மரணத்தை வென்ற எமது மாவீர செல்வங்களை
மனதில் நிறுத்தி வணங்கி நன்றி செலுத்தும்
மாவீரர் வாரத்தின் முதலாவது நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலையே தமது உயிரைவிட மேலானது,
என்ற உயர்ந்த இலட்சியத்துக்காக தமது இன்னுயிர்களை ஈந்த
மாவீரர்களுக்கு எமது நன்றிகலந்த வணக்கங்கள்.

உங்களின் இந்த உயரிய இலட்சியம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி பூணுவோம்.

இறுதி மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதியாகும்.
அன்றையதினம் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.