ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

View previous topic View next topic Go down

புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by சிவா on Mon Nov 03, 2014 4:08 pmசென்னை: காங்கிரஸ் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே., வாசன் புதிய அரசியல் இயக்கம் துவங்கியிருப்பதாகவும், இதன் பெயரும், கொடியும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என ஜி.கே.,வாசன் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் வாசன் நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தலைவர்கள், நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலரது கருத்தை கேட்டுள்ளேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த கருத்தின் அடிப்படையில் , காமராஜர், மூப்பனார் ஆகிய வழியில் தமிழகத்தில் இயக்கத்தை பலப்படுத்த முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். காமராஜரின் நேர்மை, எளிமை , மதச்சார்பின்மை அடிப்படையில் புதிய இயக்கம் ஏற்படுத்தப்படும்.

வளமான பாரதம், வலிமையான தமிழகம் என்ற கொள்கை முன்வைத்து இந்த மாநிலத்தை முன்னெடுத்து செல்ல நாங்கள் விரும்புகிறோம். இதற்கென நாங்கள் ஒரு புதிய இயக்கம் துவங்குகிறோம், காங்கிரஸ் இயக்கத்தில் 14 ஆண்டுகள் இருந்து பல பொறுப்புகளில் இருந்து பணியாற்றியுள்ளோம்.

காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தை நாங்கள் புதிய வழியில் ஏற்படுத்துவோம். கிராமங்கள் தோறும் எங்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம். மக்கள் நம்பிக்கை பெறுமாறு மக்கள் பிரச்னைகள் முன்னிறுத்தி செயல்படுவோம். ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் விதமாக புதிய இயக்கம் துவக்கப்படுகிறது. இயக்க பெயரும், கொடியும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விரைவில் அறிவிக்கப்படும் தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை , மகளிர் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம். மாநில பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, புதிய இயக்கம் தனது பணியை துவக்குகிறது. இதுவே தமிழக லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில், எங்களுக்கும், நாங்கள் இருக்கும் இயக்கத்திற்கும் உள்ள நோக்கம் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதனை அடைய வழி எது என்பது முன்வைத்து எங்கள் இயக்கம் செயல்படும். தமிழக இளைஞர்கள் புதிய மாற்றத்தை, எதிர்பார்ப்பை நோக்கியுள்ளனர். இதற்கேற்றவாறு நாங்கள் செயல்படுவோம். நேர்மையான அரசு, நிர்வாகம் ஆகியன எங்கள் நோக்கம். மூப்பனார் உருவாக்கிய இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது போல் இந்த இயக்கத்திற்கும் தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு வாசன் கூறினார்.

வெளியேற வேண்டாம்; இளங்கோவன் : சகோதரர் வாசன் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். நமது குடும்பத்தில் இருந்து வெளியேற வேண்டாம். என காங்., தலைவர் இளங்கோவன் வாசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாசன் கட்சி அறிவிப்பு வெளியிட்டதும் உடனடியாக இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், மூப்பனார் ஈன்றெடுத்த அன்பு புதல்வர் பிரிந்து செல்ல வேண்டாம். வாசன் அவர்களே நீங்கள் காங்கிரசில் தான் இருக்க வேண்டும். எல்லா நிர்வாகிகளும் இதனைத்தான் விரும்புகின்றனர்.தயவு செய்துகுடும்பத்தை விட்டு, வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

எங்கிருந்தாலும் வாழ்க : இதனையும் மீறி நீங்கள் சென்றால் , எங்களின் குடும்பம் வருத்தப்படும். ஆனால் நொடிந்து போகாது. நால்வர் அணி சொல் கேட்டால் என்றும் உருப்படாது. நான் தனியாகத்தான் செல்வேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் எங்கிருந்தாலும் வாழ்க என்று தான் வாழ்த்துவேன். எங்கே சென்றாலும், மீண்டும் நீங்கள் இங்கே தான் வரவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். நமது இணைப்பை முறித்து விட வேண்டும் என நினைப்பவர்களுக்கு பலி ஆகி விடாதீர்கள். கட்சிக்கு சோதனைகள் ஏற்பட்டுள்ள காலத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்காதீர்கள். மூப்பனார் மீது எனக்கு பாசம் உண்டு. இதனால் உங்களை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது. நீங்கள் காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் இளைய பிள்ளை. தயவு செய்து காங்கிரசை விட்டு செல்லாதீர்கள். பெயர் அறிவிக்கவில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது. நன்றாக சிந்தித்து முடிவு எடுங்கள்.

காங்கிரசை பொறுத்தவரை எத்தனையோ பேர் வெளியறியுள்ளனர். ராஜாஜி கூட விலகியிருக்கிறார். மோதிலால் நேரு கூட காங்கிரசை மீறி ஒரு நடவடிக்கை எடுத்தார். ஆனால் காங்கிரசை அழிக்க முடியாது. இந்தியா போல் காங்கிரஸ். இந்தியா இருக்கும் வரை காங்கிரஸ் இருக்கும். காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர நாம் அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by mbalasaravanan on Mon Nov 03, 2014 4:14 pm

அவங்கள அளிக்க வெளிய இருந்து யாரும் வர வேண்டாம் அவங்களே அளிச்சுகுவங்க
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by சிவா on Mon Nov 03, 2014 4:35 pm

@mbalasaravanan wrote:அவங்கள அளிக்க வெளிய இருந்து யாரும் வர வேண்டாம் அவங்களே அளிச்சுகுவங்க

அழிக்க..!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by சிவா on Mon Nov 03, 2014 6:09 pm

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே. வாசன் டிஸ்மிஸ்!

சென்னை: புதிய கட்சி தொடங்கப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அறிவித்த சில மணி நேரங்களில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம்.

தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்ததால், வாசனை நீக்கியதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே. வாசன், புதிய கட்சியின் சின்னம் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து விலக வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டார். ஆனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் வாசனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

வாசன் தனிக்கட்சி தொடங்குவதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.

வழக்கமாக முக்கியத் தலைவர்கள் விலகும் நிலை வரும்போது காங்கிரஸ் தலைமை சமாதானம் பேசிப் பார்க்கும். ஆனால் வாசனை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by சிவா on Mon Nov 03, 2014 6:11 pm

வாசன் தரப்பால் சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகக் கூட முடியாது !

சென்னை: மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியதும், அதிரடியாக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் அப்போது உள்ளது போன்ற நிலைமை தற்போது இல்லை. எனவே வாசன் தரப்பால் சத்தியமூர்த்தி பவனைக் கைப்பற்றுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களோடு விலகி வி்ட்டார். சில ஆதரவாளர்கள் மட்டும் விலகாமல் காங்கிரஸில் தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்து புதிய கட்சியின் பெயர், கொடி, திட்டம் போன்றவற்றை அறிவிக்கவுள்ளார் வாசன்.

சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகக் கூட முடியாது வாசன் தரப்பால்!

சத்தியமூர்த்தி பவன்...

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை வாசன் தரப்பு கைப்பற்ற முயற்சிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூப்பனாரால் முடிந்தது...

இப்படித்தான் மூப்பனார் தமாகாவை உருவாக்கியபோது அவரது கட்சியினர், சத்தியமூர்த்தி பவனை அப்படியே கைப்பற்றிக் கொண்டனர்.

வாசனால் முடியாது...

ஆனால் மூப்பனார் செய்தது போல இப்போது வாசனால் செய்ய முடியாது என்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் வளாகம், காமராஜர் அரங்கம் உள்ளிட்டவை இந்த அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது.

நான்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் கையில்...

இந்த அறக்கட்டளை கட்சியின் மூத்த தலைவர்கள் 4 பேரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. அறக்கட்டளை சொத்துக்களின் பேரில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் இவர்கள் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும்.

ஆதரவு...

அப்போது இருந்தவர்கள் அப்படியே மூப்பனாரை ஆதரித்ததால் மூப்பனார் தமாகாவைத் தொடங்கியபோது, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பெறுப்பாளர்களாக ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், என்.ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர். அனைவரும் மூப்பனார் முடிவை ஆதரித்தனர். எனவே சத்தியமூர்த்தி பவன் த.மா.க.விடமே இருந்தது.

இப்போது நி்லைமை வேறு...

ஆனால் இப்போது நிலைமை வேறாக உள்ளது. அறக்கட்டளை நிர்வாகிகளாக இப்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா ஆகியோர் உள்ளனர்.

ஆதரவே இல்லை...

வாசன் தவிர மற்ற மூன்று பேருமே வாசனுக்கு ஆதரவாக இல்லாதவர்கள். ஜெயந்தியும், நாச்சியப்பனும், யசோதாவும் தனித்து செயல்பட்டு வருபவர்கள். இவர்களில் ஜெயந்தியும், யசோதாவும் இளங்கோவனை ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர். நாச்சியப்பன் ப.சிதம்பரம் எதிர்ப்பாளர். ஆனால் வாசனை இவர் ஆதரிக்க மாட்டார்.

வேற இடம் பார்க்க வேண்டியதுதான்...

எனவே சத்தியமூர்த்தி பவன் இருக்கும் பக்கமே போக முடியாத நிலையில்தான் வாசன் தரப்பு உள்ளது. புதிய அலுவலகத்தில்தான் அவரது புதிய கட்சியை நடத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by சிவா on Mon Nov 03, 2014 6:13 pm

"எங்கிருந்தாலும் வாழ்க" - ஜி.கே.வாசனை வாழ்த்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி புதிய இயக்கம் உருவாக்குவதாக அறிவித்திருக்கும் ஜி.கே.வாசனை அண்ணா சொன்னதைப் போல "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தாம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பேட்டியளித்தார்.

அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:

ஜி.கே.வாசன் காங்கிரஸில் தொடர வேண்டும்; காங்கிரஸ் எனும் வீட்டை விட்டு, அதுவும் சோதனையான இந்த கால கட்டத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எங்களைவிட வயதில் இளையவரான ஜி.கே.வாசன் இந்த குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அவர் தன்னைச் சுற்றியிருக்கும் நான்கு பேரின் பேச்சைக் கேட்டு வெளியேற வேண்டாம். தமிழகத்தில் நால்வர் அணி எப்போதும் வென்றதில்லை.

எனக்குத் தனிப்பட்ட முறையில் குடும்ப பிரச்சனைகளில் ஆதரவாக இருந்தவர் மூப்பனார். அவரது மகனின் எதிர்காலம் கருதி நலன் கருதி காங்கிரஸில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது ஜி.கே.வாசன் புதிய இயக்கம் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அவரை பேரறிஞர் அண்ணா கூறியதைப் போல எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகிறோம். எப்படியாக இருந்தாலும் நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்குத்தான் வர வேண்டும்.

அதனால் எங்களது உணர்வை, உள்ளத்தை காயப்படுத்த வேண்டாம். காங்கிரஸ் கட்சியில் கடந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ பேர் வெளியேறி இருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சி அழிந்துவிடாது.

இப்போதும் வாசன் தமது கட்சியின் பெயரைக் கூட அறிவிக்கவில்லை. அதனால் அவருக்கு கால அவகாசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by சிவா on Tue Nov 04, 2014 5:07 pm

தொண்டர்களுடன் 2–வது நாளாக ஆலோசனை நடத்தும் ஜி.கே.வாசன்: புதியகட்சி 16–ந்தேதி உதயம்?

காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் இடம், தேதி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் 2–வது நாளாக ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

வருகிற 12 அல்லது 16 ஆகிய 2 தேதிகளில் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த இதில் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவதில் காலதாமதம் ஆவதால் தேதியை இறுதி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இன்று மாலைக்குள் தேதி இறுதி செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆலோசனையின்போது ஞானதேசிகன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ, கோவை தங்கம், ஞானசேகரன், சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜி.கே.வாசன் ஆதரவாளர்களான சைதை ரவி, இ.சி.சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ மகேஸ்வரி, என்.டி.எஸ். சார்லஸ், என்.எஸ்.விஜயக்குமார், தி.நகர் தோதண்டன், லயோலா லாசர் உள்பட ஏராளமான தொண்டர்கள் அங்கு திரண்டு இருந்தனர். வெளியூர்களில் இருந்தும் ஆதரவாளர்கள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நேற்று நடைபெற்ற புதிய கட்சி தொடக்க விழா கூட்டத்துக்கு வருகை புரிந்த மூத்த முன்னணி தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு தொண்டர்கள் திரண்டனர். வரமுடியாத பலர் பல மாவட்டங்களில் இருந்து என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டும் இன்று நேரில் வந்தும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அனைவரது எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் கட்சி செயல்படும்.

புதிய கட்சியின் பெயர், கொடி, அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம். தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவடைந்ததும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரசுக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு என்பது இலக்கை எப்படி அடைவது என்ற வழிமுறையில்தான் உள்ளது.

காங்கிரஸ் தொண்டர்களுடன் எங்கள் தொண்டர்கள் நண்பர்களாகவே இருப்பார்கள். எந்த முரண்பாடும் இருக்காது. அப்படி முரண்பாடு இருப்பதை விரும்புவதும் இல்லை.

காங்கிரசின் அகில இந்திய தலைமையை பற்றியோ, தலைவர்களை பற்றியோ யாரும் இழிவாக பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் குறைகூறி கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இயக்கம் முதல் நிலை இயக்கமாக வளர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெற்றி இயக்கமாக வளர உழைப்போம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum