ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கணவனை அழைப்பது எப்படி?

View previous topic View next topic Go down

கணவனை அழைப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian on Mon Sep 22, 2014 6:28 pm

கணவரை எப்படி அழைக்க வேண்டும்? (நகைச்சுவை நிகழ்வு)

கணவனை அழைப்பது எப்படி ?

நட்புறவுகளுக்கு வணக்கம்.
என் விட்டில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி இது. உங்களுக்குப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

என் வீட்டிற்கு புதிதாய்த் திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற வகையில் தான் பழக்கம்.
அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின் தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.
அப்பொழுது அந்த பெண் வந்தாள். வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.
புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள் இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல் கேள்“ என்றேன்.
அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.
இது என்னடா.. புது மாதிரியான கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி... “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.
அவளும், “உங்களுக்கே தெரியும தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக் கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில் கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப் பேசுகிறேன்...“ என்றாள்.
எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“ என்றாள் உரிமையாக.
நான் என்னவென்று சொல்வது... நாம “மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.
அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“ என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.
அதன் பிறகு நான் அவரிடம்... “ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய “ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...

இது நடந்து இரண்டு நாள் கழித்து அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என் மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.
நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....? என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.
அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“ என்றார்கள் சிரித்த படி.

அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன் செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக் கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.
அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம் வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று சொல்லியிருக்கிறாள்.
அவர்களுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில் சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும் கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.
பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தேன்.

ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...? தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.

நன்றி :அருணா செல்வம்./தமிழ் வெளி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian on Mon Sep 22, 2014 6:34 pm

"ஏங்க" "ஏங்க " என்றால் ,
சரியாக இல்லாவிட்டால் ,
ஏங்க வேண்டியது தான் என்று அர்த்தம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by ராஜா on Mon Sep 22, 2014 6:58 pm

அந்த மருமகள் தெரியாமல் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை , நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது மாமியாரை குழப்ப வேண்டுமென்றே இப்படி சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by யினியவன் on Mon Sep 22, 2014 7:51 pm

உசிர எடுக்கா (தே) ஏங்க
வாயப் பிடுங்கா தே) ஏங்க
கழுத்த அறுக்கா தே) ஏங்க
பிராணன வாங்கா தே) ஏங்க

இப்படித்தானே அய்யா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian on Mon Sep 22, 2014 8:00 pm

@ராஜா wrote:அந்த மருமகள் தெரியாமல் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை , நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது மாமியாரை குழப்ப வேண்டுமென்றே இப்படி சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1089801

அப்படி ஒரு கோணம் உள்ளதோ ?
விவரமான பெண்கள்தான் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by krishnaamma on Mon Sep 22, 2014 8:40 pm

அது அப்படி இல்லை.....அது ஏங்க இல்லை 'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by ayyasamy ram on Mon Sep 22, 2014 8:58 pm

தலைமுறை இடைவெளி என்பது இதுதான்...
-
கறுப்பு வெள்ளை சினிமா காலத்தில் கணவனை
'அத்தான்' என அழைக்க சொல்லிக் கொடுத்தார்கள்...
-
தற்கால சினிமாவில் செல்லமாக வாடா போடா
என அழைக்கவும் ஒருமையில் கூப்பிடவும்
சொல்லிக் கொடுத்துள்ளார்கள்...
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by விமந்தனி on Mon Sep 22, 2014 9:59 pm

"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by krishnaamma on Mon Sep 22, 2014 10:00 pm

@விமந்தனி wrote:"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089884

நான் கொடுத்த விளக்கம் ஓகே வா அதச் சொல்லுங்கோ புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by விமந்தனி on Mon Sep 22, 2014 10:07 pm

@krishnaamma wrote:அது அப்படி இல்லை.....அது ஏங்க இல்லை 'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது புன்னகை

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:"ஏங்க, என்னங்க..." என்று கணவனை கூப்பிடுவதிலும் ஒரு அலாதியான திருப்தி இருக்கத்தான் செய்கிறது. புன்னகை

நான் கொடுத்த விளக்கம் ஓகே வா அதச் சொல்லுங்கோ புன்னகை

'ஏன்.... னுங்க ' ....அதாவது ஏன் என்று கேளுங்க தான் சுருங்கி 'ஏங்க ' ஆகிவிட்டது புன்னகை - அது தான் அர்த்தம் என்றால், கணவனிடம் 'கோள்' சொல்லுவது போல் ஆகாதா?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by krishnaamma on Mon Sep 22, 2014 10:10 pm

@விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1089889

என்னது 'கோள்' சொல்வதா? அதிர்ச்சி புரியலையே விமந்தினி சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by விமந்தனி on Mon Sep 22, 2014 10:18 pm

ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?

மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?

ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by krishnaamma on Mon Sep 22, 2014 11:48 pm

@விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?

மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?

ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?
மேற்கோள் செய்த பதிவு: 1089895

O MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி புன்னகை நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian on Tue Sep 23, 2014 11:17 am

தற்காலத்தில் , இளந்தம்பதிகளிடையே , உலாவும் அழைப்புகள் !

எ fraud , useless என இளம் மனைவிகள் கூப்பிட , கணவன்மார்களுக்கும்
மிக சந்தோஷமாம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 23, 2014 11:22 am

எரும, காட்டு மிராண்டி, முண்டம் இன்னும் பல

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by விமந்தனி on Tue Sep 23, 2014 11:23 am

@T.N.Balasubramanian wrote:தற்காலத்தில் , இளந்தம்பதிகளிடையே , உலாவும் அழைப்புகள் !

எ fraud , useless என இளம் மனைவிகள் கூப்பிட , கணவன்மார்களுக்கும்
மிக சந்தோஷமாம்.

ரமணியன்    

உண்மையை தானே சொல்லுகிறாள், என்ற சந்தோஷம் போலும்...!

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by விமந்தனி on Tue Sep 23, 2014 11:37 am

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?

மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?

ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?

O  MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி புன்னகை நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன் புன்னகை
இல்லை,  நானும் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.
'பார்த்தாயா... அவள் நம்மை தான் எதையோ கேட்க சொல்லுகிறாள்...' என்று மாமியார் நினைக்க வாய்ப்புள்ளது  என்பதால் தான், நீங்கள் சொன்னதற்கு அர்த்தம் அப்படி இருக்க வாய்ப்பிருக்காது என்று சொன்னேன்.

Last edited by விமந்தனி on Tue Sep 23, 2014 11:48 am; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by krishnaamma on Tue Sep 23, 2014 11:44 am

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:ஏன் என்று கேளுங்க...? என்றால் 'யாரை, ஏன் என்று கேட்பது?' என்று அர்த்தம் வராதா?

மாமியாரை பற்றி புறம் சொல்லுகிறோமா அல்லது நாத்தனாரை, 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்க சொல்லுகிறோமா?

ஏன் என்று கேளுங்க என்றால், யாரை போய் ஏன் என்று கேட்க சொல்லுகிறோம்?

O  MY God ! யாரையும் போய் கேட்க வேண்டாம் விமந்தினி புன்னகை நாம் கூப்பிடுவதை அவர் 'ஏன்' என்று
கேட்கணும் என்று சொல்ல வந்தேன் புன்னகை
இல்லை,  நானும் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.
'பார்த்தாயா... அவள் நம்மை தான் எதையோ கேட்க சொல்லுகிறாள்...' என்று மாமியார் நினைக்க வாய்ப்புள்ளது  என்பதால் தான், அதற்கு அர்த்தம் அப்படி இருக்க வாய்ப்பிருக்காது என்று அப்படி சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1089988

ஹுஹும் ...தப்பு ஏதும் இல்லை விமந்தினி....புன்னகை ...நான் சொன்னதற்கு அப்படியுமொரு அர்த்தம் இருக்கே என்றுதான்................ஐயோ ! என்பதற்கு பதிலாக அப்படியடித்தேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by விமந்தனி on Tue Sep 23, 2014 11:51 am

@krishnaamma wrote:ஹுஹும் ...தப்பு ஏதும் இல்லை விமந்தினி....புன்னகை ...நான் சொன்னதற்கு   அப்படியுமொரு அர்த்தம் இருக்கே என்றுதான்................ஐயோ ! என்பதற்கு பதிலாக   அப்படியடித்தேன் புன்னகைavatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by ஜாஹீதாபானு on Tue Sep 23, 2014 2:40 pm

எங்க வீட்ல ஏங்க தான்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian on Tue Sep 23, 2014 2:44 pm

@ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல ஏங்க தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090040

"ஏங்க"த்தான் வைக்கிறீங்களா நீங்களும் ?
ஏங்க இப்படி ? பாவங்க அவர் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by ஜாஹீதாபானு on Tue Sep 23, 2014 3:04 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல ஏங்க தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090040

"ஏங்க"த்தான் வைக்கிறீங்களா நீங்களும் ?
ஏங்க இப்படி ? பாவங்க அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090043

ஹா ஹா சூப்பர் ஐயா உங்க பின்னூட்டம் புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian on Tue Sep 23, 2014 3:07 pm

@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல ஏங்க தான்
மேற்கோள் செய்த பதிவு: 1090040

"ஏங்க"த்தான் வைக்கிறீங்களா நீங்களும் ?
ஏங்க இப்படி ? பாவங்க அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090043
ஹா ஹா சூப்பர் ஐயா உங்க பின்னூட்டம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090055

நன்றி நன்றி
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by M.Saranya on Tue Sep 23, 2014 3:21 pm

எங்க வீட்டில் ஏங்க மற்றும் குழந்தைகளின் பேரிட்டு சுபாஷ் அப்பா, தீபேஷ் அப்பா என்று அழைப்பேன்.
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: கணவனை அழைப்பது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum