ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

View previous topic View next topic Go down

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by Powenraj on Thu Oct 09, 2014 2:10 pm

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து அவன் மிருகங்களைப்போல காடுகளில் சுற்றித்திரிந்து, கையில் கிடைத்ததை சாப்பிட்டு, கண்ட இடங்களில் படுத்துத்தூங்கி வாழ்ந்த காலத்தில்கூட, தன் மானத்தை மறைக்க இலை தழைகளாலும், மரப்பட்டைகளாலும் ஆடையாக அணிந்து இருக்கிறார்கள்.

நாகரீகம் வளர, வளர அதன் வெளிப்பாடு ஆடைகளிலும் எதிரொலித்தது. பிற்காலங்களில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென தனி ஆடைகள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில்தான் ராணுவம், போலீஸ், தீயணைக்கும் படை, வனத்துறை, ரெயில்வே, தபால் துறை, நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் போன்ற இன்னபிற பணிகளுக்கெனவும் தனித்தனியாக சீருடைகள் வகுக்கப்பட்டன.

மக்கள் அணியும் உடைகளும் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்பட்டே இருந்தது. ஆடைகள்தான் ஒருவரின் தோற்றத்துக்கு முக்கியம் என்பதால்தான் ஆள் பாதி, ஆடை பாதி என்ற வழக்குமொழி தமிழிலும், தையல்காரர்தான் ஒருவரை உருவாக்குகிறார் என்று ஆங்கிலத்திலும் கூறப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் அணியும் ஆடைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண் குழந்தைகள் என்றால் அரைக்கால் சட்டை, பெண் குழந்தைகள் என்றால் முதலில் கவுன், பிறகு பாவாடை சட்டை என்றுதான் இருந்தது. வாலிப வயதில் ஆண்கள் என்றால் வேட்டி–சட்டை, பெண்கள் என்றால் தாவணி, பிறகு சேலை என்றுதான் இருந்தது. முதலில் படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அணியும் ஆடையாக இருந்தது பேண்ட். மாற்றம் ஒன்றுதான் உலகில் நிரந்தரமானது என்பதற்கேற்ப, ஆடைகள் அப்படியே மாறிவிட்டது. எது தங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அதுதான் ஆடை, அதுதான் நாகரீகம் என்ற நிலை உருவாகிவிட்டது. பெண்களுக்கு சுடிதார் வந்தபிறகு, கிராமங்களில்கூட இளம் பெண்களின் ஆடை என்றால் அது நைட்டியும், சுடிதாரும்தான் என்றாகிவிட்டது.

தாவணி போட்ட பெண்களைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. பள்ளிக்கூடங்களில் இலவச சீருடை வழங்கும்போதுகூட இப்போது சுடிதார்தான் வழங்குகிறார்கள். அதுபோல, பெரிய வகுப்புகளில் படிக்கும் பையன்களுக்கு பேண்ட்தான் சீருடையாக வழங்கப்படுகிறது. சமீபகாலங்களில் இளம் பெண்களை சேலையில் பார்ப்பது திருமணத்தன்றோ, தீபாவளி, பொங்கலன்றோதான் முடியும் என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் வந்துவிட்டது. இந்த உடைகள் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அயர்ன் பண்ண வேண்டிய தேவையில்லை என்று இன்றைய இளைய உலகம் கூறுகிறது.

ஆனால், சில கல்லூரிகளில் இந்த ஆடை அணிந்துவரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார். இந்த கருத்து இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கிவிட்டது. ஒரு பெண்ணின் பாதுகாப்போ, அவளிடம் விரும்பத்தகாத செயலை மேற்கொள்ள செய்வதோ, அவள் அணிந்துள்ள ஆடையில் இல்லை, பார்ப்பவர்களின் மனதில்தான் இருக்கிறது, கொடூரனுக்கு உடை ஒரு பொருட்டல்ல, பச்சிளம் குழந்தை முதல், குடு குடு கிழவி வரை கற்பழிக்கப்படுகிறார்களே, இதுபோன்ற ஜீன்ஸ் ஆடையை அணிந்தே இராத, ஏன் பார்த்தே இராத ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்களே அதற்கு என்ன பதில்? ஒரு பெண் கிண்டல் செய்யப்பட்டாலோ, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாலோ, கற்பழிக்கப்பட்டாலோ அதற்கு பெண்ணின் உடையை குறை சொல்லாமல், ஆண்களின் மனோபாவத்தை, பார்வையை மாற்ற சமுதாயம் முயற்சிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் கருத்து. கருத்து சுதந்திரம் என்ற வகையில் பாடகர் ஜேசுதாசுக்கு தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும், அதே நேரத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை, அதுகுறித்து இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும்.

Nandri:dailythanthi
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by ayyasamy ram on Thu Oct 09, 2014 2:18 pm

உயர்ந்த எண்ணங்கள், சரியான சிந்தனை
இருந்தால் தவறான கண்ணோட்டம் யாருக்கும்
வராது.

எனவே வக்கிரமடைந்த சமுதாயத்தில் பெண்
எந்த ஆடை உடுத்தினாலும் சர்ச்சை தான் !!
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by யினியவன் on Thu Oct 09, 2014 2:35 pm

பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 2:38 pm

//பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.//

இதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியலை ................இதுவும் ஒரு தூண்டுதல் என்று தான் சொல்லி இருக்கிறார்.............

இவளை பார்த்துட்டு................இங்குஒன்றும் செய்ய முடியாமல்..............குடித்துவிட்டு......அங்கு போய்

" அவலை நினைத்து உரலை இடித்தானாம் " என்கிற கதையாய் ஏமார்ந்த, சாது பெண்களிடம் தன் கைவரிசியை காட்டராளோ என்னவோ?.......இல்லை என்று சொல்ல முடியுமா????????????


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 2:39 pm

@யினியவன் wrote:பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1094178

சபாஷ் இனியவன்.................புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by ayyasamy ram on Thu Oct 09, 2014 2:57 pm

மக்களின் செல்வாக்கு பெற்றவர்கள் கருத்து கூறும்போது
அக்கருத்தின் தாக்கம் எப்படி எடுத்துக் கொள்ளப்படும்
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
-
ஏனோ தானோ என்று உளறக்கூடாது...!!
-
அசைவ உணவு உண்டு வந்த
யேசுதாஸ் ஒரு முறை சைவ உணவு முறைகளை
கடைப்பிடிக்க ஆரம்பித்தார்....அது அவர் உடலுக்கு
ஏற்புடையதாக இல்லை...
-
பின்னர் சைவத்தை விட்டு விட்டார்...!
-
அப்படித்தான் எது ஒன்றும் அவரவர் அனுபவத்தில்
நன்மை தீமை உணர்ந்து பின்னரே ஒரு முடிவுக்கு
வருவார்கள்...!
-


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by பிஜிராமன் on Thu Oct 09, 2014 4:06 pm

@யினியவன் wrote:பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1094178

உண்மை அண்ணா.....

நான் பார்த்த சில பெண்களின் டி ஷர்ட் வாசகங்களை இங்கு பகிர்கிறேன்

BITE ME

If you have dare Touch

If you have dare ask my number

இதை விட மோசமான வாசகங்கல்லாம் போட்டுட்டு வெளிய போறாங்க.......இத எல்லாம் என்ன சொல்றதுன்னு தெரில

avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by T.N.Balasubramanian on Thu Oct 09, 2014 4:34 pm

இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by M.Saranya on Thu Oct 09, 2014 5:12 pm

@krishnaamma wrote://பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.//

இதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியலை ................இதுவும் ஒரு தூண்டுதல் என்று தான் சொல்லி இருக்கிறார்.............

இவளை பார்த்துட்டு................இங்குஒன்றும் செய்ய முடியாமல்..............குடித்துவிட்டு......அங்கு போய்

" அவலை நினைத்து உரலை இடித்தானாம் " என்கிற கதையாய் ஏமார்ந்த, சாது பெண்களிடம் தன் கைவரிசியை காட்டராளோ என்னவோ?.......இல்லை என்று சொல்ல முடியுமா????????????
மேற்கோள் செய்த பதிவு: 1094180

ஜீன்ஸ் தி ஷர்ட் அணிந்த பெண்கள் எல்லோருக்கும் கராத்தே தெரியுமா என்ன ???? அவர்கள் என்னதான் பட்டாலும் திருந்த மாட்டார்கள். சமுதாய நோக்கோடு பார்த்தால் நல்லதை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்ளலாம்...

இந்த சமுதாயம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று காட்டுகிறது. ஆண்களுக்கும் கற்பு உண்டு என்றாலும் அவர்களுக்கு எதுவும் பறிபோனதுமாதிரி தோன்றாது...

ஆனால் பெண் என்பவள் ஒரு கருவை சுமக்கின்றவள் அது ஒரு வரம்... பெண்களை தெய்வமாய் மதிக்கும் இந்த உலகில் தான் இந்த அக்கிரமும் நடக்கிறது...

ஒரு தெய்வாம்சம் பொருந்திய இந்த பெண் உடலை மற்றவர்களுக்கு காட்டலாமா???

என்னை பொருத்தவரை பெண்களும் காரணம் என்று தான் கூறுவேன்... அதே போல் பெண்களை கவர்ச்சியாக காட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள் அதில் நடிக்க கூடிய பெண்கள் எல்லோருமே காரணங்கள் தான் ...

பெண்ணால் மற்றொரு அப்பாவி பெண்ணோ அல்லது குழந்தையோ பாதிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய பாவம் ...

முடிந்தவரை தன்னையும் காபற்றிக்கொண்டு மற்றவரும் பாதிக்க படாதவாறு உடை அணிவது புத்திசாலித்தனம்....

இது புரியுமா பெண்களுக்கு !!!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by ஜாஹீதாபானு on Thu Oct 09, 2014 5:21 pm

@T.N.Balasubramanian wrote:இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094222

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by சிவா on Thu Oct 09, 2014 5:23 pm

@T.N.Balasubramanian wrote:இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்

ஹா ஹா ஹா...!!!! சூப்பர் ஜோக்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by தமிழ்நேசன்1981 on Thu Oct 09, 2014 5:48 pm

ஆடை அணிவதில்தால் சுதந்திரம் இருக்க வேண்டும்...சுதந்திரம் என்கிற பெயரில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வண்ணமோ அல்லது எச்சில் ஒழுகும் வண்ணமோ உடை அணிவது எதற்காக...அழகை வெளிப்படுத்துவதற்காகவா..காட்டுவதற்காகவா.. அழகை வெளிப்படுத்துவதற்கும் காட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது அல்லவா..கண்ட உடைகளை அணிந்தால் நல்ல எண்ணம் கொண்ட ஆண்கள் முகம் சுளிப்பார்கள்..வக்கிரபுத்தி உடையவர்கள்.................................. இந்த செயல் இரண்டுக்கும் யார் காரணம்..பெண்கள் தீபமாக இருக்கும் வரை வணங்கத்தோன்றும்..காட்டுத்தீயாக மாறினால் அனைவருக்கும் அழிவுதான்...இதில் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த சமுதாயம்..ஆண்.பெண் என்ற பாகுபாடு இல்லை...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3630
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by முனைவர் ம.ரமேஷ் on Thu Oct 09, 2014 6:27 pm

ஆர். நந்தகோபல் (I .A.S) அவர்களின் வளையாத பனைகள் என்ற சிறுகதை தொகுதியிலிருந்து ஒரு பகுதி இது.
“பெண்ணின் உடையைப் பார்த்து அதிர்ந்து போனார் கிருஷ்ணசாமி. மேலே கையில்லாமல் ஒரு ஜாக்கெட், தொப்புள் வெளியில் தெரிந்தது. அதற்குக் கீழ் ஒரு பாவாடை. ஜாக்கெட்டிற்கும், பாவாடைக்கும் நடுவில் இரண்டங்குலம் இடைவெளி இருந்தது. பெண் நல்ல சிவப்பு. சற்று புஷ்டியான உடம்பு, துப்பட்டா மாதிரி ஏதோ பள, பளப்பான சரிசை வேலைப்பாடுகள் நிறைந்த துணியைக் கையில் சுற்றி இருந்தது. அதைத்தோளில் போடலாம். அல்லது மார்பில் குறுக்காகப் போடலாம். ஏன் கையில் சுற்றியிருந்தது என்று தெரியவில்லை. கையில்லாத ரவிக்கை, பாவாடையுடன் நின்றுகொண்டு இருந்த மாதிரி இருந்தது. சினிமாவில் தான் இதையெல்லாம் பார்க்க முடியும். ஏதாவது சீனில் ஹீரோயினை இப்படிப் பாவாடை சட்டையில் அரை நிமிடம் காட்டுவார்கள். இங்கே மணப்பெண் இப்படி நிற்கிறது கிருஷ்ணசாமிக்கு என்னவோ போல் இருந்தது. அது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை. மாப்பிள்ளை முழு கோட் சூட்டோடு இருக்கிறார். ஆங்கிலப் படங்களில் ஆண்கள் கோட், சூட்டோடு இருப்பார்கள். பெண்கள் மார்பகங்களை பாதி காட்டிக்கொண்டு அரை, குறை ஆடைகளுடன் வருவார்கள். அதுமாதிரியே இங்கேயும் இருக்கிறதே என்று அவருக்குத் தோன்றியது.
கல்யாணத்தில் இப்படி அரை, குறை ஆடையுடன் பெண்ணை நிறுத்தி இருதரப்பு, அப்பா அம்மாக்களும் கூச்சம் இல்லாமல் போஸ் கொடுக்கிறார்கள். பெண்ணும், மாப்பிள்ளையும் சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்கள். இது என்ன கலாச்சாரம்....? கிருஷ்ணசாமிக்குக் கோபமாக வந்தது. பெண்ணை அரை நிர்வாணமாக நிறுத்தி போஸ் கொடுக்கும் அழகை என்ன சொல்வது? அதற்குப் பெண்ணும் எந்தக் கூச்சமும் இல்லாமல் காட்சிப் பொருள் மாதிரி நின்று சிரித்துக் கொண்டிருந்தது.” (பக்.122-123)
“அடுத்து ட்ரெஸ், லவ் பண்றபோது ரொம்ப நாகரிகமா உடுத்தறதை ரெண்டு பேருமே பெருமையாக நினைப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு அது அவனுக்குப் பிடிக்கவில்லைன்னு சொல்றான். இதுவும் நடந்திருக்கும் என்றே நினைக்கிறேன். மனைவியை மற்றவர்கள் ரசிக்க்க் கூடாது என்கிறது எல்லா ஆண்கள் மனோபாவம். அதையும் ரெண்டுபேரும் புரிஞ்சுக்கல்ல. இது உனக்குப் பெரிய குறையா தெரியுது. நீ உடுத்தறது அவனுக்குப் பெரிய குறை. உடுத்தாம இருக்கிறது உனக்குப் பெரிய குறை... சரி தானே...” (பக்.166-167)

avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 6:46 pm

//“அடுத்து ட்ரெஸ், லவ் பண்றபோது ரொம்ப நாகரிகமா உடுத்தறதை ரெண்டு பேருமே பெருமையாக நினைப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு அது அவனுக்குப் பிடிக்கவில்லைன்னு சொல்றான். இதுவும் நடந்திருக்கும் என்றே நினைக்கிறேன். மனைவியை மற்றவர்கள் ரசிக்க்க் கூடாது என்கிறது எல்லா ஆண்கள் மனோபாவம். //

புன்னகை ரொம்ப சரி ரமேஷ் ! அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by சிவனாசான் on Thu Oct 09, 2014 7:47 pm

ஆடைஅணிவது அவரவர் விருப்பம் என்றாலும் மற்றவர்கள் பார்வைக்கு விகாரமாய் அணிந்தால் அப்போது.....!!! டாக்டருக்கு என்ற உடை. வழக்கறிஞ்சருக்கென்றுஓர்உடை, ககாவலருக்கென்று ஓர் உடை, துறவிக்கென்று ஓர்உடை, செவிலியருக்கென்றுஓர்உடை, கோமாளிக்கென்று ஓர்உடை என உடைகளை அணிந்து செயலாற்றுவது சமுதாயத்தில் மதிப்பைதருகிறது. உடையை வைத்தே பணியை அறியமுடிகிறது. லேடீஸ் டைலர், ஜென்ஸ் டைலர் என உடைதைப்பதிலும் வேறு வேறு டைலர்இருந்தனர்...ஆனால் தற்போது ஆடவர்உடை, மகளிர்உடை எனபிரித்துபார்க்க முடியாத நாகரிக உடை யால் ..... இன்னலேஅன்றி வேரொன்றுமில்லை .....இன்னும் என்னென்ன மாற்றம் வரப்போகிறதோ பார்க்கலாம். ஒருவரை அளவிட நடை உடை பாவனை வைத்தே அறியனும் அதுவே அவருக்கு உகந்த நல்ல உடையாகும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2889
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by T.N.Balasubramanian on Thu Oct 09, 2014 9:10 pm

பெண்கள் ஜீன்ஸ்அணிவது , அவர்களுக்கு உடல் ரீதியாக நல்லது இல்லை என்று எங்கோ படித்த நினைவு .
எவ்வளவு தூரம் இதில் உண்மை உள்ளது தெரியாது .அதே சமயம் , பைஜாமா அணிவதால் கெடுதல் இல்லையாம் .
இது விஷயம் அறிந்தவர்கள் ,விரிவு படுத்தலாம் /தெளிவு படுத்தலாம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by தமிழ்நேசன்1981 on Thu Oct 09, 2014 9:23 pm

@T.N.Balasubramanian wrote: பெண்கள் ஜீன்ஸ்அணிவது , அவர்களுக்கு உடல் ரீதியாக நல்லது இல்லை என்று எங்கோ படித்த நினைவு .
எவ்வளவு தூரம் இதில் உண்மை உள்ளது தெரியாது .அதே சமயம் , பைஜாமா அணிவதால் கெடுதல் இல்லையாம் .
இது விஷயம் அறிந்தவர்கள் ,விரிவு படுத்தலாம் /தெளிவு படுத்தலாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094325

ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் உகந்த செயல் அல்ல..காரணம் நம்நாட்டின் தட்பவெப்ப நிலைதான்..இறுக்கமான ஆடை உடல் சூட்டை மேலும் அதிகப்படுத்தி அப்புறம் நம்மை படுத்திவிடும்...இருபாலருக்கும் மலட்டுத்தன்மை உண்டாக்குவதில் இந்த ஆடைக்கு கணிசமான பங்கு உண்டு என்று கணித்துள்ளார்கள்..

பைஜாமா தொள தொள ஆடை..காற்றோட்டம் இதில் உண்டு...எனவே தடையில்லை..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3630
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by krishnaamma on Thu Oct 09, 2014 9:55 pm

@T.N.Balasubramanian wrote: பெண்கள் ஜீன்ஸ்அணிவது , அவர்களுக்கு உடல் ரீதியாக நல்லது இல்லை என்று எங்கோ படித்த நினைவு .
எவ்வளவு தூரம் இதில் உண்மை உள்ளது தெரியாது .அதே சமயம் , பைஜாமா அணிவதால் கெடுதல் இல்லையாம் .
இது விஷயம் அறிந்தவர்கள் ,விரிவு படுத்தலாம் /தெளிவு படுத்தலாம் .
ரமணியன்

அது பெண்களுக்கு மட்டும் அல்லது ஆண்களுக்கும் நல்லது இல்லை ஐயா புன்னகை நேசன் சொன்னது போல , நம் நாட்டு தட்ப வெட்பத்துக்கு அது உகந்தது இல்லை....ஒரு படத்தில் ரஜினி சொல்வாரே, அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது........"மெட்ராஸ் வெயில இத போட்டுண்டு மவுண்ட் ரோடிலே போனா எல்லாம் வெந்துடும் ".....என்பார்................

அது தான் ரொம்ப சரி..................இருபாலருக்கும் மலட்டுத்தன்மை உண்டாக்குவதில் இந்த ஆடைக்கு கணிசமான பங்கு உண்டு என்று கணித்துள்ளார்கள்....என்பது தான் ரொம்ப சரியான செய்தி...மேலும் வடநாட்டவர்களை நீங்கள் பார்த்திருபீர் கள் ...............சாயங்காலம் ஆனால் பைஜாமா வும் ஜிப்பாவும் தான் போடுவார்கள்.....இரவு உடை அது அவர்களுக்கு......................உள்ளாடை கள் இல்லாமல் அதை அணிவார்கள், அதனால் தான் மேலே ஜிப்பா பெரியதாக இருக்கு................அது எதனால் என்றால்.....காற்றோட்டமாக இருப்பதற்காக................

நாமும் அந்த காலத்தில் வேஷ்டி, கைலி என அணிந்தோம்.....இப்போ..............ஜீன்ஸ் டிராயரை வயசு வித்தியாசமோ நேர வித்தியாசமோ 'பால் ' வித்தியாசமோ ..............பார்க்காமல் அணிகிறோம்...............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum