உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி
by ayyasamy ram Today at 3:22 pm

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by ayyasamy ram Today at 3:20 pm

» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
by ayyasamy ram Today at 3:17 pm

» அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
by ayyasamy ram Today at 12:37 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 12:27 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 12:21 pm

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

Admins Online

சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்

சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Empty சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்

Post by karaumalaithamizhazhan on Sat Sep 20, 2014 4:55 am

தமிழறிஞர்  சிலம்பொலி  செல்லப்பனார்  அமவர்களின்  85 ஆம்  பிறந்த நாள்  வாழ்த்து
           
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
 
 
 
 
 
மூத்ததமிழ்   மொழியினிலே  முதன்மை  யாக
                        முன்நிற்கும்   தொல்காப்பி   யத்தைப்  போல
            பூத்ததமிழ்   காப்பியத்துள்   முதலில்  நிற்கும்
                        புவிமக்கள்  காப்பியமாம்  சிலம்பை   நெஞ்சில்
            காத்துதமிழ்  நாட்டினிலே  பட்டி  தொட்டி
                        கடல்கடந்து   அயலகத்தின்   ஊரி   லெல்லாம்
            நாத்தடவி   ஒலித்ததனால்   செல்லப்  பாநீர்
                        நாட்டோரால்  சிலம்பொலியார்  என்றே  யானீர் !
 
            ஆயிரமாம்   மாணவரை   ஆசு  நீக்கி
                        அறிஞராக   அவனிக்கே  அளித்த  தைப்போல்
            ஆயிரமாம்  நூல்களினை  ஆய்வு   செய்தே
                        அணிந்துரைகள்  புடம்போட்டு  அளித்த   தாலே
            பாயிரத்தில்   வரலாற்றை  நமக்க   ளித்த
                        பனம்பார  னாரைப்போல   தமிழ்நூல்   கள்தம்
            வாயில்நீ   என்றுதமிழ்  அறிஞ   ரெல்லாம்
                        வாழ்த்தும்பல்   லாயிரத்தில்  ஒருவ   ரானாய் !
 
            மூவேந்தர்  புகழ்பாடிக்   காலம்  வென்ற
                        முத்தமிழின்   காப்பியமாம்   சிலம்பைப்   போன்று
            நாவெந்தர்   அண்ணாநல்  மக்கள்   திலகம்
                        நற்கலைஞர்  என்றேமும்   முதல்வர்  நெஞ்சுள்
            பூவேந்தாய்   அமர்ந்தவரே   கொங்கு  நாட்டின்
                        புகழ்வேந்தாய்த்   திகழபவரே   இலக்கி  யத்தில்
            சாவேந்தா  பன்னூறு  நூல்கள்   தந்தே
                        சாதனையைச்   சரித்திரமாய்ப்   படைத்த   மேலோய் !
 
சிறுகுறிப்பும்   இல்லாமல்   வாரி   யார்போல்
            சிந்தனையைத்  தூண்டுகின்ற   அடிக  ளார்போல்
நறுந்தேனாய்ப்   பொழிகின்ற   திருவி  கபோல்
            நறுக்கென்று   சொல்கின்ற  கி.ஆ.பெ.  போல்
குறுந்தொகையின்  சுவையாகக்  குறளின்  உள்ளே
            குவிந்திருக்கும்  கருத்தாகத்   தொடர்சொற்   பொழிவை
மறுபடியும்   மறுபடியும்   கேட்கு   மாறு
            மடைதிறந்த   வெள்ளம்போல்   ஆற்றும்  வல்லோய் !
 
தமிழ்வளர்ச்சித்   துறையினுக்கே   சிறப்பைச்   சேர்த்து
            தஞ்சைதமிழ்ப்   பல்பலைக்கே   புகழைச்   சேர்த்துத்
தமிழாய்வு   நிறுவனத்தைத்   தழைக்கச்   செய்துத்
            தமிழ்கலைஞர்   தோளோடு   தோளாய்   நின்று
தமிழ்உலக   மாநாடு   மூன்றி   னுக்கும்
            தரணிபோற்றும்   மாநாட்டு   மலரை  ஆக்கித்
தமிழ்த்தொண்டே   வாழ்வென்று   நாளும்  ஆற்றித்
            தமிழொன்றே    சொத்தாக   வாழும்   நல்லோய் !
 
கல்வியிலே   உயர்புலமை   பெற்ற   போதும்
            கம்பரைப்போல்   எளிமையாகப்   பழகும்   நண்பா
நல்லதமிழ்   அவ்வைபோல்   எழுத்தா   ளர்தம்
            நலன்பேணி   ஊக்குவித்தே   வளர்க்கும்  பண்பா
எல்லோரும்   வியக்கின்ற   வகையில்   உழைக்கும்
            எழிற்கலைஞர்   போல்நாளும்   உழைக்கும்  அன்பா
சொல்லோடு   செயலொன்றாய்   வாழும்   மாண்பா
            சொக்கதங்கம்   போல்ஒளிரும்   சிலம்பின்   ஒளியோய் !
 
இலக்கியத்தைப்   பூக்காடாய்ப்   பூக்க   வைத்து
            இலக்கியத்துச்   சிந்தனைகள்   மணக்க   வைத்து
உலகக்கவி   பாவேந்தர்   என்று   யர்த்தி
            உயராய்வில்    பெருங்கதையை   அறியக்   காட்டி
நலமாகத்    தமிழ்வளர  நாளும்   நாவால்
            நல்லவிதை   விதைத்துவரும்   நற்செல்   லப்பா
நிலம்மூத்த   தமிழைப்போல்   இயற்கை    போல்
            நிலைத்தென்றும்   வாழ்ந்திடுவீர்   வாழ்க   வாழ்க !
 
பூக்கின்ற   பூக்களிலே   நீதா   மரைப்பூ
            புவிவீசும்   காற்றினிலே   தென்றற்   காற்று
தேக்கிவரும்   வான்முகிலில்   மழையின்   மேகம்
            தேர்ந்தநெல்   மணிவிளையும்    செழித்த   நன்செய்
கூக்கூவென்   றிசையெழுப்பும்    குயிலின்   பாட்டு
            குறிஞ்சியிலே   தொங்குகின்ற   தேனின்   கூடு
பாக்களிலே   முதன்மையெனும்   வெண்பா   யாப்பு
            பண்பாளல்   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
எழுச்சியினை   நெஞ்சிலெற்றும்   பாரதி   தாசன்
            எரிகவிதை   தானிவரின்   நாவின்  வீச்சு
பழுத்தபலா   போலினிக்கும்   சுரதா   பாட்டில்
            படிந்துவரும்   உவமைகளைக்   கொட்டும்   பேச்சு
அழுத்தத்தில்   கருத்துரைக்கும்   செறிவு   தன்னில்
            ஆழமான   சங்கப்பா   முந்தி   நிற்கும்
முழுவுலகும்    போற்றுகின்ற    குறளைப்   போல
            மூப்பின்றி   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
 
            போராட்டப்   பெரியாரின்   பதிப்பாய்   இன்று
                        பொலிகின்ற   பகுத்தறிவை   முழக்கும்   வீரன்
            சீரார்ந்த    தமிழ்போச்சில்   சொக்க   வைத்த
                        சீரண்ணா    போல்கருத்தை   பொழியும்   நாவன்
            ஏரார்ந்த    கலைஞருக்குத்   தோளாய்   நின்று
                        எழிற்கவிதை   போலினிக்கும்    அருமைத்   தோழன்
            பேரார்ந்த    தமிழ்முழக்கிப்    புவியைச்   சுற்றும்
                        பேரறிஞா   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
 
            இனமானம்   தன்மானம்   இரண்டைத்   தம்மின்
                        இருகண்ணாய்   பெற்றிருக்கும்   முகத்துக்   காரன்
            தனக்காக   வாழாமல்   தமிழர்   வாழ்வின்
                        தரமுயர்த்த   தினம்நினைக்கும்    அகத்துக்   காரன்
            சினம்கலவா   சொல்பேசித்   தமிழர்   தம்மைச்
                        சிந்திக்க   வழிநடத்தும்   நாவுக்   காரன்
            அனலாகத்   தமிழ்பகையைச்   சுட்டெ   ரிக்கும்
                        அடலேறே   செல்லப்பா   வாழ்க   வாழ்க !
 
            கொள்கைதனில்   வைரத்தை   நெஞ்சில்   கொண்டோன்
                        கொஞ்சுதமிழ்   இதழ்நகையில்   பொன்னைக்   கொண்டோன்
            துள்ளுநடை   மேனியிலே   பவளம்   கொண்டோன்
                        துவளாநல்   லுழைப்பில் வைடூர்யம்   கொண்டோன்
            வெள்ளைமன   நட்பில் மாணிக்கம்   கொண்டோன்
                        விழைந்தணைக்கும்   அன்பில் மரகதத்தைக்    கொண்டோன்                                                                   
தள்ளாமல்   அனைவரையும்   கோமே  தகமாய்                                                                                
                       தலைகொள்ளும்  செல்லப்பா   வாழ்க   வாழ்க !
 
 ஒப்புமையே   இல்லலாத   நற்பண்   பாளன்
ஒருதவறும்   செய்யாத   ஒழுக்கச்   சீலன்
            எப்பகையும்   இல்லாத   நட்பின்   ஆளன்
                        எவரிடத்தும்   பழகுகின்ற   அன்பின்  ஆழன்
            தப்பிற்குத்   துணைபோகா   நேர்மை   யாளன்
                        தன்மான   இனமானப்   பகுத்தறி   வாளன்
            செப்பமுறத்   தமிழ்மொழியைப்   பரப்பு   கின்ற
                        செழும்புலவா   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
 
            சீர்குறளால்   வள்ளுவர்தாம்   வாழு   கின்றார்
                        சீர்சுவையால்   கம்பர்தாம்   வாழு  கின்றார்
            பேர்பெற்ற  இலக்கியங்கள்   தந்த  வர்கள்
                        பெரும்புகழில்   என்றென்றும்   வாழ்வ  தைப்போல்
            பார்முழுக்கச்   சிலப்பதிகார   மென்னும்  நூலைப்
                        பரப்பிமக்கள்  நெஞ்சினிலே   பதிய   வைத்து
            வேர்போலக்   காப்பதாலே   செல்லப்  பாநீர்
                        வெற்பிமயம்   போலுயர்ந்து   வாழ்வீர்   வாழ்க !
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Empty Re: சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்

Post by Aathira on Sat Sep 20, 2014 6:04 am

சிலம்பொலியாரைப் பற்றி சிந்தையை மகிழ வைக்கும் இனிய யாப்பு.


சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Aசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Aசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Tசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Hசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Iசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Rசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Aசிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா  வாழ்த்துக் கவியரங்கம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை