உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by kirikasan on Sat Nov 01, 2014 1:23 pm

அருள்வாயே!

நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்
நிலைதனை நிதமெழ அருள்தாயே
குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு
குவலயம் மலர் என மடிதூங்க
மறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழ
மருவிய சுகமென மனமீதில்
இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்
இயல்பெழ நிறையன்பு தருவாயே

கருணையில் பெரிதென கரமெடு அருளென
கவலைகள் பொடிபட உடைதாயே
வருவன வளம்மிகு தமிழுடன் இனிகவி
வரமிது எனஅளி இனிதாயே
தரும் பொழுதினி லவை தவறிடும் வகையின்றித்
தகைமிக உடையவன் எனமாற
ஒருமையில் துணிவெழ இயற்கையில் உரம் பெற
எனை நினதொளி தந்து அருள்வாயே

இருள் பல அறிவனென் இரந்திடு நிலையெனும்
இரவுகள் இனியெனும் இலதாக
துருப்பிடி இரும்பெனும் துரும்பெனும் இழிவதும்
தொடஎன விடுநிலை அறுத்தெயென்
குருவென அறிவதைக் கொடு உளம் தெளிவுற
குருதியின் கொதி சினம் குறைவாக்கி
‘மெருகிடு மனமதை மகிழ்வுற தணிவெனும்
மிருதிடு மனம் கனிந்தெனை நீ`யே !

*********************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by kirikasan on Sat Nov 01, 2014 1:25 pm

தலைவியின் சோகம்      (இலக்கியத்தில் எனக்குப்பிடித்த உணர்ச்சி)

        பொருளறியேன்

‘மாலை மயக்குதடி தோழி - மன
 மீறி யலை பெருகுதிந் நாழி
சாலை வழி இருளின் பயணம் - நிலை
 சற்றும் உணராத மௌனம்
சேலை மறைத்த உடல்மேவித் - தனி
 செல்லும் குளிர்வாடைத் தென்றல்
ஆலைக் கரும்பு பிழிந்தெனவே - வந்தே  
  ஆவி பிழிய விழி சொரிந்தேன்

தென்னை மரத்திரண்டு கிளிகள்   - தம்முள்
 தேனை யெடுத்த மொழிபேசிக்
கன்ன மிரண்டும் பட உரசி - அவை
 காதல்கொளும் காட்சிகண்டேன்
மின்னும் இருளெடுத்த மேகம் - எந்தன்
 மேனி குலுங்க இடிபரவி
இன்னும் வருத்தல் என ஆகி - எனை
 ஏக்கம் கொள வதைப்ப தோடி

மன்னன் என வரிந்தேன் அவனோ - முழு
மாயக் கதையிர வில்பேசி
சொன்னோர் மொழி வரைகள்மீறி .எனில்
சொர்க்கமிருக்குதெனக்கூறி
தன்னில் எனைக் கொண்டேன் என்றும் - எனில்
தன்னின் இதயமுள தென்றும்
முன்னின் றெனைக் காணப் பொய்கள் - சொல்லி
மோகம் கொள வைத்துச் சென்றான்

ஆடும் மயில் நடனம் வெறுத்தும் - ஒரு
அன்னை அன்புமனம் இழந்தும்
கூடும் எழில் தருக்கள் பூக்கா - உயர்
குன்றில் மலையருவி துள்ளா
காடும் இயற்கை வனப்பிழந்தே - விடி
கங்குல் பொழுதில் ஒளி பிறக்கா
நாடுமிருப்ப துண்டோ தோழி - இந்த
நாளில் எனக்கே னிந்தநீதி

பொன்னென் றழைக்க மகிழ்வுற்றேன் - தீயில்
போடக் கருதும் எண்ணமறியேன்
இன்பம் தருங்கிளியே என்றார் -என்னை
ஏனோ இலவங் கனிக் கேங்கும்
அன்ன வகையிருத்தி அன்னம்- நடை
அழகே எனப்போற்றி நின்றார்
பின்னை கதிரறுத்துத் தூற்ற எண்ணிப்
பேச்சில் அமுதமென மொழிந்தார்

தென்னங் குயிலினிசை குரலே - இவள்
தேம்பி அழும் பொழுதுமினிதே
என்னப் பலகதைகள்சொன்னார் - இவள்
ஏங்கிக் குரலிசைப்ப ளென்றோ
சின்ன விரலில் கணையாழி- கொண்டு
சேர்த்த நிலை மனதில் எண்ணம்
நின்னைச் சகுந்தலைக்கு நிகராய் - என்றும்
நெஞ்சில் கொள்வனென உரைத்தோ

சொல்லில் பொருளுணர்ந்துகொண்டால் - என்
சோகம் தவிர்த்தும் வாழ்ந்திருப்பேன்
கல்லைப் போலிவளின் உள்ளம் - எனக்
கருதி எழிற் சிலை யென்றாரோ
முல்லை மலர் சிரிப்பு கமலம் - எனும்  
மோகம்விளை வதனம் என்றார்
இல்லை எனும் வரையும்சுகித்தே - எழுந்
தோடும் வண்டினமென் றறியேன்

*************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by kirikasan on Sat Nov 01, 2014 1:30 pm

தெய்வத்தைத் தேடி...!

ஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்
ஆலயத்தின் உள்ளும்புறம் தேடினேன்’
நீண்டவழிநேர் நடந்து வாடினேன்
நிற்குமிடம் சுற்றிவந்து தேடினேன்
கூண்டினிடை நின்று கிளி பேசவும்
கோகிலமும் மாமரத்தில் கூவவும்
தாண்டியெழும் தாமரைப் பூஏரியில்
தாவுமலைப் பேரழகில் தேடினேன்

சீண்டிமலர் உண்ணும் சிறுவண்டடெனச்
செந்தமிழின் இன்சுவைத்த பாதையில்
நீண்டவழி நேர்நடந்து தேடினேன்
நிர்ம வான் நோக்கி நினைந்தேற்றினேன்
தூண்டிமனம் கொள்மலரின் பூவிதழ்
தொட்டு மதுகொட்டியதார் தேடினேன்
ஆண்டுபல அருகிமுது மையிட
ஆற்றலிழந் தன்பை எங்கும் தேடினேன்

பூவினங்கள் புன்னகைத்துப் பார்த்தன
பொன்னழகின் சூட்சுமத்தைக் காத்தன
ஆவினங்கள் அன்புதனை காட்டின
அருகிருந்த கன்றணைந்து நீவின
தாவினபூங் குருவிக ளின் போதையில்
தருவின்கிளை தனிலிருந்து ஆடிட
ஏ விநோதம் என்றியற்கை கண்டும்நான்
எமைப் படைத்த தார் உருவைத் தேடினேன்

நீங்குமிருள் காலையொளி நேர்வதும்
நேரடிவான் செந்நிறத்துக் கோலமும்
தேங்கு மலைநீரருவிப் பாய்ச்சலும்
துள்ளிவிழும் போதிலிடும் கூச்சலும்
பாங்கினிலே தெய்வத்தனம் பார்ப்பினும்
பாரினிலே உண்மையுருப் பார்த்திட
ஏங்கி மனக் கற்பனையில் ஓடினேன்
எத்தனை நாள் இம்சையுற்றும் வாடினேன்

தேடியுளம் நான்களைத்த போதினில்
தேவகுர லொன்றயலில் கேட்டது
நாடியெனைத்தேடும் வல்ல மானிடா
நானிருப்பதென்றும் அயல் பாரடா
கூடியுந்தன் மேனிசுடும் வெம்மையில்
கோபுரத்தின் தீபமெழும் காட்சியில்
ஓடியெழும் உதயவேளை ஆதவன்
ஒங்கி வெடித் தீபரவும் மாமலை

தாயவளின் அன்புகொண்டபூமனம்
தாங்குமந்த தாயுதரத் தாமரை
போயுறங்க மேனிசுடும்தீயிலும்
புதுமை காணத் தொட்டவர் கைச் சூட்டிலும்
பாயும்மழை கொண்ட ஒளிமின்னலும்
பாரறிய உண்டுசெய் மின்சாரங்கள்
தூய்மையுடன் தீயும் கொண்டதோற்றங்கள்
தெய்வசக்தி யின்வடிவம் அல்லவோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by kirikasan on Sat Nov 01, 2014 1:34 pm

இதயமே நீ என் உறவா பகையா??

நிலை குலையும் நெஞ்சே என் எதிரியும் நீதானோ
நிர்க்கதி யென்றென்னையும் விட்டாயோ
கலை மணந்த வாழ்வினிலே  காணும் இன்பந்தள்ளி
கருக உளம் வேதனை செய்வாயோ
சிலையுருவாய் கல்லாகச் சேர்ந்துடனே நின்றாய்
சிரிப்பிரு ந்த காலமதை மாற்றி
மலையெனவே நம்பி உயர் மனமதிலுனை வைத்தும்
மறந்தெனையே வருத்தவும் கொண்டாயே

பலசெயலும் கண்டும் மனம் பக்குவம்கொள்ளாது
பனியெழுந்த மலை முகிலாய் நின்றே
சிலதெ னுயிர் கொள்ளும் இன்ப சிறப்பினை நீ காணா
சிறுமை கொண்டு உணர்வறியாப் போர்த்தாய்
கலகல வென்றாடி உளம் களிப்புடனாங் கென்றால்
கணமதி லேமாற்றித் துன்பம் தந்தாய்
இலதுலகில் இனிமை யென இதுவரை என்றெண்ண
இழி துயருள் ஏற்றி வைத்துப் பார்த்தாய்

எதை விழிகள் கண்டுமவை எதையறிந்து கொண்டும்
இறைவழியை நீமறைத்து நின்றாய்
வதை விழிகள் கொண்டவளாம் வனிதை எழிலென்றாய்
வழிதவறும் விதம் உணர்வைச் சாய்த்தாய்
புதைகுழியில் வீழுமொரு புன்மை உடல்தன்னைப்
பொன்னெனவே போற்றும் குணம் தந்தாய்
அதையறிந்து நெஞ்சில் எழும் ஆசைதனைக் கூட்டி
அவளருகில் ஆடிவிழச் -செய்தாய்

மலம் நிறைந்த உடலுடனும் மருந்தகற்றாப் பிணியும்
மனையுடனே இரந்தழியும் உறவும்
புலன்வழியே  இன்பமெழப் புழுவெனும் கீழெண்ணம்
புனிதமென்று போற்றும் மனமீந்தாய்
கலகமென்று காணும்வகைக் கருத்தில் முரண்கொண்டே
கண்டவரும் கேலிசெய்யும் வண்ணம்
உலகமெனும் மாயைகொண்ட உருண்டலையும் கோளில்
உருகிமனம் அன்புகொள்ள வைத்தாய்

எதை யெனக்கு நன்மை என என்று விழைத்தாயோ
இதுவரையில் ஏதுமில்லை நெஞ்சே
சிதை யிலிடும்  உடலில்பல தீங்கிழைக்க எண்ணி
சீர் எழுந்த வாழசைவிற் தோற்றே
உதையும்கொண்ட வகையில் எனை உனது சந்தம் தவறி
உழன்றலையப் போதும் வலிசெய்தே
கதையும் முடி வாக்கி யெனைக் கரும்வெளியிற் தள்ளி
கனவை யொழித்தாக்க மனம்கொண்டாய்!

........................
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by T.N.Balasubramanian on Sat Nov 01, 2014 2:26 pm

உங்கள் பிறந்த நாளைக்கு நாங்கள் பூங்கொத்து கொடுக்கவேண்டியது போக ,
நீங்கள் உங்கள் பூங்கொத்தை எங்களுக்கு கொடுத்து விட்டீர் .
எங்கள் பூங்கொத்து வாடக்கூடியது .
உங்கள் பூங்கொத்து வாசம் சேர்க்கக்கூடியது .
அணுஅணுவாக ரசிக்க வேண்டியது உங்கள் பூங்கொத்து .
படித்து ,ரசித்து வர நேரம் தாருங்கள் ,திரு Kirikaasan . அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by M.Saranya on Sat Nov 01, 2014 3:12 pm

ஆம் ஐயா . நிறைய தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட வேண்டும்....
நன்றி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by T.N.Balasubramanian on Sun Nov 02, 2014 5:13 pm

ஓரிரு நிமிடங்களில் ,
ஐந்தாறு கவிதை படித்து ,
ஏழேட்டு மறுபதிவிடும் ,
இயந்திர உலகில் ,

மனதை ஒருநிலை படுத்தி ,
இதயம் தொடும் வரிகளை ரசித்து , 
தலைவியின் சோகத்தில் பங்கெடுத்து 
தாயவளின் பூமனத்தில் 
தெய்வத்தையும் கண்டு 
உறவா பகையில் உந்தன் 
ஆதங்கத்தை அறிய ,
அளவில்லா  வார்த்தைகள்
ஆயிரமாயிரம் கூறலாம் .
ஆன  நேரம் கவலையில்லை 
அடைந்த இன்பமோ அளவிடமுடியா .

அவனிடம்  வேண்டுவதெல்லாம் ,
அவனியில் அவருக்கு  
ஆரோக்யத்தை கொடு 
ஆயுளை கொடு ,
அவர் இடும்  கவிகளை ரசிக்கும்  
அருளினை  கொடு .

வெவ்வேறு வித உணர்ச்சிகள் படிக்கையில் .
மேலெழுந்த வாரியாக படிக்க முடியா வரிகள் .
ரசித்தேன் என்பதா ,உருகினேன் என்பதா ?
ஒன்றினேன் என்றே கூறுவேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

பூங்கொத்து  ---கிரிகாசன் கவிதைகள் சில Empty Re: பூங்கொத்து ---கிரிகாசன் கவிதைகள் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை