ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்!

View previous topic View next topic Go down

நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்!

Post by krishnaamma on Fri Oct 24, 2014 11:05 pmதிரேதாயுகத்தில் ஒரு சமயம் பூமி கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது. அப்பொழுது திருமால், பூமியைக் காப்பாற்றுவதற்காக வராகமாக அவதரித்து, பூமியைத் தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்பொழுது திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் உண்டான காதலால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை திருமாலுக்கும் பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையாக இருந்தாலும், திருமால் வராக (பன்றி) உருவத்தில் ஆவேச உணர்வுடன் இருந்தபோது பிறந்ததால் அக்குழந்தை அசுரத் தன்மையுடன் பிறந்துவிட்டது.

இப்படியான தனது குழந்தையைக் கண்டு பூமிதேவி வருந்தி அழுதாள். அக்குழந்தை திருமாலையும், பூமி பிராட்டியையும் துதித்து, “நான் என் தாயின் கையாலேயே சாக வேண்டும் என்ற வரம் கொடுங்கள்” என்று கேட்டான். பூமி பிராட்டி முதலில் வருந்தினாலும் ஒருவாறு மனம் தேறினாள்.

திருமாலும், அவன் கேட்ட வரத்தை அளித்தார். அக்குழந்தைதான் பிற்காலத்தில், “நரகாசுரன்’ என்ற பெயருடன் வாழ்ந்தான்.துவாபர யுகத்தில் திருமால் கிருஷ்ணனாக அவதாரம் செய்தார். துவாரகையிலிருந்தபடி ஆட்சி செய்து வந்தார். பூமி பிராட்டி, சத்திய பாமாவாக அவதரித்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

முன்பு திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையான நரகாசுரன், ஜோதிஷபுரம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் பல தவங்கள் செய்து பெற்ற வரங்களினால் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என்ற பலரையும் கொடுமைப்படுத்தினான். அவர்கள் கிருஷ்ணரிடம் வந்து நரகாசுரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டனர்.

அவர்களைக் காப்பாற்ற கிருஷ்ணர் நரகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். அவர் மனைவியான வீராங்கனை சத்தியபாமா, கண்ணபிரானுக்குத் தேரோட்டியாகச் சென்றாள். கண்ணனுக்கும், நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. நரகாசுரனுக்கு முன்பு கொடுத்திருந்த வரத்தினால், “அவன் தன் கையால் சாகமாட்டான்; பூமி பிராட்டியின் அம்சமான சத்திய பாமாவினால்தான் சாவான்’ என்பது கண்ணபிரானுக்குத் தெரியும். ஆதலால் அவர் நரகாசுரனுடன் போர் புரிவதுபோல் பாவனை செய்து, அவன் அம்புபட்டு வீழ்வதுபோல் தேர்த்தட்டில் வீழ்ந்துவிட்டார். அப்பொழுது சத்தியபாமா பதற்றமடைந்து, கண்ணபிரான் கையில் இருந்த வில்லை எடுத்து நரகாசுரன்மேல் அம்பு தொடுத்தாள். அந்த அம்பு பட்டு நரகாசுரன் சாய்ந்துவிட்டான்.

நரகாசுரனுக்கு, தான் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வந்தது. தன் தாய் பூமி பிராட்டியே சத்தியபாமாவாக வந்து தன்மேல் அம்பெய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். “அம்மா! என்னைப் பெற்ற தாயே…” என்று கைகூப்பி வணங்கினான். அசுரன் தன்னை “பெற்ற தாயே!’ என்று அழைத்தது ஏன்? என்று புரியாமல் சத்தியபாமா திகைத்தாள். நரகாசுரன், தான் பிறந்ததையும் மரணத்தைப் பற்றிய தனது
வரத்தையும் சத்தியபாமாவுக்கு நினைவூட்டினான்.

பின்னர் அவன், “தாயே… தந்தையே… இனி நான் பிழைக்கமாட்டேன். என்னைப் போன்ற தீயசக்திகள் அழிந்தால்தான் உலகம் தீமைகள் இன்றி வாழ முடியும். ஆதலால் நான் இறந்த நாளைப் புனிதமான நாளாகக் கருத வேண்டும்! அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து தீப ஒளியேற்றி இறைவனை வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்” என்று வரம் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரம் அளித்தனர். நரகாசுரன் இறந்தான். அவன் இறந்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று பாகவத புராணம் விளக்குகிறது.

• பாகவத புராணம் விளக்கும் இக்கதை, படித்துப் பொழுது போக்குவதற்காக மட்டும் சுவையுடன் எழுதப்பட்டதல்ல! மனித வாழ்க்கையின் தத்துவமே இக்கதையில் அடங்கியுள்ளது.

• மனிதர்களிடம் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்கள் உள்ளன. சத்துவ குணம் சாந்தம், தியாகம், பொறுமை, பக்தி ஆகிய நல்ல பண்புகளையுடையதாகும்.

• ரஜோ குணம் கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை உடையதாகும். தமோ குணம் சோம்பல், முயற்சியின்மை ஆகிய குணங்களை உடையது. இக்குணமுடையவர்கள் உண்ணவும், உறங்குவதுமன்றிச் செயல்படாத நடைப் பிணம் போன்றவர்கள்.

• ஒரு நாட்டில் சத்துவ குணமுள்ளவர்கள் குறைந்து ரஜோ குணமும், தமோ குணமும் உள்ளவர்கள் மிகுதியானால் அந்த நாட்டில் எண்ணற்ற தீமைகள் வளரும்; அந்த நாடு அழிவுப் பாதைக்கே செல்லும்.

• ரஜோ குணமும், தமோ குணமும் குறைந்து சத்துவ குணம் உள்ளவர்கள் மிகுதியாக இருந்தால் அந்த நாடு தீமைகள் இன்றி, எல்லா நன்மைகளையும் பெறும்! மக்கள் குறையே தெரியாமல் வாழ்வார்கள்! அப்போது காவியம் போற்றும் நாடாக, ராம ராஜ்யமாக அந்நாடு விளங்கும்.

• தீபாவளியன்று நம் வீட்டில் ஏற்றி வைக்கும் தீப ஒளி, வீட்டில் உள்ள புற இருளை மட்டுமே போக்கும். ஆனால் ரஜோ குணம், தமோ குணம் என்ற தீய உணர்வுகளால் இருள் மூடிக் கிடக்கும் நம் உள்ளத்தில் சத்துவ குணம் என்னும் விளக்கேற்றினால், நம் உள்ளத்திலுள்ள கெட்டவைகளான இருளைப் போக்கி, அன்பு ஒளி அருள் ஒளி வீசி, நம் உள்ளம் புனிதமான கோயிலாக விளங்கும். இந்தத் தத்துவத்தையே தீபாவளி உணர்த்துகிறது.

• ரஜோ குணத்தின் பிரதிநிதியான நரகாசுரனை சத்துவ குணத்தின் பிரதிநிதியான சத்தியபாமா வென்று, தீமை என்னும் இருளைப் போக்கி, நன்மை என்னும் தீப ஒளியை ஏற்றினாள்! அந்த இனிய நாளே தீபாவளித் திருநாள்!

• புதுமணமக்கள் சத்துவ குணமுடையவர்களாக இருந்தால், அவர்கள் சந்ததியினரும் நல்லவர்களாக விளங்குவார்கள்; புகழும், பெருமையும் பெற்று விளங்குவார்கள் என்பதை விளக்குவதே தலை தீபாவளியாகும்.

தினமணி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum