி பலம்பெற்றிருக்கும் நேரத்தில், நீங்கள் செய்யும் சிறப்பு வழிபாடு செல்வ நிலையை உயர்த்தும். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் இதே மிதுன ராசியில் இருந்தால், முன்னேற்றப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கப் பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்.

அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்பும் சூழ்நிலையும், தாய்நாட்டில் இருப்பவர்கள் அந்நிய தேசம் செல்லும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவாகலாம். பொதுவாக இந்த சனிப்பொய்ச்சி உங்களுக்கு புதிய திருப்பங்களை உருவாக்கப் போகிறது.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வீடுமாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். வருகிற தொகையை சொத்துக்களாக மாற்றுவர். வாழ்க்கைத் துணைவழியே வந்த பிரச்சினைகள் அகலும். பூர்வீக சொத்துத் தகராறு நல்ல முடிவிற்கு வரும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே மறைமுகப் பகை மாறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணி ஓய்வு பெற்ற பின் தனித் தொழில் செய்ய முற்படுவர்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். பகை பாராட்டியவர்கள் பாசத்தோடு பழகுவர். நாடு மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தொழிலில் மித மிஞ்சிய லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, முக்கிய முடிவெடுக்கப் போகிறீர்கள். சிக்கல்களில் இருந்து விலகி செல்வ நிலை உயரப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். மாற்று இனத்தவர்கள் உங்களுக்கு கைகொடுத்து உதவுவர்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது ’ராஜயோக வாழ்க்கை- அமையும். ஆசைகள் பூர்த்தியாக அடுத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆபரண சேர்க்கையும், வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பும் உருவாகும். தனித்து இயங்க முற்படுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்க சர்ப்ப சாந்திகளை செய்வது நல்லது.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது. மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் நேரத்தில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோக மாற்றங்கள் வந்து சேரும். சக பணியாளர்களே உங்கள் வேலைக்கு குந்தகம் விளைவிக்கலாம். மறைமுக எதிர்ப்பு மேலோங்கும். மக்கள் செல்வங்களால் பெறும் விரயங்கள் உருவாகலாம். சுய ஜாதகத்தில் தெசாபுத்திக்கேற்ப தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சிவாலயத்தில் உள்ள சனி பகவானுக்கு நீல வண்ணத்தில் வஸ்திரம் அணிவித்து எள் அன்னம் நைவேத்தியம் வழங்கி ’கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும் ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனியே!- என்ற சனிகவசத்தைப் பாடுங்கள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பெருமாள், லட்சுமி, அனுமன் ஆகிய தெய்வங்களை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள வேகுப்பட்டியில் வீற்றிருந்து அருள்வழங்கும் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். இந்த ஆஞ்சநேயர் சூடாமணி வாலில் கட்டியபடி 27அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஞ்சனை பெற்ற மகன், உங்கள் நெஞ்சினில் இருக்கும் குறைகளை நீக்கி நிம்மதி கொடுப்பார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 11:59 am

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Cancerசனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை. (70/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்:

ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நேரம்!

விடா முயற்சியால் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் கடக ராசி அன்பர்களே!

பொன்னுக்கும், பொருளுக் கும் ஆசைப்படுபவர்களுக்கு மத்தியில் புகழுக்காக ஆசைப்படும் உங்களுக்கு, இதுவரை நான்காமிடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது ஐந்தாமிடத்தில் அடியெடுத்து வைக்கிறார். அர்த்தாஷ்டமச் சனி விலகி விட்டதால் இனி அத்தனை காரியங்களிலும் வெற்றி வாகை சூடப் போகிறீர்கள். ஒத்துவராத உடன்பிறப்புகள் முதல் உற்றார் உறவினர்கள் வரை அத்தனை பேரும் உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கப் போகிறார்கள்.

சோதனைகளை வென்று சாதனை படைக்கும் நேரமிது. மார்கழி 1-ந் தேதி முதல் சீரும், சிறப்பும், செல்வாக்கும் உயரப் போகிறது. செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்த வரை களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானம் எனப்படும் இரண்டு இடங்களுக்கும் அதிபதியான சனி பஞ்சம ஸ்தானத்தில் குடிகொண்டுள்ளார்.

புத்திர ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.

தொடர்ந்து மூன்றாண்டு காலம் பஞ்சம ஸ்தானத்தை முற்றுகையிடும் சனியால், இதுவரை தீர்வு காண முடியாத காரியங்களில் கூட நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புது முயற்சிகளுக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த கையிருப்பை சரிக்கட்டும் விதத்திலும், இழந்த மதிப்பை மீண்டும் பெறும் விதத்திலும், இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக விளங்கப் போகிறது.

விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் சனி விருத்தியம்சங்கள் கொடுப்பார் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக உங்களைப் பொறுத்தவரை பஞ்சம ஸ்தானம் என்பதால் மிஞ்சும் பலனை வழங்குவார். வாழ்க்கைத் துணை வழியில் நன்மைகள் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும்.

பஞ்சம ஸ்தானத்தில் சனி!
பணவரவுதான் இனி!

சனிபகவான், இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து நாளும் ஒரு பிரச்சினையைக் கொடுத்திருப்பார். நிம்மதி என்ற நான்கெழுத்து உங்கள் அகராதியை விட்டே அகன்றிருக்கலாம். மார்கழி ஒன்றாம் தேதி முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, உங்கள் சஞ்சலங்களை தீர்க்கப்போகிறது. சந்தோஷங்களைச் சேர்க்கப்போகிறது. வீண் விவகாரங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு இனி விமோசனம் கிடைக்கும். ஊர் மாற்றச் சிந்தனைகளை ஒத்தி வைப்பது நல்லது. இதுவரை ஒவ்வொரு காரியங்களையும் போராடி, போராடி முடித்திருப்பீர்கள். இனி அதிக பிரயாசை எடுக்காமலேயே எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பெற்றோர் வழியில் ஆதரவு பெருகும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். Ôகற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையேÕ என்று கவலைப்பட்ட உங்களுக்கு, அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதிகாரத்துவ யோகமும் வந்து சேரும். வரவு செலவுகளில் திருப்தி ஏற்படும். பொருளாதாரத்தில் மிதமிஞ்சிய நிலை காணப்படும். பதைபதைப்புகள் மாறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். என்றைக்கோ நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று ஆதாயம் பார்க்க இயலும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடும் பொழுது, சுய ஜாதகத்தில் பூமிகாரகன் செவ்வாய் குடும்ப உறுப்பினர்களில் யாருடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் பெயரில் கட்டத் தொடங்குவது நல்லது.

என்ன இருந்தாலும் சனி, ஆயுள்காரகன் என்று வர்ணிக்கப்படுவதால் பிள்ளைகளின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. பார்க்கும் சனி யோகத்தை வழங்க வேண்டுமானாலும், பணவரவு திருப்தி அளிக்க வேண்டுமானாலும் சனிக்கிழமை தோறும் சனிபகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. சனிக்கவசம் பாடி வழிபடுங்கள். மேலும் ராசிநாதனாக சந்திரன் விளங்குவதால் நிலவு நிறைந்த நாளில் திருக்கோவில்கள் அடங்கிய மலைகளைச் சுற்றி வாருங்கள். கிரிவலம் வருவதன் மூலம் கீர்த்தி மேலோங்கும்.

மந்தனின் பார்வையால்
ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் 5-ல் சஞ்சரித்து அதன் பார்வையை 2, 7, 11 ஆகிய இடங்களில் செலுத்துகின்றார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. சனி தன் வீட்டைத் தானே பார்ப்பதால் அந்த வீட்டிற்கு எந்த தோஷங் களும் கிடையாது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை விளக்கும் இரண்டாம் இடத்தைச் சனி பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எந்தத் தொழில் செய்தாலும் அதில் இருமடங்கு லாபம் கிடைக்கும்.

சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால் வீட்டில் கெட்டிமேளம் கொட்டுகிற வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் இனி அதிகரிக்கும். பழைய வீட்டைப் புதுப்பித்து கட்டும் வாய்ப்பு கைகூடும்.

லாப ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய கூட்டாளிகளால் பொருளாதாரம் பெருகும். அந்நிய தேசப் பயணம் எண்ணியபடியே கைகூடும்.

யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையும் இணையும் நாளில், பாக்கியாதிபதி பலம் பெற்றிருக்கும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்துச் செய்தால் செல்வ நிலை உயரும்.

குதூகலம் தரும்
குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பொய்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப்போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். எனவே ஆரோக்கியம் ஆனந்தப்படுத்தும். பணியில் இருந்த தொய்வு நிலை அகலும். உத்தியோகம், தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. குரு வழிபாடும், குல தெய்வ வழிபாடும் மேற்கொள்வது நல்லது.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பகையான நட்பு, உறவாகும். பாராட்டு மழையில் நனைவீர்கள். பாசம் மிக்க உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். நீண்ட தூரப் பயணங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும்.

வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் கணிசமான ஆதாயத்தைப் பெறுவர். அந்நிய தேசத்தில் இருந்து அழைப்பு வந்து சேரும்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபார விருத்தியுண்டு. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கடன் சுமை குறையும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எனவே அதிகாரிகளின் தொல்லையும் அருகில் இருப்பவர்களால் மனக்கசப்பும் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபாடு செய்யுங்கள்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, இக்காலத்தில் ஜென்ம ராகுவும், 7-ல் கேதுவும் இருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். எனவே கனவிலும் நனவிலும் பாம்பு வந்து கொண்டே இருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை வந்து சேரும். எனவே முறையாக உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து சர்ப்ப சாந்தி செய்வது தான் நல்லது.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..
உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது முன்னேற்றத்தில் முட்டுக்கட்டைகள் ஏற்படும். விரக்தி மேலோங்கும். விவாகப் பேச்சுக்கள் திசைமாறிச் செல்லும். பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவார்களா? என்பது சந்தேகம்தான். பூர்வீக சொத்துக்களில் இழுபறி நிலை நீடிக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு எதிரிகளாக மாறலாம். தொழிலில் கூட்டாளிகளை நம்பிச் செய்த செயல்பாடுகளில் ஆதாயம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது. இறைவழிபாட்டில் முழுமையாக கவனம் செலுத்தினால் தான் வக்ர காலத்தை பொற்காலமாக மாற்ற இயலும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று, அருகம்புல் மாலை சூட்டி, ஆனைமுகப் பெருமானை வழிபடுங்கள். மேலும் சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி மனமுருக வேண்டுங்கள். மந்தன் அருளால் மகத்துவம் காண்பீர்கள். சிறப்பு வழிபாடாக யோக பலம் பெற்ற நாளில், சேலம் அருகில் உள்ள நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி, அர்ச்சனைகள் செய்து வழிபட்டு வாருங்கள். வெற்றிகள் குவியும். இத்தலத்திற்கு அருகில் உள்ள நாமகிரி தாயாரையும் இரணிய சம்ஹார மூர்த்தியையும் வழிபட்டால் சேமிப்பு உயரும். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:00 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Leo


சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை (40/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும்!

எவர் தடுத்தாலும் எடுத்த காரியத்தை முடிப்பதில் குறிக்கோளாக இருக்கும் சிம்ம ராசி நேயர்களே!

வரலாற்றுப் பொன்னேட்டில் இடம் பெறும் விதத்தில் வாழ்க்கை நடத்த விரும்பும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் வந்து விட்டது. இதுவரை 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது 4-ம் இடத்தில் சஞ்சரித்து எண்ணற்ற மாற்றங்களை வழங்கப் போகிறார். வரும் மாற்றங்கள் வளம் சேர்க்கும் மாற்றங்களாக அமைய வழிபாடுகள் தான் முக்கியத் தேவை. காரணம் அஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு வலிமை கொண்ட அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடைபெறப் போகிறது.

என்ன வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அஞ்சாது நெஞ்சம் படைத்த உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி வரும்பொழுது கொஞ்சம் மன நிம்மதி குறையத்தான் செய்யும்.

அதன்பிறகு சனிப்பெயர்ச்சியாகி சரி பாதி காலம் முடிவடையும் நிலை உருவாகிறது. Ôபிருகுசனி பாம்பிரண்டும் பிற்பாதி நற்பலனே!Õ என்ற வரிகளுக்கு ஏற்ப வளர்ச்சியில் சிறுசிறு தடைகளை கொடுக்குமே தவிர முன்னேற்றத்தில் எந்த முட்டுக் கட்டையும் ஏற்படுத்தாது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான்.

வியாதிகள் ஸ்தானாதிபதி சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அடிக்கடி உடல்நிலைத் தொல்லைகள் வந்துகொண்டேயிருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தினால் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் சனி, விருத்தி அம்சத்தை கொடுப்பவர். ஆயுள் காரகன் என்பதால் ஆயுளை விருத்தி செய்வதில் வல்லவர். அதே நேரத்தில் எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் மூன்று இடத்திற்கும் ஆதிபத்யம் கொண்ட சனியால் பிரச்சினைகள் வராமல் இருக்க, உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகம், அதோடு சேர்ந்த கிரகம், நவாம்ச நிலை அனைத்தையும் அறிந்து யோகபலம் பெற்றிருக்கும் நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து முறையான பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் தான் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

அதுமட்டுமல்லாமல் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சனிப்பெயர்ச்சி சமயத்தில் சஞ்சரிக்கிறார்கள். சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் வலிமையாக இருப்பதால் சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் அமைகிறது. எனவே ஏற்றமும், இறக்கமும் வந்துகொண்டேயிருக்கும்.

எனவே உங்களுக்கு அனுகூலம் பெற வைக்கும் நாள், நேரம் பார்த்து, முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங் களைச் செய்தால் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்லலாம்.

சுபிட்சத்தை வழங்குமா
சுக ஸ்தான சனி!

சனி பகவான், இதுவரை உங்களுக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரித்து பல தடைகளைக் கொடுத்திருப்பார். என்ன இருந்தாலும் வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனி உங்களுக்கு வெற்றியையும், கொடுத்திருப்பார். கடைசி நேரத்தில் வேதனைகளையும் தந்திருப்பார். இனி நீங்கள் எடுத்த முயற்சிகளை வெற்றி பெற வைக்கப் போகின்றது இந்த சனிப்பெயர்ச்சி.

சனி சுக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், பெயர்ச்சியான சில நாட்களிலேயே குரு வக்ர கதியில் கடக ராசிக்கு சென்று உச்சம் பெற்ற நிலையில் அந்தச் சனியைப் பார்க்கப்போகிறார். சுகங்களையும், சந்தோஷங்களையும் வழங்கும் இடத்தை உச்ச குரு பார்க்கும் பொழுது, நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஆச்சரியப்படும் விதத்தில் நிலை உயரப் போகின்றது. குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். கொடுக்கல்-வாங்கல் ஒழுங் காகும். படிப்படியாக முன்னேற்றங்கள் வந்து பரவசப்படுத்தப் போகின்றது.
மார்கழி ஒன்றாம் தேதி முதல், உங்கள் மனதில் இடம் பெற்ற இனம்புரியாத கவலை அகலும். கட்டிடம் அல்லது மனை வாங்கும் முயற்சியில் இருந்த தடை விலகும்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து அதன் பார்வை உங்கள் ராசியிலும், 6, 10 ஆகிய இடங்களிலும் செலுத்துகிறார். எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன.

எதிரிகள் ஸ்தானத்தை எதிரிகள் ஸ்தானாதிபதி பார்ப்பது யோகம் தான். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏராளமாக இருக்கும். வெளியில் அப்படி, இப்படி என்று பேசுபவர்களெல்லாம் உங்களைப் பார்த்தால் சரணடைந்து விடுவார்கள். இதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம். சமயம் வரும்போது சாதனை நிகழ்த்துவீர்கள்.

சனி பார்வை சாதாரண பார்வை அல்ல, கடுமையான பார்வைதான். ஆனால் இந்த முறை சனிப்பெயர்ச்சியாகின்ற பொழுது குரு பார்த்த சனியாக விளங்குகிறது. எனவே குருபார்வை பலத்தால் உடல் நலம் ஒத்துழைக்கும். உள்ளத்தில் உள்ள மனக்கசப்பு மாறும்.

சிலர் விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் செய்ய முன்வருவர். அப்படி தொழில் தொடங்க நினைப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களில் தொழில் ஸ்தானம் யாருக்கு வலுவாக இருக்கிறதோ, அவர்கள் பெயரில் தொடங்குவதே நல்லது. பெரிய அளவில் தொழில் நிலையம் நடத்துபவர்கள் பழையபங்குதாரர்களை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவர்.

யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு இணையும் நாளில், சிறப்பு வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்தால் பரபரப்பான சூழ்நிலை மாறும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயரும். தக்க விதத்தில் முன்னேற்றமும் வந்து சேரும்.

குதூகலம் தரும்
குருப்பெயர்ச்சி காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆர்வத்தோடு செய்யும் பணிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனுகூலமாக இருக்கும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 6, 8, 9 ஆகிய இடங்களில் பதிவதால் உடல் ஆரோக்கியம் சீராகும். கடன்சுமை குறைந்து கவலைகள் தீரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்தவர்களுக்கு உங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே பிரிந்த தம்பதியர் வந்திணையும் வாய்ப்பு உருவாகும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஈடு இணையற்ற வாழ்க்கை கைவரப்பெறுவீர்கள். அந்நிய தேசப் பயணம் எண்ணிய படி கைகூடும். புகழ்கூடும். பொருளாதார நிலை உயரும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அப்பொழுது சர்ப்பதோஷம் உங்களை அதிகமாகவே ஆட்கொள்ளும். பொதுவாக அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமாக இருந்தாலும் சரி, ஜென்ம ராகுவின், சப்தம கேதுவின் ஆதிக்கமாக இருந்தாலும் சரி.. இடமாற்றம், வீடுமாற்றம் செய்வதன் மூலம் இன்னல்களில் இருந்தும், பாதிப்புகளில் இருந்தும் விடுபட இயலும். எனவே வீடுமாற்றங்கள், இடமாற்றங்கள் வெற்றிக்குரிய விதத்தில் அமையும். அதற்கு முன்னதாக சர்ப்ப சாந்தி பரிகாரங்களை நீங்கள் தகுந்த நாள் பார்த்து செய்ய வேண்டும்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 6-ல் கேது சஞ்சரிக்கும் பொழுது எதிரிகள் விலகவும், எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் வார வழிபாடாக மேற்குப் பார்த்த துர்க்கையை வழிபடுவது நல்லது. மேலும் சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகில் உள்ள இரணிய சம்ஹாரத்திற்கு வித்திட்ட ஊரான இரணியூரில் உள்ள ஆட்கொண்டநாதர் சிவபுரந் தேவியையும், அருகில் உள்ள நித்தியமும் வரம் தரும் இளையாற்றங்குடி நித்யகல்யாணி அம்மன், கைலாச நாதரையும் வழிபட்டுவந்தால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாய்தாக்கள் ஓயும். கலக்கம் அகன்று கனிவான வாழ்க்கை அமையும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என்று ஆச்சரியப்படுவீர்கள். வெளிநாட்டு முயற்சி கைகூடும். தொழில்வளம் சிறப்பாக இருக்கும். சோதனைகளை வென்று சாதனை படைப்பீர்கள்.

தொட்ட காரியங்களில்
வெற்றி பெற வழிபாடு!

சிவாலயத்திற்கு சென்று அருகம்புல் மாலை சூட்டி ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். அதன்பிறகு சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றுங்கள். சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பிள்ளையார் பட்டி வாருங்கள். அங்குள்ள கனவுகளை நனவாக்கும் கற்பக விநாயகரை வழிபட்டு வாடாமலர் மங்கை சமேத மருதீஸ்வரரை வழிபட்டு அமர்ந்த நிலையில் இருக்கும் நவக்கிரகங்களையும் வழிபட்டு வாருங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:00 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Virgoசனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை (65/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

பொன்னான வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் உருவாகும்!

பார்த்த மாத்திரத்தில் எடை போடுவதில் பலே கெட்டிக்காரர்களான கன்னி ராசி அன்பர்களே!

புதனின் ஆதிக்கத்தால் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் உங்களுக்கு ஏழரைச் சனி இப்போது முடிவடைகிறது. இனி உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். சோதனைகளுக்கு மத்தியில் துவண்டு போய் இருந்த உங்களுக்கு, வேதனை அகன்று வியக்கும் வாழ்க்கை அமையப் போகிறது.

அதே நேரத்தில் விலகும் சனியை விரும்பி வணங்கினால், உலகில் பலரும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கை அமையும். அதற்கேற்ற ஸ்தலம் திருநள்ளாறு. அங்குள்ள காக வாகனத்தானை கைகூப்பித் தொழுது வாருங் கள். அன்னதானம், சொர்ணதானம், வஸ்திர தானங்களில், இயன்றவரை ஏதேனும் ஒன்றை செய்து வருவது நல்லது. சனியின் சன்னிதியில் சனி கவசம் பாடுங்கள். எதிர்மறை சொற்கள் இல்லாத பாடல்களை பாடுவதே இனிய வாழ்விற்கு வித்திடும்.

அனைவருக்கும் நிறைவைத் தருவது அன்னதானம். எனவே சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள், அன்னதானம் வழங்குவது நல்லது.

முயற்சிக்கு வித்திடும் மூன்றாம் இடத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால், எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். இயல்பான வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்ட தடைகள் அகலும். ஸ்தம்பித்து நின்ற தொழில் விறுவிறுப்பாக நடைபெறும். தன்னைவிட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும். எதிர்கால வாழ்க்கைக்காக தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள சனி ஆயத்தம் செய்யப்போகின்றது.

மூன்றாண்டு காலங்கள் சனி முற்கையிடப் போகும். இந்த மூன்றாம் இடத்து ஆதிக்கத்தால் உங்கள் முன்னேற்றம் கண்ணேறுபடும் விதத்தில் அமையப்போகிறது. வேறூன்றி இருந்த விரக்தி மனப்பான்மை அகலும். சாட்சி கையெழுத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

உங்கள் சுயஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் இடம், அதோடு இணைந்து இருக்கும் கிரகம், அதனைப் பார்க்கும் கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து, நீங்கள் தேர்தெடுத்துச் செய்யும் தெய்வ வழிபாடுதான் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப்போகிறது. எனவே உரிய பரிகாரங்களைத் தேர்ந்தெடுத்து செய்து உள்ளம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

ஏழரைச் சனி விலகியது!
இனிமேல் வெற்றி தொடங்கியது!

மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். அவர் இதுவரை இரண்டாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாக்கு, தனம், குடும்பம் ஆகிய ஆதிபத்யங்கள் எல்லாம் வலுப்பெறுகின்றது. எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம். குடும்ப ஒற்றுமை பாதிக்கப்பட்டிருக்கலாம். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு உருவாகியிருக்கலாம்.

குடும்பச்சுமை கூடி குதூகலத்தை மறக்கடிக்க வைத்த சனி, இப்பொழுது மூன்றில் அடியெடுத்து வைத்து வாழ்வில் ஏற்பட்ட விரிசல்கள் எல்லாம் ஓட வைக்கப் போகிறது.

மார்கழி 1-ந் தேதி முதல் உடன்பிறப்புகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, கூடப்பிறந்தவர்களின் பாசமழையில் உங்களை நனைய வைக்கப் போகிறது. கருத்து வேறுபாடுகளை மறந்து சகோதரர்கள் உங்களோடு வந்திணைவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழக்க வழக்கங்களில் பலவித மாறுதல்கள் ஏற்படும். வழக்கமாகச் செய்யும் தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். வசதி வாய்ப்புகள் பெருகும். வீண் விரோதங்களை விலக்கிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உன்னத நிலை அடைவார்கள். ஊர் மாற்றங் களும், இடமாற்றங்களும், வீடு மாற்றங்களும் ஒவ்வொன்றாக வந்து அமையும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பதவி உயர்வு போன்றவைகளை பெற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். கடன் வாங்கிக் காலம் கழித்தவர்கள் கூட இப்பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இதுவரை இருந்த தடைகள் அகன்று, படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எதிலும் வெற்றியைப் பெற விஷ்ணுவையும், லட்சுமியையும், அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது. கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில் மற்றும் காரைக்குடி அருகில் உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் - அலர்மேலுமங்கையை வழிபட்டு வருவது நல்லது.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து அதன் பார்வையை 5, 9, 12 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதம் அடைகின்றது. ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும் என்பார்கள். அதிலும் தன்வீட்டைத் தானே பார்க்கும் சனியால், பிள்ளைகள் ஸ்தானம் வலுவடைகிறது. எனவே குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதன் கல்வி வளர்ச்சிக்காகவும், கடல்தாண்டும் முயற்சிக்காகவும் நீங்கள் செய்த ஏற்பாடுகள் வெற்றி தரும்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழியில் நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். ஒரு சிலர் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் அடிக்கடி பயணங்கள் உருவாகும். காலையில் காஷ்மீர், மதியத்தில் மலேசியா, இரவு இந்தியா என்று பார்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையும் அமையும். பக்கத்து ஊருக்கு சென்று பலரின் வேலையை ஒப்புக் கொண்டு செய்யும் வாய்ப்பும் கிட்டும். மொத்தத்தில் பார்க்கும் சனி யோகத்தை வாரி வழங்க உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு யோக நட்சத்திரம் சேரும் நாளில் சிறப்பு வழிபாடுகளை தேர்ந்தெடுத்து செய்தால் வரமும் கிடைக்கும். வளமும் கிடைக்கும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். தடம் மாறிச் சென்ற உறவினர்கள் தானாக வந்திணைவர். குடும்பச் சுமை குறையும். கல்விக்காக எடுத்த முயற்சி கை கூடும். இல்லத்தில் சுபகாரியங்கள் இனிதே நடைபெற வழிபிறக்கும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

முயற்சிக்கும் காரியங்களுக்கும் மூலதனத்தை மூத்த சகோதரர் வந்து கொடுக்கலாம். தளர்ச்சி அகலும். தம்பதியர்களுக்கு குழந்தைப்பேறு இல்லையே என்ற கவலை அகலும். தகுந்த பரிகாரங்களை இக்காலத்தில் செய்தால் பிள்ளைச் செல்வம் துள்ளி விளையாடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை பூர்த்தியாகும். நோய், நொடிகள் குணமாகும். புதிய உத்தியோகத்திற்காக விண் ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். பழைய வீட்டைப் புதுப்பித்து கட்டும் எண்ணம் மேலோங்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கூடுதலாக இருக்கும். சிலரின் குறுக்கீட்டால் தொல்லைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உபத்திரவங்கள் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் ஒரு பொன்னான காலமாகும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். கருத்து வேறுபாடுகள் அகலும். கடல்தாண்டி சென்று வியாபாரம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும்பொழுது நன்மைகளையே உங்களுக்கு வழங்குவார். காரணம் 6-க்கு அதிபதியான சனிபகவான் வக்ரம் பெறும்பொழுது, ’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கிணங்க எதிர்ப்புகள் அகலும். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனிக்கிழமை தோறும் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பெருமாளையும், லட்சுமியையும், அனுமனையும் வழிபட்டு வாருங்கள். விஷ்ணுவின் சன்னிதியில் துதி பாடல்களை பாடுங்கள், பணத்தேவைகள் பூர்த்தியாகும். சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் வீற்றிருந்து அருள் வழங்கும் மார்த்தாண்ட வைரவர் வளரொளி நாதர், வடிவுடையம்மனை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:01 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Libra


சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை (60/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

ஜென்ம சனி விலகியதால், செயல்பாட்டில் வெற்றி கிட்டும்!

சந்தோஷங்களையே நாளும் சந்திக்க வேண்டும் என்று விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

சுக்ர பலத்தால் சுகபோகங்களை அதிகம் அனுபவிக்கும் உங்களுக்கு, இதுவரை ஜென்மத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இப்பொழுது விலகி உங்கள் ராசிக்கு 2-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறது. ஏழரைச் சனியில் முதல் இரண்டரை ஆண்டும் அடுத்த இரண்டரை ஆண்டும் முடிந்து விட்டது இப்பொழுது மூன்றாவது இரண்டரை ஆண்டு ஆரம்பமாகப் போகிறது. எப்பொழுதுமே சனி விலகும் பொழுது நன்மையை செய்யும் என்பது நம்பிக்கை.

சனியின் சுற்றை மூன்று வகை சுற்றாக கணக்கிட்டுப் பார்ப்பார்கள். நான்காவது சுற்றும் பலருக்கும் நடைபெற்றிருக்கிறது. ஆயுள்காரகன் சனி நல்ல இடத்தில் பலம் பெற்றிருந்தால் ஆயுள் தீர்க்கமாகும். முதல் சுற்றைக் காட்டிலும் இரண்டாவது சுற்று யோகம் செய்யும் என்பார்கள். அதைப் பொங்கு சனி என்று வர்ணிப்பது வழக்கம். வாழ்க்கையில் பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்களுக்கு இன்பம் பொங்கும், பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்கள் சுயஜாதகத்தில் சனியின் சுற்று எத்தனையாவது சுற்று என்று ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். முதல் சுற்றா?, இரண்டாவது சுற்றா? மூன்றாவது சுற்றா? நான்காவது சுற்றா? என்பதை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

முதல் சுற்றாக இருந்தால் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். தக்க விதத்தில் பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும். இரண்டாவது சுற்றாக இருந்தால் இல்லம் தேடி இனிய பலன்கள் வந்து கொண்டேயிருக்கும். சில இடையூறுகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் காரியங்கள் முடிந்து விடும். தடைகள் ஏற்படாமலிருக்க, இரண்டாவது சுற்று நடைபெறும் பொழுது பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்வது நல்லது.

மூன்றாவது சுற்றின் போது, வழிபாட்டால் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம். இருப்பினும் முன்னேற்பாடாக திசாபுத்தியை ஆராய்ந்து பார்த்து, அதற்குரிய விதத்தில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் வளர்ச்சியில் எந்த தளர்ச்சியும் ஏற்படாது. வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

உங்கள் சுயஜாதகத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, நவாம்சத்திலும் அது இருக்கும் இடமறிந்து அதோடு இணைந்திருக்கும் கிரகத்தின் பலமும் அறிந்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாடுகளால் தான் வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற முடியும். தன ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக வந்து சேரும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பப் போகிறது.

இரண்டாமிடத்தில் சனி!
லாபம் குவியும் இனி!

சனிபகவான் இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்தார். உங்களுக்கு ஜென்மத்தில் சஞ்சரித்து சிக்கல்களையும், சிரமங்களையும் கொடுத்து வந்த சனி பகவான், இப்பொழுது விலகி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக எண்ணற்ற நற்பலன்கள் உங்களுக்கு வந்து சேரப் போகின்றது.

மார்கழி ஒன்றாம் தேதி முதல் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, பண மழையில் நனைய வைக்கப் போகின்றார். குரு பார்த்த சனியாக இருப்பதால் வாக்கு, தனம், குடும்பம் என்று சொல்லக்கூடிய இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், சிந்தனையில் வெற்றியும், செயல்பாடுகளில் நன்மையும், வந்த வாய்ப்புகளால் வரவும் கொடுக்கப் போகின்றது.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். வருமானம் பெருக வழி என்ன என்று ஆலோசித்து முடிவெடுப்பீர்கள்.

'இரண்டில் சனி வந்தால் திரண்ட நிதிவரும்' என்று சொல்லுவார்கள். எனவே இனிபண நெருக்கடி என்பது ஏற்படாது. ஏழரைச் சனி உங்களுக்கு இன்னும் முடியவில்லை. எனவே இரண்டாமிடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது நேத்திர ஸ்தானத்திற்குச் சிறுசிறு தொல்லைகளை கொடுக்கலாம். மனக்கவலை மாற, அடுத்தவர்களை அனுசரித்துச் செல்லுவது அவசியம்.

தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் உங்களது எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி சென்ற முறை ஏற்பட்ட சனிப்பெயர்ச்சியைக் காட்டிலும் சிறந்த பலன்களையே கொடுக்கும்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் 2-ம் இடத்தில் சஞ்சரித்து, அதன் பார்வையை 4, 8, 11 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். எனவே, அந்த இடங்கள் புனிதமடைகின்றன. சனி நிற்கும் இடம் தன ஸ்தானம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதன் பார்வை சுக ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதியப்போகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரனுக்கு, சனி நட்பு கிரகம் என்பதால் சுகத்தையும், லாபத்தையும் வாரி வழங்க முன்வருவார். முத்தான காரியங்களை செய்து புகழ்பெறுவீர்கள். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் உங்கள் செயல்பாடு இருக்கும்.

தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். இருப்பினும் சனி பார்வை சுக ஸ்தானத்தில் பதியும் பொழுது, அலைச்சல் காரணமாக கொஞ்சம் உடல்நலக் கோளாறு ஏற்படலாம். சுய ஜாதகம் வலிமையாக இருந்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.

அப்போதைக்கப்போது சிறப்பு பரிகாரங்களை செய்து கொண்டால் சிந்தை மயங்காமலிருக்கலாம்.

எட்டாமிடத்தைச் சனி பார்ப்பதால் சேமிப்பு கரைவதை தவிர்க்க முடியாது. விரயங்களை, சுப விரயங்களாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.

சனியின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். சனி தொடர்ந்து யோகம் செய்ய, சனிக்கிழமை தோறும் சனி பகவான் சன்னிதியில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். யோகத்தை வாரி வழங்க உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு அனுகூலமான நட்சத்திரமும் சேரும் நாளில் சிறப்பு வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்தால் வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடங் கள் எல்லாம் புனிதமடைகின்றன. எனவே சகோதர ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளுக்குரிய கடமைகளை முறையாகச் செய்து முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே தாயின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி வெற்றிகரமாக முடியும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். கடன் பிரச்சினைகள் அளவோடு நிற்கும். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் நற்பலன் கிடைக்கும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த பணம் வசூலாகும். விரோதங்கள் விலகும். வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். பிள்ளைகளின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். இதுபோன்ற காலங்களில் திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது மேலும் நன்மைகளைக் கொடுக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, தொழிலில் மாற்றம் செய்யும் சிந்தனைகள் மேலோங்கும். தொழிலில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வரவும், செலவும் சமமாகிப் போகும். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சர்ப்ப தோஷம் விலக, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும். திட்டமிடும் காரியங்களில் விவேகமும் கூடியிருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும். பொருளாதார நிலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும். 4-ல் கேது இருப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. இல்லையேல் ஆரோக்கியத் தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் உருவாகலாம். பெற்றோர்களின் தேவை களைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும்பொழுது, மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் முன்னெச்சரிக்கை தேவை. வாகனங்களால் விரயம் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. மனக்குழப்பங்கள் அதிகரித்து, எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்க முடியாது. இக்காலத்தில் முழுமையாக சனி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் தடைகளை அகற்றிக் கொள்ளலாம்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

உங்கள் இல்லங்களின் அருகில் இருக்கும், சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள சனி பகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி, சனி பகவான் துதியைப் பாடி வழிபடுங் கள். சிறப்பு வழிபாடாக தேனி அருகிலுள்ள குச்சனூர் சனி பகவான் ஆலயம் சென்று முறையாக வழிபாடு செய்யுங்கள், நிறைவான பலனைக் காணுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:02 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Scorpio


சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை (70/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

உங்கள் ராசியில் உலாவரும் சனி.. மங்கல நிகழ்ச்சிதான் மனையில் இனி!

சொல்லும் சொற்களை வெல்லும் சொற்களாக மாற்றிக் காட்டும் விருச்சிக ராசி அன்பர்களே!

விரைவில் வி.ஐ.பி.க்களின் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று விரும்பும் உங்களுக்கு, விரயச் சனியின் ஆதிக்கம் முடிவடைந்து, ஜென்மச் சனியின் ஆதிக்கம் தொடங்குகிறது. விரயச் சனி விலகி விட்டதாலேயே, விடிவுகாலம் தொடங்கிவிட்டது என்று நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.

சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றியைக் கொடுக்கப் போகின்றார். வெற்றிகள் ஸ்தானாதிபதி வீடு தேடிவரும் பொழுது, வரும் மூன்றாண்டு காலமும் நீங்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.

அதுமட்டுமல்ல, சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே, கடகத்தில் உச்சம் பெற்ற குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியிலும், ராசியில் உலாவரும் சனியின் மீதும் பதியப் போகிறது. எனவே, பொருளாதார முன்னேற்றமும், புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். விரயச் சனி காலத்தில் இதுவரை ஏற்பட்ட விரயங்களை ஈடுகட்டும் விதத்தில் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். அடுத்தடுத்து ஆச்சரியப் படத்தக்க விதத்தில் நற்பலன்கள் நடைபெறப் போவது கண்டு நீங்களே வியப்படையப் போகிறீர்கள். காரணம் தன பஞ்சமாதிபதியான குருபகவான் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது தான்.

அடுத்து வரும் குருப்பெயர்ச்சியில் தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் குரு பார்க்கப் போகிறார். அதற்கடுத்த குருப்பெயர்ச்சியிலும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கப் போகிறார். எனவே, சனி விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் மூன்றாண்டு காலமும் மூன்று முறை பெயர்ச்சியாகும் குருவின் பார்வை பலமும், இருக்கும் இடத்தின் பலமும் உங்களுக்கு யோகத்தை வாரி வழங்கும் விதத்திலேயே இருக்கிறது.

மார்கழி 1-ந் தேதி முதல் அஷ்டலட்சுமியின் அருள் பார்வை உங்கள் மீது பதியப் போகின்றது. அதற்கு வித்திடும் நிலையில் இருக்கிற கிரகங்களான குருவையும், சனியையும் கொண்டாடி மகிழ வேண்டியது அவசியமாகும். வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டையும், குருகவசப் பாராயணத்தையும் மேற்கொள்வதோடு, சனிக்கிழமை தோறும் அருகம்புல் மாலை சூட்டி ஆனைமுகப் பெருமானையும், அதன்பிறகு எள் தீபமேற்றி சனீஸ்வர பகவானையும், அடுத்து வெற்றிலை மாலை சூட்டி அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.

ஏழரைச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றும், மூன்றாவது சுற்றும் நடப்பவர்கள் முறையாக வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சுய ஜாதகத்தில் சனியிருக்கும் நிலையறிந்து, நவாம்சத்திலும் அது இருக்கும் இடம், அதோடு இணைந்த கிரகம், அதனைப் பார்க்கும் கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

இரண்டாவது சுற்று சனியின் ஆதிக்கம் நடப்பவர்கள் இன்பங்களை அதிகம் சந்திப்பார்கள். ஒருசில பிரச்சினைகள் வந்தாலும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

என்றாலும், சனி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, சிறுசிறு உடல்நிலைத் தொல்லைகள் உருவாகி விலகும். அருகில் இருப்பவர்களிடம் அன்பும், ஆதரவும் காட்டி அனுசரித்து செல்வதன் மூலம் இன்பங்களை மட்டுமே நீங்கள் இல்லம் தேடி வரவழைத்துக் கொள்ள இயலும்.

சர்ப்ப கிரகமான ராகு லாப ஸ்தானத்திலும், கேது புத்திர ஸ்தானத்திலும் இருக்கிறார். எனவே, பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோக வாய்ப்புகள் அனைத்தும் வந்து சேர உங்களுக்கு அனுகூலமான நாளில் சுய ஜாதகத்திற்கேற்ற அனுகூலமான ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. மேலும் சனி வழிபாடு செய்தால், இனிய பலன்கள் வந்து சேரும்.

இனிய பலன் தரும் ஏழரைச் சனி!

சனிபகவான், இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். அதை விரயச் சனி என்று சொல்வது வழக்கம். எனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கு சேமிக்க முடியாத அளவு செலவுகள் வந்திருக்கலாம். அவற்றிலிருந்து விடுபட்டு இப்பொழுது குருபார்க்கும் ஜென்மச் சனியாக விளங்குவதால் தான், ஏழரைச் சனி இனிய பலன்தரும் என்று கருதலாம்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சகோதர ஸ்தானம், சுக ஸ்தானம் ஆகியவற்றிற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், அவர் உங்கள் ராசிவீட்டில் உலாவரும் பொழுது வெற்றி வாய்ப்புகள் குவியும். வாழ்க்கைத் தரம் உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கிளைத் தொழில் செய்யும் முயற்சியில் ஒரு சிலர் ஆர்வம் காட்டுவார்கள். அந்நிய தேசத்தில் இருந்து அழைப்புகள் வந்து அலைமோதும்.

ஜென்மச் சனியின் ஆதிக்கத்தால் சிறப்பான பலன்கள் வந்து சேர, மாத்தூரில் உள்ள ஐநூற்றீஸ்வரர், பெரியநாயகி அம்மன், மாப்பிள்ளை நந்தி, மகிழ மரத்தடி முனீஸ்வரர் ஆகியோரை யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபட்டு வருவது நல்லது. மேலும் குன்றக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடி சிவ, ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், உங்கள் ராசியிலேயே சஞ்சரித்தபடி அதன் பார்வையை 3, 7, 10 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன.

ஜென்மச் சனியாக இருப்பதால் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. மூன்றாமிடத்தைச் சனி பார்ப்பதால் உடன் பிறப்புகளிடம் இருந்த உரசல்கள் மறையும். வழக்குகள் சாதகமாக முடியும். வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள முன்வருவீர்கள். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சப்தம ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் பணியாளர்களிடம் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டிய அவசியம். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஏற்றம்தரும் வாழ்க்கை அமையும். புதிய தொழில் தொடங்கும்போது, ஆராய்ந்து செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

குரு சிம்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். வாக்கால் வளம் காண்பீர்கள். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிரபலமானவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினைகள் அகலும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே வாகன யோகம் உண்டாகும். அரசியல்வாதிகள் அனுகூலம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். இக்காலத்தில் ராகு-கேது வழிபாடு செய்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனைத்து செயல்பாடுகளுக்கும் மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..
உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் சனிபகவான் மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. விரயங்களைச் சுபவிரயமாக்கிக் கொள்ளுங்கள். அனைவரிடமும் சுமுகமாக செல்வது நன்மை தரும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இக்காலத்தில் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் ஆனந்தத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று ஆனைமுகப் பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள். சனிபகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வைத்துச் சனி கவசம் பாடி வழிபடுங்கள். எடுக்கும் செயல்களில் எல்லாம் இனிதே வெற்றி கிடைக்கும். அன்றாட வாழ்க்கையும் நன்றாக அமையும். பவுர்ணமி தோறும் சிறப்பு வாய்ந்த மலைகளைச் சுற்றிக் கிரிவலம் வருவதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இயலும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:02 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Sagittarius


சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை (50/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

ஏழரைச் சனியின் ஆதிக்கம் எதிலும் கொஞ்சம் சோதிக்கும்!

சகலகலா வல்லவர்களாக இருந்தாலும், சாதுவைப் போல காட்சியளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

அரசியல் முதல் ஆன்மிகம் வரை அத்தனையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு, இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஏழரைச் சனி தொடங்கிவிட்டது. ஏழரை என்ற உடனேயே நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன ஸ்தானத்திற்கும், சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சனிபகவான்.

பணவரவைப் பெருக்குவதும், பாகப்பிரிவினையை சுமுகமாக மாற்றுவதும், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பை உருவாக்கிக் கொடுப்பதும், உற்சாகத்தோடு பணியாற்றி இழந்தவற்றையெல்லாம் மீண்டும் பெற வைப்பதும் இந்த ஏழரைச் சனியின் ஆதிக்கம்தான். எனவே ஏழரைச்சனி தொடங்கியவுடன் சனியை வணங்கி வந்தால், எல்லா மாற்றங்களும் நல்ல விதமாக வந்து சேரும்.

உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை சனி தனாதிபதியாக விளங்குகிறார். எனவே, பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. நிகழ்கால தேவைகள் நினைத்த மாத்திரத்தில் பூர்த்தியாகும்.

மங்கு சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படலாம். பணிகள் பாதியிலேயே நிற்கலாம். கல்வியில் கவனச் சிதறல் உண்டாக வாய்ப்புண்டு. ஏமாற்றத்தை எதிலும் சந்திக்காமல் இருக்க சஞ்சலம் தீர்க்கும் சனிபகவானை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

பொங்கு சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வார்கள்.தங்கு, தடைகள் தானாக விலகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

மூன்றாவது சுற்றில் சனியின் ஆதிக்கம் நடப்பவர்களும், நான்காவது சுற்று சனியின் ஆதிக்கம் நடப்பவர்களும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. நல்ல ஆதிபத்யத்தை பெற்றவராக இருந்தால் பொங்கு சனியின் காலம் போல பொன்னான வாய்ப்புகளை வழங்குவார். வருமானக் குறைவு இல்லை என்றாலும் வாரிசுகளால் சில தொல்லைகளைக் கொடுக்கலாம்.

வாசல் தேடி வந்து திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். ஒரு சிலருக்கு நாடு மாற்றங்களால் நன்மை கிடைக் கும். ஒரு சிலருக்கு வீடுமாற்றங்களால் விருப்பங்கள் நிறைவேறும். சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி உள்ளம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனியிருக்கும் நிலையறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் இடம், அதோடு இணைந்த கிரகம், பார்க்கும் கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து, நீங்கள் தேர்ந்தெடுத்துச் செய்யும் தெய்வ வழிபாடுகள் தான், வாழ்க்கையில் ஏற்படும் தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றும்.

தொடங்கி விட்டது ஏழரை! துணிந்து செயல்பட்டால் சாதனை!

சனிபகவான், இதுவரை உங்கள் ராசி அடிப்படையில் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்தார். எனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக பண நெருக்கடி அகன்று சேமிப்பை அதிகரிக்க செய்திருக்கும்.

ஆனால் ஏழரைச் சனி தொடங்குவதற்கு 6 மாதம் முன்னதாகவே, அமைதிக் குறைவு ஏற்பட்டு அன்றாட வாழ்க்கையில் பிரச்சினையை உருவாக்கி இருக்கும். இனி குடும்பச் சுமை கூடப் போகிறது.

கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ளாமல் செயல்பட முடியாது. வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவு இருமடங் காக உயரலாம்.
பொதுவாக சனி 12-ல் வாசம் செய்யும் பொழுது இடமாற்றம், ஊர்மாற்றம், இலாகா மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வந்து கொண்டே இருக்கும். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று சிந்திப்பீர்கள்.

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவது, பொன், பொருட்களை வாங்குவது மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

பெயர்ச்சியாகும் சனி, ஏழரைச் சனியின் தொடக்கமாக அமையப் போவதால், பெயர்ச்சியாகும் நேரத்திலேயே வளர்ச்சி ஏற்பட ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தளர்ச்சியில் இருந்து தப்பிக்க இயலும்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை தனாதிபதியாக விளங்குபவர் சனிதான். எனவே வருமானத்திற்கு குறைவிருக்காது. சனி பகவானை பூஜித்து வந்தால், ஆசைகள் அரங்கேறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

குடும்பப் பிரச்சினைகள் இனி நல்ல முடிவிற்கு வரும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். வீட்டுப் பராமரிப்புச் செலவுகளைச் செய்ய முன்வருவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு, உங்கள் யோக நட்சத்திரமும் சேரும் நாளில் சிறப்பு வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்தால், வரும் நாட்கள் வளம் சேர்க்கும் நாட்களாக அமையும்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்!

உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், 12-ம் இடத்தில் இருந்து கொண்டு 2, 6, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். கூட்டுத் தொழில் புரிவோர், உடனுக்குடன் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ஆறாம் இடத்தைச் சனி பார்ப்பதால் விபரீத ராஜயோகம் அடிப்படையில் சில மாற்றங்கள் உருவாகலாம். திட்டமிடாது செய்த காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி சொத்துக்கள் தடையின்றி வந்து சேரும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஸ்தல யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், வீடுமாற்றம் இனிதாக அமையும். தூரதேசப் பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில், அதன்பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். இரவு பகலாக பாடுபட்டதற்கு ஏற்பட்ட பலன் கிடைக்கும். பதவியில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு சுயதொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும். நோய்கள் குணமாகி மகிழ்ச்சியை வழங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உதாசீனப் படுத்திய உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி கேட்பர்.

துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சொத்து சம்பந்தமாக வழக்குகள் சாதகமாக முடியும். செய்தொழிலில் இருந்த சிக்கல்கள் விலக, அந்நிய தேசத்தில் இருந்து நண்பர் ஒருவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, ஒரு சிலருக்கு பட்டங்களும், பதவிகளும் வந்து சேரும். வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் தேடிவரும். பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தொழில் தொடங்கலாமா? என்று முயற்சிப்பீர்கள். மூன்றில் கேது இருப்பதால் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் மாற்று இனத்தவர்களை பங்குதாரர்களாக்கி ஈட்டும் லாபத்தில் இனிய காரியங்கள் பலவும் செய்வீர்கள். ராகு-கேதுக்களின் வழிபாடு நன்மையை வழங்கும்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ராசி அமைந்து விடுகிறது. 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. முன்னேற்றத்தில் முட்டுக் கட்டை ஏற்படலாம். பெண்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். இக்காலத்தில் முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை ராகு-கேது ஸ்தலங்களில் உங்களுக்கேற்ற ஸ்தலங்களில் செய்வது நல்லது.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டு களிலும் வக்ரம் பெறும் பொழுது பணநெருக்கடி அதிகரிக்கும். ஒருதொகை செலவழிந்த பிறகு அடுத்த தொகை வந்து சேரும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். உற்றார், உறவினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்புப் கொடுப்பார்களா? என்பது சந்தேகம் தான். இக்காலத்தில் அன்னதானம், வஸ்திர தானம் கொடுத்துச் சனிபகவானை முறையாக வழிபாடு செய்தால், சோதனைக் காலம் முடிந்து சாதனைக் காலம் தொடங்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று, சனிபகவானை வழிபட்டு வருவதோடு, எள்தீபம் ஏற்றி அதன் சன்னிதியில் வைத்தால் வளர்ச்சி அதிகரிக்கும். சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள நேமம் என்ற ஊருக்கு வாருங்கள். அங்குள்ள ஜெயம்கொண்ட சோழீஸ்வரர், சவுந்தரநாயகி அம்மனை வழிபட்டு பயமின்றி வாழுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:03 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Capricornசனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை (75/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

பதினோராமிடத்தில் சனி.. பணவரவு தான் இனி!

எதிர்காலத் திட்டங்களையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே!

முடியாத காரியத்தைக் கூட முடித்துக் கொடுக்கும் வல்லமை பெற்ற உங்களுக்கு, இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தான். சோதனைகளை வென்று சுகங்களைக் கைப்பற்றப் போகிறீர்கள். இதுவரை 10-ல் சனி சஞ்சரித்து வந்த பொழுது முத்தான வாழ்க்கையில் முட்டுக்கட்டை வந்துவிட்டதே என்று நினைப்பீர்கள். கர்ம ஸ்தானத்தில் சனி வீற்றிருக்கும் பொழுது, பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்புகளைக் கொடுத்திருக்கலாம். பிரச்சினையில் சிக்கித் தவித்திருக்கலாம்.

இனி அந்த நிலை மாறி விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணப்போகிறீர்கள். விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவின் மூன்றாம் பார்வையில் இருக்கிறார். சில நாட்கள் கழித்து உச்சம் பெற்ற குரு, பெயர்ச்சியான சனியை பார்க்கப் போகின்றார். உங்கள் ராசியையும் பார்க்கப் போகின்றார். Ôகுரு பார்க்கக் கோடிநன்மைÕ என்பதால் மளமளவென்று காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குரு புத்திரகாரகன் என்று அழைக்கப்படுவதால், குழந்தைகளின் முன்னேற்றம் கூடுதலாகவே இருக்கும்.

ஏழாவது மாதம் வரைதான், இந்த மகிழ்ச்சி நிலையாக இருக்கும். அதன் பிறகு அஷ்டமத்து குரு அடியெடுத்து வைக்கப் போகின்றார். எனவே குருவின் பார்வை மாறிவிடுகிறது. மேலும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆரோக்கியப் பாதிப்புகளும், அதிகச் செலவுகளும் தவிர்க்க முடியாததாக அமையும். உறவினர்களின் குறுக்கீடுகளால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். எனவே மிக, மிகப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.

சனிப்பெயர்ச்சி சமயத்தில் கூட குரு அதிசாரமாக வந்து எட்டில் உலாவருகிறது. மாங்கல்ய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் எனப்படும் இடத்தில் குரு, செவ்வாய், சனி, ராகு-கேது போன்ற கிரகங்கள் உலாவரும் பொழுது, பிறருக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைக் காட்டிலும், பல மடங்கு குறைவாகவே கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் வருமானப் பற்றாக்குறை எதுவும் வைக்க மாட்டார். ஆனால் மனநிம்மதி மிக, மிகக் குறைவாகவே கிடைக்கும்.

பிரச்சினைகள் அகல குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. மேலும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் இடமறிந்து, அது நவாம்சத்தில் இருக்கும் இடம் பார்த்து, அதோடு இணைந்திருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாடுகளை, தாரா பலம் பெற்ற நாளில் செய்தால் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும்.

பதினோராமிடத்தில் சனி!
பணவரவுதான் இனி!

சனிபகவான், இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். செயல் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வந்திருப்பீர்கள். திடீர் இடமாற்றங்கள் திருப்பங்களைக் கொடுத்திருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக உங்களுக்கு மனகிலேசத்தை உருவாக்கி இருக்கலாம். அவற்றிற்கெல்லாம் வடிகாலாக இப்பொழுது பெயர்ச்சியாகும் சனி உங்களுக்கு விடிவு காலத்தை கொடுக்கப் போகிறது.

இருந்தாலும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். விரயத்திற்கேற்ற தனவரவு வந்து கொண்டேயிருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். இதுபோன்ற காலங்களில் திட்டமிட்டு வாழ்க்கை நடத்துவதுதான் கெட்டிக்காரத் தனமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட நினைப்பவர்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்களுடைய சுயஜாதகத்தில் தெசாபுத்தி பலம்பெற்று இருக்குமேயானால் ஓரளவு நற்பலன்களை நீங்கள் காண இயலும்.

சனி சகல யோகத்தையும் வழங்க, உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையில் தாராபலம் பெற்ற நட்சத்திரம் இணையும் நாளில் தகுந்த வழிபாடு களைச் செய்தால் காரிய வெற்றி ஏற்படும், கவலை தீரும்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் பதினோராமிடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். சனியின் பார்வை பதியும் இடங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துகொண்டேயிருக் கும். ஜூலை 2015 வரை உங்கள் ராசியைப் பார்க்கும் பொழுது குருவும் உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். எனவே நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்.

தொழிலில் கூட்டாளிகளை அடிக்கடி கவனித்துக் கொள்வது நல்லது. வரவு செலவுகளை அப்போதைக்கப்போது கவனிக்காமல் இருந்தால் மகிழ்ச்சியோடு மாற்றங்கள் வரும் என்று நினைத்து இருந்த நேரத்தில் ஏமாற்றங்களே வந்து சேரும். உறவினர்கள் உதட்டில் ஒன்றும், உள்ளத்தில் ஒன்றும் வைத்துக் கொண்டு பேசுவார்கள். தொகை கையில் இருந்தால் செலவாகிவிடும். எனவே அதை அசையாத சொத்துக்களாகவோ, ஆடை, ஆபரணங்களாகவோ மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.

சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பிள்ளைகளின் கல்வி மற்றும் கடல் தாண்டும் முயற்சிகளுக்காக எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு அது நல்லவிதமாக நடைபெறும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சகாய ஸ்தானம், வெற்றிகள் ஸ்தானம் என்பதைக் குறிக்கும் இடம் மூன்றாமிடம். அதே நேரத்தில் பயணங்களையும், விரயங்களையும் எடுத்துரைக்கின்ற இடம் 12-ம் இடம் ஆகும். அந்த இரண்டு இடங்களுக்கும் ஆதிபத்யம் பெற்ற குருபகவான் இப்பொழுது சிம்ம ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதி 8-ல் சஞ்சரிக்கும் பொழுது, பல நல்ல பலன்களும் வந்து சேரும்.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். குரு சேர்ந்தாலும், பார்த்தாலும் கோடி நன்மை என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட நன்மைகளை உங்களுக்கு அள்ளி வழங்க ஒப்பற்ற குருபகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கப்போகின்றார். விரய ஸ்தானாதிபதி குருவின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு பெரும் தொகையைச் செலவிடப் போகிறீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, மாற்றங்களும், ஏற்றங்களும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரப் போகின்றது. 10-ல் குரு வந்தால்பதவியில் மாற்றம் வரும் என்பார். அந்த அடிப்படையில் திடீரென ஊர்மாற்றங்கள், வீடுமாற்றங்கள், தொழில் புரிபவர்களுக்கு தொழில் நிலையத்தை மாற்றி வேறிடத்திற்கு மாற்றும் சூழ்நிலை உருவாகும். தகுந்த பரிகாரங்களைச் செய்வதன் மூலம் திசைமாறிய தென்முகக் கடவுளை சிறப்பு வழிபாடாக அனுகூல நாளில் வழிபட்டு வருவதன் மூலமும் இந்த குருப்பெயர்ச்சிக் காலம் குதூகலம் தரும் காலமாக மாறும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் உலா வருகிறார்கள். எனவே, ஏற்றமும், இறக்கமும் மாறி, மாறி வந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக கேது 2-ல் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. அடுத்தடுத்து மனக்கசப்பு தரும் சம்பவங்கள் ஏற்படலாம். அஷ்டமத்து ராகு அலைச்சலைக் கொடுக்கும். ஆதாயத்தைக் குறைக்கும். நவக்கிரகத்திலுள்ள ராகு-கேதுக்களை வழிபட்டு வருவது நல்லது.
27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கும் காலமாகும். எனவே கனவிலும், நனவிலும் நாகங்கள் வந்துகொண்டேயிருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதுதான் நல்லது. புதிய கடன்சுமைகள் உருவாகலாம்.

இக்காலத்தில் முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரத்தை, அனுகூல ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வரம் தரும் நாளில் வழிபாட்டை மேற்கொண்டால் நிரந்தர புகழும் கிடைக்கும். நிம்மதியும் கூடும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறும்பொழுது, எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பதே நல்லது. குடும்பத்திலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, பிறர் கருத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். கோபம், படபடப்பு போன்றவைகள் அடிக்கடி தலைதூக்கும். முன்கோபத்தின் காரணமாக முன்னேற்றப் பாதையில் தடைகள் உருவாகலாம். பொறுமையோடு செயல்படுவது மட்டுமல்ல, உரிமையோடு உங்கள் ராசிநாதன் சனியை வழிபாடும் செய்ய வேண்டும். குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்து எதைச் செய்தாலும் நன்மையாகவே இருக்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதோடு காகத்திற்கும் சோறு வைப்பது நல்லது. சிறப்பு வழிபாடாக புதுக்கோட்டை அருகிலுள்ள திருவேங்கை வாசலுக்குச் சென்று, பசுவிற்கு வேங்கை வடிவில் காட்சி தந்த வியாக்ரபுரீஸ்வரரையும், அறம் வளர்த்த நாயகியையும் வழிபட்டு வெற்றியை வரவழைத்துக் கொள்ளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:04 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Aquarius


சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை (60/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

விருச்சிகத்தில் வந்தது சனி! விருத்தியம்சம்தான் இனி!

நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கும்ப ராசி அன்பர்களே!

அனுபவமே சிறந்த ஆசான் என்று சொல்லும் உங்களுக்கு, இதுவரை 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது 10-ம் இடத்தில் சஞ்சரித்து பலவித முன்னேற்றங்களை வழங்கப் போகிறார். உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாக அமைகிறது. 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி முத்தான தொழிலை அமைத்துக் கொடுக்கும். வரும் வாய்ப்பு களை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித் தனமாகும்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குகின்றார். எனவே லாபத்தை கொடுப்பவராகவும், விரயத்தைத் தருபவராகவும் சனிபகவானே விளங்குகின்றார். 10-ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் பெற்றோர்களின் உடல் நிலையில் பிரச்சினைகள் உருவாகி மறையும். அவர்களின் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி வலுவாக இருந்தால் பாதிப்புகள் ஏற்படாது.

பொதுவாக தொழில் ஸ்தானத்தில் விரயாதிபதி சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் கூடுதல் விரயம் ஏற்படுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இந்த முறை பெயர்ச்சியாகும் சனி உங்களுக்கு குரு பார்வையில் விளங்கும் சனியாக இருக்கிறது. சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று மீண்டும் குருபகவான் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசி குருவிற்கு உச்ச வீடாகும். எனவே உச்சம் பெற்ற குரு உங்கள் ராசிநாதன் சனியைப் பார்ப்பது மிகுந்த யோகத்தை தரும்.

பொதுவாக உங்கள் ராசியைப் பொறுத்தவரை எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் விளங்குகிறார். எனவே சந்திரபலம் நன்றாக இருந்தால் எதிரிகளால் தொல்லை ஏற்படாது. வியாதிகளில் சிக்கித் தவிர்க்க மாட்டீர்கள். கடன்சுமை கட்டுப்பாடாக இருக்கும். எனவே அந்த சந்திர பலத்தைக் கூட்டிக் கொள்ள நிலவு நிறைந்த நாளிலும், மறைந்த நாளிலும் வழிபாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் விளங்குகிறார். எனவே முருகப்பெருமான் வழிபாட்டையும் முறையாக செய்து வந்தால், தொழிலில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். குறிப்பாக வள்ளி தெய்வானையோடு இணைந்த ஆறுமுகப் பெருமான் வழிபாடு உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து நவாம்சத்திலும் இருக்கும் இடமறிந்து அதோடு இணைந்த கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற விதத்தில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

பத்தாமிடத்திற்கு வந்த முத்தான சனி!

சனி பகவான், இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது தொழில் மற்றும் செயல் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாமிடத்திற்குச் செல்லப் போகிறார். ராசிநாதனே பத்தில் சஞ்சரிக்கும் பொழுது, புதிய திருப்பங்கள் நிறைய ஏற்படும்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமிருக்காது. பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்தும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கலாம்.

உங்கள் சுய ஜாதகத்தையும். குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பாருங்கள். தொழில் ஸ்தானம் யாருடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் தொடங்குவது தான் லாபம் தரும்.

ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்கள் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வார்கள். ஒருசிலர் மற்றவர்கள் உற்பத்திசெய்த பொருளை வாங்கி விற்பதன் மூலம் லாபம் காணலாம். இதில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற விதத்தில் தொழிலை அமைத்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடி வரும்.

10-ல் சஞ்சரிக்கும் சனி தொழில் முயற்சியில் வெற்றி கொடுத்தாலும், பெற்றோர் மற்றும் சகோதர வழியில் பிரச்சினைகளைக் கொடுக்கவும் காரணமாக இருப்பார். எனவே சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. செவ்வாய் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் வார வழிபாடாக சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

மந்தன் சனியால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்ரித்து வந்த சனிபகவானின் பார்வை 4,7,12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. சனியின் பார்வையால் அந்த இடங்களுக்கு உரிய ஆதிபத்யங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் வரப்போகின்றன.

குறிப்பாக நான்காம் இடத்தை சனி பார்த்தால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.

நான்காமிடம் தாய் ஸ்தானம் என்பதால் தாயின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. சுய ஜாதகத்தில் தெசாபுத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள். பிரதோஷ காலத்தில் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று நந்தியெம்பெருமானை வழிபாடு செய்தால் வளமும், நலமும் கிடைக்கும்.

சப்தம ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும் காலமாகும். பேசி விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேர்ந்து மகிழ்ச்சியை வரவழைக்கும். விலகி இருந்த தம்பதியர் இணையும் வாய்ப்பு, விருப்ப ஓய்வு பெற்று வேலையில் இருப்பவர்கள் தொழில் செய்யும் வாய்ப்பும் உருவாகும்.

12-ம் இடத்தைச் சனி பார்ப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். எனவே வீண் விரயங்களாகாமல் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. குறிப்பாக வீடு வாங்கும் முயற்சி அல்லது வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் செலுத்துங்கள்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி வரப் போகின்றது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

குரு சிம்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியை நேரடியாக பார்க்கிறார். எனவே பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனமகிழ்ச்சியோடு இருக்க குடும்பத்தினர் வழிவகுத்துக் கொடுப்பர். சிம்ம குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. எனவே சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களுக்கு முக்கியப் புள்ளிகள் வைக்க முன்வருவீர்கள்.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அஷ்டம ஸ்தானம் என்பதால் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதிர்பாராத இழப்புகளும் உருவாகலாம். அதன் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் சந்தோஷங்கள் வந்து சேரும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை மீண்டும் உங்கள் ராசியில் பதிகிறது. அதுமட்டுமல்ல, உடன்பிறப்புகள் ஸ்தானத்திலும், புத்திர ஸ்தானத்திலும் பதிவாகிறது. சனி நின்ற இடத்திற்கு பலன், குரு பார்த்த இடத்திற்கு பலன் என்பதால் இப்பொழுது துலாத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் சகாய ஸ்தானத்தையும், புத்திர ஸ்தானத்தையும் பார்ப்பதால் பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியிலேயே கேது சஞ்சரிக்கிறார். எனவே, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். ஏற்றமும், இறக்கமும் இணைந்தே வரும். இதற்கு பரிகாரமாக யோக பலம்பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலத்தை தேர்ந் தெடுத்து நாக சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. 7-ல் ராகு இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியே பிரச்சினைகள் வந்துஅகலும்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அப்பொழுது 6-ம் இடத்து ராகு அஷ்டலட்சுமி யோகத்தை உங்களுக்கு வழங்கும். எனவே பொருளாதார நிலை உயரும். திடீர், திடீரென தனலாபம் வந்து திக்கு முக்காட வைக்கும். உறவினர்கள் பகை மாறும். ஊர்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விரயாதிபதியாக மட்டுமல்லாமல் ராசிநாதனாகவும் சனி விளங்குவதால், வீண் விரயங்கள் ஏற்படலாம். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தடைகளும் தாமதங்களும் ஆட்கொள்ளும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். இது போன்ற காலங் களில் ஆதியந்தபிரபு வழிபாடும், அனுமன் வழிபாடும் உங்களுக்கு உகந்ததாக அமையும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று சனிபகவானை வழிபட்டு வருவதோடு, அதன் சன்னிதியில் எள்தீபம் வைத்து துதி பாடுங்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி நல்ல திருப்பங்கள் உருவாகும். சிறப்பு வழிபாடாக தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதன், தையல்நாயகி, அங்காரகன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் வழிபட்டு வாருங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா on Sun Dec 07, 2014 12:05 pm

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Piscesசனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை (80/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ஒன்பதாமிடத்தில் சனி! உயர்வுகள் வந்திடும் இனி!

வந்த விருந்தினர்களை வரவேற்பால் திணறடிக்கும் மீன ராசி அன்பர்களே!

கடமைக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அஷ்டமத்துச் சனி விலகி ஆனந்தமான வாழ்க்கையை இப்பொழுது வழங்கப் போகிறது.

இந்தச் சனிப்பெயர்ச்சியால் மிகமிக நற்பலன்களை பெறும் ராசிகளில் முதன்மையான ராசியாக, உங்கள் ராசிதான் விளங்கப் போகின்றது.

இனி நல்லநேரம் இல்லம் தேடிவரப் போகிறது. ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். மருத்துவச் செலவுகள் குறையும். சீரோடும், சிறப்போடும் வாழ வழிவகுத்துக் கொள்ளப் போகிறீர்கள். செல்வநிலையில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் பழிகளிலிருந்து விலகும் சூழ்நிலை அமையும்.

அரைகுறையாக நின்ற பணி இனி மீதியும் தொடரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்கப் போகிறார்கள். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டாலும், கட்டிய வீட்டாலும் வந்த பிரச்சினை அகலும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். படிப்படியாக உடல் நலம் சீராகும். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். கொடுக்கல்-வாங்கல்களில் இதுவரை இருந்த ஏமாற்றங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைப்பதற்கு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

விலகிய சனியை விலகும் நாளிலேயே கும்பிட்டு மகிழ்வது நல்லது. பொதுவாக திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் குளித்து அங்குள்ள காக வாகனச் சனியை வழிபட்டு வந்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களும், சிரமங்களும் அகலும். திருக்கொள்ளிக் காட்டிலுள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.
ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து பாதி அருகம்புல்லையும், பாதி வெற்றிலை மாலையையும் இணைத்து அணிவித்து வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வடக்கு நோக்கிய பிள்ளையாரையும், வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் இதுபோன்ற காலங்களில் வழிபட்டால் தடைகற்கள் அகலும்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, நவாம்சத்திலும் சனிபகவான் இருக்கும் இடம், அதைப் பார்க்கும் கிரகம், அதோடு இணைந்த கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் தெய்வ வழிபாடுகள்தான் உங்கள் எதிர்காலத்தை இனிமையாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒன்பதாமிடத்தில் சனி உலா வரும்பொழுது பொன், பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வீர்கள். பகை பாராட்டிப் பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் தானாக வந்திணைவர். பொதுவாக போராட்டமான வாழ்க்கை மாறி பூந்தோட்டமான வாழ்க்கை அமையும். எனவே கசந்த காலங்கள் மாறி வசந்த காலங்கள் உருவாக காக வாகனத்தானையும், அனுமனையும் கைகூப்பித் தொழுவது நல்லது.

ஒன்பதாம் இடத்து சனி பொன் பொருள் தருமா?

சனிபகவான், உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் லாபத்தையும், கொடுத்து விரயத்தையும் கொடுப்பதற்கு மூலகாரணமாக இருக்கிறார். நீங்கள் பெற்றோர்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் செய்ய வேண்டியதை முறையாக செய்வீர்கள். இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இடமாற்றம், ஊர்மாற்றம், நாடுமாற்றம், வாகன மாற்றம், தொழில் மாற்றம் உருவாகும்.

பொதுவாக ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, பொன் பொருள் வாங்கப் போட்ட திட்டத்தை நிறைவேற்றுவார். மண், பூமி வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே நடைபெற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது. திருச்சி அருகில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள தலையெழுத்தை மாற்றும் பிரம்ம தேவரையும், அதற்கு அருகில் ஊட்டத்தூரில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் உள்ள பிரளயகால நந்தியையும் காலபைரவரையும் வழிபட்டு உங்கள் கவலைகளை போக்கிக் கொள்ளுங்கள்.

சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் விபரீத ராஜயோக அடிப்படையில், சில நல்ல காரியங்கள் திடீர் திடீர் என நடைபெறும். பொருளாதார நிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோக ஸ்தானம் பலப்படுவதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல்களும் கிடைக்கும். சனியின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி கூடும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று இனத்தவர்கள் உங்கள் மனதிற்கேற்ற விதத்தில் நடந்து கொள்வார்கள்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும். கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, சுயதொழில் தொடங்க முன்வருவர். அடிக்கடி பயணங்கள் அதிகரிக்கும்.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடத்தில் பதிவாகிறது. எனவே ராசியைப் பார்க்கும் குரு யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றியைக் கொடுப்பார். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். கீர்த்தி பெருகும். கெடுதல்கள் மறையும். பணப்பற்றாக்குறை அகலும். 11-ம் இடம் புனிதமடைவதால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பயணங்களால் பலன் கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து நண்பர்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வருவர். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே தொழிலில் எதிர்பாராத இழப்புகள் உருவாகும். எனவே கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பார்க்கும் குருவால் குடும்பச் சுமை குறையும். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்போருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளின் பலம் மேலோங்கியிருக்கும். எதைச் செய்தாலும் யோசித்துச் செய்வது நல்லது. உதிரி வருமானங்கள் குறையலாம். உடனிருப்பவர்களால் கடன்சுமை கூடும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். ஊர்மாற்றச் சிந்தனைகளும், நாடுமாற்றச் சிந்தனைகளும் மேலோங்கும். 12-ல் கேது இருப்பதால் பயணத்தில் விழிப்புணர்ச்சி தேவை. இதுபோன்ற நேரங்களில் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும்,மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். புத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அதன் எதிர்கால நலன் கருதி ஒரு பெரும் தொகையைச் செலவு செய்யப் போகிறீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். புதிய முடிவெடுத்து சொத்துக்களை பராமரிக்க ஏற்பாடு செய்வீர்கள். பங்காளிப் பகை மாறும். கேதுவின் ஆதிக்கத்தால் மாற்றுக்கருத்துடையோர் உங்கள் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முன்வருவர். பழைய தொழிலைக் கொடுத்துவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் அகலும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது நன்மையையும், தீமையையும் கலந்தே செய்வார். சனி உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குகிறார். லாபாதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. வருமானத் தடைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் வந்தும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற கவலை அதிகரிக்கும். தொழிலில் இழப்பு களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வங்கிச் சேமிப்பு கரைகிறதே என்ற கவலைப்படுவீர்க்ள். அதே நேரத்தில் விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். விரயத்தைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். இது போன்ற காலங்களில் குருவழிபாடும், சனி வழிபாடும் சஞ்சலங்களைத் தீர்க்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதோடு காகத்திற்கும் சோறு வைப்பது நல்லது. சிறப்பு வழிபாடாக தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று யோகபலம் பெற்ற நாளில் விநாயகர், முருகப்பெருமான், பிரகதீஸ்வரர், அம்பிகை நந்தி எம்பெருமான், தெட்சிணாமூர்த்தி, வாராகி ஆகியவற்றை வழிபட்டு வாருங்கள். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும். வாராகி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.


- நன்றி தினத்தந்தி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by T.N.Balasubramanian on Sun Dec 07, 2014 1:07 pm

நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25193
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9065

View user profile

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by அகிலன் on Mon Dec 08, 2014 2:58 am

விரிவான விளக்கம் தந்திருக்கிறார் சோதிடர்
நன்றி.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ayyasamy ram on Mon Dec 08, 2014 6:19 am

16-12-2014 முதல் 15-12-2017 வரை பலன்கள் சொல்லபட்டிருக்கிறதே...
-
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுவாரே...!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48335
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12390

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும் Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை