ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

"நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

View previous topic View next topic Go down

"நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by சிவா on Mon Nov 03, 2014 6:07 pmபெங்களூரு: நிர்பய் ஏவுகணையை போர் விமானத்தின் மூலம் துரத்திச் செல்லும் சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சாதித்து காண்பித்துள்ளது. 'ஏவுகணையை, போர்விமானம் விரட்டிச் செல்லுதல்' என்ற வார்த்தையே தெற்காசிய பிராந்தியத்திற்கு புதியதுதான். ஆனால் அதை கண்முன் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர் நமது விமானப்படையினர்.

கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் மிட்னப்பூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா ராணுவ விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாக்குவார் ரக போர் விமானங்கள் இந்தியாவின் நிர்பய் சூப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக 45 நிமிடங்கள் துரத்தியுள்ளது.

மிகப்பெரிய பயிற்சிக்கு பிறகே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும் என்கிறார் தேஜாஸ் டெஸ்ட் பைலட் ஒருவர். "ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே விமானம் தனது பயணத்தை தொடங்க வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏவுகணை கிளம்பி சென்றுவிடும் என்பதால் அதை பின்தொடர்வது மிகவும் சிரமம். ஆனால் பின்தொடரும் நேரத்தில், ஏவுகணையை சரியான தொலைவில் பின்தொடருவது அவசியம். ஏவுகணையின் வேகத்துக்கு ஏற்ப விமானி தனது விமானத்தின் வேகத்தை உடனடியாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

நமது விமானத்தை ஏவுகணையின் பார்வையில் இருந்து, குறிப்பிட்ட இடைவெளியில் பின்தங்கியபடி பின் தொடர வேண்டும். ஏவுகணையை தாண்டி முன்புறமாக சென்றாலோ, அல்லது அதன் பக்கவாட்டில் சென்றாலோ விமானத்துக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏவுகணைகளை துரத்திச் சென்ற விமானம் ஏவுகணைகளாலே தாக்கப்பட்ட உதாரணங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன.

ஏவுகணையின் செயல்பாடு கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப விமானி தனது வேகத்தை நிர்ணயித்துக் கொண்டே வர வேண்டும்" என்றார் அந்த பைலட்.

முதலில் இந்த சோதனைக்காக 2 சுகோய் ரக விமானங்களை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஜாக்குவார் விமானம் பயன்படுத்தப்பட்டது. மிக் விமானத்தையும் கூட பரிசீலனையில் வைத்திருந்தனர். ஆனால் ஜாகுவாரின் திறன் காரணமாக அது கையில் எடுக்கப்பட்டதாம்.

ஏவுகணையின் செயல்பாடு குறித்த வீடியோ படம், பைலட்டுகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதை பார்த்து ஓரளவுக்கு ஏவுகணையின் போக்கை தெரிந்து கொண்ட பிறகே அவற்றை விரட்டும் பணிக்கு ஆயத்தமாகின்றனர் பைலட்டுகள். நிர்பய் ஏவுகணையின் வேகம், மற்றும் அதன் போக்கையும் ஜாக்குவார் பைலட்டுகள் இப்படித்தான் தெரிந்துகொண்டனராம்.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் டாக்டர் கே.தமிழ்மணி இதுகுறித்து கூறுகையில், "நிர்பய் ஏவப்பட்டபோது, விமானப்படை மற்றும் கடல்படை ஆகியவை இணைந்து ஒருங்கிணைப்பை தந்தன. ஏவுகணையை துரத்திச் செல்லும் விமானத்திற்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட இரு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஒருங்கிணைப்பு காரணமாகவே நிர்பய் ஏவுகணையை துரத்திச் செல்லும் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது" என்றார். நிர்பய் ஏவுகணையை உருவாக்கிய ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநரான பி.ஸ்ரீகுமார் கூறுகையில், நிர்பய் வெற்றியை போலவே, விமானத்தால் அதை பின்தொடர முடிந்ததையும் ஒரு வெற்றியாகவே பார்க்கிறோம் என்றார்.

அதே நேரம் ஏவுகணையின் முழு தூரத்தையும் ஜாக்குவார் பின்தொடர்ந்து முடிக்கவில்லை. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 45வது நிமிடத்தில் தனது பயணத்தை ஜாக்குவார் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by SajeevJino on Mon Nov 03, 2014 7:50 pmஇந்திய விமானப் படையிலேயே எனக்கு பிடித்த விமானம் Jaguar தான் . இதன் லைப் டைம் முடிந்தாலும் புதிய upgrade மூலம் 2035 பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்திய விமானப் படின் ஒரே அணுகுண்டு வீசும் அங்கீகாரம் கிடைத்த ஒரே விமானமும் இது தான்

மேலும் எனது கணக்குப் படி SEAD /DEAD cONFIG இல் இது சுமார் 800 கிலோமீட்டர் lo lo lo மோடில் இலக்கை தாக்கி விட்டு திரும்ப நமது இடத்திற்கு வரும்

சோ இந்த 45 நிமிடத்தில் இதில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்பதை நான் நம்ப மாட்டேன் .
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by சிவா on Tue Nov 04, 2014 1:02 am

நிர்பய் ஏவுகணைக்கு நிகரான வேகத்தில் அதாவது 850 கிமீ வேகம் முதல் 950 கிமீ வேகத்தில் பறந்ததால் எரிபொருள் விரைவாகத் தீர்ந்திருக்கலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by ayyasamy ram on Tue Nov 04, 2014 5:33 am

விண்ணில் சாதிப்பதை போல கடல் ஆதிக்கமும் தேவை...
-
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்
இலங்கையில் நிறுத்தப்பட இலங்கை அனுமதித்துள்ளது...
என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by SajeevJino on Tue Nov 04, 2014 5:34 am

@சிவா wrote:நிர்பய் ஏவுகணைக்கு நிகரான வேகத்தில் அதாவது 850 கிமீ வேகம் முதல் 950 கிமீ வேகத்தில் பறந்ததால் எரிபொருள் விரைவாகத் தீர்ந்திருக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1101410

நிற்பாய் வேகம் மட்டும் உயரம் இரண்டுமே SEAD /DEAD Misson Config தான் . ஆனால் இங்கு pgm க்கு பதிலாக Recce Pod பயன்படுத்தி இருப்பார்கள்.

பொதுவாக குறைந்த வேகத்தில் 700 முதல் below SuperSonic வேகம் வரை செல்வதுதான் அதிக mileage தரும் . ஆனால் குறைந்த உயரத்தில் இப்படி பறந்தால் அது அப்படியே தலை கீழாக மாறி விடும் ..அதை தான் lo lo lo mode என்பார்கள்.

Nirbahy 70 நிமிடங்கள் பறந்தது 1100+ கிலோ மீட்டர் தூரம் தாண்டியது .. ஜாகுவாரும் இதை முழுமையாக பின் தொடர வாய்ப்புகள் அதிகம்

எந்த நாட்டு விமானப் படையும் அதன் விமானத்தின் combat radius தகவல்களை சரியாக தர மாட்டார்கள் . இப்படி ஏதாவது mission மூலம் நாம் புரிந்து கொண்டால் தான் உண்டு.

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by T.N.Balasubramanian on Tue Nov 04, 2014 6:32 am

கருத்துகினிய , பொருளடங்கிய கருத்து பரிமாறல்கள் .
ஆர்வம் தரும் புதிய விடயங்கள் .
சிவா/சஜீவ் ஜினோ இருவருக்கும் நன்றி .
கூடுதல் செய்தி A Ram அவருக்கும் நன்றி .
எல்லா பதிவிற்கும் வி பொ பாவித்தேன்   

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by ராஜா on Tue Nov 04, 2014 11:06 am

@SajeevJino wrote:மேலும் எனது கணக்குப் படி SEAD /DEAD cONFIG இல் இது சுமார் 800 கிலோமீட்டர் lo lo lo மோடில் இலக்கை தாக்கி விட்டு திரும்ப நமது இடத்திற்கு வரும்

சோ இந்த 45 நிமிடத்தில் இதில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்பதை நான் நம்ப மாட்டேன் .

முதல் இரு வரிகள் என் மரமண்டைக்கு எட்டாத விஷயம் புன்னகை ....
formula -1 கார்கள் அதிகபட்ச வேகத்தை எட்டவேண்டும் என்பதற்காக முழு கொள்ளளவு எரிபொருளை நிரப்பாமல் பயணத்தை தொடங்குவார்கள் , குறிப்பிட்ட Laps களுக்கு பிறகு டயர் மாற்றவேண்டிய அவசியம் வருமல்லவா அப்போது எரிப்பொருளையும் நிரப்பிகொள்வார்கள் என்று படித்துள்ளேன்.

அதுபோல ஜாக்வார் தனது அதிகபட்ச வேகத்தில் செல்ல வேண்டுமென்பதற்காக குறிப்பிட்ட அளவு எரிபொருளை மட்டும் நிரப்பி இருந்திருப்பார்களோ புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by SajeevJino on Tue Nov 04, 2014 11:39 am

@ராஜா wrote:
@SajeevJino wrote:மேலும் எனது கணக்குப் படி SEAD /DEAD cONFIG இல் இது சுமார் 800 கிலோமீட்டர் lo lo lo மோடில் இலக்கை தாக்கி விட்டு திரும்ப நமது இடத்திற்கு வரும்

சோ இந்த 45 நிமிடத்தில் இதில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்பதை நான் நம்ப மாட்டேன் .

முதல் இரு வரிகள் என் மரமண்டைக்கு எட்டாத விஷயம் புன்னகை ....
formula -1 கார்கள் அதிகபட்ச வேகத்தை எட்டவேண்டும் என்பதற்காக முழு கொள்ளளவு எரிபொருளை நிரப்பாமல் பயணத்தை தொடங்குவார்கள் , குறிப்பிட்ட Laps களுக்கு பிறகு டயர் மாற்றவேண்டிய அவசியம் வருமல்லவா அப்போது எரிப்பொருளையும் நிரப்பிகொள்வார்கள் என்று படித்துள்ளேன்.

அதுபோல ஜாக்வார் தனது அதிகபட்ச வேகத்தில் செல்ல வேண்டுமென்பதற்காக குறிப்பிட்ட அளவு எரிபொருளை மட்டும் நிரப்பி இருந்திருப்பார்களோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1101466

இது எனக்கு புதிது ..!!

ஜாகுவாரின் அதிக பட்ச வேகம் மணிக்கு 1500 km மேல் . ஒரு விமானம் பொதுவாக நிர்ணயிக்கப் பட்ட உயரமான சுமார் 10000 அடிக்கு மேல் சுமார் 1 mach (1000 கி மீ ) வேகத்தில் பறந்தால் கணிசமான mileage கிடைக்கும்.


அனால் இங்கு ஜாகுவார் கண்டிப்பாக சுமார் 500 முதல் 700 km உள்ளே சுமார் 1000 அடிக்கு கீழ் தான் பறந்திருக்கும் .

இதே வேகத்தில் இதே உயரத்தில் பறப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப் பட்டது இந்த ஜாகுவார். இந்த முறையில் தான் மிகவும் குறைவான உயரத்தில் எதிரி நாட்டின் SAM network ஐ அழிக்க முடியும் . இதைத் தான் SEAD /DEAD (Suppression /Destruction of Enemy Air Defence ) என்போம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by SajeevJino on Tue Nov 04, 2014 11:45 am

.
சமீபத்தில் பிரெஞ்சு நாட்டில் ஒரு Rafale விமானி தனது விமானத்தை சுமார் 300 அடிக்கு கீழே 600 KM வேகத்தில் ஒரு சாலையின் நேர் உயரே பறந்திருக்கிறார் ..அதன் அதிர்ச்சியில் அந்த ரோட்டில் சென்ற வயதான பெண்மணி பயத்தில் தன் காரை மின்கம்பத்தில் மோதி விட்டார் ..

மேலும் AlA மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்திருக்கிறார் ...
பைலட் அணிந்திருக்கும் patch -ய் பாருங்கள் ...
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by ராஜா on Tue Nov 04, 2014 11:49 am

தகவலுக்கு நன்றி சஜீவ் புன்னகை நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by சிவா on Tue Nov 04, 2014 4:02 pm

அரிய தகவல்கள்களை பகிர்ந்தமைக்கு நன்றி சஜீவ்!

இதுபோன்ற தகவல்களை எங்களுக்கு வழங்கிக் கொண்டே இருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by SajeevJino on Tue Nov 04, 2014 4:52 pm

@ராஜா wrote:தகவலுக்கு நன்றி சஜீவ் புன்னகை நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1101480

@சிவா wrote:அரிய தகவல்கள்களை பகிர்ந்தமைக்கு நன்றி சஜீவ்!

இதுபோன்ற தகவல்களை எங்களுக்கு வழங்கிக் கொண்டே இருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1101545

நன்றி நன்றிavatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum